Thursday, February 13, 2014







செய்தி:

ஆமதாபாத்: ''மத்திய காங்., அரசு மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர்,'' பா.ஜ., பிரதமர் வேட்பாளர் மோடி தெரிவித்துள்ளார்.குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள டீ கடையில் அமர்ந்து, நாட்டின் பல நகரங்களில் 1000 டீ கடைகளில் டி.டி.எச்., தொழில்நுட்பம் மூலம் நரேந்திர மோடி கலந்துரையாடினார். ''டீ அருந்தி கொண்டே விவாதிக்கலாம்,'' எனக் கூறிய அவர், ''தேநீரும், தொழில் நுட்பமும் இந்த வாய்ப்பை வழங்கியுள்ளது என்றார். பின், ''மோசமான நிர்வாகத்துக்கு இந்தியா ஒரு முன்னுதாரணமாக உள்ளது. இது குறித்து சாதாரண மக்கள் தொடர்ந்து விவாதிக்கின்றனர். மத்திய அரசின் மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர். ஒவ்வொருவரும் அரசியல் அறிவு பெற வேண்டும். சட்டசபை மற்றும் பார்லிமென்ட் உறுப்பினர்கள், மக்களை நேரடியாகச் சந்தித்து கலந்துரையாட வேண்டும்,'' என்றார்



அரே மோடி சாப் காங்., அரசு மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர், காங்கிரஸ் ஆட்சி மோசமான ஆட்சி. இது உங்களுக்கு மட்டும் அல்ல உலகத்திற்கே தெரிந்த விஷயம் .இதை தவிர உங்களுக்கு வேற ஏதும் பேச தெரியாதா என்ன? இந்த விஷயம் பிறந்த ஒரு மாத குழந்தை பேச ஆரம்பித்தால் கூட இதைத்தான் சொல்லும் இதை திரும்ப் திரும்ப சொல்ல ஒரு தலைவர் தேவையில்லை.



அதைவிட்டுவிட்டு நீங்கள் வந்தால் நதிநீர் பங்கிடு பற்றி என்ன திட்டம் வைத்து இருக்கிறீர்கள்? சில்லறை வாணிபத்தில் அந்நிய முதலீடு பற்றி நீங்க என்ன கொள்கைகள் வைத்து இருக்கிறீர்கள்., அண்டைய நாடுகளுடன் எப்படி இணைந்து செயல்பட போகிறீர்கள்? இலங்கை பிரச்சனையில் உங்களின் உறுதியான கொள்கைகள் என்ன? எல்லை மீறும் சினாவிற்கு எப்படி பதில் அளிக்க போகிறீர்கள்? பாகிஸ்தானின் தீவிர வாததிற்கு எதிராக எப்படி செயல்பட போகிறீர்கள்? உங்களின் பொருளாதார திட்டம் என்ன? கல்வி துறையில் உங்கள் பங்கீடு என்ன? மாநில அரசுகள் சுயமாக செயல்பட சுயாட்சி தரப் போகிறிர்களா? என்று மேலே சொன்ன விஷயங்களைப் பற்றி பேசுங்களேன்.


அதைவிட்டு விட்டு டீக்கடைக்காரனுக்கு டீ ஆத்துவது மட்டும்தான் தெரிவது போல உங்களுக்கு காங்கிரஸ் அரசு மீது மக்கள் நம்பிக்கையை இழந்துவிட்டனர் என்று மட்டும்தான் தெரியுமா? ஆமாம் என்றால் நீங்கள் பிரதமர் பதவிக்கு முயற்சிப்பதற்கு பதிலாக பாராளுமன்ற வளாகத்தில் டீக்கடை வைக்க முயற்சியுங்கள்.


இந்தியாவிற்கு தேவை அதை நடத்தி செல்ல சிறந்த தலைவர்தான் வேண்டும் டீக்கடைகாரன் அல்ல. இந்தியாவில் ஒரு நடிகன் நாடாள முடியும் ஆனால் டீக்டைகாரன் நாடாள வேண்டுமென்றால் அவன் முதலில் சிறந்த தலைவனாக ஆக வேண்டும் அதன் பிந்தான் நாடாள முடியும், சிறந்த தலைவனாக சிறப்பு திட்டங்கள் வைத்திருக்க வேண்டும் அதவிட்டு விட்டு உடைந்த ரிகார்டு போல இருக்க கூடாது


அன்புடன்
மதுரைத்தமிழன்

12 comments:

  1. சரியாக கேட்டீங்க...

    ReplyDelete
  2. கேள்வி எல்லாம் நல்லாத்தான், கேட்டுருக்கீங்க, அது யாரைப் போய் சேரணுமோ அங்க போய் சேருமா? உருப்படியான பதில் கிடைக்குமா? அது யாராக இருந்தாலும்! நாங்கள் எல்லாம் பாவங்க!! யாருக்கு ஓட்டு போடறதுனு தலைய பிச்சுகிட்டு இருக்கோம்...நாளொரு செய்தியும் பொழுதொரு காமெடியுமாய் ஒவ்வொரு அரசியல் தலைவரும் அறிக்கை விட்டுகிட்டே இருக்காங்க....

    ஆமாம் அது என்ன அம்மா/ தாத்தா படம் மாதிரி மதுரைத் தமிழன் படம் எல்லா இடத்துலயும்.....!!!!!?

    ReplyDelete
  3. நீங்கள் கேட்ட கேள்விகளுக்கு எல்லாம் பதில் சொன்னால் அப்புறம் ஆட்சிக்கு வந்த பிறகு இதில்லாம் செய்யலையே என்று நீங்கள் திருப்பி கேட்டால் என்ன பன்றது. அதனால்தான் இந்த மாதிரி பேசுவது கிடையாது. அரசியல் தலைவர் என்றால் சும்மாவா!!!!

    ReplyDelete
  4. நீங்க வேற கேள்வி மேல கேள்வி கேட்டுக்கிட்டு இருக்கீங்க. நானே கொளம்பிப் போயிருக்கேன்.

    மோதி மதவாதியா
    மோதி தீவிரவாதியா
    மோதி சுயநலவாதியா
    மோதி பகுத்தறிவுவாதியா (அவுரு நம்ம ஊரு ஆளு இல்ல)
    மோதி அரசியல்வாதியா
    மோதி காந்தியவாதியா

    சரி. என்ன வாதியோ, அவரு ஊர்க்காரங்க அவர நம்புறாங்க. நம்மளும் நம்பித் தொலைவோம்.

    கோபாலன்

    ReplyDelete
  5. அதற்கு இது சரியான தருணம் அல்ல..

    ஒரு தலைவனால் எப்போதும் எல்லோரையும் திருப்தி படுத்திவிட முடியாது.
    இப்போதைய தேவை ஒட்டு வங்கியை பலபடுத்துவது தான். அதை தான் மோடி செய்து கொண்டிருக்கிறார்.

    ReplyDelete
  6. Modi Already proved his talent in Gujarat for the last 12 years. Then, what do you need from the leader?
    OK? If, modi is PM, then who?

    ReplyDelete
    Replies
    1. http://www.youtube.com/watch?feature=player_embedded&v=Jjau6YuZgDE
      Answer is Rahul Gandhi
      http://sajith.snydle.com/best-jokes-rahul-gandhi-interview-arnab-goswami.html

      Delete
  7. மோடிக்கு பின்னாடி நிக்கிறவுங்க எல்லாம் ஷங்கர் படத்துல கிளைமாக்ஸ்ல கருத்து சொல்றவங்க மாதிரியே இருக்காங்களேன்னு பார்த்தேன்.அதுக்கு ஏற்ற மாதிரியே கடைசி கார்டூனும் இருக்கு.

    ReplyDelete
  8. மூன்றாவது பத்தியில்,மோடியின் கொள்கை என்ன என்று கேட்டதற்கு பதில்: அயோத்தியில் ராமருக்கு கோவில் கட்டுவோம்---எல்லாப் பிரச்சனைகளும் தானா தீர்ந்து விடும்;

    பண்டாரங்ளுக்கு தேவை உண்டக்கட்டி, கோவில், பஜனை, ஜாதி, மதம் இதான்!

    தமிழ்மணம் +1

    ReplyDelete
  9. முதலாவது படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம் தானே?

    ReplyDelete
  10. கலக்கல் கார்ட்டூன்....

    பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கப் போகிறது என!

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.