Friday, January 24, 2014






மதுரை நகரின் சுவரில்மட்டுமல்ல அமெரிக்காவில் இருந்துவரும் இணைய தளத்திலும் அழகிரி ஆதரவு போஸ்டர்


செய்தியாளர் :- தென்மண்டல அமைப்புச் செயலாளர் பதவி வேறு யாருக்காவது வழங்கப்படுமா?
கலைஞர் பதில் :- அந்தப் பதவி அவருக்காக உருவாக்கப்பட்டது. யாருக்கும் அது தரப்பட மாட்டாது.

இப்போது சொல்லுங்கள் அழகிரி என்ற  சூரியன் மீண்டும் வருவாரா இல்லையா என்று


 காரியக்காரர்கள் காரியம் ஆக அண்ணன் அழகிரியை விட்டுச் செல்லாம் ஆனால் தனி மனிதனாக தனித்து நிற்கும் 'எங்கள் ஊர்க்காரரான" எங்கள் அண்ணன் அழகிரியை ஆதரிப்பதுதான் நியாயம் என்பதால் இந்த இணைய தள போஸ்டர்.




டிஸ்கி : தனிச்சு நிற்கக் கூடிய தைரியமும், பலமும் பெற்ற திமுக "இன்றைக்கு கூட்டணிக்காக" ஸ்டாலின் தலைமையில் அடிச்சிகிட்டு இருக்காங்க... உண்மையான திமுக விசுவாசிகளோ விக்கித்து போய் இருக்காங்க
அன்புடன்
மதுரைத்தமிழன்


அழகிரி தொடர்பான பதிவு படிக்காதவர்கள் படிக்க:



#ஐசப்போர்ட்அழகிரி # ISupportAlagiri

10 comments:

  1. மதுரைக் காரர்கள் பலரின் உணர்வாக இது இருக்கும் ,
    இந்த பரபரப்பு தான் கலைஞரின் யுக்தி..
    இதெல்லாம் சும்மா உளுவாக்கட்டி அரசியல் விளையாட்டு என்பதை இன்னும் சில மாதங்களில் உணர்வோம்...

    ReplyDelete
    Replies
    1. இது கலைஞரின் யுக்தி அல்லது நாடகம் அல்லது சாணக்கியம் என்பது பற்றி எனக்கு கவலை இல்லை எனது ஊர்க்காரர் தனித்து களத்தில் இருக்கும் போது அவருக்கு எனது ஆதரவு கண்டிப்பாக உண்டு.

      Delete
  2. இதானா ஊர்ப்பாசங்குறது!?

    ReplyDelete
  3. அடிக்குற கைதான் அணைக்கும்(நான் உங்க வூட்டு கதையை சொல்லல), கலைஞர் ஐயா வூட்டு கதையை சொன்னேன்!!

    ReplyDelete
  4. பாசக்கார அண்ணன்- தம்பி(அ.உ).. வாழ்க!

    ReplyDelete
  5. ஏங்க நான் ஒரு செய்தி கேள்விப்பட்டேனே அது உண்மையாங்க? - அழகிரி ஒவ்வொரு முறையும் அமெரிக்கா வரும்போது, உங்கள் வீட்டில் தான் தங்குவாரமே? அப்படியா !!!!!

    ReplyDelete
  6. எல்லாம் ஏங்கெட்ட காலம். மதுரேல கொஞச வருசமா அண்ணன் போஸ்டர் ஒட்டியே பணக்காரனாயிட்டேன். கலைஞரு ஏம்பொளப்பக் கெடுத்துட்டாரு.

    இன்னம் கொஞ்ச மாசத்துல எல்லாம் சரியாய்ரும்.

    கே. கொபாலன்

    ReplyDelete
  7. என்னவோ போங்கோ, இவங்க குடும்பத்துக்காக தமிழகத்தையே குத்தகைக்கு எடுத்தாப் போல அல்லவா இருக்கு இந்த மேட்டரு.. சன் டிவி விவகாரத்தின் போது என்னவோ மாறன் குடும்பமும் கலைஞர் குடும்பமும் அடிச்சிகிட்ட மாதிரி பில்டப்பு பண்ணாங்க, அப்புறம் தனித் தனியே போய் சன் டிவி ஒரு பக்கமும் கலைஞர் டிவி என புதுசா தொடங்கினாங்க.. அத்தோடு சன் டிவியின் வரலாற்றிலேயே முதல் முறையாக சாமி நிகழ்ச்சிகள், பக்தி நிகழ்ச்சிகள், பூசை புனர்க்காரியங்களும் எல்லாம் ஒளிபரப்பத் தொடங்கின. மக்களை எப்படி எல்லாம் ஏமாற்றினாங்க தெரியுமா. சும்மா அடிச்சுக்கிற மாதிரி அடிச்சிக்கிட்டு பாகப் பிரிவினை செய்து வைப்பதில் கலைஞர் வல்லவர்.

    அழகிரிக்காக ஒரு பதவியே உருவாக்கி தந்தவருக்கு அவர் போன அப்புறம் தென் தமிழ்நாடு வட தமிழ்நாடு என பிரித்து இருவருக்கும் முதலமைச்சர் மணிமகுடத்தையே கொடுத்திட்டு போக மாட்டாரு என்பதில் என்ன நிச்சயம்.

    என்னவோ போடா பாலகுமாரா. தமிழ்நாட்டின் தலை எழுத்து அப்படித் தான் என்றால் யாரால் மாற்ற முடியும்.

    ReplyDelete
  8. திடீரென்று ச்மரசமாகிவிடுவார்கள்

    ReplyDelete
  9. இதெல்லாம் சும்மா பில்டப்பு! அல்டாப்பு! அரசியல் நாடகம்! கொஞ்ச நாள் கழிச்சுப் பாருங்க.....எல்லாரும் ஒண்ணாகி நம்மள முட்டாள் ஆக்கிடுவாங்க! நாமதான் ஏமாந்த சோணகிரிங்க இருக்கமே இதப்பத்தி பேசி பேசி மண்டை காய!! கலைஞர் குடும்பத்துல இதெல்லாம் சகஜமப்பா!!

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.