என் மனைவி
என்னிடம் பேசிக் கொண்டிருக்கும் போது என்னங்க
"நாம் காதலிக்கும் போது நான் உங்களிடம் யார் ரொம்ப அழகு?
நானா? நிலவா?” என்று கேட்டால்" , நீங்கள் அதற்கு “உன்னைப் பார்க்கும்போது நிலவை மறந்துவிடுகிறேன்.
நிலவைப் பார்க்கும்போது உன் நினைவு வந்துவிடுகிறது! என்று சொல்லுவிங்களே
அது உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? என்று
கேட்டாள்
அதற்கு நான்
ஆமாம் ( இல்லைன்னு சொல்லிவிட முடியுமா என்ன)அதுக்கு இப்ப என்ன என்று கேட்டடேன்
இல்லைங்க இப்ப
அதே கேள்வியை கேட்டால் நீங்கள் என்ன சொல்லுவீங்க என்று கேட்டாள்
(மதுரைத்தமிழன்
சும்மா இருந்தாலும் அவன் வாய் சும்மா இருக்குமா என்ன? )அதற்கு நான் பெளர்ணமியன்று நிலவு அழகு. அமாவாசையன்று நீ அழகு! என்று சொல்லிவிட்டு அமைதியாக இருந்தேன்
நான் சொன்ன
பதில் உடனடியாக அவளுக்கு புரியவில்லை ஆனால் சிறிது நேரத்திற்கு பின் தான் அவளுக்கு
நான் சொன்னதின் அர்த்தம் புரிந்தது அவள் கோபத்துடன் கிச்சனுக்கு சென்று பூரிக்கட்டையை
எடுக்க சென்ற போதுதான் எனக்கு புரிந்தது வரப் போது சுனாமி என்று. அதனால் என்ன செய்வது
என்று தெரியாமல் அவசரத்தில் அலமாரிக்குள் நுழைந்துவிட்டேன் என் லேப்டாபுடன். இப்ப நான்
அமாவாசை இருட்டுக்குள் மாட்டிக் கொண்டேன்.
அவள் கோபம்
எப்ப தனிய? நான் எப்ப வெளியே வர என்பது தெரியாமல் தவிக்கிறேன்
அதனால் மக்களே
என் மனைவியின் கோபம் தீர நான் என்ன செய்யவேண்டும் என்பதை பின்னுட்டத்தில் சொல்லிச்
செல்லவும்.
டிஸ்கி
: காதலிக்கும் போது காணும் அழகு
கல்யாணத்திற்கு அப்புறம் தெரியாமல் போகிறதே!
ஏன்?
காதலிக்கும்
போது நாம் புற அழகை பார்க்கிறோம் ஆனால் கல்யாணத்திற்கு அப்புறம் உள்ளத்தின் அழகை நேசிக்கிறோம்
அதனால்தான் புற அழகு நமக்கு அழகாக தோன்றுவதில்லை.
அப்பாடி ஒரு
வேளை சாப்பாட்டிற்கு இப்படியெல்லாம் பதில் சொல்லி சமாளிக்க வேண்டி இருக்கிறதே உஷ்ஷ்ஷ்ஷ்ஸ்
அப்பாடி என்ன கஷ்டம் என்ன கஷ்டம்
அன்புடன்
மதுரைத்தமிழன்
அவர்கள் புற அழகைப் பார்த்தால் வாழ்க்கை தண்டம் ஆகி விடும்...!
ReplyDeleteகைக்கு எட்டும் வரைதான் எதுவுமே அழகு !
ReplyDeleteத ம 3
எட்டிய பின்பு எட்டிக்காயா?
Deleteஎட்டிய பின்பு எட்டிக்காயா?
Deleteதிருமணத்திற்குப் பிறகு அழகு தெரியாமல் போவது நிச்சயம் நம்முடைய பார்வை குறைவு காரணமல்ல :) படங்கள் அழகு.
ReplyDeleteபார்த்தீங்களாப்பா கவிதை எல்லாம் சொல்லி சிக்க வச்சிட்டு இப்ப சமாளிக்கிறாராமில்லே...! நீங்க தப்பிக்கவே கூடாது......அலமாரிக்குள்ளயே கிடங்க!
ReplyDeleteஅப்படிதான் நாங்க என் வூட்டுக்கார் காலேஜ் நிகழ்ச்சிக்கு குடும்பத்தோட போனப்ப... அவரோட வேலை செய்ற நண்பர் ஒருவர் " சார் உங்க பாப்பா அழகா இருக்கு.. ன்னு சொன்னார். சாப்பிட்டுக்கிட்டிருந்த நான் ஹேண்ட்-வாஷ் பண்ணிக்கிட்டு திரும்பினப்ப, " என்னங்க இந்த டிரஸ்ல நீங்களும் ரொம்ப அழகா இருக்கீங்க..... அப்படின்னு சார் சொல்ல சொன்னார்... ! மனுஷனை திரும்பி பார்த்தா, " என்ன பண்றது உங்கிட்ட எவன் அடி வாங்கறது ? அதான் அப்படியே என் பொண்டிட்டியையும் அழகுன்னு சொல்லிடுப்பா...ன்னு அவன்ட்ட சொன்னேன்...!
மனுஷன் வீட்டுக்கு வந்ததும் மூணு ஹவர் வாங்கி கட்டிக்கிட்டார்......... ஹா... ஹா..!
உங்க ஹவுஸ் பாஸுக்குதான் நம்ம ஆதரவு!
ReplyDeleteஅவங்க ரொம்ப அழகுன்னு சொல்லி அவங்க முன்னாடி 100 தோப்புக்கரணம் போடுங்க நான் ஒரு ஓட்டு போடறேன்............ஹா.. ஹா...!
தவளை! தவளை! தவளை தன் வாயால் கெடும்ன்னு சொல்லுறது சரிதான் போல!!
ReplyDeleteகல்யாணம் ஆகி இரண்டு குழந்தைகள் பிறந்த பிறகுதான் மனைவியின் அன்பும் அழகும் மிளிரும், காதலிக்கும்போது சொன்ன அதே டயலாக்கை இப்போ சொல்லிப் பாருங்க, பெட்ரூம் வாசல் அவள் கண்ணசைவில் திறக்கும் இது சத்தியம்...!
ReplyDeleteஒரு நல்ல பாட்டெடுத்து விடுங்களேன்! நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்......ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ! ....அதான் லாப்டாப் வேற கைல இருக்குல்ல அப்புறம் என்ன.......கட்டுண்டு........குரல் எங்கருந்து அப்படினு அவங்க வந்து உங்க அலமாரிக் கதவை திறப்பாங்க..பாருங்க...அப்ப நீங்க டப்க்குனு வெளில குதிச்சுருங்க.....
ReplyDeleteத.ம.
உங்கள் மனைவியின் கோபம் தீர, நான் சொல்லும் இந்த யோசனையை செயல்படுத்தி பாருங்கள்.
ReplyDeleteஉங்கள் மனைவியை ",மானே , தேனே" என்று கூப்பிட்டு, நான் சொன்னதை நீ புரிஞ்சுக்கலை செல்லம், அமாவாசை அன்று தான் எந்த ஒரு நல்ல வேலையையும் செய்வதற்கு உகந்த நாள். நான் உன் முகத்தைப் பார்த்த பிறகு செய்யும் எல்லா வேலைகளும் ரொம்ப வெற்றிக்கரமாக முடிஞ்சிருக்கு. அதனால தான் அமாவாசையைக் காட்டிலும் நீ அழகுன்னு சொன்னேன்னு பிளேட்டை திருப்பி போட்டுவிடுங்கள்.
சரி, நான் உங்களுக்கு பீஸ் வாங்காம ஐடியா கொடுத்துட்டேன். அதனால இந்த ஐடியாவை சொன்னது நான் தான்னு உங்க மனைவிக்கிட்ட சொல்லுங்க.
ஒரு ஐடியாவும் தேவையில்லை...இப்படியான ஊடல்கள் தானே உறவை வளர்த்தும் என்பதைப் புரியாதவரா நீங்களும் உங்கள் மனைவியும்.....
ReplyDeletetopicவாசகத்தை தங்கள் திருமதியும் சொல்லலாம் தானே ?ஓஹோ நாம அப்பவே அப்படியா?
ReplyDeleteஉங்கள் மனைவியும் என்ன தான் செய்வார்கள் பூரிக் கட்டையை எடுத்து கை ஓய்ந்து தான் போயிருக்கும். ஆனாலும் பலன் ஒன்றும் இல்லை என்று புரிகிறது.
ReplyDeleteநுணலும் தன் வாயால் கெடும்!
ReplyDeleteஎத்தனை அடி அடிச்சாலும் தாங்கறீங்களே.... நீங்க ரொம்ப நல்லவங்கன்னு உங்க துணைவி சொன்னதுண்டா?