Monday, January 6, 2014



ஆகமவிதிகள் காற்றில் பறக்கவிடப்படுகின்றனவா? கலாச்சார காவலர்களே இதற்கு பதில் சொல்லுங்களேன்? 





உலகம் முழுதும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. இளைய தலைமுறையினர் பாருக்கும் பீச்சுக்கும் சென்று கொண்டாடுகிறார்கள் , ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்டவர்கள் கோயில்களுக்கு சென்று கொண்டாடுகிறார்கள். அதாவது அவரவர்கள் அவர்களுக்கு பிடித்த முறையில் கொண்டாடுகிறார்கள் அதில் தவறு ஏதும் இல்லை  சரி அப்படின்ன இந்த பதிவில் நீங்க என்ன சொல்ல வருகிறீர்கள் என கேட்கிறீர்களா?

இந்த புத்தாண்டு ஆங்கிலப் புத்தாண்டு உலகெங்கும் இது கொண்டாடப்படுகிறது அது இந்தியாவிலும் கொண்டாப்படுகிறது ஆனால் அதை எப்படி இந்துக்கள் கொண்டாடுகிறார்கள் என்று பார்க்கும் போதுதான் முரண்பாடு தெரிகிறது.

இப்போதெல்லாம்  ஆங்கிலப் புத்தாண்டு அன்று நள்ளிரவில் பிரதான ஆலயங்களை திறந்து வைத்து விடிய விடிய பக்தர்களை தரிசனத்திற்கு அனுமதித்து வருகின்றனர். அர்ச்சனைகளை, பூஜைகளை அந்த நேரத்தில் செய்கின்றனர்.  இது நமது இந்து மதவழக்கப்படி முன்பு இல்லாது இருந்தது. ஆனால் இப்போது ஆகமவிதிகளை தூக்கி ஏறிந்து  நடைப் பெற்று வருகிறது. இந்து மத ஆகம விதிப்படி அர்த்த ஜாம பூஜைகள் முடிந்த பிறகு, மறுநாள் அதிகாலையில் தான் நடையை திறக்கவேண்டும். இடையில் எந்த காரணத்தை கொண்டும் திறக்கக் கூடாது. அப்படி திறந்தால் அது  ஆகம விதிகளுக்கு முரணானது என்பது இந்து மதப் பெரியவர்களுக்கு நன்றாகவே தெரியும். அப்படி தெரிந்தும் அதை உடைத்து ஏறிந்தது யார்? அதை எதற்காக ஏறிந்தார்கள் என்று பார்க்கும் போது சிலரின் சுயநலம்தான்  என்பது நன்றாக தெரிகிறது.

புத்தாண்டு அன்று கோவில்களுக்கு படையெடுக்கும் பக்தர்களால் கிடைக்கும் வருவாயை மனதில் கொண்டு அரசுதான் இது போன்ற நள்ளிரவு பூஜைகளை, தரிசனத்தை அனுமதிக்கிறதா அல்லது கோயிலில் பணி புரிபவர்கள் தங்களுக்கு கிடைக்கும் தனிப்பட்ட வருவாயை மனதில் கொண்டுதான் அரசை வற்புறுத்தி திறக்க செய்கிறதா என்ன? ஆகமவிதிகளை பார்த்து செயல்படும் குருக்களும் வாய் மூடி மெளனமாக இருப்பது அவர்களுக்கு கிடைக்கும் வருமானதினாலா?
 
ஆகமவிதிகள் என்பது என்ன? ஆலயவழிபாட்டு விதிமுறைகளைத் தான் ஆகமவிதிகள் என்று குறிப்பிடுகிறார்கள். இதில் அன்றாட பூஜைமுறை, திருவிழா, கும்பாபிஷேகம் போன்ற விசேஷ காலங்களில் செய்யும் சிறப்பு வழிபாடுகள், ஹோமம் நடத்தும் முறை போன்றவை இடம் பெற்றுள்ளன.                                                       .
 
இந்த முரண்பாடு சரிதானா என்பதை ஆகமவிதிகள் தெரிந்த இந்து கலாச்சார காவலர்கள்தான் சொல்ல வேண்டும் அல்லது இவர்களும் அதை ஆமோதிக்கிறார்களா?

ஆங்கில புத்தாண்டை கொண்டாடும் மேலை நாடுகளில் கூட சர்ச்சுகள் இரவு முழுவதும் திறப்பதில்லை சர்ச்சுகளில் புத்தாண்டுக்கு முன்பும்  புத்தாண்டு அன்று காலையில்தான் திறந்து வைப்பார்கள் அவர்களுக்கு ஆகமவிதிகள் கிடையாது ஆனால் அவர்களின் புத்தாண்டு தினத்திற்காக நாம் ஆகமவிதிகளை உடைப்பது சரிதானா?

சிந்தியுங்கள் சிந்தியுங்கள்..

அன்புடன்
மதுரைத்தமிழன்


06 Jan 2014

13 comments:

  1. காசே தான் கடவுளடா, இது அந்த கடவுளுக்கும் தெரியுமடா என்ற பழைய பாடல் தான் ஞாபகம் வருகின்றது. ஆகம விதிகள் எல்லாம் என்றோ பறக்க விட்டாச்சு, சொல்லப் போனால் பிழைப்புக்காக ஆகம் விதிகள் மாற்றம் கண்டும் வந்துள்ளன தான். இன்று பல கோயில்கள் வெளித் தோற்றத்துக்காய் கட்டப்படுபவைகள், ஆனால் அவற்றின் உள்ளே நடக்கும் சமாச்சாரங்களே வேறு... ! இன்னும் சில ஆண்டுகளில் வாலண்டைன் தினத்துக்கு சிறப்பு பூசை, கிறிஸ்மஸ் கொண்டாட்டத்துக்கு சிறப்பு பூசை எல்லாம் கூட நடத்தப்படலாம் என்பது எனது கணிப்பு. அத்தோடு பல புதுக்கடவுள்கள் கூட சேர்க்கப்படலாம், ரஜினிகாந்த, சச்சின் போன்றோருக்கு தனி கர்ப்பகிரகங்கள் கூட வைக்கப்படலாம். அத்தோடு வீட்டில் இருந்த படி வீடியோ கான்பிரன்சலில் தரிசனம் பார்த்து, கிரடிட் கார்டில் காணிக்கை போட்டு, போஸ்டலில் பிரசாதங்கள் வீடு தேடி வரும். What a Development Sir ji !!!

    ReplyDelete
    Replies
    1. விவரணன் ரொம்ப விவரமாக தான் சொல்லியுள்ளார் :))

      மதுரை தமிழரே, நீங்கள் இந்தியா போய் நீண்ட காலங்கள் ஆகி விட்டதா ? ஏனெனில் ஆங்கில புத்தாண்டுக்கு நடு ந்சியில் கோயில் திறக்கும் வழக்கம் வந்து பல வருடங்கள் ஆகி விட்டதே. அதுவும் நீங்க எந்த காலத்தை நினைத்து பக்தி, ஆன்மீகம், ஆகமவிதிகள் என்று பேசிக்கொண்டு இருக்கிறீர்கள். இதெல்லாம் பிஸினஸாகி ரொம்ப நாளாச்சுங்க. காசு கொடுக்கிறவனை ஸ்பெஷல் வழியாக சாமி கிட்ட கூட்டிட்டு போறது எல்லாமே ஆகமவிதி இல்லை தான். ஊரை ஏச்சி உலையில் போடும் கந்து வட்டி காரன்களும், கள்ள சாராயம் காய்ச்சி ஏழைகளின் உயிரைக் குடிக்கிற சாராய வியாபாரிகளுக்கும் கோயில்ல நடக்கிற தடபுடல் உபசாரங்களை பார்த்திருக்கிறீர்களா காரணம் அவன் உண்டியலில் கத்தை கத்தையாய் பணத்தை போடுவதும் அல்லாமல் குருக்களுக்கும் கணிசமான தொகை கொடுப்பான். எல்லாமே வியாபாரம் ஆயி ரொம்ப நாள் ஆயிடுச்சு நண்பரே

      Delete
  2. நானும் என் நண்பர்களும் இதைப்பற்றி பேசியதுண்டு. ஆனால் அந்தப்பேச்சு ஒரு முற்றுப்பெறாத பேச்சாகத்தான் அமைந்திருக்கிறது.

    ReplyDelete
  3. சோக்கான முயிப்புணர்வு பதிவு... வாய்த்துக்கள் மானா தானா...!
    அல்லாம் போட்டாச்சு... போட்டாச்சு...

    ReplyDelete
  4. தில்லையைப் பற்றிய பதிவு என்று நினைத்தேன்.

    தூணிலும் , துரும்பிலும் எங்கும், எதிலும் இருப்பவர் , அதிகாலை 12 மணிக்கு இருக்க மாட்டாரா என இதற்கும் விளக்கம் கொடுப்பார்கள்.

    எனவே சாமிக்கு (கோயில்) வெளியில் இருந்து ஆதரவு கொடுக்கலாம். ஆனால் நடக்கின்ற காரியமா இது?
    தம3

    ReplyDelete
  5. தாங்களை போன்ற உற்சாக பான பிரியர்கள் தீர்த்தவாரி செய்து புத்தாண்டு கொண்டாட டாஸ்மாக்குகளையும் பார்களையும் நள்ளிரவிலும் திறந்து வைத்திருக்கும் கழக அரசுகள், கருணையுள்ளத்தோடு தமிழக பக்தகோடிகளை மகிழ்விக்க நள்ளிரவில் கோவிலைகளை திறந்து தீர்த்தம் வழங்குமாறு அறநிலையத்துறைக்கு உத்தரவிடுகின்றன. அது உங்களுக்கு பொறுக்கவில்லையா?

    ReplyDelete
  6. நல்ல கேள்வி. எல்லாம் வியாபாரமயம்.....

    ReplyDelete
  7. அடப் போகங்கப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பா....!

    ReplyDelete
  8. அருமையான பதிவு! நல்ல நியாயமான கேள்விகள்! விவரணம் நீலவண்ணன் சொல்லுவது போல வீட்டிலுருந்த படியே வீடியோ கான்ஃப்ரன்சில் தரிசனம் பார்த்து, க்ரெடிட் கார்டில் காணிக்கை போட்டு......இது இப்பத்தான் ஏற்கனவே திருப்பதி போன்ற கோவிலகளுக்கு நடக்கின்றதே! இந்த இடத்தில் சுஜாதா அவர்களின் திருப்பதி பற்றிய ஒரு அறிவியல் ஃபிக்ஷன் கதை நினைவுக்கு வந்தது!!! அதுவும் நடக்கலாம்!

    ReplyDelete
  9. நள்ளிரவு பூஜை கூடாதுதான்! கட்சிக்காரர்களும் காசும் மாற்றியிருக்கிற கலாசாரம் இது!

    ReplyDelete
  10. விக்கிரகத்தை நடிகை தொட்டால் தீட்டு என்று குதிப்பார்கள் ,ஆனால் கர்ப்பக்கிரக அறைக்குள் குருக்கள் செய்த லீலைகள் பற்றியும் ,கோவிலில் நடந்த கொலையையும் ஊடகங்கள் வெளிச்சம் போட்டுக் காட்டியதை மறக்க முடியுமா ?
    ஆகம விதிகளா ?அதற்க்கெல்லாம் என்றைக்கோ முற்றுப் புள்ளி விழுந்துவிட்டது ,கல்லா நிறைஞ்சா சரி என்றாகி விட்டது !
    த.ம 5

    ReplyDelete
    Replies
    1. ஆனால் கர்ப்பகிரக அறைக்குள் குருக்கள் செய்த லீலைகள்
      -----------------------

      என்னவோ நீங்கதான் எல்லா குருக்களுக்கும் ஆள் அனுப்பி வெச்சா மாதிரி பேசறீங்க..


      கே.கோபாலன்

      Delete
  11. @bagawanjee KA
    //கல்லா நிறைஞ்சா சரி என்றாகிவிட்டது//
    அதுவும் ஃபுல்லா நிறையணும்னு ஆசைப்படறாங்களே ஜீ ;))

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.