Wednesday, January 15, 2014

 

@avargalunmaigal

மதுரைத்தமிழனின் மெயில் பேக் : சின்ன சின்ன தகவல்கள்  செய்திகள்

விடுமுறை தினங்களில் மெயில்கள் விநியோகம் செய்ய மாட்டார்கள் ஆனால் மதுரைத்தமிழன் விநியோகம் செய்வான்... இதோ உங்களுக்கான மெயில்.
 
 
 
முதலில் அரசியல் மெயில் :

செய்தி :கனிமொழி மீது பண வர்த்தனையில் பெரும் மோசடி செய்ததாக ஒரு புதிய குற்றச்சாட்டைப் பதிவு செய்யலாம் என்று அமலாக்கத் துறைக்கும், மத்திய சட்ட அமைச்சகத்துக்கும் ஒரு யோசனையைத் தெரிவித்துள்ளார்.

குலாம் நபி ஆசாத்துடன் நடந்த நட்பு சந்திப்பால் ஏற்பட்ட விளைவுதானோ இது, மகன் ஆசைக்காக மகளைப் பழி கொடுக்க போகிறாரா கலைஞர் பொறுத்து இருந்து பார்ப்போம்

தமிழ் 'இலக்கிய'த்துக்கு தொண்டாற்றியதற்காக  பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு அண்ணா விருது - ஜெ

நீலச் சாயம் வெளுத்து போச்சு டூம் டூம் ராஜா வேஷம் கலைந்து போச்சு டூம் டூம்

கலைஞர் ஸ்டாலினுக்கு தந்த பொங்கல் பரிசு?
மதுரை மாவட்ட திமுக குழுவைக் கலைத்ததுதான்.


சமையல் கியாஸ் விலையை 100 ரூபாய் உயர்த்த மத்திய அரசு பரிசீலனை!
இப்படிதான் மத்திய அரசு மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துகிறதோ

பாஜ கட்சியில் கூட்டணி பற்றிப் பேச மூவர் குழு அமைப்பு;
கூட்டணிக்கு கெஞ்சத்தான் இப்படி ஒரு அமைப்பா? அப்ப அலை போயே போச்சா?


செய்தி :ஜெயா தொலைக்காட்சியில் மொக்கை ப்ரோக்ராம்ல கூட கமல் தலைகாட்டுகிறார்
கமல் தன் படம் வெற்றி பெறச் செலுத்தும் கப்பம் இதுதானோ?

சமுகத்திற்கான மெயில் :
நாளிதழில் படித்த செய்தியும் எனது கேள்வியும்


பொங்கல்: கடற்கரை கடைகளின் தரமற்ற உணவுகள் அழிப்பு
சென்னையின் கடற்கரைகள் மற்றும் முக்கிய பூங்காக்களில் உள்ள உணவுக் கடைகளில் மாநகராட்சி அதிகாரிகள் திங்கள்கிழமை ஆய்வு செய்தனர்.

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியது: பொங்கல் பண்டிகை விடுமுறை நாள்களில் மெரினா, எலியட்ஸ் உள்ளிட்ட கடற்கரைகளுக்கும் பூங்காக்களுக்கும் அதிகளவில் பொதுமக்கள் வருவார்கள். இந்த இடங்களில் உள்ள உணவுப்பண்ட கடைகளில் தரமற்ற உணவுகள் விற்கப்படுவதைத்  தடுக்கும் நோக்கில் அங்கு மாநகராட்சி அதிகாரிகள் திங்கள்கிழமை மாலை ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வின்போது, அந்த கடைகளில் வைக்கப்பட்டிருந்த தரமற்ற உணவுப் பொருள்கள், கெட்டுப்போன இறைச்சி, பலமுறை பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

பறிமுதல் செய்யப்பட்ட தரமற்ற உணவுப் பொருள்கள் மாநகராட்சிக் குப்பைக் கிடங்குகளில் அழிக்கப்பட்டன.

எனது கேள்வி:
கடற்கரையில் இப்படி உணவு பொருட்களை விற்பனை செய்பவர்கள் ஏழைவியாபாரிகளே. அவர்களின் வியாபாரத்திற்கு ஏன் இந்த அதிகாரிகள் தொந்தரவு செய்கிறார்கள், ஏழை வியாபாரிகள் மேல் சட்டத்தைத் திணித்து அவர்களைப் பழிவாங்கி சட்டத்தை நிலை நாட்ட முயலும் அரசு அதிகாரிகள் ஏன் வசதி படைத்த ஆட்கள் அல்லது அரசியல் தலைவர்கள் நடத்தும் ஹோட்டல்களில் இப்படி அடிக்கடி சோதனை செய்து சட்டத்தை நிலை நாட்டக் கூடாது.  உதாரணத்திற்கு வெளியூர் செல்லும் பேருந்துகள் சாப்பிட நிறுத்தும் ஹைவே மோட்டல்கள் & ஹோட்டல்களில் இப்படி ஒரு சோதனையை இந்த அதிகாரி செய்து சட்டத்தை நிலை நாட்ட முயலக் கூடாது. இந்த இடமும் பொதுமக்கள் தினமும் கூட்டமாய் குவியும் இடம்தானே இங்கும் சுகாதாரமற்ற உணவுதானே பரிமாறப்படுகிறது.

ஏன் நமது சட்டத்தில் இப்படி ஏற்றத்தாழ்வு?

ஏழை வியாபாரிகளே இப்படி அரசு அதிகாரிகள் சட்டத்தை தங்கள் கையில் எடுத்து ஆட்களுக்குத் தகுந்த மாதிரி உபயோகப்படுத்தும் போது நீங்களும் ஏன் சட்டத்தை உங்கள் கையில் எடுத்து இந்த அதிகாரிகளைத் தண்டிக்கக் கூடாது.

அதிகாரி தண்டிக்க வழிமுறை இதோ. உங்களைத் தண்டிக்கும் அதிகாரி யார் எவர் எந்த ஏரியா அதிகாரி என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். அதன் பின் அந்த பகுதியில் சுகாதாரமற்ற முறையில் செயல்படும் உணவங்கள எது என்று கண்டறிந்து அதைப் பற்றிய முழு விபரங்களை அவர்களுக்குத் தெரியப்படுத்துங்கள். அதன் பின்னும் அந்த அதிகாரி நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அந்த அதிகாரியின் கை அல்லது காலை அடித்து ஒடித்துவிடுங்கள் ஒடிக்கும் போது சொல்லுங்கள் சட்டம் எல்லோருக்கும் சமம் ஆனால் நீ அதைச் சரியான முறையில் செயல்படுத்தாததால் நானும் சட்டத்தைக் கையில் எடுத்து இப்படி உனக்கு  தீர்ப்பளித்து இருக்கிறேன் என்று சொல்லுங்கள். இப்படி ஒவ்வொருவரும் செய்ய ஆரம்பித்தால் அதிகாரிகள் பயப்படுவார்கள் என்பது நிச்சயம்


சிரிக்கச் சிந்திக்க வைக்கும் மெயில்கள் 

@avargal unmaigal


மக்களே எந்த காரணத்தைக் கொண்டும் தூக்க மாத்திரையையும் பேதி மாத்திரையையும் ஒரே நேரத்தில் எடுத்து கொள்ள வேண்டாம் அப்படி எடுத்தால் என்ன நிலைமையில் நாம் இருப்போம் என்று சிறிது கற்பனை பண்ணிப் பாருங்கள்

பாவம் சைனிஷ் மக்கள் வெளிநாட்டில் வசிக்கும் தங்கள் உறவினர்கள் அல்லது நண்பர்கள் தங்களுக்கு வாங்கி வரும் பரிசுப் பொருட்கள் எல்லாம் தங்கள் நாட்டில் தயாரித்த பொருட்களாகவே இருக்கும். அவர்கள் வெளிநாட்டுப் பொருட்களுக்கு ஆசைப்பட முடியாது நம் தமிழக மக்கள் ஆசைப்படுவது போல


நாட்டில் எவ்வளவோ அநியாயங்கள் நடக்கும் போது அழுகாத ஜனங்கள் வெங்காயத்தைக் கட் பண்ணும் போது மட்டும் உணர்ச்சி வசப்பட்டு அழுகிறார்கள்..
 
.
அன்புடன்
மதுரைத்தமிழன்
 

8 comments:

  1. என்னஙக நீங்க வெவரமில்லாமப் பேசறீங்க.

    இப்டி எல்லாரும் தெருவ்ல சாப்ட ஆரம்பிச்சா அப்பரம் அம்மா உணவகத்தில சாப்ட வர ஆள் கொறஞ்சிடுமே. அப்பரம் ஜெயா TVல என்னத்த காட்றது. கட்சிக்காரன் போட்டோ எடுக்றபோது எத்தன எடத்துக்குத்தான் அலைவான்.

    வெளியூர் பஸ் நிறுத்ர எடத்ல டிரைவர் கண்டக்டருங்க சாப்டப்றம் ஓட்டல்காரங்களுக்கு பணம் குடுத்து என்னக்காவது பாத்ருக்கிரீங்களா. சும்மா பொறாமப் படாதீங்க சார்.


    கே. கோபாலன்

    ReplyDelete
  2. பொது மக்களுக்கு சட்டத்தை கையில் எடுக்க சொல்லிக் கொடுத்தபடியால் தமிழநாட்டுப் போலீஸ் தங்களை கைது செய்யப்போகிறது என்று எனக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    ReplyDelete
  3. மெயில் பேக் அருமை! ஏழை வியாபாரிகளிடம்தான் அதிகாரிகள் ஜம்பம் பலிக்கும்! என்ன செய்வது! இதைப்படித்ததும் நான் எஸ்.டீ.டி பூத் வைச்சிருந்த போது நடந்த ஒரு சம்பவம் நினைவுக்கு வருது! விரைவில் பதிவிடலாம் என்று நினைக்கிறேன்! இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  4. கண்டிப்பாக சுகாதாரமற்ற உணவகங்கள் நிறையவே சிட்டிக்குள் இருக்கும் போது பீச்சில் இருப்பவை மட்டும் ஏன் சுகாதாரமற்றவை என எடுத்துக் கொள்ளப்படுகின்றன?! அவர்கள் ஏழைகள்! வெளியில் டம்பமாக விளக்குகளும், அலங்காரங்களும் உள்ள உணவகங்களில் ஜஸ்ட் கிச்சனில் யாராவது எட்டிப் பார்த்திருக்கின்றீர்களா? பார்த்திருந்தால் தெரியும் அவை எப்படி, எவ்வளவு சுகாதாரமாக இருக்கின்றன என்று?!!!!! பீச்சில் கண்ணுக்கு முன் செய்யப்படுகின்றன....ஆனால் உணவகங்களில்?!!!! இதிலிருந்தே தெரியவில்லையா?!! மதுரைத் தமிழனின் ஐடியா சூப்பர்!!!

    ஹஹஹாஅ...சிரிக்க, சிந்திக்க வைக்கும் மெயில்கள்.....அழகான பெண்ணுக்கு.....கடைசியில் வெங்காயத்தை வைத்து ஒரு பஞ்ச் வைச்சீருக்கீங்க பாருங்க.....typical madurai guy's touching style of punch!!!!

    ReplyDelete
  5. வேதனையான அரசியல் நாடகங்கள் வேதனை அளிப்பவை.

    ReplyDelete
  6. இனிய தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. சற்றே இடைவெளிக்குப் பிறகு மீண்டும் mail bag. நன்று.

    நெடுஞ்சாலை உணவகங்கள் - சரியாச் சொன்னீங்க! பல இடங்களில் சாப்பிட யோசிப்பது கூட இல்லை! அவ்வளவு மோசம்.

    ReplyDelete
  8. சமீப சென்னை பயணத்தில் அங்கே உள்ள உணகவங்களில் உள்ள விலைகளும், அவர்களின் மொள்ளமாறித்தனங்களையும் பார்க்க வாய்ப்பு கிடைத்தது. சென்னையில் உணவகங்களில் மட்டும் சாப்பிட்டு வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்கு நிச்சயம் ஐந்து வருடங்கள் கழித்து மிகப் பெரிய சீரழிவும் உடல் ஆரோக்கியம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகளும் காத்துள்ளன என்பதை உணர்ந்து கொண்டேன்.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.