Tuesday, January 7, 2014



கலைஞர் விஜயகாந்தை அணைக்க அழைப்பது அழிக்கவா?




விஜயகாந்த் எங்களுடன் கூட்டணி அமைத்தால் மகிழ்ச்சி கொள்வேன் என்று கலைஞர் அறிவித்து இருக்கிறார் அதோடு மட்டுமில்லாமல் திமுக சார்பாக ஆள் அனுப்பி அவர் மனதை கரைக்கப் பார்க்கிறார்கள் கலைஞர் இப்படி விஜயகாந்தை இழுக்க முயற்சி செய்வது லோக்சபா தேர்தலுக்கு என்று நினைப்பவர்கள் முட்டாள்களாகத்தான் இருப்பார்கள். ஆனால் கலைஞர் கூடவே இருப்பவர்களுக்கு தெரியும் அது விஜயகாந்தையும் அவரின் கட்சியின் மதிப்பை எதிர்காலத்தில் குழைக்க செய்வதன் தந்திரம்தான் என்று..

இப்படிதான் அவர் தனிகட்சி ஆரம்பித்த வைகோ வை முதலில் கிண்டல் கேலி பேசி திட்டி தீர்த்தார், அதன் பிறகு எனது உடன் பிறவா தம்பி என்று சொல்லி அவருடன் கூட்டணி வைத்தார். அதன் பிறகு கருவேப்பிலை மாதிரி வைகோவை பயன்படுத்தி தூக்கி ஏறிந்தார். இப்படி எதிரியுடன் கூட்டணி வைத்ததால் வைகோவின் மதிமுக மக்களிடம் மதிப்பை இழந்தது.

அது போலத்தான் விஜயகாந்தும்  அதிமுக திமுகவிற்கு  மாற்றாக மக்களின் ஆதரவைப் பெற்று வளர்ந்தார் அவர் என்று அதிமுகாவிடன் சேர்ந்தாரோ அப்போதே கொஞ்சம் செல்வாக்கை இழந்தார். இப்போது அவர் திமுகவுடன் கூட்டணி வைத்தால் இருக்கும் செல்வாக்கும் சரிந்து போயி வைகோ மாதிரி ஆக்கிவிடுவார்.

இதைத்தான் கலைஞர் அவர்கள் எதிர்பார்க்கிறார்.. கலைஞருக்கு நல்லாவே தெரியும் இந்த லோக்சபா தேர்தலில் 5 க்கும் குறைவான இடங்களையே பிடிக்க முடியும் என்று. அதனால் விஜயகாந்தை சேர்த்து கொண்டால் மேலும் சில இடங்களை பிடிக்கலாம் என்று அதனால் தான் இந்த தீடீர் பாசம் விஜய காந்த் மேல்

விஜய காந்த திமுக அல்லது பிஜேபியுடன் சேர்ந்தாலும் சேராவிட்டாலும் குறைந்த பட்சம் 2 இடங்களை மட்டுமே பிடிக்க வாய்ப்பு உண்டு. இந்த கட்சிகளுடன் சேர்வதால் லாபம் என்று பார்த்தால் அவர் பெறும் பெட்டிகள் மட்டுமே லாபம். ஆனால் தொலை நோக்கில் பார்க்கும் போது இப்படி அவர் இந்த கட்சிகளுடன் சேராமல் இருந்தால் வரும் சட்ட மன்றத்தில் அதிமுகாவிற்கு மாற்றாக வர முடியும் அல்லது கலைஞர் தலைமை இல்லாத திமுகாவிற்கு கடுமையான போட்டியை தர முடியும் இதை கலைஞர் நன்றாக உணர்ந்ததால்தான் ஸ்டாலினுக்கு வரும் காலத்தில் விஜயகாந்தால் போட்டிகள் இருக்க கூடாது என்பதால் தான் விஜய காந்தை அணைத்து அழிக்க முயல்கிறார் என்பது அரசியல் களத்தை உற்று நோக்குபவர்களுக்கு நன்றாக தெரியும்

அது மட்டுமல்லாமல் ஒரு வேளை விஜயகாந்துடன் கூட்டணி வைத்து தேர்தலில் 5 முதல் 7 இடங்களை பிடித்தபின் தேர்தலுக்கு அப்புறம் ஒரு வேளை பாஜவுக்கு கொஞ்சம் மெஜாரிட்டி கிடைத்தால் தேசத்தை காக்க அவர்களுக்கு எங்கள் ஆதரவு உண்டு என்று சொல்லி விஜயகாந்தை கழட்டி விட்டு தான் தனியே செல்வார். அல்லது காங்கிரஸுக்கு ஆட்சி அமைக்க மெஜாரிட்டி கிடைக்கும் அளவில் இருந்தால் காங்கிரஸ் செய்ததை மறப்போம் மன்னிப்போம்  சோனியாவின் மகனே நிலையான ஆட்சி தருக என்று சொல்லி விஜயகாந்தை கழட்டி விட்டு செல்வார். விஜய காந்த் கட்சியை விட 2  அல்லது மூன்று சீட்டுகள் வைத்திருக்கும் கலைஞரை தேசிய கட்சிகள் அரவணைத்து கொள்ளும்.

இறுதியில் விஜயகாந்த தனியே தன்னந்தனியே நான் காத்து காத்து நின்றேன் என்று சோகப்பாட்டு பாடிக் கொண்டிருக்க வேண்டும்.

எனவே விஜயகாந்த் தனித்து போட்டியிட்டால் லோக்சபா தேர்தலில் குறைந்த சீட்டுக்கள் பெற்றாலும் மக்கள் மனதில் இடம் பிடித்து  வரும் சட்ட சபையில் மிக அதிக இடம் பிடிக்க வாய்ப்புகள் கண்டிப்பாக உண்டு. அப்படி பிடிக்க வேண்டுமென்றால் இந்த லோக்சபா தேர்தலில் நிறைய தியாகம் செய்துதான் ஆக வேண்டும்..

விஜய காந்த அவர்களே உங்களை காமெடி நடிகரை வைத்து கிண்டல் கேலி பேசி சிரித்த குடும்பத்தினருடன் கூட்டணி வைக்க போகிறீர்களா அப்படி வைத்தால் தமிழக மக்கள் உண்மையிலேயே காமெடி பீஸாக்கி விடுவார்கள் அதை மட்டும் மறைந்து விட வேண்டாம். எல்லா கட்சிகளும் கூட்டணி என்று வரும்போது கொள்கை அனைத்தும் காற்றில் பறந்துவிடுகின்றன, இருந்தும் தமிழ்நாட்டிலிருந்து முதலில் களையெடுக்க வேண்டிய கட்சிகளாக திமுக மற்றும் காங்கிரஸ் இனங்காணப்பட்டிருப்பதால் அக் கட்சிகளுடன் கூட்டணி அமைக்க முன்வரும் கட்சிகள் சமூக விரோத கட்சிகளாகவே சமூகத்தில் பார்க்கப்படும்

டிஸ்கி : விஜயகாந்த அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்: சரக்கு அடிக்காத ஆட்களே இல்லை இப்போது ஆனால் சர்க்கு அடித்துவிட்டு நீங்கள் உணர்ச்சி வசப்பட்டு ஏதாவது நீங்கள் சொல்வதால்தான் உங்களை எல்லோரும் கிண்டல் செய்கிறார்கள். தலைவர்களுக்கு என்று ஒரு இமேஜ் இருக்கிறது அந்த இமேஜை நீங்கள் காப்பாற்ற வேண்டும். நீங்கள் சிறந்த நடிகர் ஆனால் நிஜ வாழ்க்கையில் உங்களால் நடிக்க முடியாமல் சாரசரி உண்மையான மனிதனாக இருப்பதால் நீங்கள் கேளிக்குரியவர் ஆக்கப்படுகிறீர் அவ்வளவுதான். நிஜ வாழ்க்கையிலும் ரஜினி கமல் மற்றும் பல தலைவர்கள் மாதிரி நீங்களும் நடிக்க ஆரம்பியுங்கள்
2014 லோக் சபா தேர்தலும் எனது கணிப்பும்; 40 தமிழக தொகுதிகளுக்கானது

அதிமுக  :28
திமுக 5.
பிஜேபி 2
தேமுதிக 2
மதிமுக 2
பாமக 1
காங்கிரஸ் 0
இதில் ஓன்றோ அல்லது இரண்டோ கூடி குறைத்து வரலாம் என நான் நினைக்கிறேன்.



நீங்க என்ன நினைக்கிறீங்க என்று சொல்லுங்க தேர்தலுக்கு அப்புறம் இதை பார்ப்போம்


அன்புடன்
மதுரைத்தமிழன்

13 comments:

  1. நம்ம கலைஞரை என்ன என்று நினைத்தீர்கள்? அரசியல் ஞாநி. பல வருட அரசியல் அனுபவம். இல்லாவிட்டால் 2 மணிநேர உண்ணாவிரதம் இருந்து மக்களை ஏமாற்ற யாரால் முடியும்?

    எனது பார்வையில் விஜய்காந்த் அனுபவத்தில் இருந்து கற்று கொள்ளும் மனிதர்.(ஒருமுறை செய்த தவறை மறுமுறை செய்யவில்லை. உதாரணமாக அடித்தால், கத்துதல்) தற்போது முன்பைவிட அரசியல் ஞானம் அதிகம். சிந்தித்து செயல்லாற்றினால் நன்மை விளையும். இல்லை தாததவோடு சேர விரும்பினால் அவரின் காலை வாரிவிட சற்றும் தயங்காதவராக இருக்க வேண்டும்.

    ps
    தாத்தாவுக்கு இப்ப வயசு நல்லா போனதால அவர் 2 செக்கன் உண்ணாவிரதம் இருந்தால்கூட நான் நம்ப தயாராக இருக்கிறேன்.

    ReplyDelete
  2. தேர்தலுக்குப் "பின்" கூட்டணி என்பதே பேரம் பேசும் சக்தியாக இருக்கும்!

    ReplyDelete
  3. என்னாலே வீட்டு அரசியலையே ஒழுங்கா வாச் பண்ணமுடியலே !

    ReplyDelete
  4. நல்ல அலசல். திமுக கூட்டணியில் இணைந்தால் முன்பு பாமக விற்கு நேர்ந்த கதிதான் விஜயகாந்துக்கும் ஏற்படும். இன்று மருத்துவரை அனைவரும் புறக்கணிக்க காரணம் அவர் ஐந்து வருடம் திமுகவிலும் அடுத்த ஐந்து வருடம் அதிமுகவிலும் இணைந்ததுதான். இன்று திராவிடக் கழகங்கள் நாட்டிற்கு எதையும் செய்யவில்லையென்று குறை கூறுவது ஆகா இந்த பழம் புளிக்கும் என்கிற கதைதான். அதே போலத்தான் விஜயகாந்தும். சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டு வைத்திருந்துவிட்டு இப்போது நாடாளு மன்ற தேர்தலில் திமுகவுடன் கூட்டு என்று முடிவெடுத்தால் அடுத்த சட்டமன்ற தேர்தலின்போது கட்சியே இருக்கும் இடம் தெரியாமல் போய்விடும். தனித்து நின்று அனைத்து தொகுதிகளிலும் தோற்றாலும் அடுத்த சட்டமன்ற தேர்தலில் மக்கள் மத்தியில் அதன் மதிப்பு உயர்ந்து நிற்கும். அதை அவர் உணர்ந்தால் நல்லது. பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். திமுகவைப் பொருத்தவரை யாருடன் கூட்டு சேர்ந்தாலும் இம்முறை வெற்றிபெற வாய்ப்பே இல்லை. தனித்து போட்டியிட்டால் தங்களுடைய கட்சியின் உண்மை செல்வாக்கை மதிப்பிடவாவது உதவும்.

    ReplyDelete
  5. படத்திற்கான கமென்ட் சூப்பர்! அரசியலை நன்றாகவே அலசியிருக்கின்றீர்கள்! பார்ப்போம் உங்கள் கருத்தைக் கணிப்பை!!!

    ReplyDelete
  6. நீங்கள் எப்போது தேமுதிகவின் "கொ.ப.செ" (கொள்கை பரப்புச் செயலாளர்) யாக சேர்ந்தீர்கள்? சொல்லவேயில்லை?

    ReplyDelete
  7. உங்களுடைய கணிப்பை நான் பிரிண்ட் அவுட் எடுத்து பத்திரமாக எடுத்து வைத்துள்ளேன். பார்ப்போம், நீங்கள் சொன்னபடி தான் தேர்தல் முடிவுகள் வருகிறதா என்று?

    ReplyDelete
  8. அனைத்தும் உண்மை! விஜயகாந்த் சிந்திக்க வேண்டிய நேரம் இது! பார்ப்போம்!

    ReplyDelete
  9. எப்ப அரசியல்ல குடும்பத்தை சேர்த்தும், அதிமுகவோடு கூட்டணியும் வச்சிக்கிட்டாரோ அப்பவே அவர் நம்பிக்கையற்றவரா மாறிட்டார். இதுல தாத்தாவோடு சேர்ந்தா இன்னும் மரியாதையை இழக்க வேண்டி வரும்

    ReplyDelete
  10. // நீங்கள் சிறந்த நடிகர்//

    உங்களுக்கு நல்லா டமாஸா எயித வருது. இப்படியே மெயின்டைன் பண்ணு சார்

    ReplyDelete
  11. சோக்கா அயசிக்கீறபா... வெயிட்டு பண்ணி பாக்லாம்பா...

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.