விகடன்
தர மறந்த அவார்டுகள் 2013
விகடன்
ஒவ்வொரு வருடமும் அவார்டுகள்
கொடுக்கின்றன.
பல
சமயங்களில் அவர்கள் கொடுக்க
வேண்டியவருக்கு கொடுக்க
மறக்கின்றனர்.
அதனால்
அவர்கள் தர மறந்த அவார்டுகளை
அவர்களின் சார்பாக அவர்கள்...உண்மைகள்
தளத்தின் வாயிலாக மதுரைத்தமிழன்
வழங்குவது உங்களுக்கு
தெரிந்திருக்கும்.
கடந்த
வருடம் அரசியல் தலைவர்களுக்கு
அவார்டு கொடுக்கப்பட்டது.
அந்த
அவார்டை பார்க்காதவர்கள்
அறியாதவர்கள் இங்கே க்ளிக் செய்து
பார்க்கவும்.
இந்த
வருடம் 2013 விகடன் தர மறந்த
அவார்டுகளைப் வலையுலக
பிரபலங்களுக்கு தரப்படுகிறது.
ரமணி
: வலையுலகின்
கவியரசர் (
கருத்தாழம்
மிக்க மாறுபட்ட சிந்தனைகளை
தரும் கவிதைகளை தருவதால்
இவருக்கு இந்த அவார்டு
வழங்கப்படுகிறது )
கோபாலகிருஷ்ணன் : ஆன்மிக
ஜோதி என்னால் குறும்புக்கார
இளைஞர் என்று அழைக்கப்படும்
இவர் ஆன்மிக தகவல்களை அள்ளித்
தருவதால் இவருக்கு இந்த
அவார்டு வழங்கப்படுகிறது.
இவர்
எழுதும் நகைச்சுவை கதைகளில்
குறும்பு அதிகமாக இருக்கும்
அதனால்தான் இவரை குறும்புகார
இளைஞர் என்று அழைப்பேன்.
பாலகணேஷ் : வலையுலக
எம்ஜியார்.
பெண்களிடம்
எம்ஜியார் போல இடம் பிடித்து
இருப்பதால் இவருக்கு இந்தப்
அவார்டு
ஜோதிஜி
: சமுக
சிந்தனையாளர் அல்லது தமிழ்
காவலர்.
தமிழ்தான்
இவரது மூச்சு .
இவரது
சமுகப்பார்வை மிக ஆழமானது
&
தெளிவானது.
அதனால்
இவருக்கு இந்த அவார்டு
ரஹீம் கஸாலி : வலையுலக
தத்துவ மேதை .
இவர்
தத்துவம் என்ற பெயரில்
வெளியிடும் கருத்துக்கள்
மிக அருமை.
Mohammad Ghazali, என்பவர்
Islamic
Persian philosopher இந்த
கஸாலி வலையுலக தத்துவ மேதை.அதனால்
இவருக்கு இந்த அவார்டு
.
திண்டுக்கல்தனபாலன் : வலையுலக
வள்ளுவன்.
ஒலைச்சுவட்டில்
வள்ளுவர் திருக்குறள் எழுதினார்.
ஆனால்
இந்த வள்ளுவனோ வலைத்தளத்தில்
எழுதுவதால் இவருக்கு இந்த
அவார்டு
T.N முரளிதரன்
: வலையுலக
நல்லாசிரியர் .
இவர்
ஆசிரியர் போன்று பல தகவல்களை
பகிர்வதால் இந்த நல்லாசிரியர்
அவார்டு
சீனு
: காதல்
இளவரசன்.
காதல்
கடிதப் போட்டி வைத்து காதல்
இளவரசனாக பயணம் செய்து
கொண்டிருப்பதால் இந்த அவார்டு.
ராஜி : வலையுலக
மனோரம்மா.
நடிப்பில்
மனோரம்மாவை மிஞ்ச யாரும்
இருக்க முடியாது எந்த பாத்திரம்
எடுத்தாலும் அதை சிறப்பாக
செய்து முடிப்பார் அதைப் போல
இவர் எந்த பதிவு இட்டாலும்
மிக சிறப்பாக இருப்பதால்
இந்த அவார்டு
சசி
: கிராமத்து
கவிக்குயில்.
கிராமத்து
பாணியில் கவிதைகளை எழுதி
எல்லோரின் மனம் கவர்வதால்
இவருக்கு இந்த அவார்டு
உஷாஅன்பரசு : வலையுலகின்
அன்ணை தெரசா.
அருமையான
சிறுகதைகளை எழுதுபவர் என்பதுதான்
எல்லோருக்கும் தெரியும்.
ஆனால்
சைலண்டாக முதியயோர்களுக்கு
உதவுவதால் இவருக்கு இந்த
அவார்டு
மஞ்சுசுபாஷினி : வலையுலகின்
அப்பாவி.
இவர்
தனது தளத்தில் பதிவுகளை
வெளியிடுவதை விட மற்றவர்களின்
பதிவுகளுக்கு இவர் சொல்லும்
கருத்து பதிவைவிட மிக அற்புதமாக
இருக்கும்.
எந்த
பதிவை படித்தாலும் ஆழ்ந்து
படித்து கருத்து சொல்லுவார்.
மிகவும்
அப்பாவியானவர் மென்மையானவர்
என்பதால் இவருக்கு இந்த
அவார்டு
அருணாசெல்வம் : வலையுலகின்
கவியரசி:
இவரது
கவிதைகளில் தமிழ் கொஞ்ச்சி
விளையாடும் அதனால் இவருக்கு
இந்த அவார்டு.
சரி
எல்லோருக்கும் அவார்டு
கொடுத்திருக்கும் உங்களுக்கு
அவார்டு யாரும் தரவில்லையா
என்று கேட்க வேண்டாம்.
வழக்கம்
போல எனக்கு அவார்டு தர என்
மனைவி 'பூரிக்கட்டையை'
எடுத்து
வருகிறார்கள்.
அதனால்
அந்த அவார்டை வாங்கி கொண்டு
பிழைத்து கிடந்தால் மற்றவர்களுக்கு
அவார்டு தர வருகிறேன்.
அன்புடன்
மதுரைத்தமிழன்
டிஸ்கி : நண்பர்களே உங்களுக்கு பிடித்த வலைத்தளத்தை இங்கு பின்னுட்டத்தில் இட்டு அந்த தள பதிவருக்கு நீங்கள் என்ன அவார்டு தர விரும்புகிறீர்கள் என்பதை முடிந்தால் பின்னுட்டத்தில் சொல்லி செல்லவும். நன்றி
விருதுகளை வாரி வழங்கியுள்ளீர்கள். இவர்களுள் பலருக்கும் இந்த விருதுகள் பொருத்தமானவைதான்.
ReplyDeleteஇனிய தோழருக்கு மிக்க மிக்க நன்றி... அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
ReplyDeleteவிருது பெற்ற அனைவருக்கும்
ReplyDeleteமனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
விருது வழங்கி தகுதியானவர்களை
(நான் நீங்களாக) கௌரவித்தமைக்கு
மனமார்ந்த நன்றி
உங்களுக்கு தகுதியான விருதுதான் சார்..! மறுக்காம வாங்கிக்கனும்...
Deletetha.ma 3
ReplyDeleteஅவார்டுக்கு நன்றி. தரப்போவது தங்கப்பதக்கமா? இல்லை வெள்ளியா? எதுவா இருந்தாலும் என் எடைக்கு எடை இருக்கனும்.
ReplyDeleteஅப்ப இந்த விருது வழங்கும் விழாவை மூணு மாசம் தள்ளி வைங்க அவர்களே...! ( எப்படியாவது ஆறு வேளையா மூக்கு முட்ட தின்னு 80 கிலோவாச்சும் ஏறிக்கிறேன்...)
Deleteமிகச் சரியான நபர்களுக்கு சரியான விருதுகளைக் கொடுத்துள்ளீர்கள். விருது கொடுத்த உங்களுக்கும், உங்கள் கையால் விருது வாங்கியவர்களுக்கும் பாராட்டுக்கள்!
ReplyDeleteவாழ்த்துக்கள்!
ReplyDeleteஎன்னைப்பற்றிய உங்கள் கருத்துக்கும், விருதுக்கும் நன்றி
ReplyDeleteநிச்சயமாக தகுதி உடையவர்கள்,
ReplyDeleteபொங்கல் விழா வேலைகளில் இருந்தாலும் குட்டி இடைவேளையில் இங்கே எட்டி பார்த்தேன்... இங்க பெரிய விருது விழா நடத்திட்டிருக்கு... அட நம்ம பேரும்.. ஆனா விருதுதான் பயமுறுத்துது... ! அந்தளவுக்கு பெரிய சேவை எதுவும் இல்லீங்க... இயல்பா சின்ன சின்ன நல்ல விஷயங்களை பண்ணிட்டு வர்றோம். ஆகையில் என்னை தவிர்த்து மற்ற அனைவர்க்கு விருது கொடுக்கலாம்.அவங்க எல்லோருக்கும் வாழ்த்துக்கள்!
ReplyDeleteஉங்களுக்கு பூரிக்கட்டை வேண்டாம்.." ஆல் இன் ஆல் அழகு ராசா" ன்னு விருது கொடுக்கிறோம். அரசியல், நகைச்சுவை, போட்டோடூன்..ன்னு அல்லாத்திலயும் கலக்கறதால ஒங்களுக்கு இந்த விருது.... !
நன்றி ஒரு சிறிய இடைவேளைக்கு பிறகு வருகிறேன்..........
உங்களுக்கு
வலையுலகில் பெண்களின் மனதில் மட்டுமின்றி... உங்களைப் போன்ற நிறைய ஆண்களின் மனதிலும் இடம் பிடித்திருக்கிறேன் நான் என்பதில்தான் என் மகிழ்ச்சி! எனக்கு வேண்டியவர்கள் அனைவரும்... சொல்லப்போனால் என்னிலும் மேம்பட்டவர்கள் அனைவரும்... என்னுடன் சேர்ந்து தங்களிடமிருந்து விருது பெற்றதில் கொள்ளை மகிழ்ச்சி! மகிழ்வு தந்த விருதுக்கு மனம் நிறைய நனறி நண்பா!
ReplyDeleteதகுதி உள்ளவர்களுக்கு கொடுத்து உள்ளீர்கள் ,ஆனால் ..பிறரா கொடுத்தா பட்டம் ,தானாக் கொடுத்துகிட்டா தம்பட்டம் ..பூரிக்கட்டையை வாபஸ் செய்யவும் ...ஆனால் எனக்கு வேண்டாம் !
ReplyDelete+1
nandri 'Unmaigal'
ReplyDeleteவலையுலகின் ''வெண்ணிற ஆடை மூர்த்தி'' எங்கள் அண்ணன் நம்பள்கிக்கு விருது கொடுக்காததை துபாய் நம்பள்கி ரசிகர் மன்றம் சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம் பூபதி துபாய்
ReplyDeleteவலையுலக எம்.ஜி.ஆர்... செம அவார்டு நம்ம வாத்தியாருக்கு!
ReplyDeleteஅத்தனையும் அருமை... ரசித்தேன் மதுரைத் தமிழன்.
நண்பரே அருமையான தேர்வைச் செம்மையாகச் செய்துள்ளீர்கள்
ReplyDeleteவிருது பெற்றோருக்கு மனமார்ந்த வாழ்த்துக்ள்
விருது கொடுத்த உங்களுக்கும் மனமகிழ் வாழ்த்துக்கள்
வணக்கம்
ReplyDeleteசரியான தேர்வு.... வழங்கினால் சரிதான்... வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
இந்த விருது விழாவில் என்னை மிகவும் ரசிக்க வைத்த விருது - "பூரிக்கட்டை" விருது தான். மற்ற விருதுகள் வாங்கிய சக வலைப்பதிவார்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.
ReplyDeleteஎல்லா விருதுகளும் சூப்பர்!! மிகப் பொருத்தம்!! அது என்ன பூரிக்கட்டை?!!!! ஓ மதுரை தமிழனின் "சின்னம்" !!! மிகச் சரியான விருது!!!! பொருத்தாமான சின்னம்!!!! மிகவும் ரசித்தோம்!
ReplyDelete