நான்
பெர்பெஃக்ட் ,நீங்க பெர்பெஃக்ட்டா?
புத்தாண்டு
கொண்டாட்டங்கள்
எனது
நண்பர்களுக்கும் இணையதள
வாசகர்களுக்கும்,
சகபதிவர்களுக்கும்,
சைலண்ட்
ரீடர்களுக்கும் எனது
இதயங்கனிந்த புத்தாண்டு
நல்வாழ்த்துக்கள்.
ஒவ்வொருவருக்கும்
தனித்தனியாக சொல்ல நேரம்
இல்லாததால் வாழ்த்தை இங்கே
சொல்லுகிறேன்.
அது
போல எனக்கு தனிப்பட்ட முறையில்
வாழ்த்து சொன்ன அனைத்து
நல்ல உள்ளங்களுக்கும்
எனது மற்றும் எனது குடும்பத்தினர்
சார்பாக மனமார்ந்த நன்றியை
சொல்லிக் கொள்கிறேன் நன்றி
நன்றி நன்றி.
இன்று
பல நபர்கள் புத்தாண்டு வாழ்த்தை
பறிமாறிக் கொள்ளும் போது
ஒரு சில தமிழர்கள் மட்டும்
ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்
என்று சொல்லி வாழ்த்துகிறார்கள்.
இப்படி
வாழ்த்துவது தமிழர்கள்
மட்டுமே....
வேறு
எந்த மொழிக்காரர்களும் இப்படி
வாழ்த்துவதை நான் இதுவரை
பார்த்தது இல்லை..
ஏன்
தமிழர்கள் மட்டும் இப்படி?
ஏதோ
கேட்க வேண்டுமென்று தோன்றியது.......
எனது
புத்தாண்டு கொண்டாட்டம் :
எங்கள்
வீட்டுக்கு அருகில் உள்ள ஏழு
இந்திய குடும்பங்கள் சேர்ந்து
புத்தாண்டு ஈவ் தினத்தை
கொண்டாடினோம்.பாரத
விலாஸ் மாதிரி பல மொழி பேசும்
இந்திய குடும்பங்கள்தான்.
2013 இரவு
8
மணிக்கு
ஆரம்பித்த எங்கள் கொண்டாட்டம்
2014
காலை
4
மணிக்கு
மேலும் தொடர்ந்தது.
ஆனால்
என் மனைவி 3
மணியளவிலும்
நானும் எனது குழந்தையும் 4
மணிக்கு
தூங்க சென்றோம் அதன் பின்னும்
நண்பர்கள் தொடர்ந்து கொண்டுதான்
இருந்தார்கள்.
கொண்டாட்டம்
என்றால் சரக்கு இல்லாமலா
என்ன?
அதனால்
வந்த குடும்பத்தினர் அனைவரும்
ஆளுக்கு ஒரு பாட்டிலோட வந்து
இருந்தார்கள்.
நானும்
எனக்கு பிடித்த ப்க்கார்டி
வொயிட் ரம்மை எடுத்து சென்று
இருந்தேன் இரவு 8.30
அளவில்
எடுத்த க்ளாஸ் காலை 3
மணியளவில்தான்
வைத்தோம்.(கையில்
ஒரு க்ளாஸ் எடுத்தால் அதை
மிக ஸ்லோவாகத்தான் குடிப்போம்.)
நாங்கள்
3
மணியளவில்
சரக்கை கிழே வைக்க காரணம்
வந்த பெண்மணிகள் சூடா டீ
போட்டு கொடுத்ததால்தான்.
இதை
அவர்கள் இரவு எட்டு மணிக்கு
போட்டு தந்து இருந்தால்
நாங்கள் சர்க்கை கையில் எடுக்க
வேண்டிய நிலைமை வந்து இருக்காது...
இங்கு
வந்த அனைத்து ஆண்களும் ஒரு
சில பெண்மணிகளும் குடித்தாலும்
யாரும் நிதானம் தவறவோ தரக்குறைவான
வார்த்தைகளை பேசுவதோ கிடையாது.
தமிழ்
திரைபடங்களில் வரும் மாதிரி
காட்சிகள் இங்கு காண முடியாது
இதை சொல்லக் காரணம் குடிக்காதவர்கள்
மத்தியில் குடிப்பவர்களைப்
பற்றி ஒரு தவறான கருத்து
இருப்பதால்தான் இதை இங்கே
குறிப்பிடுகிறேன்.
(குடிக்கு
எதிராக ஒப்பாரி வைப்பவர்களே
குடி உடல் நலத்தை
கெடுக்கும் என்று அதற்காக
போராடுபவர்கள் நீங்கள்
என்றால் முதலில் நீங்கள்
தெருவில் போடும்
குப்பைகளாலும்
சுகாதாரத்திற்கு மிகவும்
கேடு வரும் என்பதை
உணர்ந்து அதற்கு முதலில்
போராடுங்கள். குடிப்பதால்
குடிப்பவருக்குதான் உடல்
நலம் கெடும் ஆனால் நீங்கள்
தூக்கி ஏறியும் குப்பை
குளங்களால் அந்த பகுதியில்
வசிக்கும் அனைவருக்கும்
உடல் நலம் கெடும் என்பதை
உணர்ந்து கொள்ளுங்கள்)
|
நாங்கள்
குடிக்கும் போது தமிழ்
திரைபடங்களில் குடி உடல்
நலத்திற்கு கேடு என்று எந்த
போர்டும் எழுதி வைத்துவிட்டு
குடிப்பதில்லை.
மேலும்
குடிக்காதவர்கள் யாரையும்
குடித்துதான் பாரேன் என்றும்
சொல்லுவதில்லை &
வற்புறுத்துவதில்லை.
எங்களுடன்
சேர்ந்து மது அருந்துபவர்களில்
டாக்டர்களும் உண்டு.
அவர்கள்தான்
அதிகம் குடிப்பவராக உள்ளார்கள்.
எங்கள்
வீட்டுக்கு அருகில் உள்ளவர்கள்
10
ஆண்டுக்கும்
மேல் அருகிலேயே வசிப்பவர்கள்
எல்லோருக்கும்5
ல்
இருந்து 12
வயதிற்கு
உட்பட்ட நிலையில்தான் குழந்தைகள்
இருப்பதால் எல்லோரும் ஒரே
பள்ளியிக்கு சென்று வருவதாலும்
சேர்ந்து விளையாடுவதில்
அவர்களுக்கு பிரச்சனைகள்
இருப்பதில்லை.
அதனால்
குழந்தைகள் அதன் பாட்டிற்கு
விளையாடிக் கொண்டும் படம்
பார்த்து கொண்டும் வேண்டிய
உணவுகளை தின்று கொண்டும்
இருந்தனர்...
கொண்டாட்டம்
என்றால் ஆடல் பாடல் இல்லாமலா?
அதனால்
நண்பர் வைத்துள்ள மீயூசிக்
சிஸ்டத்துடன் லேப்டாப்பை
இணைத்து லேப்டாப்பில் பாடல்களின்
வரிகள் ஒட பிண்ணனியில் அதன்
மீயூஸிக் ஒலிக்க நண்பர்கள்
பாட ஆரம்பித்தனர்.
சிலர்
ஆட ஆரம்பித்தனர்..
போனவருட
கொண்டாடத்தின் போது என்னை
இந்த வருடமாவது பாட ஆட வைக்க
சபதம் எடுத்தவர்கள் வழக்கம்
போல இந்த வருடமும் தோற்றுதான்
போனார்கள்.
அவர்களுக்கு
இவன் மனைவி பாடும் பாட்டுக்குதான்
ஆடுவான் அதிலும் அவன் வீட்டில்
மட்டும்தான் என்பது தெரியவில்லை.
ஆமாங்க
வீட்டில் நான் எலி வெளியில
நான் புலிதானுங்க...
என்னங்க
புத்தாண்டு வாழ்த்து சொல்ல
வந்த நான் இப்படி அறுக்கிறேன்
என்று பார்க்கிரீங்களா?
அது
ஒன்றும் இல்லைங்க சும்மா
இருக்கும் என்னிடம் பலி ஆடு
மாட்டிக்கிட்டா நான் சும்மா
விடும் ஆள் இல்லை அதை பிரியாணி
ஆக்கி விடுபவந்தான் நானுங்க...
அப்ப
சரி நான் வரட்டுங்களா?
அட
அது யாரப்பா மதுரைத்தமிழா
நீங்க என்ன புத்தாண்டு தீர்மானம்
(சபதம்)
எடுத்தீங்க
என்று கேட்பது?
புத்தாண்டு
தீர்மானம் எல்லாம் பெர்பெக்ட்
இல்லாத ஆளுங்க எடுப்பது &
மறப்பது,
ஆனால்
நான் மிக பெர்பெக்ட் ஆள் என்று
நினைப்பத்தால் எப்போதும்
தீர்மானம் எடுப்பதில்லைங்க
அடுத்ததாக
இன்று நான் படித்ததில் பிடித்த
சில வரிகள்
எழுதியவர்
வருண்
*********எதை
இழந்தாலும்,
யாரை
இழந்தாலும்,
நம்
வாழ்க்கையை அதற்கேற்ப
மாற்றியமைத்து வாழக் கற்றுக்க
வேண்டும்.
அதற்கேற்ற
மனநிலையை நீங்க பெறவேண்டுமென்றால்
உங்களைத்தவிர யாரும் எப்படி
வேணா மாறுவார்கள் என்கிற
உண்மையை உணர வேண்டும்.
அந்த
உண்மையை உணர்ந்து வாழும்
கலையை நீங்க கற்றுக்கொண்டால்
சாகிற வரைக்கும் உங்களுக்கு
வெற்றிதான்.
மற்றவர்களிடம்
உங்கள் எதிர்பார்ப்புதான்
உங்களுக்கு மிகப் பெரிய
ஏமாற்றத்தையும் விரக்தியையும்
தரும்.*************
இந்த
வரிகள்தான் நான் எப்போதும்
மனதில் நினைப்பது அதை வருண்
மிக அழகாக எழுத்தில் கொண்டு
வந்து இருக்கிறார்.
அவருக்கு
எனது பாராட்டுக்கள்
அன்புடன்
மதுரைத்தமிழன்
Objection your honor! Correction...please!
ReplyDeleteமது அருந்துபவர்களில் டாக்டர்கள் தான் அதிகம் குடிப்பார்கள் என்பது உன்மையல்ல! இது தவறான செய்தி!
நாங்கள் அங்கு வந்து தான் குடிப்போம்! மற்றவர்கள் வரும்போதே இரண்டு மூன்று பெக் லோடு ஏத்திக்கொண்டு வருவார்கள்? அதை நாங்கள் கண்டு கொள்ளமாட்டோம்;
டாக்டர்கள் முக்கால்வாசி திறந்த புத்தகம்! நன்றாக குளித்து விட்டு, ஜில் ஜில் என்று வந்து மூன்று அல்லது நான்கு பெக் கூட அடிப்போம். மற்ற தமிழன் டுபாகூர்கள்..வீட்டிலே குடித்து விட்டு பிலிம் காட்டுவார்கள்; அதை கண்டுக்கமா விடுவது அமெரரிக்க பண்பாடு!
எவன் எவ்வளவு குடித்து இருக்கான், என்று எங்கள் வீட்டில் காலடி எடுத்து வைக்கும் போதே நான் கணக்கு போட்டு விடுவேன்; வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன்.
தமிழ்மணம் +1
உங்க்களுக்கும உங்கள் குடும்பத்திற்கும் புத்தாண்டு வாழுத்துக்கள்
உங்கள் வீட்டின் புது வரவிற்கு...Happy..லொள்! லொள்..!
நம்பள்கி மது அருந்துபவர்களில் டாக்டர்கள் அதிகம் என்று நான் சொன்னது எனது குருப்பில் உள்ள டாக்டரையே . மற்ற டாக்டர்களை அல்ல. நான் சொல்லியவிதம் தவறாக இருந்தால் மன்னிக்கவும்
Deleteஇந்த வருடம் போட்டோடூன் பதிவு போட வாழ்த்துகள். கதை போல தொடரலாம்.
ReplyDeleteநல்வாழ்த்துகள்.
வித்தியாசமான ஆயினும்
ReplyDeleteசுவாரஸ்யமான புத்தாண்டுப் பதிவு
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
உங்களின் வித்தியாசமான கருத்துகளுக்காகவே நானும் சுவராஸ்யமாக இருக்க ஏதாவது கிறுக்கி கொண்டிருக்கிறேன்
Deletetha.ma 2
ReplyDeleteநான் உங்களை ஆமோதிக்கிறேன். குடித்துவிட்டு நிலை தடுமாறி மனைவியை அடிப்பவர்கள், நிலை தடுமாறி கேவலமான செயல்கள் செய்பவர்களால் மற்ற குடிகாரர்களும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். என்னை பொருத்தவரை நான் மதுவை அனுபவிக்கிறேன். ஆனால் அடிமை அல்ல. புகை பிடிப்பதை நிறுத்திவிட்டேன். ஆனால் மதுவை நிறுத்தும் எண்ணம் எனக்கு இல்லை. Cheers and Happy New Year Madurai Tamil Guy..
ReplyDeleteஅது எல்லாம் இருக்கட்டும். புது வருசத்தில் இன்னும் ஏதாவது பூரிக்கட்டை தாக்குதல்கள் கிடைக்கவில்லையா??
/// புது வருசத்தில் இன்னும் ஏதாவது பூரிக்கட்டை தாக்குதல்கள் கிடைக்கவில்லையா?///
Deleteஎன் பொண்டாட்டி மறந்தா கூட நீங்க மறக்கமாட்டீங்க போல இருக்கே... இப்படியெல்லாம் நீங்க கேட்பதை படித்துதான் அவளும் தினம் அடிக்கிறாளோ என்னவோ?
ஜனவரி முதல் நாள் மட்டும் அடி கிடையாது....
உங்களது மனம் திறந்த கருத்துகளுக்கு பாராட்டுக்கள். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்
8.00 மணிக்கு பெண்மணிகள் டீ போட்டுக்கொண்டு வந்திருந்தால் மட்டும் நீங்கள் குடிக்காமல் இருந்திருப்பீர்களா என்ன????
ReplyDeleteநம்மளையெல்லாம் பாட ஆட வைத்து விட முடியுமா என்ன? (நானும் உங்கள் கட்சி தான் எனக்கும் இந்த பாட, ஆட எல்லாம் வராது!!!!).
தீர்மானம் எடுத்து,அப்புறம் அதை பின்பற்ற வில்லை என்றால் என்ன ஆகிறது என்று பயந்து, இப்படி ஒரு பில்டப்பா!!!! நீங்கள் பெர்பெக்ட் என்று உங்கள் மனைவி சொன்னால் தான் நாங்கள் நம்புவோம்(!!!).
சும்மா கலாயத்தேன், தப்பாக எடுத்துக்கொள்ள வேண்டாம். ஹி.. ஹி...
எந்த மனைவியாவது தன் கணவரை பெர்பெஃக்ட்னு ஒத்துகிட்டத நான் எந்த காலத்திலும் அறிந்தது இல்லை நண்பரே.
Deleteநீங்கள் என்னை கலாய்க்கலாம். எனது கருத்துகளுக்கு எதிர் கருத்துக்கள் போடலாம் அதனை தவறாக எடுத்து கொள்ளமாட்டேன்
சுவாரசியாமான பதிவு! அதுவும் நடுவுல ஒண்ணு சொல்லிருந்தீங்க பாருங்க...."குடிக்கு எதிராக......." சிந்திக்க வைத்தது!
ReplyDeleteத.ம.+
குடிக்கு சப்போர்டா பதிவு போற மாதிரி இருக்கே! இன்னா சங்கதி!?
ReplyDeleteபுத்தாண்டுத் தீர்மானம் என்று , ஒன்று இன்று வரை எடுத்ததில்லை ! தொடக்கம் முதலே வாழ்க்கையில்
ReplyDeleteநேர்மையாக நடக்க வேண்டுமென்பதையே தீர்மானமாக கொண்டு ( முடிந்தளவு) வாழ்கின்றேன்!
அடுத்து தாங்கள் கேட்ட (ஆங்கிலப் பத்தாண்டு என சொல்வது) சந்தேகத்திற்கு பதில், தமிழர்கள் தை மாத
முதல்நாளே தமிழர்களின் புத்தாண்டே என்று கருதுவதாகும்! த ம 2
எப்பவும் போலவே புத்தாண்டைப் பற்றி உங்கள் பாணியில் எழுதியிருக்கிறீர்கள். குடிப்பது மட்டுமல்ல எதுவுமே அளவோடு இருந்தால் அது கெட்டது அல்ல. குடித்துவிட்டு போதையில் எக்குத்தப்பாக நடப்பவர்களில் பலர் அந்த சாக்கில் போடும் வேஷம்தான். கேரளத்திலும் மும்பையிலும் இத்தகைய அவலங்களை பார்க்க முடிந்ததில்லை. இது தமிழகத்திற்கே உரித்தான ஒன்று. உங்களுக்கும் உங்களுடன் புத்தாண்டை வரவேற்று கொண்டாடிய உங்கள் நண்பர்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
ReplyDeleteவருண் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்...
ReplyDeleteதங்களுக்கும், தங்களின் குடும்பத்தார் உட்பட அனைவருக்கும் எனது மனமார்ந்த 2014 இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...
வாழ்த்துக்கள் மதுரை தமிழன் அவர்களே ! உங்களின் கருத்தினை ஆமோதிக்கின்றேன்.
ReplyDeleteபாட ஆட வைக்க எடுத்துக் கொண்ட சபதங்கள் // நல்ல வேளை தப்பிச்சுட்டாங்க.
ReplyDeleteஅய்யய்யோ அப்போ இனிமே பூரிக்கட்டைக்கு வேலை இல்லையா ??????????
ReplyDeleteஇனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் .
ReplyDeleteநீங்க இருக்கிற இடம் அப்படி??? அங்கு அரசாங்கமே கடை திறந்து இருக்கான்னு தெரியல..ஒன்னு மட்டும் தெரியுது குடிகார குடும்பங்களா இல்லைன்னு..............
ReplyDeleteசுவராஸ்யமான பகிர்வு...
ReplyDeleteபுத்தாண்டு வாழ்த்துக்கள்.
புத்தாண்டு வாழ்த்துக்கள் .
ReplyDeleteகுடிப்பதை தப்பு என்று சொல்லத்தோணாத உங்களுக்கு
தமிழ்நாட்டில் எத்தனை டாஸ்மாக் குகள் சொந்தமாக உள்ளன? ownership I mean .
சுவாரசியமான பகிர்வு......
ReplyDeleteஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள் மதுரைத் தமிழன்.
I hope you know what is special about april 14th. it is New year. Do you wish everyone as Happy new year or do u wish as Happy Tamil new year ? if u wish Happy new year on that day, then no issues but if u wish it as happy Tamil new year , then u shouldn't worry about pple saying happy English new year hope u r clear about this Happy English New Year !
ReplyDeleteஇனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!
ReplyDelete