Wednesday, January 29, 2014




 
ஒரு காலத்தில் பாரதிராஜா  படங்கள் மிக சிறப்பாக இருந்து புகழ் பெற்று அவரும் புகழ் பெற்ற டைரக்டராக இருந்தார். அப்படி புகழ்பெற்ற டைரக்டர் இப்போது படம் எடுத்தால் முன்பு போல மக்கள் மனதை கவரவில்லை.காரணம் காலம் மாறி மக்களின் மனங்களும் மாறிக் கொண்டிருக்கின்றன. எனவே அரைச்ச மாவையே மீண்டும் மீண்டும் அரைப்பதால் அவரால் இப்போது வெற்றி பெற முடியவில்லை. இதைப் போலதான் கலைஞரின் தற்போதைய நாடகமும் சந்தி சிரிக்க ஆரம்பித்துவிட்டன.கலைஞர் கதை வசனம் எழுத ஆரம்பித்த நாள் முதல் இது போல் நிறைய நாடகம் & படம் பார்த்து விட்டோம். ஆனால் இந்த படம் ஓடாது.


ஒரு காலத்தில் தமிழக மக்களின் மதிப்பு மிக்க தலைவராக இருந்து வந்த அவர் இப்போது உடன்பிறப்புகளிடமும் மதிப்பு இழக்க ஆரம்பித்து விட்டார். உடன் பிறப்புகள் கூட அவர் சொன்னதை நம்பவில்லை என்பது மிகவும் ஆச்சிரியமாக இருக்கிறது. அநேக உடன்பிறப்புகள் அவர் சொல்வதை நம்புவது மாதிரி நடித்து கொண்டிருக்கிறார்களே ஒழிய  நம்பவில்லை என்பது யாவரும் அறிந்த ஆனால் மறுக்க முடியாத உண்மை. இப்படி உடன்பிறப்புக்கள் நடிப்பது ஆதாயம் கருதிதான் அதனால் கலைஞர்  நினைப்பது போல் மக்கள்மட்டுமல்ல உடன் பிறப்புகளும் இன்னும் அவரை நம்ப தயராக இல்லை. அது மட்டுமல்லாமல் அவர் கூறுவது எதுவும் நம்பும் படியாக இல்லை. அவர் சொல்வது போல் எதுவும் நடந்திருக்காது.

இந்த நாடகத்தில் அவர் சொல்லும் ஒரு குற்றசாட்டு அழகிரி காலை ஏழுமணிக்கு வந்து மிரட்டினார் என்று.
அதுசரி... அவர் 7 மணிக்கு வந்தது தவறு என்றால், அவரை உள்ளே விட்டது யார்... மகனாக இல்லாமல், கட்சி உறுப்பினர்போல என்றால், எல்லா உறுப்பினர்களையும் உங்கள் வீட்டில் காலை 7 மணிக்கு உங்கள் படுக்கை அறைக்கு அனுமதிப்பீர்களா? மகன் என்பதால்தானே அவருக்கு அனுமதி... அப்பா எத்தனை மணிக்கு எழுந்திருப்பார் எந்த நேரத்தில் அவரிடம் பேசினால் யாருடைய குறுக்கிடூ இல்லாமல் தனியாக மனம்விட்டு பேசலாம் என்று கருத்திதான் அழகிரி வந்து இருப்பார். இப்படி இருவருக்குள்ளும் பேசி தீர்க்க வேண்டிய குடும்ப சண்டையை கட்சியில் புகுத்தி, கட்சி சண்டையை குடும்பத்தில் புகுத்தி...இப்படி உலகமெல்லாம் பேசி சிரியாய் சிரிக்க வைத்தது யாரு  கலைஞருக்கு இந்த வயதில் இதெல்லாம் தேவையா ?

மிரட்டியது உண்மையென்றால் அதை அடுத்த நாளே சொல்லாமல் சென்னையிலும் மதுரையிலும் அவருக்கு கூடிய கூட்டத்தை பார்த்த பிறகுதான் சொல்லியது ஏன்?  இது குடும்ப விவகாரமா அல்லது கட்சி விவகாரமா? அழகிரி கொலை மிரட்டல் விடுத்திருந்தால் காவல் துறையில் அல்லவா புகார் பதிவுசெய்ய வேண்டும்? மதிய அரசுக்கு இவர்கள் குடும்ப சண்டையில் பாதுகாப்பு தர என்ன வேண்டி கிடக்கிறது?


பலமுறை முதல்வராக இருந்தவரும், தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினராகவும் , ஒரு பெரிய திராவிடக்கட்சிக்கு தலைவராகவும் இருந்து கொண்டு பாதுகாப்புக்காக மன்மோகனை ஏன் நாட வேண்டும்? இப்படி ஒரு  அடிப்படை கூட தெரியாமாலா இவ்வளவு காலம் முதல்வராக இருந்து வந்தார்?

ஸ்டாலின் என்ன  மத்திய மந்திரியா? எம்.பி.யா? தலைமை நீதிபதியா? இவருக்கு மன்மோகன் மூலம் பாதுகாப்பு வேண்டல். கலைஞர் நல்லாதானே இருந்தார். ஒரு வேளை ஸ்டாலின் குருப்புதான் இவரை உண்மையில் மிரட்டி இப்படி பேச வைக்கிறார்களோ என்று மிகவும் சந்தேகப்பட வேண்டி இருக்கிறது

தென் தமிழகத்தை தி மு க கோட்டையாக்கியது அழகிரி தானே. அவரோடு இணைந்து கட்சியின் வெற்றிக்கு வழி வகுக்காமல் தனது ராஜ்ஜியம் கொடிகட்டி பறக்கவேண்டும் என்ற அளவில்லாத  ஆசையினால் கலைஞரை விட்டு அவரை சீண்டியிருக்கிறார் ஸ்டாலின்

எது எப்படியோ குடும்பத்தை சந்தி சிரிக்க வைத்தது இல்லாமல் திமுக கழகத்தை திமுக கலகமாக மாற்றிவிட்ட பெருமை ஸ்டாலினையே சேரும்

கலைஞரே இன்னும் பல உடன் பிறப்புகள் திமுக வை உயிருக்கும் மேலாக நேசித்து கொண்டிருக்கின்றனர் உங்களையும் நேசிக்கின்றனர் எந்த வித ஆதாயமும் எதிர்பார்க்காமல் அப்படிபட்ட உடன்பிறப்புகளையும் இப்படி நாடகம் ஆடி ஒட வைத்துவிடாதீர்கள் என்பதுதான் எனது வேண்டுகோள்

அன்புடன்
மதுரைத்தமிழன்

டிஸ்கி : ஸ்டாலினுக்கு பாதுகாப்பு வேண்டி கலைஞர் ஒபாமாவிடமோ அல்லது ஐ.நா சபையிலோ முறையிட்டதாக இன்று செய்தி வந்தாலும் வரலாம் அதில் ஆச்சிரியப்பட ஒன்றுமில்லை

15 comments:

  1. பதிவை ரெண்டு முறை பேஸ்ட் பண்ணிட்டிருக்கீங்க போலிருக்கு............
    நச்சுன்னு நல்லா சொல்லிட்டிங்க...

    ReplyDelete
    Replies

    1. நன்றி சரி செய்துவிட்டேன்

      Delete
  2. உங்க ராஜ்ஜியத்துக்கு என் ஓட்டை போடாம போனா எப்படி? அதனால த.ம -1

    ReplyDelete
    Replies
    1. அட எனக்கும் ஒட்டு கிடைச்சிருக்கு? அப்ப கலைஞருக்கு கூட்டணி அழைப்பு விடலாம் என்று இருக்கிறேன்

      Delete
  3. நறுக் கேள்விகள் திமுக விற்கு!.. அதிலும் சொன்னீங்க பாருங்க திமுக கழகம் இப்போ.... திமுக கலகம்....ஃபைனல் பஞ்ச்......சூப்பர்!!!!

    அவங்களுக்கு ஓட்டு போடரமோ இல்லையோ உங்களுக்கு வைச்சாச்சு!! அதுவும் தமிழனுக்கு!!!!!

    த.ம.

    ReplyDelete
  4. நாளைய செய்தி.

    ஒரு ராத்திரி என் வீட்டுக்கு ஆளை அனுப்பி இழுத்துக் கொண்டு போன அம்மா நாளைக்கே ஸ்டாலின் வீட்டுக்கு அவர்களை அனுப்புவார் என்ற பயத்தில்தான் தந்தை என்கிற முறையில் இந்த அறிவிப்பை வெளியிட்டேன் - கலைஞர்


    கே. கோபாலன்

    ReplyDelete
  5. கலைஞரின் கபட நாடகம் வெளுத்துவிட்டது! அருமையான பதிவு! நன்றி!

    ReplyDelete
  6. முதலில் இன்றைய செய்தி.

    அஞசா நெஞ்சன் அண்ணன் அழகிரியின் பிற்ந்த நாள் மதுரையில் இன்று மிகச்சிறப்பாக தம்பிகள் படை சூழ கொண்டாடப் படுகிறது. ஊரெங்கும் பரிசு மழை. (இவ்ளவு பணம் எங்கேருந்து வந்துச்சு என்று மக்கள் கேட்கும் அளவுக்கு)

    //முதலில் அஞ்சா நெஞ்சன் அழகிரி அள்ளி வழங்கும் அழகிரியான கதையைச் சொல்கிறேன் கேள்// என்று விக்கிரமாதித்தன்வேதாளம் கதை ஆரம்பிக்க சீரியல் தயார்.

    நான் ரெடி நீங்க ரெடியா - பார்க்க

    கோபாலன்

    ReplyDelete
  7. அழகிரி தன்னோட பிறந்த நாள் விழாவிற்கு தங்களை கூப்பிடலையாமே?
    ஐயோ பாவம் நீங்க.

    ReplyDelete
  8. கலைஞர் தன்னோட குடும்பச் சண்டையை மீண்டும் ஒரு முறை வீதிக்கு கொண்டு வந்து விட்டார்.
    அதை நீங்க மிக அழகாக உங்களோட பாணியில (அழகிரியின் ஆதரவாளராக) அலசி ஆராய்ந்திருக்கிறீர்கள். அறிஞர் அண்ணா ஆரம்பித்த இந்த கட்சியை, கலைஞர் தன்னோட குடும்பச் சொத்தாக்கிக்கொண்டதை யாராலும் மறுக்க முடியாது.

    ReplyDelete
  9. என்ன நடக்கிறது என்று பார்ப்போம்

    ReplyDelete
  10. உண்மையில் பொதுமக்களை காமெடியன்கள் ஆக்கி விட்டார்கள்.தமிழ் நாட்டின் தலை எழுத்து

    ReplyDelete
  11. பொருத்திருந்து பார்க்கலாம்...

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.