விகடன் வாசகி
ஒருவர் விகடனுக்கும் சிம் எம் செல்லுக்கும் எனக்கும் ஒரு
கடிதம் எழுதி அனுப்பியுள்ளார்.
அதை கிழே காணாலம்.
அதைபடித்து அதில் இணைத்துள்ள வீடியோ க்ளிப்பை பார்த்த எனக்கு ஷாக். இப்படிபட்ட பெண்ணையா
ஜெயலலிதா அவர்கள் தேர்ந்தெடுத்து இருக்கிறார் என்று, ஒரு படித்த ஐஏஎஸ் பெண் ஆபிஸருக்கு
ஜெயலலிதா ஆட்சியில் கிடைக்கும் மரியாதை இதுதானா?
தமிழகத்தின்
மானத்தை வாங்க ஜெயலிதா அவர்களால் தேர்தெடுக்கப்பட்டவர்தான் சசிகலா புஷ்பாவா?
ஜெயலலிதா அவர்களே
நாகரிகமாக நடக்க தெரியாத மேயர் சசிகலா புஷ்பா போன்றவர்களுக்கு ராஜ்யசபா பதவி அவசியாமா?
கொஞ்சம் சிந்தியுங்கள் இவரால் உங்களுக்கு பெருமையா?
------------------------------------------------------------------------------------------
அவள் விகடன்
ஆசிரியருக்கு,
பல வருடங்கள்
அவள் விகடன் வாசகியாக ஒரு கோரிக்கையை முன் வைக்கிறேன். என்னுடைய பெயரும் ஊரும் சொல்லமுடியாத
சூழ்நிலையில் இருப்பதற்கு மன்னிக்கவும். என் கணவர் உட்பட பல உறவினர்கள் அரசுப்பணியில்
உள்ளனர். என்னுடைய தூரத்து உறவினர் மற்றும் தோழியாக இருப்பவர் மதுமதி IAS, தற்போது
தூத்துக்குடி மாநகராட்சி கமிஷனர் ஆவார்.
இரண்டு தினம்
முன் அண்ணா திமுக சார்பில் தூத்துக்குடி மேயராக உள்ள திருமதி சசிகலா புஷ்பா என்பவர்
அண்ணா திமுக சார்பில் தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களால் ராஜ்யசபா உறுப்பினராக அறிவித்த
போது தூக்கி வாரிப்போட்டது. என் தோழி மதுமதி ஐ.ஏ.எஸ் தன் வேலை குறித்து எப்போதும் பேசமாட்டார்.
அவர் சொல்லாவிட்டாலும், அவர் குடும்பத்தினர் சொன்ன வழியாக கேள்விப்பட்ட நிகழ்ச்சி என்
மனதை உறுத்தியது. சில மாதங்களுக்கு முன் தூத்துக்குடி மாநகராட்சி கூட்டத்தில் கமிஷனராக
இருக்கும் மதுமதி IAS கையில் இருந்த மைக்கை பிடுங்கி மேயர் சசிகலா புஷ்பா அதட்டலாக
பேசியுள்ளார் என்று கேள்விபட்டேன். அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. சம்பந்தப்பட்ட காட்சி
இப்போது யூ டுபிள் வலம் வருகிறது (http://www.youtube.com/watch?v=bZtUpCxoodE).
என் உறவினர்கள்
வழியாக கேள்விப்பட்ட வகையில் மேயர் சசிகலா புஷ்பா ஒரு அடாவடி பேர்வழி என்றும், பொது
இடத்தில் கண்ணியம் இல்லாமல் நடந்து கொள்வார் என்றும் பல புகார்கள் அவர் மீது உள்ளதாக
கேள்விபட்டேன். தூத்துக்குடி மாநகராட்சி ஊழியர்கள் அவரை கண்டு மிரளுவதாக பல நிகழ்ச்சிகளை
சொன்னார்கள். ஒரு IAS அதிகாரி, அதுவும் ஒரு பெண்ணுக்கு பெண் இப்படி அநாகரிகமாக, முரட்டு
தனமாக பொது இடத்தில் நடந்து கொள்ளும்போது, சாதாரண மக்களின் கதி என்னவென்று யோசித்து
பார்க்கவும்? என் தோழி மதுமதி IAS அவர்களுக்கு நடந்த அவமானத்தை நினைத்தால் என் மனதில்
வலிக்கிறது. இந்த நிகழ்ச்சிக்கு தமிழக அரசு சார்பில் எந்த நடவடிக்கையும் இல்லை.
எனக்கு அரசியல்
தெரியாது. ஆனாலும் அண்ணா திமுகவில் சமீபத்தில் சேர்ந்த திருமதி அனிதா குப்புசாமி மீது
பெரும் மதிப்பு வைத்துள்ளேன். டிவி நிகழ்ச்சிகளில் சிறு குழந்தைகளிடம் கூட மரியாதையாக
பேசுவார். திமுகவில் உள்ள பேச்சாளர் தமிழச்சி தங்க பாண்டியன் கண்ணியமாக அழகாக பேசுவார்.
ஜெயா டிவியில் உள்ள பாத்திமா பாபுவை பிடிக்கும். எத்தனையோ பெண்மணிகள் அழகாக, நாகரிகமாக
பொது இடத்தில் நடந்து கொண்டு எடுத்துகாட்டாக உள்ளனர். இப்படி நல்ல எடுத்துகாட்டுகள்
இருக்கும்போது, ஒரு மோசமான முன்னுதாரணம் உள்ள மேயர் சசிகலா போன்றவர்களை ஊக்குவித்து
டில்லி அனுப்பலாமா?
தமிழக முதல்வர்,
அதுவும் ஒரு பெண்ணாக இருந்து கொண்டு, பெண்களுக்கு வாய்ப்பு கொடுக்கிறேன் என்கிற பேரில்
பொது இடத்தில் நாகரிகமாக நடக்க தெரியாத மேயர் சசிகலா புஷ்பா போன்றவர்களுக்கு ராஜ்யசபா
உறுப்பினர் போன்ற உயரிய பதவி கொடுத்து டில்லிக்கு அனுப்புவது வருத்தமாக உள்ளது. ஒரு
பக்கம் எழுத்தாளர் மீனா கந்தசாமி போன்றவர்கள் ஆண்களால் கொடுமைக்கு உள்ளாகின்றனர். மறுபக்கம்
என் தோழி மதுமதி IAS பெண்களால் கொடுமை அனுபவிப்பது மிக கோரமான உண்மை. பெண்களுக்கு பெண்களே
எதிரியாக இருப்பது இன்னும் வேதனையாக உள்ளது.
என் கருத்தை
அவள் விகடன் வாசகர்களுக்கு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
- பெயர் மற்றும்
ஊர் சொல்ல விரும்பாத அவள் விகடன் வாசகி
-----------------------------------
அன்புடன்
மதுரைத்தமிழன்
நீங்கள் சொல்வது உண்மை. இது போன்றவர்களுக்கு பதவி ஒரு மிக மோசமான முன் உதாரணம். இதுபோன்ற அடாவடி பேர்வழிகளை ஊக்குவிக்கவே கூடாது!
ReplyDeleteபிரதமர் பதவிக்கு போட்டியிடும் முதல்வரின் தேர்வு இப்படி இருந்தால் அவர் பிரதமராக வந்தால் ....என்று மக்கள் யோசிக்க ஆரம்பித்துவிடுவார்கள்...
Deleteஒரு ரவுடியின் விடியோ கிளிப் கிடைத்துள்ளது. அதற்கே இப்படி கொந்தளிக்கும் நாம், மற்ற அனைத்து ரௌடிகளின் விடியோ படம் பார்த்தால்....??
ReplyDeleteஎல்லாவற்றையும் பார்த்தால் நாமும் இப்படி அடிச்சுகிடுவோம்
Deleteஇன்னாங்கடா நட்க்குது இங்க...?
ReplyDeleteஅல்லாம் போட்டாச்சு... போட்டாச்சு...
Deleteபடித்தவளை படிக்காதவள் ஆட்டி படைக்கும் ஆணவ அதிகாரம் இங்கே தலைவிரித்து ஆடுகிறதுங்க நைனா
//ஆமாம் என்ன நைனா நான் உன்னோட ஃப்ளோவரா இணையலாமுனு நினைச்சு சேர்ந்தா இப்படி பதில் வருது
ReplyDeleteமன்னிக்கவும்...
உங்கள் கோரிக்கையை எங்களால் கையாள முடியவில்லை. மீண்டும் முயற்சி செய்க அல்லது சிறிதுநேரம் கழித்து திரும்பி வருக.
என்னை நைனாஅ என்னை ப்ளாக் பண்ணி வைச்சிருக்கியா என்ன//
கூகிள் பிரண்ட் கனெக்டர் புச்சா போட்டுக்கீறேம்பா... இப்ப ட்ரை பண்ணி பாத்துட்டு சொல்லுபா...
நைனா உங்கூட நானும் சேர்ந்துட்டேன் நைனா தாங்க்ஸ் நைனா
Deleteஅம்மாவை மட்டும் வணங்கினால் போதும்ன்னு நினைக்குறாங்க போல!
ReplyDeleteஆனா அந்த ஆண்டவனிடம் எதையும் மறைக்க முடியாது ஒரு நாள் அந்த ஆண்டவனுக்கு தெரியும் போது குப்பை தொட்டியில்தான் கிடக்க வேண்டி இருக்கும்
Deleteஎன்னாங்க இவ்ளவு கூப்பாடு போட்றீங்க. அவங்கடத்தேந்து மைக்கத்தான புடுங்கினாங்க.
ReplyDeleteஇவுங்கள அங்க் ஒக்காத்தி வக்கத்தான விலையில்லாப் பொருட்கள் வழங்கறோம். செவனேன்னு வாங்கிட்டு வேடிக்கபாருங்க.
கே. கோபாலன்
நான் இப்படித்தான் அடிக்கடி குரலை மாற்றிப் பேசுவேன்
பேசுங்க பேசுங்க
Deleteதலைப்பு பிரமாதன். பதில்
ReplyDeleteஆம்.
புரிந்து கொண்டு பதில் அளித்தற்கு நன்றி
Deleteஇந்த அம்மா எம்.பி ஆயிட்டா எம்ப், எம்பி குதிப்பாங்களோ! எதை வைத்து வேட்பாளர்களை தேர்வு செய்கிறார்களோ? கொடுமை!
ReplyDeleteஇதற்கு ஜெயலலிதா அவர்களை குறை சொல்வதில் அர்த்தம் இல்லை அவரை சுற்றி தவறான தகவல்களை தரும் ஆட்களைதான் குறை சொல்ல வேண்டும்
Deleteஅதெல்லாம் ஒண்ணுமில்லீங்க.
Deleteஅம்மா ஒரு மாசம் கொர நாட்டுல டேரா போட்டாங்களா. அது ஒரு மலைப் பிரதேசம் இல்லீங்களா. அங்க டவர் வேலை சேய்யாதுல்லீங்களா. அதுனால சென்னேலேந்து அவங்க சொன்ன ஆள் பேருல்லாம் அம்மா காதுல விளாதுல்லீங்களா. அதுனாலதான் இந்தமாதிரி தவருல்லாம் நடக்குது.
இன்னமே அம்மா கொர நாடு போற போதெல்லாம் வேட்பாளர் பட்டியல வெளியிடரதா முடிவு பண்ணிட்டோம்.
இந்த மேட்டர இதோட விட்ருங்க.
கே. கோபாலன்
அரசியல்வாதிகள்..... ம்ம்ம்ம்ம்.
ReplyDeleteஅரசியல்வாதிகள் இல்லையென்றால் வாழ்க்கை தெளிவான நிரோடை போலதான் இருக்கும் ம்ம்ம்ம்ம்ம்ம்ம் என்றுதானே சொல்ல வருகிறீர்கள்
Deleteதமிழ் நாட்டு அரசியலே ரௌடிக் கும்பல்தானே! அரசியலில் ஆண் என்ன பெண் என்ன?!! சாக்கடையில் எந்தச் சாக்கடை நல்ல சாக்கடை என்று கேட்கமுடியுமா? எல்லாமே நாற்றம்தான்!
ReplyDeleteதலைவர் எவ்வழியோ, தொண்டன் அவ்வழி என்பது போல, நான் முன்பு படித்த ஒரு செய்தி இப்போது உங்களின் இந்த பதிவை படித்தவுடன் நியாபகத்துக்கு வந்தது. அதாவது, எம்ஜிஆர் முதல்வராக இருந்தபோது, அம்மா, கொள்கை பரப்புச் செயலாளராக இருந்திருக்கிறார். அப்போது இருவரும் இருக்கும்பொழுது, ஐ.ஏ.எஸ் அதிகாரி, முதல்வரிடம் பைலில் கையெழுத்து வாங்க வந்திருக்கிறார். நான் போன பிறகு வந்து கையெழுத்தை வாங்கிக்கொண்டு போ என்று கேவலமாக திட்டி வெளியே அனுப்பியிருக்கிறார் அம்மா அவர்கள்.
ReplyDeleteஅப்பவே ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கு மதிப்பு அவ்வளவுதான்.
இப்போது இவர் முதல்வராக இருக்கும்போது, ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கு ஏற்பட்ட நிலமை இது.
இதெல்லாம் அம்மாவைப் பொறுத்தவரை சகஜம்ங்க. இந்த மாதிரி ஆளுங்கதான் உண்மையிலயே பார்லிக்குப் போக தகுதியானவங்க. அதுவும் அம்மாவே அங்க பிரதமராவோ இல்ல துணைப்பிரதமராவோ இருக்கறப்போ இந்த மாதிரி ஆளுங்க நாலு பேரு இருந்தா எதிர்க்கட்சிக்காரங்க பேசறப்போ மைக்க புடுங்கிறலாம் இல்ல? அதான் விஷயம்!
ReplyDelete