Wednesday, March 27, 2013



 

கடவுள் இப்படி பண்ணிவிட்டாரே? ( இது முந்தைய பதிவு போல சூடானது அல்ல கூலானது )


ராமதாஸ் ஐயா , விஜயகாந்த் & இப்போது கலைஞரும் காமெடி பண்ணிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இவர்களுக்கு எல்லாம் முன்னோடி நம்பளை படைத்த கடவுள்தான்.

அந்த கடவுள்தான் இப்படி பண்ணிவிட்டார்...ஹூம்ம்ம்ம்

யோவ் மதுர அப்படி என்னதான் இந்த கடவுள் பண்ணிவிட்டார் என்று நீங்கள் கத்துவது புரிகிறது.

கொஞ்சம் பொறுமை வேண்டும் மக்களே...நான் சொல்ல வேண்டுமென்றால் எனது முந்தைய பதிவில் பொங்கியவர்கள் பொங்காதவர்கள் வந்தவர்கள் வாராதவர்கள்  கருத்து சொன்னவர்கள் சொல்லதவர்கள் வந்து படித்துவிட்டு கருத்து சொல்லாமல் இங்கு என்ன நடக்கிறது என வேடிக்கை பார்த்தவர்கள் அனைவரும் மிக அமைதியாக இருங்கள் அப்பதான் என்னால் என்ன நடந்தது என்று சொல்ல முடியும்

ஹும்ம்ம்ம்
 
கடவுள் உலகத்தை படைக்கும் போது முதலில் ஆணையும் அதன் பின்னால் அவனுக்கு துணையாக பெண்ணையும் படைத்தார். அப்போது ஆணை கூப்பிட்டு அவன் காதில் சொன்னார். அழகான அடக்கமான ஆண்களின் பேச்சை கேட்க கூடிய பெண்ணை உலகத்தின் ஒவ்வொரு கார்னரிலும் ஆண்களுக்காக படைத்து நிறுத்தி வைப்பேன் அதனால் கவலைப்படாமல் இரு என்று சொல்லி அவனை அனுப்பி வைத்தார்.

அவனை அனுப்பி வைத்த கடவுள் உடனே உலகத்தை உருண்டையாக படைத்துவிட்டு கலைஞர் தமிழ் மக்களை பார்த்து சிரிப்பது போல சிரிக்கிறார் சிரிக்கிறார்  சிரித்து கொண்டே இருக்கிறார்...


சரவணா என்ன கொடுமைடா இது கடவுளும் ஆண்களின் வாழ்க்கையில் விளையாடிக் கொண்டு இருக்கிறார்

அன்புடன்
மதுரைதமிழன்.

டிஸ்கி ; இந்த பதிவு கடவுளை குறை சொல்லி எழுதப்பட்டது அல்ல அதிலும் இந்திய கடவுளை குறிப்பிடவில்லை. இந்த பதிவு நகைச்சுவைக்காகவே எழுதப்பட்டது என்பதை உறுதிபடுத்துகிறேன்.. உஷ்ஷ்ஷ்ஷ்ஷ் அப்பாடா....

11 comments:

  1. யாரங்கே யாரோ ஒருத்தன் இன்னும் டாஸ்மாக் பக்கம் போகாம இருக்கண்டோய் அவன அமுக்கு முதல்ல டாஸ்மாக் நிறுவனம் என்னய்யா பண்ணுது

    யாரங்கே டாஸ்மாக் புதிய கிளைகள் உடனே துவங்குங்கள் தெளியத் தெளிய ஊத்திக் கொடுங்கள் யார்கிட்ட எங்க கிட்டேயாவா

    யாரங்கே மிட்னைட்டு படங்களை டி வி சேனல் எல்லாம் இன்று முதல் பகலிலும் போடச் சொல்லுங்கள் இன்று முதல் A சர்டிபிகேட் படங்களுக்கு வரியில்லை

    ஆமாடி எப்படியோ இன்னைக்கி தப்பிச்சாச்சு அப்பாடி கொஞ்சம் கேப்பு விட்டா என்னமா யோசிக்கிறாங்க உடக்கூடாது உட்டா அப்புறம் நாம எங்க போறது நம்ப பிழைப்பு என்னாகிறது



    --
    www.vitrustu.blogspot.com
    VOICE OF INDIAN
    256 TVK Qts TVK Nagar,
    Sembiyam,
    Perambur,
    Chennai 600019

    ReplyDelete
  2. நானும் ஜெயிலுக்கு போறேன் பார்த்துக்குங்க நானும் ரவுடிதான்

    ReplyDelete
  3. ஹா... ஹா... ரசித்தேன்...

    படிக்கும் காலத்தில் (திண்டுக்கல் அப்போது மதுரை மாவட்டத்தில் இருக்கிறது) நான் மதுரைக்காரன் என்று வீராப்பாக அலைந்ததுண்டு... "அன்புடன் மதுரைத்தமிழன்" - இதனால் தான் சின்ன கோபம்... அட நம்மூர்க்காரர்... (அந்த பதிவில் எல்லாம் சொல்லி விட்டு "இப்படி எல்லாம் இருக்கிறதே... நம் நாடு எப்படி முன்னேறும்...?" என்று ஒரு வரி குறிப்பிடாதது)

    வேண்டாம்... பழசே வேண்டாம்... (பிரிந்த குடும்பங்கள் இணையும் போது மீண்டும் பழசை யாராவது நினைத்தால் கூட, மறுபடியும் நிரந்தர பிரிவு வரும்... அது வேறு சொந்தக்கதை)

    ஏனென்றால் கிட்டத்தட்ட 3 மாதங்களுக்குப் பின் பதிவு (சந்தோசப்படும் பெயர் எது...?) எழுத வைத்ததே மதுரையில் நண்பனின் சந்திப்பு தான்... அதுவும் 35 வருடங்கள் கழித்து... அவனுடன் பலவற்றை உரிமையுடன் விவாதித்தாலும் சிலவற்றை மட்டும் தான் பதிவில் சொன்னேன்... அப்படி உங்களையும் நினைக்காதது... எனது தள முகப்பில் "வாருங்கள் நண்பர்களாவோம்" என்ற வரிகள்... யோசித்துப் பார்த்தால்... இதுவரை எழுதிய பதிவுகளுக்கு ஒரு அர்த்தம் வேண்டுமென்றால்...

    தவறு என் (புரிந்து கொள்ளாமல் அவசர கோபம்) மீது தான்... மன்னிக்கவும்... (வருண் அவர்களுக்கும்)

    ஊருக்கு வாங்க... ஜமாச்சிடுவோம்... நன்றி... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. அது சரி அப்ப எங்களை கழட்டி விட்டிடிங்க பாத்திங்களா தனபாலன் சார் ,

      Delete
    2. ஒகே உங்களுக்கும் பிரியாணி கண்டிப்பாக உண்டு

      Delete
    3. தனபாலன் புரிந்து கொண்டாலே போதுமப்பா..அதற்காக மன்னிப்பு என்று பெரும் வார்தைகளை உபயோகிக்க வேண்டாம் நன்றி

      Delete
  4. நம்மளை வச்சி காமெடி கீமடி பண்ணிட்டாரோ?
    தனபாலன் அவர்களால் நீண்ட நேரம் கூட கோபத்துடன் இருக்க முடியாது. குறள்வழி நடப்பவர் என்பதை நிருபித்துவிட்டார்.மதுரைத் தமிழனின் கோபமும் அப்படியே!உடனே மறந்து விடுபவர் என்பதை வேறொரு பதிவில் கண்டிருக்கிறேன்.
    நன்றி

    ReplyDelete
    Replies
    1. எங்கள் இருவரையும் புரிந்து கொண்டதற்கு நன்றி... எங்களிடையே கருத்து பறிமாற்றங்களினால் ஏற்பட்ட உஷ்ணமே தவிர தனிப்பட்ட முறையில் எந்த வித விதர்ப்பமோ கோபமோ இல்லை. தனபாலனை ஒரு நல்ல பதிவாளராகவும் நல்ல மனிதராகவும் உள்ளவர் என்பதை பதிவுகளை படிப்பதின் மூலம் அறிந்து இருக்கிறேன் ஆனால் எங்கள் இருவரின் இந்த வாதங்களுக்கு பிறகு நான் அவரை இன்னும் நெருங்கி அவர் எனது நல்ல நண்பரில் ஒருவராக மாறிவிட்டார் போலத்தான் உணர்கிறேன்


      எனக்கு இந்த உலகத்தில் எதிரிகள் என்று யாரும் கிடையாது ஒரே ஒருத்தரை தவிர.. அந்த எதிரி என் மனைவிதான் அது எல்லா நேரத்திலும் அல்ல அது அவள் பூரி கட்டை கையில் எடுக்கும் போது மட்டும்தான்

      Delete
    2. அங்கேயும் அப்படித்தானே...? இங்கே உதவி செய்ய கூட என் பொண்ணும்... ஹிஹி...

      வைகோ ஐயா, மஞ்சுசுபாஷினி அம்மா - இவர்களின் பின்னூட்டத்தை ரசிக்கலாம்...

      ராமானுசம் ஐயா, ரமணி ஐயா பின்னோட்டம் - ஊக்க மருந்து...

      சிலரை மட்டும் தான் குறிப்பிட்டுள்ளேன்... எதோ சொல்லனும்னு நினைச்சேன்...

      பல திரட்டிகள் வருவதில்லை... சிலது மால்வேர் பரப்புகின்றன...

      நிறைய நண்பர்கள், தங்கள் தளத்தில் எடுக்க வேண்டும் என்று ஒரு சிறு வேலை கொடுத்துள்ளார்கள்... (விவரங்களுக்கு : http://facebook.com/dindiguldhanabalan) இங்கு அதிக மின்வெட்டு... அதனால் ஜூட்...

      Delete
  5. சர்தான் கடவுளையும் விடகூடாதுன்னு முடிவு பண்ணியாச்சி

    ReplyDelete
  6. மிகவும் ரசித்தோம்! ரசிக்கின்றோம்.!!!!

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.