Wednesday, January 22, 2014
மச்சினிச்சியை மடக்குவது இப்படிதான் (மச்சினிச்சிகள் உள்ள ஆண்கள் மட்டும் படிக்க மச்சினிச்சிகள் படிக்க அல்ல)


எனது கல்யாணம் காதல் கல்யாணம் என்பது உங்களுக்கு எல்லாம் நல்லாவே தெரியும். கல்யாணம் ஆகி நீண்ட நாட்கள் என் மனைவியின் வீட்டு பக்கம் போகவில்லை ( அமெரிக்கா வந்துவிட்டதால் ) முதல் முதலாக போன போது என் மச்சினிச்சியை பார்த்தேன். அவளை பார்த்தவுடன் நீ ரொம்ப அழகாக இருக்கிறாய் என்று சொன்னேன். அதற்கு அவள் நன்றி என்று சொல்லி சிரித்தவாரே ... என்னால் அது போல் நீங்கள் அழகாக இருக்கிறீர்கள் என்று சொல்லமுடியாது என்று நக்கலாக பதில் அளித்தாள்

அதை கேட்ட நான்  சும்மா இருப்பேனா( நமக்கும் கொஞ்சம் வாய் அதிகம்தானே ) அதனால் நான் என் மச்சினிச்சியை பார்த்து என்னால் உங்கிட்ட பொய் சொல்ல முடிந்தது போல உன்னாலும் பொய் சொல்ல இயலுமே என்று மடக்கினேன்..


அதுக்கு அப்புறம் அவ வாயை திறக்கவே இல்லை...

பார்த்தீங்களா மதுரைதமிழனா கொக்கான்னா


டிஸ்கி : மக்களே நீங்கள் தலைப்பை பார்த்துவிட்டு வந்து ஏமாந்தால் அதற்கு நான் பொறுப்பு அல்ல


அன்புடன்
மதுரைத்தமிழன்

14 comments:

 1. சகோ! அது மைச்சினிச்சி இல்ல மச்சினிச்சி

  ReplyDelete
  Replies
  1. சகோ பிழையை சுட்டிக் காட்டியதற்கு நன்றி... மச்சினி நமக்கு மை வைச்சுவிட்டால் மைச்சினி என்று அழைக்கலாமா?

   Delete
 2. ஹா...ஹா.. கலாய்ப்பதில் உங்களை சொல்லவா வேணும்...?
  தலைப்பை பார்த்து வந்து ஏமாந்து போனவர்கள்... பூரிக்கட்டையோடு நிற்கிறார்கள்..............

  ReplyDelete
  Replies
  1. யாருக்குமே மதுரைத்தமிழன் எப்படி இருப்பான் என்று தெரியாதே. நான் என்று நினைச்சு எவன் எல்லாம் இப்படி அடிவாங்க போறாங்களோ? அவங்களை நினைச்சா பாவமா இருக்குது

   Delete
 3. நானும் என் மச்சினியைப் பார்த்ததும் (என் மனைவியின் ஒன்றுவிட்ட தங்கை (cousin) அட இந்த பொண்ணெ பாக்காம போனமே என்று நினைத்தேன். என் மனைவியிடமே சொல்லவும் செய்தேன். அவள் சிரித்துக்கொண்டே ஆனா அவ உங்கள கட்டிக்க சம்மதிச்சிருக்கணுமே என்றாள்! சரியான முதல் குட்டு!!

  ReplyDelete
  Replies
  1. என் உடன் வேலை பார்த்த பொண்ணுடைய அக்காவையும் தங்கையையும் எனக்கு ரொம்ப பிடிக்கும் அதில் ஏதாவது ஒன்றை லவ் பண்ணிடனும் என்று எண்ணி என் உடன் வேலை பார்த்த பொண்ணிடம் ரொம்ப நல்லவனா நடிச்ச்சேன் ஆனா அவளோ என்னை மயக்கி கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க மீ....பாவம் இப்போ......

   Delete
 4. எனக்கு மச்சினியே இல்லை. சரி, இந்த பதிவைப் படித்து, மனசை ஆறுதல் படுத்திக்கலாம்னு நினைச்சா, ஏங்க இப்படி வயித்தெரிச்சலை கிளப்புறீங்க?

  ReplyDelete
  Replies

  1. மச்சினிச்சி உள்ள பொண்ணா பார்த்து உங்களுக்கு தகவல் சொல்லுறேன்.....நான் ரெடி நீங்க ரெடியா??
   டிஸ்கி: இந்த பதிவை உங்க மனைவி கண்ணில் படாதபடி பார்த்துகோங்க

   Delete
 5. நல்லவேளை "அப்படி" மடக்கினீர்கள்... இல்லையென்றால் பூரிக்கட்டை வேறு வாங்க செல்ல வேண்டியிருக்கும்... ஹிஹி...

  ReplyDelete
 6. காதல் கல்யாணம் ப்ண்ணாதவங்க பாடும் ஒங்கள மாதிரிதான்.

  நான் பொண் பாக்கப் போறப்போ வெவரமா மச்சினிய ஒளிச்சு வச்சிட்டாங்க. இப்பொ சகலையப் பாத்து பொறாமப் பட்டுட்ருக்கேன்.

  கே. கோபாலன்

  ReplyDelete
 7. ஹாஹாஅ மதுரைத் தமிழா உமக்கு"வாயில்"(இரு அர்த்தம்!!!முகப்பு, உமது வாய்))நகைச் சுவை என்பது யாமறிவோம்! ஆனாலும்...இது லொள்ளு தமிழா!!!! இருவரும் ரசித்துச்சிரித்தோம்!!!!!

  tha.ma.

  ReplyDelete
 8. ஹும்... பல்லு கீறவன் பக்கோடா துன்னுறான்...!

  ReplyDelete
 9. சோக்கா சொன்ன முட்டா நைனா!

  ரசித்தேன்.

  ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.