Wednesday, February 12, 2014

@avargal unmaigal

சரக்கு அடிச்சாலும் நிலை தடுமாறாதவர் விஜயகாந்த்..யாரையும் ஏமாற்றாத நல்ல மனம் படைத்தவர் அதனால்தான் அனைத்து கட்சிகளும் அவருடன் கூட்டணி வைக்க முயல்கின்றனர். அதனால் அவர் யாருடைய மனதைக் காயப்படுத்த வேண்டாம் என்பதால் இப்படியொரு புதியதொரு முயற்சியில் இறங்கலாம் எனத் தமிழக அரசியல் ஆய்வாளர்கள் ஆராய்ந்து கிழ்கண்ட செய்தியை மதுரைத்தமிழனுடன் பகிர்ந்து கொண்டனர்


அந்த பகிர்வில் அரசியல் ஆய்வாளர்கள் சொன்னது இதுதான். விஜயகாந்த் எல்லா கட்சிகளில் இருந்து பெட்டி வாங்கியதால் 20 தொகுதிகளில் இப்படி கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்துள்ளார். அதன்படி திமுகவுடன் 5 தொகுதிகளில் கூட்டணி, பாஜகவுடன் 5 தொகுதிகளில் கூட்டணி, காங்கிரசுடன் 5 தொகுதிகளில் கூட்டணி, 5 தொகுதிகளில் தனித்துப் போட்டி மீதியுள்ள 20 தொகுதிகளில் மற்ற கட்சியினர் அவர்கள் அவர்கள் விருப்பப்படி ஆளை நிறுத்தி கொள்ளலாம் என்று விஜயகாந்த் இறுதி முடிவு எடுத்துவிட்டார் என்று அதிகாரப் பூர்வமான செய்திகள் வெளிக் கசிந்துள்ளன..



சில செய்திகளை அலசி ஆராய்வது மதுரைத்தமிழன்



தமிழகத்தில் வலிமையான கூட்டணி அமைக்க முயற்சி- இல.கணேசன் பேட்டி


என்ன மோடி அணி வலிமையாய் இல்லை என்று இவர் சொல்லுகிறாரா என்ன? கட்சியில் இருந்து கொண்டே தன் கட்சிக்கு குழி பறிக்கிறாரா இவர்



தேமுதிக, பாமக நடத்துவது அரசியலா.. தரகு பேரமா?- தமிழருவி மணியன் கேள்வி



அவர்களுடன் நீங்கள் நடத்துவதுதான் தரகு ( மாமா) பேரம் மிஸ்டர் மணியன்



கொள்கையே இல்லாதவர் விஜயகாந்த்: தமிழருவி மணியன் கடும் தாக்கு


அப்படிப்பட்டவரிடம் பேச்சுவார்த்தை நடத்தும் உங்களுக்கு முட்டாள்தனமான கொள்கைதானே இருக்கு


நேர்மையான அதிகாரிகள் தண்டிக்கப்படக் கூடாது: பிரதமர் மன்மோகன் சிங்க்


கவலைப்படாதிங்க சிங் பிரதமர் பதவி அதிகாரிகள் வட்டத்திற்குள் வாராது


நாட்டில் ஊழலை ஒழிக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி வலியுறுத்தினார்.


இந்திய ராணுவத்தினருக்கே போர்க்கால நடவடிக்கை என்னவென்பது மறந்து போயிருக்கும் இப்ப போயி....




பாஜக கூட்டணி யோசனைக்கு விஜயகாந்த் முழுக்கு:


விஜயகாந்த்துக்கு டீக்கடை பிடிக்கவில்லை போல அதற்காக அவர் சாக்கடை பக்கம் போகலாமா?




5 நாளில் முடிவை சொல்லுங்க!': பா.ம.க., - தே.மு.தி.க.,வுக்கு பா.ஜ., கெடு



5 நாளுக்கு அப்புறம் விஜயகாந்த் சொல்லும் முடிவு நாங்கள் இன்னும் யோசித்து கொண்டிருக்கிறோம் என்பதுதான்.....அதன் பிறகு மோடி சொல்வது பார்த்தீர்களா நாங்கள் போட்ட கெடுவுக்குப் பயந்து விஜயகாந்த் முடிவு சொல்லியிருக்கிறார் என்பதுதான்



பா.ஜ., தலைமை, இப்போது தே.மு.தி.க., தேவையா எனச் சிந்திக்கத் துவங்கி உள்ளது.


தே.மு.தி. தலைமை, இப்போது பா.ஜ தேவையில்லை என்று முடிவு செய்துவிட்டது. ,மோடியைவிட நாங்க ரொம்ப சுறு சுறுப்பு மோடிக்கு யோசிக்கத்தான் தெரியும் ஆனா நாங்க???



அன்புடன்
மதுரைத்தமிழன்






15 comments:

  1. அதெல்லாம் சரி... தலையை இணைக்க வேறு படம் கிடைக்கவில்லையா...?

    ReplyDelete
  2. அரசியலில் இது எல்லாம் சகஜமப்பா!

    ReplyDelete
  3. அவசரத்திற்கு படத்தை உபயோகப்படுத்தியிருந்தாலும் நல்ல நகைச்சுவையாக இருக்கிறது.

    "5 நாளில் முடிவை சொல்லுங்க" - அருமை.

    ReplyDelete
  4. ஆமா, நீங்கதான் அமெரிக்காவில் விஜ்யகாந்த் கட்சியின் பிரதிநிதியாமே, அப்படியா?

    அடுத்த அமெரிக்க தேர்தல்ல தமிழர்களின் வாழ்வுக்காக, நீங்கள் விஜய்காந்த் கட்சியின் சார்பில் நிற்கப்போகிறீர்களாமே?

    ReplyDelete
  5. இடைவிடாத வேலைகளால் வலைப்பக்கம் வர இயலவில்லை....... உங்க சுவாரஸ்யமான பதிவுகளை மிஸ் பண்றேனேன்னு ஒரு பக்கம் நினைச்சிக்கிட்டிருந்தாலும்.... கொஞ்சம் ரிலாக்ஸ் ஆன பிறகு எல்லாவற்றையும் படித்துவிடுகிறேன்...அவர்கள்...!

    ReplyDelete
  6. அது சரி இத்தனை அரசியலை ஆய்வு செய்யும் மதுரைத் தமிழனை இங்கிருந்து யாரும் அரசியலுக்கு கை கொடுத்துத்ஹ்டாங்கிப் பிடிக்க அழைக்க வில்லையா? இல்ல நீங்க வந்தீங்கனா கொஞ்சம் காமெடிலயாவது நாங்க கொஞ்சம் சிரிச்சு நல்லாருப்போம்ல...அதான்...

    ReplyDelete
  7. //இவிங்க்ய நம்ம அரசியல் வாழ்க்கையில மன்னா போற்றுவாய்ங்க போலருக்கே //
    இது இல.கணேசனோட மைன்ட் வாய்ஸ். LOL !

    ReplyDelete
  8. ஐயோ,கீபோர்ட் படுத்துது.
    //இவிங்க நம்ம அரசியல் வாழ்க்கைல மண் அள்ளி போட்ருவாய்ங்க போலருக்கே //
    இது இல,கணேசனோட மைன்ட் வாய்ஸ்!!
    LOL!

    ReplyDelete
  9. போற போக்கைப் பார்த்தால் விஜயகாந்தை யாருமே தேடமாட்டாங்க போல.

    ReplyDelete
  10. விஜயகாந்துக்கே தோன்றாத அரிய யோசனைகளை அள்ளி வழங்கிய மதுரைத்தமிழனுக்கு சூட்கேஸ்களை அனுப்பி வளைச்சுரணும்னு இங்குள்ள அரசியல் தலைகள் நினைச்சாலும் ஆச்சரியப்படறதுக்கில்லேப்பா...! (அப்படி யாராவது அணுகினா, சென்னைல என் மேனேஜர் இருக்காருன்னு என் அட்ரஸ் கொடும். வேற ஏதாவது கொடுத்தால்.... ஹி... ஹி...! தராதேயும், நீரே வைத்துக் கொள்ளும்!)

    ReplyDelete
  11. என்னாங்க கேப்டன். தியேட்டர்ல எவ்ளவு நேரமா இன்டர்வெல் விடுவீங்க. கைய்ல இருக்கற கோன் ஐஸ் காலியாயிருச்சு. இப்பவே வெளீல போய்ருவோம். வாசல்ல நிரூபர்கள் காத்துக்கிட்ருக்காங்க. ஜாக்றதை.

    கோபாலன்

    ReplyDelete
  12. மதுரை தமிழரே வணக்கம்,
    I didn't get your updates in my feedly for past 3 months. So I thought that you quit blogging. I accidentally searched in google and caught your site. Did you make any changes to your blog?

    ReplyDelete
  13. நல்லாவே யோசிக்கிறீங்க!

    ReplyDelete
  14. For your teasing (comedy?) pl. don't touch Army & it's preparedness.

    ReplyDelete
  15. செம படம்... :) எங்கே இருந்துதான் பிடிக்கறீங்களோ!

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.