Sunday, January 19, 2014



விஜய் டிவி : ஒரு பார்வை பல கருத்துக்கள் (விஜய் டிவி தமிழர்களின் அடையாளங்களை மறைக்கிறதா அல்லது அழிக்கிறதா )





கடந்த ஆறுமாதங்களாக விஜய் டிவியை பார்ப்பவர்களுக்கு ஒன்று தெளிவாக புரிந்து இருக்கும் அவர்களின் நிகழ்ச்சிகள் ஏதுவுமே சுட்டிக் காட்டும்படியாக இல்லை என்பதுதான். விஜய் டிவி நிலையத்தினர் எந்த புதிய புரோகிராம் அல்லது சீரியல் ஆரம்பித்தாலும் மிக நல்ல பெயர் வைத்து தடபுலாக ஆரம்பித்து சிலமாதங்கள் நல்லபடியாக நடத்தி சென்று கடைசியில் எப்படி நடத்துவது அல்லது எப்படி முடிப்பது என்பது தெரியாமல் சொதப்பிவிடுவார்கள். அதற்கு உதாரணமாக என் தேசம் என் மக்கள், 7c, சரவணன் மீனாட்சி, நீங்களும் வெல்லாம் ஒரு கோடி. அது போல நீயா நானா? சூப்பர் சிங்கர் போன்ற நிகழ்ச்சிகள் மிகவும் நொண்டிக் குதிரை போல நொண்டிக் கொண்டு விஜய் டிவியை இன்னும் மிகவும் கஷ்டப்பட்டு இழுத்து செல்லுகின்றன. இந்த நொண்டிக்குதிரைகளான நீயா நானா? சூப்பர் சிங்கர் போன்ற நிகழ்ச்சிகள் எவ்வளவு காலம்தான் இழுத்து செல்லும் என்பது மிகப் பெரிய கேள்விக்குறியே


இப்படி மக்களிடம் செல்வாக்கு குறையும் நேரத்தில் மக்களிடையே தங்கள் டிவி மீண்டும் பரபரப்பாக பேசபடவேண்டும் என்றுதான் அவர்கள் நடத்தும் நிகழ்ச்சிகளில் சில தரங்கெட்ட செட்டப் செய்து மக்களிடையே பரபரப்பூட்டி விஜய் டிவியைப்பற்றி பேச செய்வார்கள். அப்படிதான் நீங்களும் வெல்லாம் ஒரு கோடியை பிரகாஷ் ராஜை வைத்து நடத்திய போது அவர்கள் எதிர்பார்த்த அளவு நிகழ்ச்சி மக்களிடையே பரபரப்பு ஊட்டவில்லை என்பதால் கமலஹாசன் டிடி முத்த காட்சியை அரங்கேற்றி பரபரப்பு ஏற்படுத்தினார்கள்.


அதுபோலவே விஜய் டிவியின் எந்த நிகழ்ச்சிகளும் பலமாதங்களாக மக்களிடம் எந்த ஒரு ஈர்ப்பையும் ஏற்படுத்தாததால்தான் இந்த பொங்கல் நிகழ்ச்சியின் போது சிவகார்த்தியகன் நிகழ்ச்சியை வைத்து அதில் வரும் காலேஜ் பெண்கள் மிகவும் தரக் குறைவாக நடக்கும் படி முதலிலேயே ஒரு செட்டப் செய்து அதன்படி அரேங்கேற்றினார்கள். இந்த உண்மையெல்லாம் அறியாத & தெரியாத மக்கள் கலாச்சாரம் கெட்டுவிட்டது பெண்கள் கெட்டுவிட்டார்கள் விஜய் டிவியின் நிகழ்ச்சிகள் தரம் குறைந்துவிட்டன என்று கழுவி கழுவிக் கொட்டினர்.


இப்படி பலரும் கழுவிக் கொட்டவேண்டும் எப்படியாவது மக்கள் இடத்தில் விஜய் டிவி நிகழ்ச்சிகள் பேசப் படவேண்டும் என்று நினைத்த விஜய் டிவியின் எண்ணம் பலித்தது. இப்படி நடந்தால்தான் அவர்களின் ரேட்டிங்க் கூடும். நன்றாக கவனியுங்கள் இவர்கள் இப்படி செய்ததால் சன் டிவியைப் பற்றியும் அதன் புரோகிராம்களையும் மக்கள் பேசுவது குறைந்து விட்டது. இதுதான் விஜய் டிவிக்கு தேவை. அவர்களுக்கு தெரியும் நல்ல விஷயங்களை மக்கள்டிவு போல கொடுத்தால் மக்கள் மனதில் இடம் பிடிக்க முடியாது.


அதுமட்டுமல்லாமல் தமிழர்களின் அடையாளங்கள் மறைந்து வருகிறதா? என்று விஜய் டிவி தலைப்பு வைத்து ஒரு வார்த்தை அடிதடிகள் போல ஒரு செட்டப் நிகழ்ச்சி நடத்தி இன்னும் பரபரப்பை ஊட்டியது.


உண்மையிலேயே கோபிநாத்துக்கு துணிச்சல் இருந்தால் "விஜய் டிவி தமிழர்களின் அடையாளங்களை மறைத்து வருகிறதா அல்லது அழித்து வருகிறதா"என்று புரோகிராம் நடத்தலாமே அதை செய்ய அவர் துணிவு உண்டா...சமுக அவலங்களை போட்டு உடைக்கும் கோபி விஜய் டிவியின் அவலங்களை போட்டு உடைப்பாரா?


நினைத்ததை சாதித்து கலாச்சாரத்தை உடைக்கும் டிவி விஜய்டிவி என்பது என் கருத்து விஜய் டிவியின் தரம் குறையவில்லை அவர்களின் மோசமான தரம் அப்படிதான் இருக்கிறது ஆனால் மக்களின் தரம் தான் குறைந்துவிட்டது அதனால்தான் இந்த டிவி நிகழ்ச்சிகளை பார்த்து வருகிறார்கள் & குறைகூறிவருகிறார்கள்


இந்த பதிவை படிக்கும் நீங்கள் உங்கள் கருத்துகளை கிழே மறக்காமல் பதிந்து செல்லுங்கள்


அன்புடன்
மதுரைத்தமிழன்

26 comments:

  1. கோபி அவர்கள் சொந்த வீட்டில் கல் எறிவாரா என்று தெரியவில்லை... எதுவும் ஒரு நாள் முடிவுக்கு வரும்... தவறு அவர்கள் மீது இல்லை... இவைகளை எல்லாம் (ரசிப்பவர்கள்...!) பார்ப்பவர்கள் மீது...!!!

    ReplyDelete
    Replies
    1. அவரு பொழைக்க தெரிஞ்ச புள்ளைங்க...அதனால் அவரு அப்படியெல்லாம் நாம் சொன்னதுக்காக ரோஷம் வந்து ஏதும் நெஞ்சுட மாட்டாருங்க ஏன் அவரு ஷோவில் நடப்பு அரசியல் பற்றிய சமுகவிழிப்பு உள்ள தலைப்பை வைத்தும் நடத்த மாட்டாரு

      Delete
  2. நான் டி.வி பக்கம் ரொம்ப போறதில்ல... பொங்கல் விடுமுறையில் பார்த்ததுதான் அந்த நிகழ்ச்சியும்..! இந்த சேனல்கள் தமிழர் பண்பாட்டை குலைத்து வருகிறது என்பதில் சந்தேகமே இல்லை... பணத்துக்காக அவங்க செய்றதுல இவங்க நேரத்தை தொலைச்சி... தம் இலட்சியங்களையும் இழக்கும் பார்வையாளர்கள்தான் ஏமாளிகள்.

    ReplyDelete
    Replies
    1. கலாச்சாரத்தை மாற்றி அமைப்பதில் தவறு இல்லை ஆனால் மாற்றி அமைப்பது நன்மையாக நல்லதாக இருக்க வேண்டும் என்பதுதான் நம் எதிர்பார்ப்புங்க்

      Delete
  3. விஜய் டிவியின் பூர்வீகம் தமிழகமில்லையே! அதுக்கிட்ட போய் தமிழ் கலாச்சாரத்தை எதிர் பார்த்தால்!?

    ReplyDelete
    Replies
    1. பூர்விக விஜய் டிவிகாரன் சொல்வது லாபம் சம்பாதி முதன்மையாக வா என்றுதான் சொல்லுகிறான் கலாச்சரத்தை அழி என்று என்றும் அவன் சொல்லவில்லை அழிப்பது எல்லாம் அங்கு வேலை செய்யும் நம் நாட்டு மூதேவிகள்தானுங்க

      Delete
  4. ராஜி சொல்றது சரிதான். அதனால்தான் தைரியமாக கிளம்பிவிட்டார்கள். அதற்கு துணைபோவது நமது தொலைக்காட்சி நடிகர்கள். நீயா நானாவில் வரவர ஆபாசம் தலையெடுக்கிறது. என்னசெய்ய?

    ReplyDelete
    Replies

    1. ஆபாசம் டிவியில் மட்டுமல்ல மக்கள் மனதிலும்தான் அதிகரிக்க ஆரம்பித்துவிட்டன அத்ற்கு இப்படிபட்ட டிவிகளும் துணை போகின்றன

      Delete
  5. ராஜி மேடம் சொல்றது தான் எனக்கும் தோன்றியது .அப்புறம் இது உலகமயமாக்கலின் மற்றும் ஒரு எதிர்வினை (ஸ்டார் டிவி )என்றும் தோன்றுகிறது.

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் உலகமயமாக்களின் விளைவுதான் இது

      Delete
  6. naan solla vandhadha neenga solliteenga... vijay tv'ya vida adha paakaravangala thaan saagadikanum... cha... idhu enga poe mudiya poghudho... VIJAY TV = MAMA TV, BROKER TV, KOOTIKODUTHAAN TV etc

    ReplyDelete
    Replies
    1. இது கலாச்சார அழிவுக்குதான் கொண்டு செல்லும் அதில் சந்தேகமே இல்லை

      Delete
  7. நல்ல வேளை. நானும் என் மனைவியும் விஜய் டிவி பார்ப்பதேயில்லை. ஒரு சில சமயம் என் மனைவி நீயா நானா பார்ப்பாள். ஆனால் 5 நிமிடங்களுக்கு மேல் பார்க்க மாட்டாள். ஏனென்றால் மணிக்கணக்காக (கிட்டத்தட்ட விளம்பரங்கள் சேர்த்து 2 மணி நேரம்). எவன் பார்ப்பான் என்று சொல்லுவாள். திரைப்படங்களே பல திருப்பங்களுடனும், பாடல்களுடனும் இருந்தாலே 3 மணி நேரம் என்பது ஜாஸ்தி என்பது எல்லோருக்கும் தெரியும். போர் அடித்துவிடும். அப்படியிருக்க நீயா நானா யார் பார்ப்பார்கள். எந்த ஒரு ப்ரோக்ராமும் ஒரு மணி நேரம் என்பதே அதிகம்.

    மேலும் விஜய் டிவியில் புது புது ப்ரோக்ராம்கள் வருகின்றன. ஆனால் எவையும் பார்க்கும் படியாகவில்லை. இதைவிட நெடுந்தொடர்கள் எவ்வளவோமேல். தொடர் திரைப்படம் போலத்தான் பல சீரியல்கள் இப்போது வருகின்றன.

    நான் விரும்பி பார்ப்பது சன் டிவியில் ஞாயிறு மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகும் குட்டிச் சுட்டீஸ். தமிழாக்கம் செய்யப்பட்டு ஒளிபரப்பாகும் குழந்தைகள் மற்றும் மிருகங்கள் நடிப்பில் உருவான ஆங்கில திரைப்படங்கள். (சன் டிவி, கலைஞர் டிவி, K டிவி), சாலமன் பாப்பையா தலைமையில் ஒளிபரப்பாகும் பட்டிமன்றங்கள், என்றும் இனியவை, தேனருவி, இளையராஜாவின் இசையில் உருவான பாடல்கள். வாணிராணி, நாதஸ்வரம் தொடர்கள்.

    விஜய் டிவி ஒருபோதும் ரேட்டிங்கில் சன் டிவியை நெருங்கமுடியாது என்பது நிதர்சனமான உண்மை. ஏனென்றால் விஜய் டிவியை A சென்டரில் மட்டும் விஜய் டிவியை ஓரளவு பார்க்கிறார்கள் (ஏனென்றால் அதிகம் ஆங்கிலக் கலப்பு இருப்பதால்) , B, C சென்டர்களில் விஜய் டிவி தாக்கம் கிடையாது.) B, C சென்டர்களில் தான் சீரியல்களின் ஆதிக்கம் தான் தலைவிரித்தாடுகிறதே.

    ReplyDelete
    Replies
    1. மிக சரியான நடப்பை சொல்லி சென்றதற்கு நன்றி

      Delete
  8. Super singer finalkku malayali soninaayai vendum endre malayala naduvargal (madaiyargal) select seidu malayala pasaththai kaattivittaargal .vijay tv in meendum oru pithalaattam

    ReplyDelete
    Replies
    1. நடுவர்கள் மலையாளியாக இருப்பதனால் சோனியாவை தேர்ந்தெடுக்கவில்லை. எந்தெவொரு விஜய் டிவியின் நிகழ்ச்சிகளில் வெற்றியாளர்களை தேர்ந்தெடுப்பது நடுவர்கள் அல்ல அதை தேர்ந்து எடுப்பது நிர்வாகிகளும் அந்த ஷோவின் டைரக்டர்களும்தான்.

      இறுதியில் சோனியா நிச்சயம் வெல்லமாட்டர் அவர் தோல்வியை தழுவி மேடையில் மிக அதிகமாக அழுவார் அதுதான் விஜய்டிவிக்கு வேண்டும் அப்படியழுவதால் மக்கள் மனதில் கழிவிரக்கம் தோன்றும் அது டிவி ரேட்டிங்குக்கு உதவும். டிவி நிர்வாகியின் கவலை எல்லாம் ரேட்டிங்கு மட்டும்தான்

      Delete
  9. super singer final il vendum endre soninaayai select seidu naduvargal (madaiyargal) malayala pasaththai kaattivittaargal.vijai tv in meendum oru asingam

    ReplyDelete
  10. நீங்கள் சொல்வது போல், விஜய் டிவி, நல்ல நிகழ்ச்சிகளை முதல் சில வாரங்கள் கொடுத்துவிட்டு, பிறகு நாங்களும் மற்றவர்களைப் போலத்தான் என்று பல் இளிக்க வைத்துவிடுகிறார்கள். சீசன்1,2,3,4,5,6 என்று அரைத்ததையே திருப்பி அரைக்கிறார்கள். பார்க்கும் நமக்கு அந்த நிகழ்ச்சிகள் மீது வெறுப்பு ஏற்பட்டுவிடுகிறது.

    ஜோடி no.1 என்று ஒரு நிகழ்ச்சி - முதலில் இதை தடை செய்ய வேண்டும். அதற்கு நடுவர்கள் வேற, அவர்கள் கொடுக்கும் கமெண்ட்ஸ், ஆடுபவர்களின் அசிங்கமான ஆடைகள், அருவருக்கத்தக்க நடனங்கள் என்று ஏகப்பட்ட அருவருப்புகள். சினிமாவில் தான் இப்படியென்றால், இப்போது டி‌வியிலும் இந்த கலாச்சாரம் வந்துவிட்டது.
    நான் ஒரே ஒரு முறை தான் அந்த நிகழ்ச்சியை பார்த்தேன். இனிமேல் அந்த பக்கமே தலைவைத்து படுக்கக்கூடாது என்று முடிவு செய்துவிட்டேன்.

    ReplyDelete
    Replies
    1. ஆரம்பத்தில் 7 சி, சரவணன் மினாட்சி நீயா நானா, சூப்பர் சிங்கர் நன்றாகத்தான் போயின இப்பதான் அதெல்லாம் கூவம் போல நாற ஆரம்பிக்கின்றன

      Delete
  11. தங்களின் கருத்தை நானும் ஆமோதிக்கிறேன். விஜய் தொலைக்காட்சி தமிழர்களின் அடையாளங்களை மறைத்து அழிக்கிறது என்பேன் நான்.

    ReplyDelete
    Replies
    1. உங்களின் கருத்தை நான் வழிமொழிகிறேன்

      Delete
  12. கடந்த ஆறு மாசமாத்தானா? அங்க என்னைக்குங்க நல்ல ப்ரோகிராம குடுத்துருக்காங்க? ஆனா என் ரெண்டு மகள்களுக்கும் அந்த டிவிதான் எல்லாமே! இளைய தலைமுறையினரின் டிவி! நமக்குத்தான் வயசாயிருச்சி போல :(

    ReplyDelete
    Replies
    1. இளையதலைமுறை டிவிதான் அதானல்தான் நிகழ்ச்சிகளை இன்னும் மிக சிறப்பாக நடத்தாலாம் என்று சொல்லுகிறறோம்

      Delete
  13. டி.ஆர்.பி ரேட்டிங்கிற்கு செய்யப்படும் செட்டப் என்று நன்றாக விளக்கியுள்ளீர்கள்! ஆனால் நம்மவர்கள் இன்னும் இந்த டீவி மோகத்தை விட வில்லையே என்ன செய்வது?

    ReplyDelete
  14. உங்கள் சில கருத்துகளுடன் நான் இம்முறை ஒத்து போகவில்லை. தமிழர் கலாசாரம் என்று கூறும் போது, யாராவது வேட்டி கட்டிக்கொண்டு வேலைக்கு போகிறார்களா? ஏனெனில் இது காலத்தின் கட்டாயம் மற்றும் தொழில்நுட்ப அபரித வளர்ச்சி. எனக்கு ஒரு girlfriend இருக்கு என்று வீட்டில் சொல்லும் காலம் இது. ஒரு இனம் என்று சொல்லும் காலம் மாறி, ஒரு உலகம் என்று சொல்லும் காலம் இது. கலாசாரம் என்பது பண்டிகை காலங்களுக்கு மட்டுமே என்ற காலத்தை நோக்கி நகர்கிறோம்.

    சங்கம் வைத்தால் தமிழ் வளராது. தொழில்நுட்பம் வளர வேண்டும். எங்காவது கணிதத்தில் தமிழ் எழுத்துருக்கள் பாவிக்கிறோமா? கணினி வாழ்க்கை என்ற நிலையில் கலாசார மாற்றம் தவிர்க்க முடியாதது. விஜய் tv எமது கலாசாரத்தை உடைக்கிறது என்பதை நான் ஏற்று கொள்ளவில்லை.

    ReplyDelete
  15. பொதுவாகவே டி.வி. பார்ப்பது குறைவு தான்..... அப்படியே தொலைக்காட்சிப் பெட்டியை முடிக்கினாலும் அது ஒருபக்கத்தில் கத்திக் கொண்டு இருக்க, நான் வேறு பக்கம் ஏதாவது வேலை செய்து கொண்டிருப்பேன்.

    மக்களுக்கு இதன் மேல் இருக்கும் மோகம் குறையும் வரை இப்படி எதையாவது செய்து கொண்டிருப்பார்கள்...

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.