Friday, March 15, 2013






 பதிவாளர்கள் பதிவுகள் எழுதுவதை குறைத்து கொண்டு ஏன் பேஸ்புக் பக்கம் நழுவுகிறார்கள்?


பதிவுகளை படிக்க வந்தவர்கள் காலப் போக்கில் நாமும் ஏன் பதிவாளராகி பதிவுகளை எழுதி வெளியிடக் கூடாது என்று நினைத்து பொழுது போக்குக்காக பதிவுகளை வெளியிட ஆரம்பிக்கிறார்கள். அதன் மூலம் அவர்கள் வலையுலகம் மூலம் பலருக்கும் அறிமுகமாகின்றனர். அவர்களின் இணைய வட்டாரம் அதிகரிக்க ஆர்ம்பிக்கிறது. அதனால் அவர்களுக்கு கமெண்டுகளும் ஒட்டுக்களும்(மொய் வைக்கும் பழக்கம் மூலம் ) அதிகரிக்கிறது. இந்த நிலை வர குறைந்தது ஒரு வருடங்களுக்கும் மேலாகிறது.


இந்த நிலையில்தான் அவர்கள் தாங்கள் எழுதியதையும் அதற்கு வந்த ஒட்டுகளையும் கமெண்டுகளையும் கூர்ந்து கவனிக்கும் போது தான் அவர்கள் மனதிற்கு தெரிகிறது. வழக்கமாக ஒட்டுபோடுபவர்களும் கமெண்ட் எழுதுபவர்களுமே மீண்டும் மீண்டும் வந்து போவது தெரிகிறது. ஆரம்ப காலத்தில் சிறிது சிறிதாக வந்து சேர்பவர்களை பார்த்து சந்தோஷம் அடைந்த மனம் அது போல சேர்பவர்களின் எண்ணிக்கை குறைய ஆரம்பிக்கும் போது சந்தோஷமு குறைகிறது இந்த சந்தோஷம் அவர்களுக்கு ஒரு போதை மருந்து போல....அதுமட்டுமல்லாமல் இந்த பதிவாளர்கள் மாங்க் மாங்கு என்று உட்கார்ந்து மிக தரமான செய்தியை தர வேண்டும் என்று கஷ்டப்பட்டு சில பதிவுகளை எழுதி இருப்பார்கள் ஆனால் அப்படி எழுதும் பதிவுகளுக்கு வரும் ஹிட்ஸ் மிகவும் குறைவாக இருப்பது மட்டுமல்லாமல் வழக்கமாக வருபவர்கள் கூட வந்து ஒட்டும் கமெண்டும் போட்டு இருக்கமாட்டார்கள்.

இணையத்தில் பதிவு தரமான பதிவு எழுதுவது என்பதற்கு நிறைய செய்திகளை படிக்க வேண்டும் உலகத்தை கண் திறந்து மட்டும் பார்க்க மட்டுமல்ல மனத்தையும் செவியையும் எப்போதும் திறந்து வைத்து இருந்தால் மட்டும்மே முடியும் அப்படி செய்து எழுது இவர்களுக்கு எந்த விதமான Recognition ம் கிடைக்காத பட்சத்தில் இவர்களின் மனதில் ஒரு வித அயற்சி தோன்றுகிறது,

ஆனாலும் அதுவரை இவர்களுக்கு கமெண்ட் மற்றும் ஒட்டுக்காளால் கிடைத்த சந்தோஷத்தை இழக்க விரும்பாமல் இருக்க அவர்கள் பேஸ்புக் பக்கம் நழுவுகிறார்கள் காரணம் பதிவுகள் எழுதும் போது அது சொந்தமாக எழுதியதாக இருக்க வேண்டும் அதற்கு நேரமும் செலவழிக்க வேண்டும் அல்லது வேறு யாரவது எழுதியதை பதிவாக போட்டு காப்பி பேஸ்ட் பண்ணினால் மானம்  சந்திக்கு வந்துவிடும்.

ஆனால் மானம் சந்திக்கு வராமலும், தானும் சொந்தமாக பதிவுகள் எழுதாமலும் அடுத்தவன் பதிவை எடுத்து அது கவிதையாக இருக்கட்டும் கதையாக அல்லது கட்டுரையாக இருக்கட்டும் அதை  தமது பேஸ்புக்கில் ஸ்டேட்டஸாக போட்டுவிட்டால்( ஒரு சிலர்தான் அது யார் எழுதியது அல்லது எந்த வலைத்தளத்தில் இருந்து எடுத்தது என்று சொல்லி போடுகிறார்கள் ) எந்த பிரச்சனையும் இல்லாமல் லைக்குகளும் பாராட்டுகளும் ஆட்டோமேட்டிக்காக வந்து விடும்.


இந்த காரணத்துக்காகவே பலர் பதிவுகளை குறைத்துவிட்டு அப்படியே பேஸ்புக் பக்கம் நழுவுகிறார்கள்.

அடுத்தவன் உழைப்பில் உட்கார்ந்து சாப்பிடும் பன்னாடைகள் போல அடுத்தவன் படைப்புகளை தங்கள் படைப்பாக பேஸ்புக்கில் வெளியிடும் பன்னாடைகள் பலர் இருக்கின்றனர் இப்போது. இப்படி  ஸ்டேட்டஸ் போடுவர்களுக்கும்  லைக்கு போட்டும் கருத்து சொல்லி பாராட்டு தெரிவிக்கும் அறிவு ஜீவி ஜால்ராக்களும் உண்டு.

சில சமயங்களில் இப்படி அடுத்தவன் கருத்தை தன் கருத்தாக போடுபவர்களும் சரி அதற்கு லைக் போடுபவர்களும் சரி இந்திய சட்டத்தில் கீழ் மாட்டி ஜெயிலுக்கு செல்லுகிறாரகள் என்பதை அறிந்து கொள்ளலாம் (சின்மாயி கேஸ், சிதம்பரம் மகனின் கேஸ், பால்தக்காரே பற்றிய கேஸ், இப்போது கேரளா மந்திரியின் கேஸ் இப்படி கதைகள் தொடர்கின்றன.)

அடுத்தவன் கருத்தை எடுத்து போட்டுவிட்டு தன்னை சமுக நலனில் அக்கறை உள்ளவனாக காட்டி அரசியல் தலைவர்களில் இருந்து எல்லோரையும் கிண்டல் பண்ணுவார்கள். இவர்களின் செயல் அரசியல்வாதிகளின் செயல்களை விட மிக கேவலமாகத்தான் இருக்கிறது.


முக்கியமாக சுதந்திர இந்தியாவில் சமுகவலைத்தலம் மூலம் சொல்லும் கருத்துகளுக்கு சுதந்திரம் இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது அதனால் நமது சொந்த கருத்துகளை எண்ணங்களை வலைத்தளம் மூலம் பதிவிடுவதன் மூலம் பல பிரச்சனைகளை தவிர்க்கலாம்.

என்ன மக்களை நான் சொன்னது சரிதானே? நான் சொன்னதில் ஏதும் தவறு இருக்கிறதா?

அன்புடன்
உங்கள் மதுரைத்தமிழன்

32 comments:

  1. அவரவர்களின் விருப்பம்...

    பகிர்வை இணைக்கும் போது செல்வதோடு சரி... மீறினால் நம்மை இழுத்து விடுகிறது..........................
    .........................................................................
    .........................................................................வதனப்புத்தகம்-(நன்றி... பாலகணேஷ் அவர்களுக்கு...)

    ReplyDelete
    Replies
    1. பேஸ்புக்கை உபயோகப்படுத்துவது தவறு இல்லை அதை மிக கவனமாக கையாள வேண்டும். அதனால் வேலை இழந்தோர் பல பேர், ஜெயிலுக்கு செல்வோர் பல பேர்...வாழ்க்கையை தொலைத்தோர் பல பேர்.

      Delete
  2. அண்ணே இப்படி தாளிச்சு இருக்குறத பார்த்த நீங்களும் யாராலாவது பாதிப்பு அடைஞ்சு இருகின்களோ

    ReplyDelete
    Replies
    1. பேஸ்புக்காலோ அல்லது வலைத்தளத்தாலோ எனக்கு எந்த வித பாதிப்பும் இல்லை சில நேரங்களில் அரசியல் அல்லது நடிகர் ரஜினியை பற்றி கருத்து சொல்லி பதிவுகள் போடும் மிரட்டல் வரும். ஆனால் அந்த மிரட்டல்களுக்கு எல்லாம் பயப்படுபவன் நான் அல்ல. எனது கருத்தை மற்றவர்கள் எடுத்து உபயோகப்படுத்தினால் மிகவும் சந்தோஷமே... காரணம் நம்ம கருத்தையும் நாலுபேர் சேர் செய்க்கிறார்களே என்று சிரிப்புதான் வரும்

      Delete
  3. Siru asowkariyathyhinaal pathivukal podamudiyavillai veru kaaranamillai vaazhthukkaludan..........

    ReplyDelete
    Replies

    1. நான் மதிக்கும் மனிதர்களில் நீங்களும் ஒருவர் சார். இது நான் என்ன பதிவு போடலாம் என்று நினைத்தபோது மனதில் தோன்றியது அவ்வளவுதான். நான் யாரையும் தனிப்பட்ட முறையில் குறை சொல்லவில்லை நான் பொதுவாக அடுத்தவர்களின் கருத்தை எடுத்து தம் கருத்தாக போடுகிறார்கள் என்றுதான் சொல்லி இருக்கிறேன். உங்கள் படைப்புளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் காரணம் அது எனக்கு தரமாக இருப்பதால் நீங்கள் செளகிறியம் ஆனா பின் மெதுவாக எழுதவும் வாழ்க வளமுடன்

      Delete
  4. ஒரு தவறும் இல்லை . அப்பட்டமான , உண்மையான பதிவு ..... நீங்கள் உண்மைகள் ....

    ReplyDelete
    Replies
    1. நான் சொல்ல வந்த கருத்தை புரிந்து பதில் அளித்தற்கு நன்றி

      Delete
  5. இப்படிப் பட்டவர்களை பதிவாளர்கள் என கௌரவப் படுத்த வேண்டியதில்லை ,காபியாளர்கள் என்றே அழைக்கலாம் !

    ReplyDelete
    Replies
    1. பதிவை திருடி பதிவு போடுபவர்களை நீங்கள் சொல்லிய படி அழைக்கலாம். ஆனால் அதை தம் சொந்த கருத்தாக பேஸ்புக்கில் அறிமுகம் செய்பவர்களை தலையில் சரக்கு இல்லாதவர்கள் என்று அழைக்கலாமே?

      Delete
  6. Replies

    1. கருத்துக்கும் ஆதரவிர்கும் நன்றி

      Delete
  7. உண்மைதான் நண்பரே. கூறுவதில் தவறொன்றுமில்லை. ஆனால் இதற்காக தாங்கள் இப்படி உணர்ச்சிவசப்பட்டு பொங்கியெழத் தேவையில்லை. ஏனெனில் இது சர்வசாதரணமாக நடக்கக்கூடிய விஷயம். அவரவர் நினைத்தால் மாற்றிக்கொள்ளலாம்.

    ReplyDelete
    Replies
    1. நான் பொங்கி எழுந்தவிட்டேன் என்று நீங்கள் சொல்லவது ஏதோ நான் பாதிக்கப்பட்டேன் என்பது போல இருக்கிறது. பதிவு கொஞ்சம் படிப்பவர்களுக்கு சூடாக இருக்க வேண்டும் என்றுதான் அப்படி எழுதியுள்ளேன்

      Delete
  8. சரியாகத்தான் சொன்னீங்க. நிறைய பதிவர்கள் பேஸ்புக் பக்கத்தில் தான் பார்க்க முடிகிறது. எதனால் என்று தெரியவில்லை ?

    ReplyDelete
    Replies
    1. பலர் பேஸ்புக்கிற்கு போவது சொந்தமாக எழுதி அதில் பதிய வேண்டியதில்லை என்பதால்தான்

      Delete
  9. மனதில் உள்ளதை அப்படியே எழுதியுள்ளீர்கள் மிக அருமையான குற்றச்சாட்டுகள் இதற்கெல்லாம் கிடைக்குமா என்றால் கிடைக்காது என்றுதான் சொல்வேன். காரணம் நாளுக்கு நாள் பல சமூகத்தளங்கள் புதிய புதிய யுத்திகளோடு வந்தவண்ணம் இருக்கிறது. மக்கள் எப்பொழுதும் புதியதையே விரும்புகிறார்கள் என்பதே உண்மை!

    உங்கள் பதிவை படித்துவிட்டு நானும் கொஞ்சம் எழுதிருக்கேன் என வலைப்பதிவில் உங்களுடைய பெயரையும் பதிவையும் சுட்டிக்காட்டியுள்ளேன். நேரம் கிடைத்தால் வந்து படிக்கவும்.http://semmalai.blogspot.com/2013/03/blog-post_15.html

    ReplyDelete
    Replies
    1. உங்கள் தளம் சென்று அதற்கு கீழ் கண்ட கமெண்டை பதிவு செய்துள்ளேன்

      ///வந்தவர்களே வருகிறார்கள் கருத்து சொல்கிறார்கள், புதியதாக யாரும் வருவதில்லை என்பதெல்லாம் அவர்கள் உண்மைகள் அவர்களின் குற்றச்சாட்டு/ஆதங்கம் மனம் உடைந்து எழுதியிருக்கிறார். ஒருவிசயம் உண்மை சார் வலைப்பதிவு எழுதுபவர்களிலும் எழுதுபவர்கள் எல்லோரும் மற்றவர்களின் பதிவுகளைப் படிப்பதில்லை!, படிப்பவர்கள் எல்லோரும் கருத்து சொல்வதுவுமில்லை! கருத்துக்களுக்காகவும் ஓட்டுக்காகவும் பதிவு எழுதவேண்டாம். என்ன சொல்ல நினைக்கிறீர்களோ அதை சொல்லுங்கள். படிப்பவர்கள் பயனடையட்டும், அல்லாதவர்கள் நஷ்டமடையட்டும் இதனால் நமக்கு என்ன நஷ்டம். ///

      சார் நான் ஒன்றும் மனம் உடைந்து எழுதவில்லை.. என்ன நடக்கிறது என்பதைதான் எழுதி இருக்கிறேன். நான் "எனது பொழுது போக்குகாவே" எழுதுகிறேன் நான் ஒட்ட்டுக்காகவும் கருத்துக்காவும் எழுதவில்லை நண்பரே. அது போல சமுகத்தை திருத்தவும் எழுதவில்லை. இதை நான் பல இடங்களில் மிக அழுத்தமாக சொல்லி இருக்கிறேன் இதை எனது பதிவை தொடர்ந்து படித்துபர்வர்களுக்கு நன்கு தெரியும்

      Delete
  10. கண்ணைக் கட்டுகிறது உண்மையின் வெளிச்சம் !.......
    அருமையான குற்றச்சாட்டுகள் தான் வாழ்த்துக்கள் சகோதரா .
    யாராவது ஒரு சிலர் திருந்தினாலே போதும் இந்தப் பகிர்வைப்
    பார்ப்பதன் மூலம் .மிக்க நன்றி பகிர்வுக்கு .

    ReplyDelete
    Replies
    1. திருந்த வேண்டாம் நான் படித்த கருத்து இவரால் சொல்லப்பட்டது அது எனக்கும் பிடித்திருக்கிறது அதனால் அதை சேர் செய்கிறேன் என்று சொன்னால் அது நன்றாக இருக்கும்தானே

      Delete
  11. உங்கள் கருத்துதான் என்னுடைய கருத்தும். என்னால் சமூக வலைத்தளங்களில் ஈடுபடமுடியவில்லை. அதனால் இங்கேயே இருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் பேராசிரியர் உங்களால் முடியாடது ஏதுமில்லை.

      Delete
  12. அருமையான கருத்துக்கள்! நான் இப்போதுதான் முகநூலில் நுழைந்து பதிவிட ஆரம்பித்துள்ளேன்! எச்சரிக்கையாக இருக்கிறேன்! நன்றி!

    ReplyDelete
  13. நானும் பேருக்குத்தான் பேஸ் புக் வைத்திருக்கிறேன். அதில் எனக்கு ஆர்வமில்லை. நீங்கள் சொன்னவை எல்லாமே உண்மையான வார்த்தைகள்.

    ReplyDelete
  14. பெரும்பாலும் முகநூல்களில் காலை வணக்கம் மாலை வணக்கம் போன்ற செய்திகள்தான் காணப்படுகின்றன.பலர் படிக்கமலேதான் லைக் போடுகிறார்கள்.என்னதான் ஆயிரம் வசதிகள் இருந்தாலும் படைப்பாளிகளின் களமாக முக நூல் அமையவில்லை என்றே கருதுகிறேன்.வீட்டுக்கு வருபவர்களிடம் கல்யாண ஆல்பம் பார்க்க சொல்வது போல் விதம் விதமாக புகைப்படங்கள்தான் பகிரப் படுகின்றன. எப்போதேனும் நல்ல விஷயங்கள் காணப்படுகின்றன. எவ்வித படைப்பாற்றல் திறமயும் இல்லாதவர்களும் முக நூலைப் பயன்படுத்த முடியும் என்பதே அதன் பக்கம் அதிகம் பேர் செல்ல காரணமாக அமைகிறது என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  15. நீங்கள் சொன்னதெல்லாம் உண்மைதான் “உண்மைகள்“
    பகிர்விற்கு நன்றி.

    ReplyDelete
  16. ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்!உண்மைதான் போலும்!

    ReplyDelete
  17. உரத்த உண்மைகள், சம்பந்தப்பட்டவர்களுக்கு உறை(ரை)க்க வேண்டும்

    ReplyDelete
  18. உண்மை தான்..முகநூலில் copy paste மன்னர்கள் அதிகம்..comment என்ற பெயரில் செய்யும் அநியாயங்களும் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது.வலைப்பதிவர் எப்போது விரக்தி அடைகிறார் என்பதும் உண்மை..சமூக நிகழ்வுகளை எழுதுகையில் பெரிதாக எவரும் கண்டு கொள்வதில்லை..

    ReplyDelete
  19. ஒருவித அயர்ச்சி ஏற்படுகிறது என்பது உண்மை தான் சார்... என்ன ஒன்று முகபுத்தகம் ஒத்த சிந்தனை இருப்பவர்கள் உள்ள தளம் அல்ல...

    ஆனால் வலைத்தளம் மாங்கு மாங்கு என்று எழுதக் கூடிய ஒத்த கருத்துக்கள் உடையவர்கள் இருப்பவர்கள் தளம்...

    அயர்ச்சி ஏற்படும் பொழுது நமக்கு நாமே தட்டியோ குட்டியோ கொடுத்துக்க கொள்ள வேண்டியது தான்

    ReplyDelete
  20. உண்மை சொன்னீர்கள்

    ReplyDelete
  21. வலியவனுக்கு வலைத்தளம் இருப்பதுபோல் முடியாதவனுக்கு முகனூல்

    நம்ம கருத்த நாலுபேர் பரப்பினால் சந்தோசப்படனும் அதுதான் உங்கள் படைப்பிற்கு கிடைத்த வெற்றி

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.