Sunday, January 5, 2014



கடவுள் மாறிவிட்டார் ஆனால் மனிதர்கள் மாறவில்லை ( கடவுளையும் கலாய்ப்பான் இந்த மதுரைத்தமிழன் )



மதுரை தமிழனிடம் பேட்டி கண்ட நமது பதிவர் அபய அருணா


அபய அருணா : மதுரைத்தமிழா சில இடங்களில் மக்கள் துண்டுச் சீட்டில் தங்களது கோரிக்கைகளை எழுதி கடவுளிடம் வைக்கிறார்களே அதற்கு கடவுள் பதில் அளிப்பார் என நினைக்கிறீர்களா ?

மதுரைத்தமிழன் : துண்டுச் சீட்டில் வேண்டுதல் விடுவிப்பது அந்த காலம் ஆனால் இப்போ கடவுள் மிக மார்டனாக மாறிவிட்டார். அவருக்கு பேஸ்புக்கில் அல்லது டீவிட்டரில் மெசேஜ் அனுப்பினால் மட்டும் லைக் போடுவார் இல்லையென்றால் பதில் அளிக்க மாட்டார்

அபய அருணா : மதுரைத்தமிழா கடவுளிடம் நீங்கள் அதிகம் ஏதாவது கேட்டதுண்டா?

மதுரைத்தமிழன் : நான் கடவுள் கிட்ட ரொம்ப அதிகமா ஏதும் கேள்வி கேட்கமாட்டேன்.. காரணம் அப்புறம் அவரு.. நேர்ல வா உன் கேள்விக்கு எல்லாம் நான் பதில் சொல்றேன்னு சொல்லிட்டா.. வம்பா போயிருங்க.



அபய அருணா : கடவுள்  நல்லவங்களுக்கு   மட்டும்தான்   பரீக்ஷை  வைப்பார்  அது பற்றி என்ன சொல்ல நினைக்கிறீங்க மதுரைத்தமிழா?

மதுரைத்தமிழன் :  கடவுள் நல்லவங்களுக்கு மட்டும்தான் பரிட்சை வைப்பார். ஆனால் கெட்டவங்க கடவுளுக்கே பரிட்சை வைப்பார்கள்



அபய அருணா  :என்னால் கடவுளைப் புரிந்து கொள்ள முடியவில்லை. உங்களால் புரிந்து கொள்ள முடியகிறதா என்ன?

மதுரைத்தமிழன் : அட இது சூச்சுபீ மேட்டருங்க  நான் கடவுளை மிக நன்றாகவே புரிஞ்சு வைச்சுருக்கேன். அவர் என்னைப் போல நல்லவரை போட்டு பாப்பார். ஆனா கெட்டவங்களுக்கு என்ன வேண்டுமானல் செய்து தருவார். அவர் வாழும் போது நரகத்தை கொடுத்து நம்மை சோதித்து பார்த்து செத்த பின் இல்லாத சொர்க்கத்தில் இடம் தருவாருங்க அது போல கெட்டவர்களுக்கு இப்போது சொர்க்கத்தை கொடுத்து செத்த பின் இல்லாத நரகத்தில் இடம் கொடுப்பாராங்க


அபய அருணா : நான் கடந்து வந்த பாதை என்பது ராஜ வீதியாக இல்லாமல் கற்களும் முட்களும் நிறைந்த பாதையாக இருந்தது,கடவுள் ரொம்பவே கஷ்டங்களை எல்லாம் கொடுத்தார். அது ஏன்?

மதுரைத்தமிழன் :தப்பு உங்க மேலேதான் அவர் அண்ணா நகர் போன்ற இடங்களில் அழகான ரோடு போட்டு தந்திருக்கிறார் அங்கே எல்லாம் போகாம ஏதோ கிராமத்து பக்கம் கற்களும் முட்களும் நிறைந்த பாதைக்கு சென்று அவரை குறை சொல்லுறீங்க அது நியாமா? அவரும் கிராமத்துல நல்ல ரோடு போடணும் என்றுதான் நினைக்கிறார். ஆனால் அதற்கான பட்ஜெட்க்கு இன்னும் அப்புருவல் கிடைக்காமல் தினமும் அரசியல் தலைவர்களின் வீட்டுக்கு முன்னால் அவரும் தவம்தான் இருக்கிறார்.

அபய அருணா  : நான் கோயிலுக்கு சென்று பார்த்த போது குறைந்தது 30% பெண்கள் தன் கணவன் திருந்தவேண்டும் கணவனுக்கு நல்ல புத்தி வர வேண்டுமென்று கடவுளுக்கு துண்டுச் சீட்டு போட்டார்கள் இதைபற்றி உங்கள் கருத்து என்ன?

அப்ப 70% ஆண்கள் "என்னை போல நல்ல அப்பாவி" ஆண்களாக இருப்பார்கள் போலிருக்கிறது அல்லது 30 % பெண்களுக்கு பூரிக்கட்டை என்றால் என்னவென்று தெரியாது போலிருக்கிறது


அபய அருணா : பத்திரிகை ஜோக்குகளிலும் பதிவுலகத்திலும் மட்டுமே மனைவிகள் கணவர்களைக் கொடுமைப் படுத்துவது போன்ற ஒரு இமேஜு உலாத்திக் கொண்டிருக்கிறது. அது பற்றி உங்கள் கருத்து என்ன

மதுரைத்தமிழன் : என்ன சொல்லவரீங்க அப்ப பூரிக்கட்டையால் அடிப்பதெல்லாம் கொடுமையில் சேராதா என்ன? சரி உங்க சொல்படி கணவர்கள்தான் மனைவியை கொடுமைப்படுத்துவதாக வைத்துக் கொள்வோம் ஒகேதானா ?ஆனா எல்லா அம்மாகளும் தன் மருமகள்தான் தன் பிள்ளையை கொடுமைப்படுத்துவதாக சொல்லுகிறார்கள் கண்ணிர் வடிக்கிறார்களே அதெல்லாம் அப்ப பொய்யா


அபய அருணா எழுதிய உணர்தற்குஅரியன்  பதிவை படித்த பின் என் மனதில் ஒரு புதிய பதிவிற்கான ஐடியா உதித்தது. அதுதான் இந்த கேள்வி பதில் நகைச்சுவை பதிவு.

படிக்காதவர்களும் வலைதளங்களுக்கு  வரும் புதியவர்களும் படிக்க எனது கடவுள் பற்றிய சில நல்ல பதிவுகளும் காமெடிபதிவுகளும்
















 .அன்புடன்
மதுரைத்தமிழன்
 .


26 comments:

  1. வணக்கம்

    பதிவு சிறப்பாக உள்ளது... மேலும் தொடர எனது வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. புது வருடத்தில் உங்கள் பதிவில் படிக்கும் முதல் ஐட்டமே களிப்பூட்டுவதாக இருக்கிறதே! எப்போது இந்தியா வந்தீர்கள்?

    ReplyDelete
    Replies
    1. ஐட்டம் பல பேருக்கு களிப்பு சில பேருக்கு கசப்பு. இந்தியா வந்து 4 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டன.

      Delete
  3. நல்ல கேள்வி பதில்! :))))

    த.ம. +1

    ReplyDelete
    Replies
    1. படித்து ரசித்தற்கு நன்றி

      Delete
  4. அந்தப் 'பரிட்சை' தாங்க செம...!

    ReplyDelete
    Replies

    1. அந்த பரிட்சை நடைமுறையில் இருப்பதால் அதை நீங்கள் தினமும் பார்ப்பதால் செமையாக இருக்கிறது போல

      Delete
  5. அபயா அருணாவோட பதிவு காமடின்னா உங்க பதிவு சூப்பர் காமடி. கடவுள இப்பல்லாம் பலசரக்கு கடைக்காரன் ரேஞ்சுக்கு இறக்கிவிட்டுட்டாங்க நம்மவங்க. அங்க காசு குடுக்கணும் இங்க வெறும் சீட்டு குடுத்தா போறும்.

    ReplyDelete
    Replies
    1. பல சரகடையில் மட்டுமல்ல கோயிலிலும் காசு கொடுத்தால்தான் கடவுளை எளிதாக பார்க்க முடியும்

      Delete
  6. கேள்வியும், பதிலும் வெகு அருமை.. கடவுளை சிரிக்க வைப்பது எளிது... மிகவும் அருமை...

    ReplyDelete
    Replies
    1. உங்களின் பார்வையை கண்டு வியக்கிறேன் எத்தனை பேர் பதிவைவிட அந்த படத்தை பார்த்து ரசித்து கருத்து சொல்லுகிறார்கள் என நினைத்து வெயிட் பண்ணிணேன், நீங்கள் அதை ரசித்து கமெண்ட் சொன்னது மகிழ்ச்சியாக இருக்கிறது

      சில சமயங்களில் பதிவு காமெடியாக இருந்தால் அதற்கு இடும் படம் சிந்திக்க வைப்பதாகவும் அல்லது படம் காமெடியாக இருந்தால் பதிவில் எங்காவது சிந்திக்க வைக்கும் கருத்து இருக்கும் அதை எத்தனை பேர் கவனிக்கிறார்கள் என்பது தெரியவில்லை ஆனால் அதை நீங்கள் கவனித்து இருக்கிறீர்கள் பாராட்டுக்கள்

      Delete
  7. கடவுள் ஏன் கல்லானான் பல காமெடியான மனிதர்களாலே

    1) கடவுள் கிட்ட போய் நம்ம முதல்வர் முன்னால மீட்டிங்ல ஒருத்தர் அவங்க பேரை சொன்னார் அப்டீன்னேன். லேசா சிரிச்சார்.

    2) எங்கிட்ட இருந்த விலையில்லா மடிக்கணினியைக் காட்டி இது அரசாங்கம் கொடுத்ததுன்னேன்.. பெரிசா சிரிச்சார்.


    3) சரி ஒனக்கு என்னடா வேணும்னார். புரட்சித்தலைவி அம்மா அப்டிங்கற்தை ஹிந்தில எப்படி சொல்லணும். எங்க தலைவரு ப்ரதமர் ஆகப்போறதா பேசிக்கிறாங்க அப்டீன்னேன். இன்னும் கொஞ்கம் பலமா சிரிச்சார்

    3) அடுத்த தமிழக முதல்வர் யார்ன்னு கேட்டார். அதை அவங்க கட்சி பொதுக்குழு செயற்குழு முடிவு செய்யும்ன்னேன்.

    சிரிச்சு சிரிச்சு கல்லாயிட்டார்.


    கே.கோபாலன்

    இன்னும் சிரித்து மகிழ் : kgopaalan.blogspot.in

    ReplyDelete
    Replies
    1. கடவுளை இப்போது மக்கள் சிரிக்க வைத்து கொண்டு இருக்கிறார்கள் அதுவும் நல்லதுக்குதான்

      Delete
  8. தங்களின் இந்த கேள்வி பதிலை சிரிக்காமல் படிக்க முடியவில்லை. நல்ல வேளை நான் அலுவலகத்தில் இதை பாதிக்கவில்லை. அங்கே படித்திருந்தாலும் பரவாயில்லை போல,

    ஏனென்றால், என் மனைவி தூங்கி விட்டாள் என்று எண்ணி தங்களின் வலைப்பூவிற்குள் சென்றேன். என் கஷ்ட காலம், இந்த பதிவை படிக்கும்போதே கொஞ்சம் சத்தமாக சிரித்து விட்டேன். உடனே என் மனைவி கோபமாக எழுந்து வந்து (தூக்கத்தை கலைத்து விட்டேனாம்!!!) இந்த மடி கணினியை பார்த்த போது, அவரின் கண்களில் தங்களுடைய பூரிக்கட்டை பதில் தான் தென்பட்டது.

    இனிமேல் அந்த மதுரைத்தமிழன் வலைப்பூவை படிக்காதீர்கள். மீறிப்படித்தால், அவருக்கு விழும் பூரிக்கட்டை அடி தான் உங்களுக்கும் என்று கூறி விட்டு படுக்கப்போய் விட்டார்.

    ஐயா, நீங்கள் பூரிக்கட்டையால் அடி வாங்குவது பத்தாது என்று என்னையும் அடி வாங்க வைத்து விடுவீர்கள் போல இருக்கே, இது உங்களுக்கே நியாமா????

    ReplyDelete
    Replies

    1. என் வலைத்தளம் வருவதற்கு முன்பு நீங்கள் மனைவியிடம் அடி வாங்கியதே இல்லையா? இப்படி ஒரு நல்ல மனைவி உங்களுக்கு கிடைத்து இருக்காங்களா? அவங்களுக்கு கோயில் கட்டி கும்பிடுறதை விட்டுவிட்டு இப்படி பதிவு படிச்சுட்டு இருக்கீங்களே, நீங்க அவங்களுக்கு கோயில் கட்டுங்க... நான் உங்களுக்குகோயில் கட்டுறேன் காரணம் இப்படி நல்ல கணவர் உலகில் நீங்கள் ஒருத்தராக இருப்பதால்

      Delete
  9. தங்களின் மற்ற கடவுள் பதிவுகளை நாளை அலுவலகத்திலேயே படிக்கலாம் என்று இருக்கிறேன். அங்கே நான் வாயைக் கட்டிக்கொண்டு படிக்க வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் என் பதிவை படிப்பதற்கு ஹோட்டலில் ரூம் புக் பண்ணிதான் படிக்க வேண்டும் போல இருக்கிறது, வீட்டில் படித்தால் மனைவியிடம் அடி ஆபீஸில் படித்தால் வேலைக்கு உலை வெளியே எங்காவது ட்கார்ந்து படித்தால் லூசு என்ற பட்டம் கிடைக்கும் கொடுமைதானுங்க

      Delete
  10. கடவுளும் நிச்சயம் இதைப் படித்தால்
    சிரித்து விடுவார்
    பெண் தெய்வங்கள்தான் பாவம்
    இத்தனை வீரியம் மிக்க
    பூரிக்கட்டை ஆயுதத்தை இத்தனை நாள்
    தெரிந்து கொள்ளாமல் போனோமே என
    வருத்தம் கொள்வார்கள்

    பதிவுலகில் அருவாள் என்றால்
    எல்லோருக்கும் நாஞ்சில் மனோவும்
    பூரிக்கட்டை என்றால் தங்கள் ஞாபகமும்
    வருவதைத் தவிர்க்க இயலவில்லை

    ReplyDelete
    Replies

    1. அருவாவை தூக்குவது மனோ ஆனா என் நிலமையை பாத்தீங்களா? பூரிக்கட்டையை தூக்குவது நான் இல்லை ஹும்ம்ம்ம்ம்

      Delete
  11. நான் அமெரிக்கா வந்து தங்களை பேட்டி எடுத்ததற்கான போக்குவரத்து செலவை எப்போது, அனுப்புவீர்கள்?
    I( travelling expenses )

    ReplyDelete
    Replies
    1. என்னங்க உங்களுக்கு டிக்கெட் எடுத்தது மற்றும் அனைத்து செலவையும் நான் தான் செய்தேன் அது மட்டுமல்ல போகும் போது ஒரு கிலோ தங்கம் கூட வாங்கி உங்க கிட்டே கொடுத்து அனுப்பினேனே அதை மறந்துட்டீங்களா என்ன?

      Delete
  12. நகைச்சுவையோடு உண்மையும் கலந்த நல்லதொரு பகிர்வு! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. படித்து ரசித்தற்கு நன்றி

      Delete
  13. "ஏதோ கிராமத்து பக்கம் கற்களும் முட்களும் நிறைந்த பாதைக்கு சென்று அவரை குறை சொல்லுறீங்க அது நியாமா?"

    செம காமடி சகா..! ரசிக்கும்படியான பதிவு.

    --- விவரணம். ---

    ReplyDelete
  14. காமடியோ காமடி! கற்பனை வளம் மிக்க சூப்பர் நகைச்சுவைப் பதிவு!!!. எப்படி இப்படி உங்களால் எழுத முடிகின்றது மதுரைத் தமிழா!!!?

    கடவுளை சிரிக்க வைப்பது மிக அருமை!!

    பூரிக்கட்டை இல்லாத பதிவே அரிதாகிவிட்டது போல!!

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.