Thursday, January 23, 2014



சென்னை புத்தக கண்காட்சிக்கு வந்த மதுரைத்தமிழனின் அனுபவம்

சென்னைக்கு அவசர வேலையாக வந்த நான் புத்தக கண்காட்சிக்கும் செல்லும் வாய்ப்பு கிட்டியது.அதைப்பற்றிய பதிவே இது. நட்புகள் மன்னிக்கவும் அடுத்த தடவை வரும் போது உங்களை கண்டிப்பாக சந்திக்கிறேன்.



சென்னைக்கு நான் வந்த வேலையை முடித்ததும் இரவு 3 மணியளவில்தான் எனது விமானப்பயணம் என்பதால் அதுவரை எனது நண்பனின் வீட்டில் தங்கி இருந்தேன்,எனது நண்பணோ என்னிடம் ஒரு உதவி கேட்டான். அதாவது அவன் பழைய கேர்ள் ப்ரெண்டு ஒருத்தி புத்தக கண்காட்சிக்கு போகிறாள் என்றும் அவன் மட்டும் தனியாக போனால் அவன் மனைவி அதை கண்டுபிடித்துவிடுவாள் என்று ஆனால் உன் மீது என் மனைவி நம்பிக்கை வைத்திருப்பதால் உன் கூட சென்றால் சந்தேகம் ஏதும் கொள்ளமாட்டாள் அதனால் நீ கண்டிப்பாக புத்தக கண்காட்சிக்கு வர வேண்டும் என்று சொல்லி என்னை அழைத்து சென்றான்.



சரி அவன் ஆசையை நிறைவேற்ற அவனுடன் நானும் சென்றேன். கண்காட்சி வாயிலில் என்னை கலட்டி விட்டுவிட்டு மைச்சான்  ஒரு மூன்று மணி நேரம் இங்கே ஏதாவது செய்து கொண்டிரு நான் அதன் பின் வந்து உன்னை சந்திக்கிறேன் என்று சொல்லி மறைந்து விட்டான்.

சரி என்று நான் கண்காட்சி நடக்கும் இடத்திற்குள் நுழைந்தேன் உள்ளே நுழைந்ததும் திகைத்து போனனேன் காரணம் நண்பன் சொன்னது புத்தக கண்காட்சி ஆனால் நான் பார்த்ததோ அழகான பெண்களின் கூட்டத்தை அவர்கள் மலர்கள் போல எங்கும் விதவிதமான கலர் சேலைகளிலும் சுரிதார்களிலும் பரவி இருந்தனர். அப்ப நீங்க கேட்க கூடாது ஆண்கள் யாருமே உங்கள் கண்களில் தென்படவில்லையா என்று? ஆண்கள் தென்பட்டார்கள் அவர்கள் மலர் செடியில் உள்ள முட்களைப் போலவே என் கண்களுக்கு தெரிந்தனர். இவ்வளு பெண்களையும் ஒரே இடத்தில் இப்படி பார்த்தது எனக்கு மூச்சை நின்று விடும் போல இருந்தது ( சகோ ராஜி அண்ணேன் அப்ப உங்க மூச்சு நிட்கவில்லையா ஒரே அடியாக என்று மனதுக்குள் கேட்பது என் காதில் விழுகிறது ) சரி எவ்வளவு நேரம்தான் பட்டிக்காட்டன் மிட்டாய் கடையை வெரிச்சு பார்ப்பது போல பார்பது என்று கருதி ஒவ்வொரு ஸ்டாலாக போய் பார்க்கலாம் என்று கருதி அந்த இடத்தை விட்டு மனவிருப்பி இல்லாமல் நகர்ந்தேன்.

முதல் ஸ்டாலில் நுழைந்து சிறிது நேரம் அங்குள்ள புக்கை எல்லாம் பார்த்துவிட்டு கடைசியாக பில் போடுபவரிடம் வந்து ஐயா ஒரு 3 கிலோ நகைச்சுவை புத்தகங்களும் 2 கிலோ இலக்கிய புத்தகங்களும் 2 கிலோ கவிதை புத்தகமும் ஒரு கிலோ  சிறுகதை புத்தகங்களும் தாருங்கள் என்றேன் அவனோ என்னை  ஒரு மாதிரியாக பார்த்துவிட்டு வாட் யூ வாண்ட் சார் என்றான். அபோதுதான் எனக்கு புரிந்தது சென்னையில் இருக்கும் தமிழ் ஆட்கள் இங்கிலீசில்தான் பேசுவார்கள் நாம் தமிழில் பேசியது அவனுக்கு புரியவில்லை போல என்று மீண்டும் நான் தமிழில் சொன்னதை இங்கிலீசில்சொன்னேன் அப்போதும் அவன் ஒரு மாதிரியாக என்னைப் பார்த்து சார் நீங்க எங்கே இருந்து வருகிறீர்கள்(மெண்டல் ஹாஸ்பிடல் என்று நினைத்தானோ என்னவோ ) என்று தெரியவில்லை இங்கு புத்தகங்களை எல்லாம் கிலோ கணக்கில் விற்பனை செய்வதில்ல்லை என்றான்.

உடனே நான் நம்மை வெளியூரில் இருந்து வந்துவிட்டவன் என்று நினைத்து நம்மை ஏமாற்றுகிறான் என்று கருது தம்பி இங்கே பாரு என்னை ஏமாற்ற முயற்சிக்காதே? இன்று காலையில் கூட என் நண்பன் வீட்டில் பார்த்தேன் அவன் மனைவி பழைய புத்தகங்களை கிலோ கணக்கில்தான் பழைய பேப்பர்காரணுக்கு போட்டாள் அதை நான் பார்த்தே என்றேன் அதற்கு அவன் சார் பழய புத்தகம் பேப்பர் எல்லாம் அப்படிதான் வாங்குவாங்க ஆனால் புது புத்தகம் எல்லாம் அப்படி வீற்கமாட்டார்கள் என்று சொன்னான். அதற்கு நான் போடா நீ என்னை ஏமாற்ற பார்க்கிறாய் என்று சொல்லி அந்த ஸ்டாலை விட்டு வெளியே வந்துவிட்டேன்

அதன் பிறகு ஒரு நாலைந்து ஸ்டால் கழித்து ஒரு ஸ்டாலுக்குள் நுழைந்து தம்பி இங்கு பழைய புத்தகங்களை கொடுத்து எக்ஸேஞ் பண்ணும் ஆஃபர் உண்டா என்று கேட்டேன் அதற்கு அவன் என்னை முறைத்தான் காலையில்தான் என் நண்பனின் மனைவி பழைய நகையை ஒடுத்து புதிய நகையை வாங்கினாள் அதைப் பார்த்து நானும் அதே ஆஃபர் இங்கு உண்டா என்று கேட்டேன் அதில் என்ன தப்புங்க.

இந்த தமிழ்நாட்டில் யாரும் வெளினாட்டில் இருந்து வந்தால் இப்படிதான் ஏமாத்துறாங்க... சரி இது எல்லாம் நமக்கு ஒத்து வராது என்று கருதிய நான் மற்றவங்க எல்லாம் எப்படி புக் வாங்குகிறாங்க என்ரு பார்க்க ஆரம்பிதேன்...

முதலில் ஆண்களை வாட்சி பண்ண ஆரம்பித்தேன் அவர்கள் அந்த ஸ்டாலில் வந்து இருக்கும் பெண்களை பார்த்து கொண்டே கையில் எந்த புக் கிடைக்குதோ அதையெல்லாம் எடுத்து கொண்டிருந்தார்கள் சரி பெண்கள் என்ன பண்னுகிறார் என்று பார்த்தால் அவர்கள் மற்ற பெண்கள் அணிந்து இருக்கும் சேலைகள்  அவர்கள் அணிந்து இருக்கும் நகைகளை பார்த்தாவாறே கையில் கிடைத்த புக்குகளை எடுத்து கொண்டிருந்தனர். சரி அவர்கள் கூட வந்த சிறுவர்கள் என்ன பண்ணுகிறார்கள் என்று பார்த்தால் அவர்கள் அம்மா பசிக்கிறது ஏதாவது வாங்கி கொடுங்க என்று கேட்டுக் கொண்டிருந்தனர். அதற்கு அவர்கள் அம்மாக்கள் எல்லோரும் அறிவு பசிக்காக இங்கு பறந்து கொண்டிருந்தால் இந்த பக்கிகள் வயிற்று பசிக்காக பறக்கிறதுகள் என்று சொல்லி திட்டிக் கொண்டவாறே மற்ற பெண்களை நோட்டம் விட்டுக் கொண்டிருந்தனர்

சரி இந்த இடம் சரி வராது என்று நகர்ந்து வேற ஒரு ஸ்டால் சென்றேன். அப்போது அங்கு ஒரு இளம் பெண் பாரதியார் படம் போட்ட புத்தகங்களை வாங்கி கொண்டிருந்தார். அவரிடம் சென்று கையில் நான் எழுதி வைத்திருந்த பேப்பரை காண்பித்து இந்த புத்தகங்கள் எங்கே கிடைக்கும் என்று கேட்டேன் அதைப் பார்த்துவிட்டு எனக்கு தமிழ் படிக்க தெரியாது என்று சொன்னார். ஓ இவர் பாரதியார் புத்தகங்களை வாங்கி சிறையில் வைத்து அழகுபார்க்கும் ஆள் போலிருக்கிறது என்று நினைத்து அந்த இடத்தை விட்டு நகர்ந்தேன்

அப்போது ஒரு ப்ளாக்கரை பார்த்தேன் அவர் பெயர் ஞாபகம் வரவில்லை அவரிடம் நான் என்னை அறிமுகப்படுத்தி கொள்ளவில்லை காரணம் நாம என்ன அவ்வளவு பிரபலமா நாம பேரைச் சொன்ன அவர் தெரிஞ்சுகிறதுக்கு .அதனால் சொல்லாமல் அவர் கையில் இருந்த புத்தகங்களை பார்த்துவிட்டு அவரிடம் கேட்டேன் இதெல்லாம் மிக நல்ல புத்தகங்களா என்று கேட்டேன் அதற்கு அவர் சொன்னார் அப்படியெல்லாம் இல்லை சார் இதெல்லாம் எனது வலைத்தள நண்பர்கள் எழுதி வெளியிட்ட புக்கு இதில் இருந்த சில பாரக்களை எடுத்து என் தளத்தில் போட்டு அதை விமர்சிப்பது போல எழுதியவரை புகழ்ந்துவிடுவேன். அவ்வளவுதான் அதுக்கு அப்புறம் நான் என்ன உதவி கேட்டாலும் அவர்கள் எனக்கு செய்து தருவார்கள் அவர்களை பார்க்கும் போது எல்லாம் ஜூஸ் பஜ்ஜி நல்ல ஹோட்டலில் சாப்பாடு எல்லாம் அவர்கள் செலவில் வாங்கி தருவார்கள் என்று சொல்லி சிரித்தார்..

புக் வாங்குவதில் இப்படியெல்லாம் பலன் இருக்கிறது போல என்று நினைத்தவாறு அடுத்த ஸ்டாலுக்கு போனேன். சரக்கும் அதை மிக்ஸிங்க் செய்யும் முறைகள் என்ற புக் மிக பளபளப்பான அட்டையுடன் இருந்ததால் அதை எடுத்தேன். அப்போது அந்த ஸ்டாலில் ஒரமாக  உட்கார்ந்தவர் என்னைப் பார்த்து சிரித்தவாறே ரொம்ப நல்ல புக் சார் என்று சொல்லிவிட்டு நீங்கள் குடிப்பிங்களா என்று கேட்டார். அவரை பார்த்தது இவரை எங்கோ பார்த்த மாதிரி இருக்குதே என்று நினைக்கும் போதுதான் என் மைண்ட் முழித்து கொண்டது இவர்  எழுத்தாளர் சாரு நிவே அல்லவா என்று புரிந்தது சுதாரித்து கொண்டு  நான் குடிப்பத்தில்லை என் நண்பன் குடிப்பான் அவனுக்காக இதை வாங்கினேன் என்றேன் உடனே அவர் அப்படியா என்ற வாறு என் பெயர் பாரு  நிவேதிதா இது நான் எழுதிய புத்தகங்கள் இதையும் வாங்கி உங்கள் நண்பருக்கு கொடுத்து படிக்கச் சொல்லுங்கள் இதில் என் போன் நம்பரையும் எழுதி கையெழுத்து இட்டுள்ளேன். அதன் மூலம் என்னை தொடர்பு கொள்ளஸ் செல்லுங்கள். அவருக்கு நான் கூட்டும் வாசகர் விமர்சனக் கூட்டத்திற்கு அழைப்பு விடுவிக்கிறேன். அதுக்கு வரும் போது மட்டும் அவர் சரக்கு வாங்கி வந்தால் மட்டும் போது அதன் பிறகு குடித்துவிட்டு என்னவேணுமானாலும் பேசலாம் அதுதான் விமர்சனக் கூட்டம் படு ஜாலியாக் பேசலாம் என்றார்

அட ஆளைவிடும்ய்யா சாமி என்று நகர்ந்த போது தலையில் நச்சென்று ஏதோ கல் மாதிரி வந்து விழுந்தது என்னவென்று பதறியடித்து பார்த்தால் அது என் மனைவி என் மேல் விட்டு ஏறிந்த பூரிக்கட்டை நான் எத்தனை தடவ கத்துறது நான் கூப்டுவது கூட கேட்காமல் அப்படி என்ன பகல் கனவு என்று கத்தி மீண்டும் பூரிக்கட்டையை எடுபதற்குள் எழுந்து விட்டேன் அந்த காலத்துல சொல்லுவாங்க யானை வரும் பின்னே  மணியோசை வரும் முன்னே ஆனால் என் வீட்டிலோ மனைவி வருவாள் பின்னே பூரிக்கட்டை வரும் முன்னே என்பது போல இருக்கிறது.

மக்களே கனவில்தான் இந்தியாவிற்கு வந்தேன் அதனால்தான் உங்களை சந்திக்க முடியவில்லை. ஆனால் நிஜத்தில் வரும் போது கண்டிப்பாக முடிந்த வரை அனைவரையும் சந்திக்க முயல்கிறேன்

நீங்களும் கட்டையை தூக்குவதற்கு முன்னால் நான் உங்களிடம் இருந்து எஸ்கேப் ஆகிறேன்

டிஸ்கி : எந்த பதிவைபடித்தாலும் நான் புத்தக கண்காட்சிக்கு சென்றேன் நான் வாங்கிய புத்தகங்கள் என்று லிஸ்ட் போட்டு நம்பளை வெறுப்பு ஏத்துறாங்க அப்படி இருக்கும் போது நாமவும் கண்காட்சி பற்றி பதிவு போடலைன்னா நம்பளை பதிவுலகம் ஒதுக்கி வைத்திடும்ல அதுக்குதான் இந்த பதிவு

அன்புடன்
மதுரைத்தமிழன்



23 Jan 2014

22 comments:

  1. ஆஹா அங்கே முறைத்து முறைத்து பார்த்த படி சென்ற அந்த பதிவர் நீங்க தானா?????

    ReplyDelete
  2. முறைத்து பார்த்தது வேறு எவனாவது இருக்கும் எனது பார்வை ஒரு அப்பாவி ஏக்கத்துடன் பார்பது போல இருக்கும்

    ReplyDelete
  3. /// அவர்கள் மலர்கள் போல எங்கும் விதவிதமான /// பூரிக்கட்டை அடியை மறந்து விட்டீர்களா என்று நினைத்தேன்... முடிவில் சுபம்...! ஹிஹி...

    பலன் உட்பட தாக்குதல்(கள்)...?

    ReplyDelete
  4. ஹா... ஹா... படிக்கும் போதே தெரிஞ்சிகிட்டேன்... கலாய்க்கிறிங்கன்னு... புக் எடைக்கு எடை போடறது.. எக்சேஞ்ச் ஆபர்.. கூட்டத்துல பெண்கள் புடவை நோட்டம் விடறது.... அடடா...உங்க பாணியே தனி பாஸ்..! எப்படி இப்படி எல்லாம் கல(லாய்)க்க முடியுது? சூப்பர் ... ரசித்து சிரித்தேன்.............!

    ReplyDelete
  5. கிலோ கணக்கில் புத்தகமா!? அங்க என்ன வெங்காய்ம், வெள்ளிக்கிழங்குக்கா கொடுக்குறாங்க!

    ReplyDelete
  6. அத்தனையும் கனவா!? அதான் புத்தகத்தை எடைக் கணக்கில் கேட்டிருக்கீங்க. நேரில் வந்திருந்தா லிட்டர் கணக்குலதான் புத்தகத்தை கேட்டிருப்பீங்க

    ReplyDelete
  7. //...ஆண்கள் மலர்ச் செடியில் உள்ள முட்கள்//
    பெண்களை ரசிப்பதற்கு ஆண்கள் இடஞ்சலாக இருந்தார்களோ?!

    ReplyDelete
  8. நீங்க கனவுல வாழறவரு போலருக்கு!!

    ReplyDelete
  9. வந்ததுதான் வந்திங்க அங்குமா அம்மணியோடு ?
    கனவிலும் அவங்க பயம் இருக்கட்டும் ,இருக்கட்டும் .

    ReplyDelete
  10. எனக்கு முதல் பத்தி படிக்கும் போதே மைல்டா டௌட் .அண்ணி பூரிகட்டையால் கிளியர் பண்ணிட்டாங்க ?!

    ReplyDelete
  11. எடைக்குப் புஸ்தகம்
    பழசுக்குப் புதுசு

    (அதெல்லாம் இருக்கையில்
    புது புத்தகத்துக்கும் நிச்சயம் இருக்கலாம்தானே
    லாஜிக் மிகச் சரி )

    மிகவும் ரசித்தேன்
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  12. அன்பில் நெகிழ்ந்தேன். நன்றி நண்பா.

    ReplyDelete
  13. கண்காட்சியை ‘பெண்’ காட்சியாய்ப் பார்த்த நீயும் என்னுயிர் நண்பனே! அருகில் வா... ஹி... ஹி.... கை குலுக்குகிறேன்! ஐயையோ...! நான்கூட புத்தகக் கண்காட்சிக்குப் போனது, அங்க வாங்கின புத்தகங்கள்னு பட்டியல் எதுவும் போடலையே பிரதர்...! என்னை சங்கத்துலருந்து தள்ளி வெச்சுருவாய்ங்களோ...?

    ReplyDelete
  14. அடி வாங்கிக்கின சரி... கடிசில எதுனா புக்கு வாங்கிக்கினியா இல்லியாபா...?

    அல்லாம் போட்டாச்சு... போட்டாச்சு...

    ReplyDelete
  15. இப்படித்தான் நானும்... பதிவு என் முதல் அனுபவம் என்ற தலைப்பில் தொடர் பதிவு எழுதி எல்லோருக்கும் பல்பு கொடுத்தேன் .நீங்கள் எனக்கு கொடுத்து விட்டீர்கள் !
    பல்புக்கு நன்றி காணிக்கையாய் ஏழாவது மனிதனாய் வந்து தமிழ் மண மகுடம் சூட்டிவிட்டேன் !
    மறு மொய் செய்ய வாங்க >..http://jokkaali.blogspot.com/2014/01/blog-post_25.html....ஜாக்கெட்லே ஜன்னல் எல்லாம் தேவைதானா ?

    ReplyDelete
  16. நல்ல கனவு.....

    புத்தக கண்காட்சியில் “பார்த்த” அனுபவங்கள் - அருமை!

    ReplyDelete
  17. கனவுன்னாலும் நிஜத்தை சொன்னது போல இருந்தது! நன்றி!

    ReplyDelete
  18. பகல் கனவு பலிக்கும்னு சொல்லுவாங்க. ஆனா உங்க விஷயத்துல அடி வாங்குவது தான் பலிச்சிருக்கு.

    ReplyDelete
  19. உங்களுடைய பழைய கேர்ள் ஃப்ரெண்ட்ன்னு சொல்லாம, உங்க நண்பரோட கேர்ள் ஃப்ரெண்ட்ன்னு கூசாம பொய் சொல்றீங்க.

    ReplyDelete
  20. ஒரு 100 hp power பூரிக்கட்டையால் ( do not know whether it is technically correct )அழகான கனவு abrupt end ஆனது.

    ReplyDelete
  21. ஆரம்பம் உண்மையோ என்று தோன்ற வைத்தது! அப்புறம்தானே தெரிஞ்சுச்சு இது நம்ம மதுரைத் தமிழனின் அட கொய்யாலே! னு....உங்க சின்னம் பூரிக்கட்டை மிஸ்ஸிங்க் அப்படினு நினைச்சுட்டு இருக்கும்போதே ப்ரொம்ப்டா வந்துருச்சு!

    ரசித்தோம்!!

    த.ம

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.