குழந்தை
சாவும் அமெரிக்காவில்
தமிழ் இளம் தம்பதிகள்
கைதும்.. நடந்தது
என்ன?
|
||
அமெரிக்காவில்
உள்ள கனெடிக்கட்
மாநிலத்தில் உள்ள
நியூஹெவன் பகுதியில்
வசிப்பவர்கள் சிவகுமார், 33.
இவரது மனைவி தேன்மொழி, 24.
இவர்களுக்கு அதியன் என்ற 19
மாதம் ஆன ஆண்
குழந்தை இருந்தது. இவர்கள்
இருவரும் வேலைக்கு
செல்வதால் இந்த குழந்தையை
பார்க்க பேபி சிட்டர்
கிஞ்சால் படேலை நியமித்து
இருந்தனர் . கடந்த மாதம்,
ஜனவ்ரி 16ம் தேதி, குழந்தை
ஓயாமல் அழுததால், இந்த
பேபிசிட்டர் கிஞ்சால்,
குழந்தை தலையை தரையில்
மோதச் செய்திருக்கிறார்.
இதில் குழந்தையின் மண்டை
உடைந்திருக்கிறது .
அதன்பின் அந்த பெண்
குழந்தையின் அம்மாவிற்கு
தகவல் கொடுத்து
இருக்கிறார். அந்த பெண் தன்
கணவனுக்கு கால் பண்ணி அவர்
வந்த பின் குழந்தையை
ஹாஸ்பிடலுக்கு தூக்கி
சென்று இருக்கின்றனர் .
அந்த குழந்தை கடந்த, 26ம்
தேதி, சிகிச்சை பலனின்றி
இறந்தது. இதனை அடுத்து அந்த
பேபி சிட்டர் கைது
செய்யப்பட்டு விசாரணைக்கு
உட்படுத்தினர். இது
மட்டுமல்லாமல்
குழந்தையின்
பெற்றோர்களும் முன்னுக்கு
பின்னாக தவறான தகவலை
தந்திருக்கின்றனர்.
இதையடுத்து, , தேன்மொழி
மீதும், சிவகுமார் மீதும்
வழக்கு பதிவு செய்யப்பட்டு,
அவர்களும் கைதாகியுள்ளனர்.
New
Haven, Conn., resident Kinjal Patel (right) has been charged with 1st
degree manslaughter for allegedly killing a 19-month-old boy in her
care. The boy’s parents, Mani Sivakumar (left) and Thenmozhi Rajendran
(center), have been arrested on charges of interfering with police
during the investigation of their toddler boy, Athiyan. (New Haven
Police Department photos)
குழந்தையின்
தாய் முன்னுக்கு பின்னாக
தவறான தகவலை
தந்திருக்கின்றனர்.
இதையடுத்து, ஹிந்தி நன்றாக
பேசக் கூடிய Indian-born
டிடெக்டிவ் Sgt. Manmeet Colon மற்றும்
டிடெக்டிவ் Lucille Roach விசாரணையை
துவக்கினர்.
அவர்களின்
விசாரனையின் படி
குழந்தையின் பெற்றோர்கள்
ஜனவரி 16 ஆம் தேதி யேல் நீயூ
ஹெவன் ஹாஸ்பிடலுக்கு
குழந்தையை எடுத்து சென்று
குழந்தையால் மூச்சுவிட
முடியவில்லை என்றும
கண்ணையும் திறந்து
பார்க்கவில்லை என்றும்
சொல்லி அட்மிட் செய்து
இருக்கின்றனர்.
குழந்தையின் தலையில்
அடிபட்டு மூளையில்
ரத்தகசிவும் இருந்து மிக
மோசமான நிலையில் இருப்பதை
அறிந்து சிகிச்சை அளிக்க
தொடங்கி இருக்கின்றனர்
ஆனால் சிகிச்சை பலன்
அளிக்காமல் குழந்தை இறந்து
விட்டது.
முதலிக்
குழந்தையின் அம்மா
போலிஸில் சொன்னது அவள்
குழந்தையுடன்
இருந்ததாகவும் எங்கும்
வேலை
பார்க்கவில்லையென்றும்
சொல்லி இருக்கிறார்
சம்பவம் நடந்த அன்று
குழந்தை மூச்சுவிட
திணறியதை கேட்டதும் தன்
கணவனுக்கு போன் செய்து அவர்
வந்த பின் குழந்தையை
ஹாஸ்பிடலுக்கு எடுத்து
சென்றதாக சொல்லி
இருக்கிறார் இதையே கணவரும்
சொல்லி இருக்கிறார்
சில
நாள் கழிந்ததும்
டிடெக்டிவ் விசாரணையில் state
Department of Children and Families (DCF)லிருந்து
மேலும் சில தகவல்கள்
கிடைத்தன. அதன் படி கடந்த
டிசம்பரில் இந்த குழந்தையை
சிகிச்சைக்காக
ஹாஸ்பிடலுக்கு கூட்டி
சென்று இருக்கின்றனர் இந்த
பெற்றோர்கள் அந்த
நேரத்தில் குழந்தையின்
உதடு நாக்கு முகவாய்
கட்டையில் அடிபட்டதற்கான
அடையாளங்கள் இருப்பதை
அறிந்த ஹாஸ்பிடல்
பணியாளர்கள் DCF க்கு தகவல்
தந்து இருக்கிறனர்
அவர்களின் விசாரனையில்
பேபி சிட்டர்தான் இதற்கு
காரணம் என்பதை அறிந்த
அவர்கள் குழந்தையின்
பெற்றோர்களுக்கு
வார்னிங்க் கொடுத்து
குழந்தையின்
பெற்றோர்களில் ஒருவர்
குழந்தையை கவனித்து
கொள்வதாக இருந்தால்
மட்டும் குழந்தையை
அவர்களிடம் தருவதாக சொல்லி
இருக்கிறார்கள் அவர்களும்
சம்மதித்து குழந்தையை
பெற்று இருக்கின்றனர்
மீண்டும்
இவர்களை விசாரணைக்கு
உட்படுத்திய போது
குழந்தையின் தாயார் அவர்
கிச்சனில் இருந்தாகவும்
அந்த சமயத்தில் குழந்தை
சோபா மேலேறி கதவை திறக்க
முயன்ற போது சோபாவில்
இருந்து கிழே விழுந்து
மண்டையில் அடிபட்டதாகவும்
அதன் பிறகு குழந்தையை தூங்க
வைத்த போது மூச்சு
திணறியதால் சிகிச்சைக்கு
அழைத்து சென்றதாகவும்
சொல்லி இருக்கிறார்
இதே
நேரத்தில் மற்றொரு
டிடெக்டிவ் இந்த பெண்
சம்பவம் நடந்த நாளில்
வீட்டுக்கு சிறிது
தூரத்தில் உள்ள கடையில்
வேலை பார்த்ததை
கண்டுபிடித்து அந்த
கடையிம் மேனேஜரிடமும் அதை
உறுதி படுத்திருக்கிறார்.
உடனே
ஹிந்தி பேசம் டிடெக்டிவ்
குழந்தையின் பேபி சிட்டரை
பார்த்து விசாரணை நடத்தி
இருக்கிறார் முன்று நாள்
விசாரணயின் போது ஒவ்வோரு
நாளூம் கதையை மாற்றி மாற்றி
சொல்லி இறுதியில் அவர்தான்
குழந்தையை அடித்து தரையில்
தள்ளி
அடித்துவிட்டதாகவும்
மேலும் குழ்னதையின்
பெற்றோரகள் தான் உண்மையை
சொன்னால் எல்லோரும்
மாட்டிக் கொள்ள்வோம்
அதனால் அவர்தான் பொய் சொல்ல
சொன்னார் என்று சொல்லி
குற்றத்தை ஒப்புக்
கொண்டுள்ளார்.
அதனை
அடுத்து முவரையும் அரெஸ்ட்
செய்து இப்போது சிறையில்
அடைத்து இருக்கின்றனர்
இப்போது
உள்ள தலைமுறையினருக்கு
பணத்தின் மீது மோகம்
ஏற்பட்டு பாசம் என்பது
இல்லாமல் போய்விட்டது. இந்த
தலைமுறைக்கு குழந்தை
என்பது ஒரு விளையாட்டு
பொம்மையாகி இருக்கிறது.
குழந்தையின் அம்மா சிறிது
பணத்திற்கு ஆசைப்பட்டு
அருகில் உள்ள கடையில் வேலை
பார்த்து இருக்கிறார் அதே
நேரத்தில் குழந்தையை நல்ல Day
Care ல் சேர்த்தால் அதிகம்
காசு செலவு ஆகும் என்பதால்
இங்கு மணிக்கு 5 டாலர்
வாங்கி குழந்தைகளை
பார்த்து கொள்ளும்
குஜராத்திகளிடம் விட்டு
இருக்கிறார். இப்படி பணம்
பணம் என்று பார்த்து பாசமான
குழந்தையை பறி
கொடுத்திருக்கிறார். என்ன
இந்த குழந்தை போனால் அடுத்த
குழந்தை பெற்றுக்
கொள்ளலாம் என்று
நினைத்திருப்பார்கள் போல
இருக்கிறது ஆனால் அதற்கு
அவர்கள் பல ஆண்டுகள் காத்து
இருக்கணும் அடுத்த
விசாரணை பிப் 11 ஆம் தேதி.
நிச்சயம் பல ஆண்டு
சிறைத்தண்டனை கிடைக்கலாம்
அதன் பின் நாட்டைவிட்டு
வெளியேற்றப்படுவார்கள்
அதன் பின் அவர்கள் வாழ்வில்
அமெரிக்கா என்பது பெரும்
கனவுதான்......
காசு
பணம் பணம் என்பது இப்போது
பிணம் பிணம் ஆகி வாழ்க்கை
ஒரு நடைபிணம் போல
ஆகிவிட்டது.
கிழே
இருக்கும் பாடலை தவறாக
படித்து புரிந்து
வளர்ந்தவர்களா இந்த
தம்பதிகள்?
பணம்
பந்தியிலே குணம்
குப்பையிலே - இதைப்
பார்த்து
அறிந்து நடக்காதவன்
மனிதனில்லே
பிழைக்கும்
மனிதனில்லே
பணம்
பந்தியிலே குணம்
குப்பையிலே - இதைப்
பார்த்து
அறிந்து நடக்காதவன்
மனிதனில்லே
பிழைக்கும்
மனிதனில்லே
ஒண்ணுந்தெரியா
ஆளானாலும் பணமிருந்தாலே -
அவனை
உய்ர்த்திப்
பேச மனித கூட்டம் நாளும்
தப்பாதே
ஒண்ணுந்தெரியா
ஆளானாலும் பணமிருந்தாலே -
அவனை
உய்ர்த்திப்
பேச மனித கூட்டம் நாளும்
தப்பாதே
என்ன
அறிவு இருந்திட்டாலும்
பணமில்லாத ஆளை
என்ன
அறிவு இருந்திட்டாலும்
பணமில்லாத ஆளை - உலகம்
எந்த
நாளும் மனிதனாக மதிக்க
மாட்டாதே
பணம்
பந்தியிலே குணம்
குப்பையிலே - இதைப்
பார்த்து
அறிந்து நடக்காதவன்
மனிதனில்லே
பிழைக்கும்
மனிதனில்லே
ஆளை
ஆளு புகழ்வதெல்லாம்
பணத்துக்காகத் தான் - பணம்
அகன்று
விட்டால் புகழ்ந்த கூட்டம்
இகழும் உண்மை தான்
ஏழ்மை
நிலை வந்தால் நேசர் யாரும்
இல்லை
ஏழ்மை
நிலை வந்தால் நேசர் யாரும்
இல்லை - இதை
எண்ணிப்
பார்த்து நடக்காதவன்
அடைவான் தொல்லை
பணம்
பந்தியிலே குணம்
குப்பையிலே - இதைப்
பார்த்து
அறிந்து நடக்காதவன்
மனிதனில்லே
பிழைக்கும்
மனிதனில்லே
உன்னால்
உயர்ந்த நிலையடைந்தோர்
நிறைய பேர்கள் உண்டு -
அவர்கள்
உனது
நிலை தாழ்ந்த பின்பு
ஒதுங்குவார்கள் கண்டு
மண்ணாய்
அவரை மதித்து நீயும்
துணிவுமே கொண்டு
மண்ணாய்
அவரை மதித்து நீயும்
துணிவுமே கொண்டு - நாளும்
முயன்று
மேலும் பாடுபட்டால்
வெற்றியும் உண்டு
பணம்
பந்தியிலே குணம்
குப்பையிலே - இதைப்
பார்த்து
அறிந்து நடக்காதவன்
மனிதனில்லே
பிழைக்கும்
மனிதனில்லே
பணம்
பந்தியிலே குணம்
குப்பையிலே
வருத்தத்துடன்
மதுரைத்தமிழன்..
டிஸ்கி
: இதே தகவல் இன்று
தினமலரிலும் திணமணியிலும்
எப்படி வந்து இருக்கிறது
என்பதை கிழேயுள்ள
இணைப்பில் பார்க்கவும்
அவர்கள் செய்தியை தரும்
கண்றாவிகள் உங்களுக்கு
புரியும்.
|
மேலே தலைப்பிட்ட
பதிவை பகிர்ந்துவிட்டு
செய்தியை பார்க்கும்
போது மற்றொரு
இந்திய பெண்மணி
தனது 10 வயது
குழந்தையை கொன்ற
செய்தி வந்திருக்கிறது
என்னதான் நடக்கிறது
இங்கே
Indian American Mom in Texas Accused of Killing Son
A North Texas Indian American woman was charged with murder Jan. 30
in the death of her 10-year-old son, whose body was found in a bathtub
in the family's suburban Dallas home.
Pallavi Dhawan, 38, was booked into the Frisco City Jail after
her arrest the night of Jan. 29. Bond was set at $50,000.
Police said Sumeet Dhawan, the suspect's husband of 15 years,
called officers to the family home the evening of Jan. 29 after he
returned from an out-of-town trip and could not find his wife. When
officers arrived, the husband also expressed concern about the welfare
of their only child, Arnav Dhawan.
His father said he had received an e-mail that the child had been
absent from school for several days, according to a Frisco Police
Department statement.
At that point, Pallavi Dhawan arrived at the house. Officers asked
where the child was, but she asked to speak privately with her husband
first, according to the statement. During the conversation, her husband
became visibly upset, called officers over and pointed toward a bedroom
door. They found the door locked.
Police said officers forced the door open and found the child's
body in the tub, wrapped in a cloth up to his neck and with plastic bags
in the tub around him.
The Dallas News reported that Pallavi Dhawan confessed to killing
the boy, police said at a Jan. 30 afternoon news conference.
"Officers asked Mrs. Dhawan if the child was in the room, and
she nodded her head 'yes.' Officers asked her if she killed the child,
and Mrs. Dhawan nodded her head 'yes’,” said police Sgt. Brad
Merritt at the news conference.
Pallavi Dhawan’s lawyer, David Finn, called her alleged admission
"fiction,” and that Dhawan denied admitting to killing the child.
"We categorically deny that she indicated in any way or form
that she was responsible for his death," he said.
Arnav had been "the center of their universe," Finn said
of the family. "He was a happy, fun-loving boy."
Pallavi and Sumeet Dhawan are naturalized U.S. citizens, Finn said.
Family members described the couple's only child and his mother as being
"inseparable," he said.
An autopsy with toxicology tests has been ordered.
Finn said there are "a plethora of unanswered questions."
For example, he said there were no signs of physical trauma or water in
the boy's lungs.
The Dallas News reported Jan. 31 that Sumeet Dhawan told police
that his wife was coping with mental health problems and they were
having marital issues, according to a search warrant affidavit released
Jan. 31. His wife was released from the Frisco City Jail Friday after
posting bond, police said.
The newspaper had reported earlier that one of the family’s
neighbors, Steve Buckley, said the family had moved in quietly and kept
to themselves.
“No one in the neighborhood has ever even met them,” he said.
“We never even saw a moving truck. … All of a sudden they were
here.”
|
Home
»
அமெரிக்கா
»
இறப்பு
»
குழந்தை
»
கைது
»
தமிழ்
»
பெற்றோர்
» குழந்தை சாவும் அமெரிக்காவில் தமிழ் இளம் தம்பதிகள் கைதும்.. நடந்தது என்ன?
Friday, January 31, 2014
29 comments:
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.
Subscribe to:
Post Comments (Atom)
குழந்தை இல்லாமல் ஒரு பக்கம் பலர் ஏங்கி கொண்டு இருக்கையில் இப்படியும் சிலர்.
ReplyDelete
Deleteஇவர்களின் ஏக்கம் எல்லாம் பணம் மேலேங்க....என்ன சொல்ல. பணம்தான் முக்கியம் என்றால் பிள்ளை எதற்கு இவர்களுக்கு
என்ன சொல்வதென்றே தெரியவில்லை.....பதறி போய்விட்டேன்..! ஒன்றுமறியா குழந்தையை இப்படி செய்ய எப்படித்தான் மனம் வந்ததோ? பணம் பந்தியிலே குணம் குப்பையிலே...ன்னு தப்பாத்தான் புரிஞ்சிகிடறாங்க நெறைய பேரு! நிறைய பேர் முதல்ல பணத்தை சம்பாதிச்சிடலாம் அப்புறம் குழந்தையை பெத்துக்கலாம்னு திருமணமாகிய பிறகும் குழந்தை பிறப்பை ஆறெழு வருடங்களுக்கு தள்ளி போடுகின்றனர்..... பாசத்தின் உறவுகளை கூட பணத்தின் இடைஞ்சலாக நினைக்கும் அளவு பேராசை நிறைந்த வாழ்க்கை மனிதர்ளை ஆக்கிரமித்துள்ளது......
ReplyDeleteத.ம-2
குழந்தை பிறப்பை தள்ளி போடுறது கூட தப்பு இல்லைங்க ஆனால் பிள்ளையை பெற்று இப்படி தள்ளிவிடுவதுதான்(சாக அடிப்பது) மோசமுங்க
Deleteஎன்ன சொல்வது என்றே தெரியவில்லை. இவர்களின் அற்ப எண்ணத்தினால் ஒரு உயிர் மொட்டிலேயே பறிக்கப்பட்டு விட்டது. இதை பார்த்தாவது மற்றவர்கள் திருந்தட்டும்.
ReplyDeleteஇந்த தலைமுறை அப்படி எளிதாக திருந்திவிடாதுங்க
Deleteஎன்னவொரு கொடுமை...
ReplyDeleteஇன்றைய பணம் உட்பட, நவீன நாகரீக மோகத்தால், இந்தக் கொடுமை இங்கும் பரவ ஆரமபித்து விட்டதை என்னவென்று சொல்ல...?
பணம் என்னடா பணம் பணம் குணம்தானடா நிரந்தரம் போன்ற பாடலை கேட்டு வளராமல் யாரடி உன்னை பெத்தான், கொலைவெறி கொலைவெறி போன்ற பாடல்களை கேஏடு இளைய சமுதாயம் வளருவதால் இந்த மாதிரி சம்பவங்கள் பற்றி நாம் அட்க்கடி கேட்க வேண்டியதிருக்கும் காலம் இது
Deleteபடிப்பும், வசதியும் இருந்தால் வயத்துல இருக்கும்போதே கல்வி, ஒழுக்கம் சம்பந்தாமன் கிளசுக்குலாம் தம்பதியர் போய் வயத்திலிருக்கும் குழந்தையோடு பேசி படங்களைக்(தாயின் கண்களால்) காட்டி இனம்புரிய வச்சு, குழந்தைப் பிறந்தஹ்டும் ஊட்டச்சத்துகள் முதல், வசதி வாய்ப்பு இருப்பின் பச்சிளம்குழந்தைக்கு நீச்சல் முதல் படிப்பு வரை சொல்லிக்கொடுத்து இந்த காலத்துல பிள்ளைங்களை வளர்க்குறதைப் பார்த்துப் பொறாமைப்படுவேன். நம்ம குழந்தைகளுக்கு இப்படி செய்யாம விட்டுட்டோமேன்னு!!
ReplyDeleteஆனா, படிச்சும், வசதியும், வாய்ப்பும் இருந்தும் பணத்துக்கு ஆசைப்பட்டு ஒரு பிஞ்சு உயிரை இழந்து நிக்குறாங்களே பாசத்துக்கும், அன்புக்கும் அக்கறாஇக்கும் பேர்ப் போன தமிழ்நாட்டு தம்பதி. வெக்கமாய் இருக்கு சகோ!
தமிழர்களுக்கு தலைக்குனிவை ஏற்படுத்திதான் விட்டார்கள் இந்த இளம் தம்பதிகள்
Deleteஎன்ன கொடுமை? பெற்ற குழந்தையை விட பணமா முக்கியம் . ஏனிப்படி இருக்கிறார்கள் ?
ReplyDeleteஅவர்களுக்கு பந்த பாசம் பற்றி சொல்லிக் கொடுக்காமல் பணப் பாசம் பற்றி பெற்றோரகள் சொல்லி கொடுத்திருப்பதானால் என்னவோ இப்படி ஒரு நிகழ்வு நடந்து இருக்கிறது
Deleteஅடப்பாவிகளா..அவனவன் குழந்தையில்லாம கோயில் கோயிலா அலைஞ்சுக்கிட்டு இருக்கான். இந்த கழிசடைங்களை கொன்னாலும் தப்பில்லை.
ReplyDeleteசப்ப மேடருக்குப் போய் இவ்ளவு பில்ட் அப் குடுக்காதீங்க.
ReplyDeleteந்மது ஊர் பழமொழி //பொய் சொன்னாலும் பொருந்தச் சொல்//. பொருந்தப் பொய் சொல்வது எப்படி என்று சொல்லித்தற நம்ம நாட்ல ஆட்கள் நிறைய இருக்கிறார்கள். அமெரிக்கால இந்த மாதிரி ஆளுங்கல்லாம் இல்லயா.
நம்ம ஊர்ல இது மாதிரி நடந்துருந்தா //தேவயானி கேசு மாதிரி இதுவும் இந்தியாவுக்கு எதிரான அமெரிக்க முதலாளித்துவத்தின் நடவடிக்கை// அப்டீன்னு பார்லிமெண்டுல சொல்ல வெச்சு நானே வெளீல கொண்டுவந்துருப்பேன்.
இப்பவாவது நம்ம த்லேல களிமண்ணு இல்லேன்னு ஒத்துக்றீங்களா.
கோபாலன்
திடீர்ன்னு ஒரு சந்தேகம்.
ReplyDeleteவேலை செய்த சிட்டா கிஞ்சேல் படெலும் டிடெக்டிவ் நம்பர் 1 ம் ஒங்க படத்துல பாக்க ஒரே மாதிரி இருக்காங்களே.
கோபாலன்
எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு! அது அமெரிக்கவாக இருந்தாலும், இந்தியாவாக இருந்தாலும் சரி!! கொடுமையிலும் கொடுமை மகா கொடுமை! கொடுமைக்காரப் பெற்றோர் என்றுதான் சொல்ல வேண்டும்! அப்படி என்ன குழந்தையை விட பணம் வேண்டிக் கிடக்கு? இவனுங்க எல்லாம் அடுத்தது குழந்தை பெத்துக்க லாயக்கே இல்லாதவ்ங்க.
ReplyDeleteஅமெரிக்கா என்பதால் தகுந்த தண்டனை! நம் நாட்டில் பொய் சொல்லுவது எளிது! ஆதலால்...தண்டனை??
பணத்திற்கு நாம் தான் முதலாளியாக இருக்க வேண்டுமே அல்லாது பணம் நம்மை ஆளும் முதலாளியாகக் கூடாது!
த.ம.
அருமையான பாடல் பகிர்வுக்கு நன்றி! னீங்கல் சொல்றாமாதிரி இப்ப உள்ள சின்னப் பசங்க எல்லாம் எங்கங்க ப்ழைய பாட்டெல்லாம் கேக்கறாங்க?! முதல்ல தமிழ் படிக்கறாங்களானு கேளுங்க...
ReplyDeleteஎன்ன கொடுமை சார். பாடல் அருமையானது.
ReplyDeleteபணம்? பணம்? உண்மை தான் கனடாவில் கூட தமிழ் பெற்றோர்கள் பணத்தின் பின்னால் ஓடுகின்றனர். விளைவு பிள்ளைகள் சீரழிகின்றன. முதலில் இவர்கள் ஆடம்ப பிரியர்கள் வெளிநாடுகளுக்கு வருவோர் தம் தேசத்தில் கிடைக்காத பலவற்றை பெற்று விட துடிக்கின்றனர், அத்தோடு உள்ளூர் வாசிகளை விட அதிகப்படியான வீடு, கார் என கொள்வனவு செய்ய துடிப்பதன் விளைவு, வரவிற்கு மீறிய செலவினங்கள். இதனால், கணவன்மார் இரு வேலைக்குப் போகின்றனர், மனைவிமார் கூடுதல் மணி நேரம் பணியாற்றுகின்றனர். வீட்டில் பிள்ளைகளோடு நேரம் செலவிடுவதில்லை. சொந்த தேசங்களில் கிடைக்கும் சமூக பிணைப்பு உறவுமுறைகள் இங்கு இருப்பதில்லை. அதுவும் பிள்ளைகளை நல்ல பராமறிப்பு நிலையங்களில் சேர்ப்பதில்லை, அதனால் குறைந்த சம்பளத்துக்கு பயிற்சியற்றோரை வேலைக்கு அமர்த்தி குழந்தையின் உயிருக்கு உலை வைப்பது. என்ன இருந்தாலும் தாயோ, தகப்பனோ, ரத்த சொந்தங்களின் பராமறிப்பு போல வராது. என்ன தான் பெரிய படிப்பு படித்து பெரிய நிறுவனங்களில் குப்பை கொட்டினாலும் நவீன பெற்றோருக்கு குழந்தை வளர்க்கும் முறையும் தெரிவதில்லை, பாசப்பிணைப்பும் இருப்பதில்லை, கண்டதையும் வாங்க வேண்டும் பந்தா பண்ண வேண்டும் என்ற மனமும், அவற்றுக்கு தேவையான பணம் பண்ண வேண்டும் என்ற எண்ணமும் மட்டும் தான் உள்ளது..! என்னத்த சொல்ல, இனி இந்திய அரசு இவர்களையும் காப்பாற்ற கங்கணம் கட்டும், நம் ஊடகங்கள் உண்மைத்தன்மைகளை விளங்காமல் வாந்தி எடுத்துத் திரியும். :( குடும்ப உறவுகளுக்கு போன தமிழ்நாட்டுக்கு இவர்களைப் போன்றோரால் பெரும் களங்கம், பணம் தான் முக்கியம் எனில் இத்தகையோர் பிள்ளைப் பெறாமல் இருப்பதே நல்லது.
ReplyDeleteThe thamizh parents were busy making money and having fun!
ReplyDeleteWhy do you need a child if cant bring him up and watch him carefully at 18 months?
What do our feminists say about such fuckup?
அன்புடையீர்..
ReplyDeleteதங்களின் தளம் வலைசரத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
http://blogintamil.blogspot.com/2014/02/2.html
நல்வாழ்த்துக்கள்..
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
ReplyDeleteமேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2014/02/2.html) சென்று பார்க்கவும்... நன்றி...
மார்க் வாங்கினால் போதும் பெற்றோருக்கு பிள்ளை எப்படி வளர்கிறதென்ற கவலை இல்லை.
ReplyDeleteபள்ளிக்கு பெருமை சேர்க்க அதே மதிப்பெண் போதும். மீடியா விற்கு டி.ஆர் .பி போதும். நாம் குழந்தைகளுக்கு பணம் பண்ணத்தான் சொல்லித்தருகிறோம். இப்படிபட்ட சூழலில் இது போன்ற மனநிலைபிறழ்வுள்ள மனித எந்திரங்கள் தான் உற்பத்தியாகும். வேறென்ன சொல்ல? கொடுமை.
உடன் சிகிச்சைக்கு கொண்டு சென்றிருந்தால் குழந்தையைக் காப்பாற்றியிருக்கலாம். ஆனால் எதையுமே
ReplyDeleteமறைத்துவிடலாம்,எல்லோரையும் முட்டாளாக்கலாம் என எண்ணி ,குழந்தையும் தொலைத்து வாழ்வையும் தொலைத்து விட்டார்கள்.
இவர்களைக் கற்றவர்கள் என்கிறார்கள். வேடிக்கை !
அருமையான பாடலைத் தந்ததற்கு நன்றி!
பயங்கரமான அதிர்ச்சியாக அல்லவா இருக்கிறது...!
ReplyDeleteமிக அதிர்ச்சியான தகவல். எப்படி இவர்களால், பணம்,பணம் என்று அலைய முடிகிறது என்று தான் தெரியவில்லை.
ReplyDeleteஇந்தியாவில் தான் குடும்ப சூழ்நிலை காரணமாக பெற்றோர் இருவரும் வேலைக்கு செல்கின்றனர். ஆனால் வெளிநாடுகளில் வசிக்கும் நம்மவர்களில் பலர், தேவைக்கு அதிகமாக பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டு, இருவரும் வேலைக்கு செல்கின்றனர்.
சரி, அப்படி செல்லும்போது குழந்தைகளை நல்ல Day Careயில் சேர்த்தால், குழந்தைகளைப் பற்றிய பயமில்லாமல் , மன நிம்மதியோடு வேலைக்கு போய் வரலாமே. ஆனால் இவர்களுக்கு உள்ள ஒரே மன நிம்மதி, பணம் சம்பாரிப்பதில் தான் என்று தெரிகிறது.
பிள்ளை வரம் கிடைக்காதா என்று தவமாக காத்துக்கொண்டிருப்பவர்களுக்கு குழந்தை வரத்தை கொடுக்காமல், இப்படி பணம் பின்னால் அலைபவர்களிடம் கொடுத்து கடவுள் கூட ஓரவஞ்சனை செய்கிறார்
பெற்றால்தான் பிள்ளையா. குழந்தையும் தெய்வமும் ஒன்று என்றிருந்த காலம்போய் எதை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறார்கள்.
Deleteகோபாலன்
இவ்வாறு ஒரு குற்றத்தை மறைக்க பொய் சொல்வது இன்னும் ஒரு குற்றத்தை செய்வதற்கு ஒப்பாகும் என்பதை நம்மில் பலர் மறந்துவிடுகிறோம். அதுவும் போலீசிடம் பொய் சொல்வது ஆபத்தானது என்பது கூடவா இவர்களுக்கு தெரியாது. கணவருடைய அலுவல் விசாவில் அமெரிக்கா செல்லும் மனைவியோ அல்லது மனைவி விசாவில் செல்லும் கணவரோ அங்கு வேலைக்கு செல்ல முடியாது என்பது விசா சட்டங்களில் ஒன்று என்கிறார்களே? அந்த குற்றத்தை மறைக்கத்தான் இவ்வாறு பொய் செல்லியிருப்பார்களா? என்ன சோதனை?
ReplyDeleteஎன்ன கொடுமை இது.... இப்படியும் சிலர்.
ReplyDelete