அமெரிக்காவில்
வாழ்வது என்பது கேவலமா என்ன?
நேற்று
என் வலைதளத்தில் அப்படி என்ன அமெரிக்கர்களுக்கு இல்லாத சுதந்திரம் இந்தியர்களுக்குஇருக்கிறது? என்ற பதிவை போட்டு இருந்தேன் அதில் கிழ்கண்டவாறு
1. நீங்கள் நினைத்த இடத்தில் தெருவில் எங்க வேணா மூத்திரம் மலம் கழிக்கலாம்
2. குப்பைகளை எங்க வேணுமுனா தூக்கி ஏறியலாம் 3. ஆசிட்டை யாரு வேணுமுனா வாங்கி யாருமேலேயும் வீசலாம். என்பது போன்ற இந்தியாவில் நடப்பதை சொல்லி இருந்தேன். அப்படி நான் சொன்னது இந்தியாவை எந்த விதத்திலும் மட்டம் தட்ட வேண்டும் என்று நினைத்து
சொன்னதில்லை.
எப்படி
தமிழகத்தில் ஒரு குக்கிராமத்தில் படித்து வளர்ந்தவன், பட்டணம் வந்து உழைத்து சம்பாதித்து, ஒரு நல்ல இடத்தில்
வாழ்ந்து வரும் போதும் தான் வாழ்ந்து வந்த கிராமத்தை மீண்டும் பார்க்கும் போது,
அங்கு நடப்பவைகளை அறிந்து மனம் வருந்தி நமது கிராமம் இப்படி இருந்தால்
நன்றாக இருக்கும் என்று சொன்னால் அந்த கிராமத்தில் தற்போது வசிக்கும் விபரம் உள்ளவன்
என்றால் ஆமாம் அண்ணே
நமது கிராமம் மோசமாகத்தான் இருக்கிறது ஆனால் அதை மாற்ற நாங்கள் முயற்சித்து கொண்டிருக்கிறோம்
ஆனால் அது எவ்வளவு எளிதல்ல ஆனால் காலப்போக்கில் மாறிவிடும் என்ற நம்பிக்கை இருக்கிறது
என சொல்வான். அதே நேரத்தில் விபரம் இல்லாத ஆளாக இருக்கும் படசத்தில்
ஆமாம் இந்த துரை பட்டணம் போயி வசதியா வாழ்கிறார் அல்லவா அதனால் நாம் வாழ்ந்த கிராமத்தை
குறை சொல்லத் தொடங்கிட்டார் என்று வசவு பாடத் தொடங்கி விடுவார். எப்படி கிராமத்தில் படித்தவன் பட்டணத்திற்கு வந்ததை போல இந்தியாவில் இருந்து
அமெரிக்கா வந்த நான் இங்குள்ள பல நல்ல செயல்களை பார்த்து நாம் இந்தியாவும் இதுபோல இருந்தால்
எவ்வளவு நன்றாக இருக்கும் என்று ஆதங்கத்தில் சொன்னால் நம்மை வரூண் அவர்கள் சொன்ன மாதிரி
தேசத் துரோகியா சித்திரிக்கிறார்கள் குண்டுச் சட்டியில் குதிரை ஓட்டும் சிலர்.
அது மட்டுமல்லாமல் அவர்கள்தான் நம் பாரத தேசத்தை தங்கள் தோளில் தூக்கி
காப்பது போல ஒரு பில்டப்பும் தருகிறார்கள் சிலர்
அது
போலத்தான் நேற்று நான் இட்ட பதிவை அறை குறையாக படித்த பதிவர் ஒருவர் அதற்காக எல்லோரும்
கேடுகெட்ட அமெரிக்காவிற்கா வர முடியும்? வாழ முடியும் என்று
விபரம் இல்லாத கிராமத்தன் கூறுவது போல கருத்து இட்டு சென்றுள்ளார். இதற்கு அவரை குறை நான் கூற முடியாது. காரணம் அவர் பதிவுலகத்தின்
பின்னுட்டபுலி பதிவின் தலைப்பை படித்தே கருத்து கூறும் வல்லமை படைத்தவர். நாமெல்லாம் ஒரு பதிவை படித்தால் படித்து முடித்தவுடன் அது நன்றாக இருப்பதாக
தோன்றினால் உடனே நன்றாக இருக்கிறது என்றும் நேரம் அதிகம் கிடைத்தால் அது எதனால் நன்றாக
இருக்கிறது என்றும் அல்லது பதிவில் சொல்லி இருக்கும் கருத்துகள் சரி இல்லை என்று தோன்றும் போது மிகவும் நன்றாக்
யோசித்து கருத்து கூறுவோம்.. ஆனால் இவரோ தலைப்பை பார்த்தவுடன்
அவசர அவசரமாக கருத்தை கூறி விட்டு அடுத்தவன் எவனாவது பதிவு இடும்போது அதற்கு மற்றவர்கள்
கருத்து சொல்லவதற்குள் தான் கருத்து சொல்ல ஒடிவிடுவார் இன்னும் நிறைய சொல்லி கொண்டே
போகலாம் ஆனால் இதோடு நிறுத்தி இன்றைய பதிவின் தலைப்பிற்குள் நான் செல்வோம்.
இன்றைய தலைப்பிற்கு உதவி செய்தவர் நமது பின்னூட்ட புலிதான் அவருக்கு
எனது நன்றிகள்
அமெரிக்காவில்
வாழ்வது என்பது கேவலமா என்ன? இதை படித்த பின் நன்கு யோசித்து பதில் சொல்லுங்கள்
மக்கள் நலனிலும் நாட்டு நலனிலும் அக்கறையுள்ள எந்த ஒரு அரசும் செய்யக் கூடிய முறையான துணிவான
செயல் என்பது தன் மக்களை தீவிரவாத அச்சுறுத்தலால், அல்லது மத மற்றும் இனவெறியால் கொன்றவர்கள்
உலகின் எந்தவொரு மூலையில் இருந்தாலும் அவர்களைக் கைது செய்து விசாரித்துத்
தண்டனை வழங்குவதும் அல்லது கைது செய்ய முடியாத நேரத்தில் அவர்களைக் கொன்று அது போன்ற தீவிரவாதச்
செயல்கள் இனியும் நடவாதவாறு உறுதி செய்வதோ
மட்டுமே ஆகும்
. முதுகெலும்பு உள்ள எந்தவொரு தலைவனும் அதைத்தான் செய்வான்.அமெரிக்க
தலைவர்களும் அதைத்தான் செய்து கொண்டிருக்கிறார்கள்.
அமெரிக்காவின் ட்வின் டவர் தாக்குதலுக்குக் காரணமானவர்களையும் ,
பின்லாடனையும் பாகிஸ்தானுக்குள் புகுந்து கொன்ற
அமெரிக்காவின் நடவடிக்கை இத்தகைய துணிவான நடவடிக்கைக்கான சமீபகால
உதாரணம்.
ஆனால் இந்தியாவிலோ நடப்பதே வேற. இந்திய
தலைவர்களுக்கு அதிலும் அதிக காலம் ஆண்ட காங்கிரஸ் தலைவர்களுக்கு நாட்டின்
இறையாண்மை மற்றும் பாதுகாப்பை விட, மக்களின் உயிரை விட, தீவிரவாதிகளால்
கொடூரமாகக் கொல்லப் பட்ட மனித உயிர்களுக்கான நியாயத்தை விட, இந்த இந்திய அரசுக்கு அவர்களது ஓட்டு
மட்டுமே குறியாகிப் போகி மிகவும் கேவலமான
நிலையில் இன்று இந்தியாவில் நீதி
கேலிக்கு உரியதாக்கப்பட்டுவிட்டது. இது நேரு காலத்தில் ஆரம்பித்து மன்மோகன் சிங் ஆட்சி வரை இந்த அவல நிலைத்
தொடர்ந்து வருகிறது இனியும் அது தொடரும். நமது பகைவர்களைக் கண்டு பிடித்து அழிக்கக் கூடிய, உலக அரங்கில் அவர்களின்
கொடுமைகளை நிரூபித்து நியாயம் வழங்க முடியாத, விரும்பாத ஆட்சிகளே இந்தியாவுக்குத்
தொடர்ந்து அமைகிறது.
இது இந்தியாவின் மீதான ஏதாவது ஒரு சாபமாக, சாபக்கேடாக
மட்டுமே இருக்க முடியும்.இந்தியா மீண்டும் மீண்டும் தன் மீது போர்தொடுத்த
பயங்கரவாதிகளையும் அதற்கு உறுதுணையாக இருக்கும் நாடுகளையும் என்ன செய்தது? நம்மிடமே உதவிகள்
பெற்றுக் கொண்டு நம் உடன் பிறவா சகோதரனை கொன்று குவித்த சிங்களர்களுக்கும் தலைவர்களுக்கும்
சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்று கிரிக்கெட் மேட்ச் ஆட அழைக்கிறது இந்த இந்திய
அரசாங்கம்
இப்போது
சொல்லுங்கள் எங்கு வாழ்வது கேவலம் என்று.
இன்னும் ஒன்றை
சொல்ல விரும்புகிறேன்.
நீயூயார்க்கில் ட்வின் டவர் தீவிரவாதிகளால் தாக்கப்பட்ட போது என் மனைவி
அந்த டவருக்கு அருகில்தான் வேலைபார்த்தார். அப்போது அவர்
8 அவர் எட்டுமாத கர்ப்பிணி ஆவாள். அவள் அன்று வேலைக்கு சிறிது லேட்டாக சென்றாதால்
அந்த இடிபாடுகளில் இருந்து தப்பித்தாள்.. அந்த நேரத்தில் அவள்
நீயூயார்கிற்குள் அகப்பட்டு கொண்டால் எந்த வித போக்குவரத்தும் சிட்டிக்குள் கிடையாது. அந்த நேரத்தில் அவளுக்கு உதவியது
தொப்புள் கொடி கொண்ட உறவுகள் அல்ல பல மொழி பேசும் பல்வேறு நாட்டினர்தான். அந்த பயங்கரவாத நிகழ்ச்சி நடந்த நேரத்திலும் எந்த ஒரு கடையிலும் உணவுப் பொருடகள்
விலை சிறிது கூட ஏறவில்லை கையில் பணம் இல்லாதவர்களுக்கும் மறுக்காமல் இலவசமாகவே அனைத்து
ஹோட்டல்களும் தந்தன. அப்படி உயிருக்கு பயந்த நிலையில் எல்லோரும்
அலைந்த நேரத்திலும் பெண்களுக்கு எந்தவிதமான கெடுதலும் நடக்கவில்லை.
அது ஏன் கடந்த
நவம்பர் மாதத்தில் சாண்டி புயல் எங்கள் மாநிலத்தை கடுமையாக தாக்கி பாதிப்பு அடைந்த
நேரத்தில் பிரசிடெண்ட் ஒபாமா அடிக்கடி கவர்னருக்கு போன் செய்து அந்த கவர்னர் ஒபாமா
கட்சிக்கு எதிர்கட்சியாளாராக இருந்தும் விசாரித்து நிலவரத்தை அறிந்து கொண்டது மட்டுமல்லாமல்
தனது டைரக்ட் போன் நம்பரையே அந்த கவர்னருக்கு கொடுத்து எந்த நேரத்திலும் என்னை கூப்பிடுங்கள்
என்று சொன்னார்.
அப்படி ஒரு செயல் இந்தியாவில் நடக்கும் என்றும் நினைத்து பார்க்கதான்
முடியுமா?
பல
இடங்களில் 10 நாட்களுக்கு மேலும் பவர் இல்லை என்பதால் மக்களுக்குமட்டுமல்ல
அவர்கள் வளர்க்கும் வளர்ப்பு பிரயாணிகளுக்கு நல்ல ஷெல்டர்களை அமைத்து கொடுத்து மூன்று
வேளையும் நல்ல உணவு கொடுத்து மருந்து வேண்டியவர்களுக்கு தினசரி சாப்பிடும் மருந்துக்களை
வீட்டில் உள்ளவர்கள் பார்த்து பார்த்து கொடுத்தது போல கொடுத்துவந்தார்கள்.
கடைகளில் பால் பிரெட் தண்ணிர் மற்றும்
பெட் ரோல்களுக்கு தட்டுபாடு ஏற்பட்ட போதிலும் பக்கத்து மாநிலங்களில் இருந்து கொண்டு
வந்த போதிலும் விலையை ஏற்றி விற்றாகமல் அதை சேல் விலைக்கே விற்றனர்.
இப்படியெல்லாம்
இந்த கேவலமான அமெரிக்க நாட்டில் நடக்கிறதுங்க. அதனாலதாங்க இங்கே நாங்கள்
கேவலமாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
நீங்க
எல்லாம் மிக சூடு சுரனை உள்ள மக்கள் & உங்கள் தலைவர்கள்
எல்லாம் மிக தங்கமானவர்கள்...அதனால நீங்க எல்லாம் மாற வேண்டாங்க...
அன்புடன்
மதுரைத்தமிழன்
டிஸ்கி:
நேற்றைய பதிவில்
விட்டு போன சில உங்கள் பார்வைக்கு:
வெளிநாட்டில்
வசிக்கும் இந்தியர்கள் நாங்கள் சொன்னால் கூடி கும்மி அடிக்கும் நீங்கள் அதே விஷயத்தை
இந்தியாவில் வசிப்பவர்கள் சொன்னால் சிரித்து மகிழந்து பாராட்டுகிறீர்களே அப்ப உங்கள்
அறிவு எங்க போச்சு
ஆனந்த விகடனில்
வந்த இந்த படத்தை பாருங்கள் உங்களிடமே காசு வாங்கி உங்கள் சமுகத்தையே கிண்டல் செய்கிறார்களே
அப்ப எங்க போனிங்க பெரியவர்களே அவர்களை கண்டித்து எழுத பயமா? எங்கே கண்டித்து எழுதினால் நீங்கள் போடும் மொக்கை கவிதைகளை கட்டுரைகளை பதிவிடாமல்
போய்விடுவார்களோ என்ற அச்சமா?
பிச்சைகாரன்
என்ற ஒரு பதிவாளர் கிழ்கண்டவாறு ஒரு பதிவை இட்டு இருக்கிறார் சமிபத்தில்தான் ஆனால்
அவர் நல்லவேளையாக இந்தியாவில் இருந்து பதிவிட்டு இருக்கிறார் இல்லையென்றால் அவருக்கும்
கும்மி அடித்திருப்பர்கள் இந்த கருத்துரை சிங்கங்கள்
http://www.pichaikaaran.com/ Courtesy : பிச்சைகாரன் -
நன்றி
வெளியூர்களுக்கு பேருந்தில் செல்லும்போது
, அசந்து தூங்கி விட்டால் பேருந்து நிலையம் வருவது தெரியாமல் போய் விடுமோ
என்ற பயம் சிறு வயதில் இருந்தது, இதனாலேயே பேருந்துகளில் நான்
தூங்குவது இல்லை, ஆனால் இந்த பயம் அர்த்தமற்றது என போக போக தெரிந்து
விட்டது.
என்னதான் ஆழ்ந்து தூங்கினாலும்
, பேருந்து நிலையத்துக்குள் பேருந்து நுழைந்து விட்டால் குப் என்ற துர்
நாற்றம் நம்மை எழுப்பி விட்டு விடும்,. கழிப்பறையை விட மோசமான
துர் நாற்றம் அங்கே வீசிக்கொண்டு இருக்கும்.
ஒரு பேருந்து நிலையத்தைக் கூட சுத்தமான
வைத்து கொள்ள தெரியாத ஒரு கேவலமான நாடு நம் இந்தியா என்பதில் கூட எனக்கு வருத்தம் இல்லை..
ஒரு பன்றி , பன்றியாக இருப்பதற்காக அதன் மேல் வருத்தப்பட்ட
முடியுமா, அதன் இயல்பு அது... அவ்வளவுதான்,,,
அதில் கோபப்பட்ட ஏதும் இல்லை.
ஆனால் , பாரதப்பண்பாடு
கலாச்சாரம் ,உலகிற்கே ஆன்மீக வழிகாட்டி என போலியாக ஒரு மித் உருவாக்கப்படுகிறதே,,,
அதுதான் என் வருத்ததுக்கு காரணம்,.., இந்தியா என்பது
ஒரு காட்டுமிராண்டி தேசம் என் இன்றைய தினம் உலகம் எங்கும் இருக்கும் தொலைக்காட்சிகளில்
வெளிச்சம் போட்டு காட்டப்பட்டுக்கொண்டு இருக்கிறது.
என்னது ஆதங்கமா...? அதை முந்தைய பதிவில் சொல்லி இருக்கலாம் தானே...? இப்போது எதற்கு இத்தனை சப்பைக்கட்டு...?
ReplyDeleteஒரு பாடல்வரி, ஒரு குறள் போதும் உங்களுக்கு பதில் சொல்ல... ஆனால்...
தமிழின் பெருமை... தமிழரின் பெருமை... ஏன் பாரதத்தின் பெருமை... உங்களுக்கு நிறைய தெரிந்திருக்கிறது ஐயா... உங்களை "தெளிய" வைக்க முடியாது... அது என் வேலையும் அல்ல...
மற்றபடி விளம்பரத்திற்கு நன்றிகள்...
Bye America Guy...
திருக்குறளை படிப்பவருக்கு முந்தையை பதிவில் நான் எழுதியிருப்பது ஆதங்கமா இல்லையா என்று கூட புரியவில்லை என்பது வியப்பு அளிக்கிறது.
Deleteமதவாதிகள் மதப் புத்தகங்களை வைத்து ஏதற்கெடுத்தாலும் ஒப்பிட்டு பேசுவது போல நீங்களும் திருக்குறளை எடுத்து வந்து உங்கள் பெருமைகளை பேசப் போகிறீர்களா என்ன?
திருக்குறள் பெருமை பேசுவதற்கு அல்ல நண்பரே அதை படித்து பொருள் புரிந்து அதன்படி நடக்கதான்.
முடிந்தால் எதையும் நன்கு படித்து பொருள் புரிந்து கருத்து கூறவும் எதோ கோனார் நோட்ஸை படித்து விட்டு பதில் சொல்வது போல ஒப்பிக்காதீர்கள்
இங்கே யாரும் உங்களைப் போல 'குழம்பி' போய் இருக்கவில்லை தெளிய வைப்பதற்கு நண்பரே.
உங்களுக்கு வேண்டியது விளம்பரம்தானே அதற்காகதானே அப்படி ஒரு "தெளிவான" கருத்து சொல்லி இருக்கிறிர்கள்
அது உங்களுக்கு கிடைத்துவிட்டதுஅல்லவா சந்தோஷம்தானே இப்போது
வணக்கம் 'திருவாளர்" திண்டுக்கல் தனபாலன் அவர்களே
ஐயா... மன்னித்து கொள்ளும் ஐயா... என்னை என்ன வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளும்... என்னைப் போல் முந்தைய பகிர்வில் ஆதங்கப்பட்டவர்களை எதுவும் சொல்ல வேண்டாம்... ரிலாக்ஸ் ப்ளீஸ் வயித்தெரிச்சல் நண்பருக்கும் இதே...
Deleteஉங்கள் அருமை, பெருமை, குழப்பம் எல்லாம் "பெண் என்னும் புதுமை" எனும் தளத்திலே அறிவேன்... அப்படி உள்ளவருக்கு கோனார் என்ன...? எந்த உரையும் புரிய வாய்ப்பில்லை...
இனிமேல் குறளை நன்கு படித்து, புரிந்து கருத்து கூறுகிறேன்... திருக்குறளை எடுத்து வந்து எனது பெருமையை பேசவா...? ஹா... ஹா... நான் படிப்பதில்லை ஐயா... எனக்கு எதுவும் தெரியாது... நாங்க எல்லாம் காட்டுமிராண்டிகள் அல்லவா...? எங்களுக்கு கிறுக்கத் தான் தெரியும்... என் தளத்திலும் கிறுக்கி உள்ளேன்...
ஒரு பதிவில் பதிவரின் வரிகளை குறிப்பிட்டு அதற்கு கீழே கருத்து இட்டால்...? ---> முந்தைய பதிவில் எதற்கு முன் "உண்மையில் இது விட கேவலம் இல்லை தான்" என்று எதற்கு முன் கூறினேன் என்பதை பாரும்... அடுத்த பதிவிற்கு தலைப்பு கிடைக்கலாம்... புரியவில்லை என்றால் விக்கி பீடியா படிக்கச் சொல்லும் தலைவரிடம் கேட்கவும்...
இதோடு உங்கள் தளத்தில் வருவதை நிறுத்திக் கொள்கிறேன்... பேச விரும்பினால் +91 9944345233 எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம்... மதுரை வந்தால் சந்திக்கவும்...
நன்றி... தங்களின் சேவைகள் தொடர வாழ்த்துக்கள்...
இந்தக் கருத்தை எழுத வைத்த எனது அண்ணனுக்கும் நன்றி...
Bye...
ரிலாக்ஸ் ப்ளீஸ் வயித்தெரிச்சலா? ஏங்க சும்மா போட்டுக்கிட்டு? உங்க மேலே எனக்கு வயித்தெரிச்சலா?!! சும்மா காமெடி பண்ணாதீங்கப்பா! :)))
Deleteதனபாலன் சார் வணக்கம்
Deleteமன்னிப்பு எப்போது கேட்க வேண்டுமென்றால் நாம் தவறுகள் செய்த போதுதான் அதனால் அந்த மன்னிப்பு வார்தையை வாபஸ் வாங்கி கொள்ளுங்கள் முதலில் ஒகே வா..
உங்களைப் போல ஆதங்கபட்டவர்களை குறை ஏதும் சொல்லவில்லை சார் சில பேர் ஐ லவ் மை இண்டியா என்று சொல்லிஸ் சென்று இருக்கிறார்கள் அதில் தவறு இல்லை ஆனால் இந்த இடத்தில் அவர்கள் சொல்லும் போது வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள் எல்லாம் இந்தியாவை லவ் பண்ணாத மாதிரி இருப்பதாக சொல்லாமல் சொல்வது போல இருக்கிறது சார்
ரிலாக்ஸ் ப்ளிஷ் வருண் அவருக்கு வயிற்று ஏரிச்சல் என்று எதுவும் கிடையாது அவர் அவருக்கே உள்ள ஸ்டைலில் பாத்திரத்தை போட்டு டப் என்று உடைப்பது போல போட்டு கருத்தை சொல்லிவிடுவார் அவ்வளவுதாங்க
தனபாலன் நீங்க ரொம்பவே உணர்ச்சி வசப்படுறீங்க காட்டுமிராண்டி அது இதுன்னு பெரிய வார்தை எல்லாம் உபயோகப்படுத்துறீங்க கொஞ்சம் கூல் ஆவுங்க அப்புறம் விக்கிபிடியா பற்றி சொன்னது இப்பதான் கொஞ்சம் புரிஞ்ச மாதிரி இருக்கு...
நீங்கள் என் தளத்திற்கு வருவதும் வாராமல் இருப்பது உங்கள் விருப்பம் அதில் நான் தலையிட முடியாது. அதுபோல வேறு யாரையும் இங்கு வரும்படி வற்புறுத்துவது இல்லை. காரணம் நான் இங்கு எழுதுவது எனது பொழுது போக்கிற்காக மட்டுமே அது போல என் பதிவை படித்து பொழுது போக்க விரும்புவர்கள் மட்டும் இங்கு வரலாம் நான் யாருடைய அறிவுக் கண்ணையோ அல்லது தமிழ் மொழி அறிவை வளர்த்து கொள்ளவோ இந்த வலைத்தளம் நடத்தவில்லை.
நான் ஆதங்கமாக எழுதிய பதிவு உங்களது உணர்ச்சியை தூண்டிவிட்டது போலிருக்கிறது அது போல நீங்கள் ஆதங்கமாக போட்ட கருத்து எனக்கு உணர்ச்சியை தூண்டி பதில் பதிவு எழுத வைத்துவிட்டது போல இருக்கிறது நான் அறிவு ஜீவி எல்லாம் கிடையாதுங்க அந்த நேரத்தில் என் மனதில் பட்டதை அப்படியே எழுதி இருக்கிறேன் அதனால் சொல்கிறேன் இதுகெல்லாம் கோவிச்சுகாதீங்க
நான் போனில் யாருகூடவும் அதிகம் பேசுவதில்லை ஆனால் நீங்கள் மேலும் ஏதாவது என்னிடம் தனிப்பட்ட முறையில் திட்ட வேண்டுமென்றால் அல்லது பாராட்ட வேண்டுமென்றால் இமெயில் அனுப்புங்கள்
நான் எதையும் டேக் இட் ஈஸியாக எடுது கொள்ள பழகி பலகாலம் ஆகிவிட்டது
நண்பர் வருண் அவர்கள் நான் போட்ட பதிவை படித்து( http://avargal-unmaigal.blogspot.com/2011/11/blog-post_04.html (அமெரிக்கனுக்கும் அமெரிக்க தமிழனுக்கும் அப்படி என்னைய்யா வேறுபாடு ) என்னை லூசு என்று சொல்லி நல்ல காய்ச்சு காச்சி எடுத்து பதிவிட்டு இருந்தார் அது ரொம்ப காலம் கழித்துதான் எனக்கு தெரிந்தது அதற்கும் நான் கோபபட்டது இல்லை அவருக்கு அந்த நேரத்தில் என்ன படுகிறதோ அதை பட்டென்று சொல்லி விடுவார் அதுதான் அவர் ஸ்டைல்
அதற்கான லிங்க இதோ உங்களுக்காக http://timeforsomelove.blogspot.com/2011/11/avargal-unmaigal.html (எரிச்சல்தரும் பதிவுகள்! Avargal unmaigal இல்லை! உளறல்கள்! )
இதை பார்த்த பின்பாவது என்னைப் பற்றி கொஞ்சம் புரிந்து கொள்வீர்கள் என நினைக்கிறேன்( நான் ஒரு லூசு என்று அல்லது --------- என்று)
ஆமாம் நான் இவ்வளவு விளக்கம் சொன்னபின்பும் நீங்கள் என் கூட "கா" வா அல்லது பழம்தானா என்று சொல்லுங்கள் பழம் என்றால் நான் இந்தியா வரும் போது திண்டுக்கல் வந்தால் வருவேன் அப்ப நீங்க எனக்கு தலப்பா கட்டு பிரியாணி வாங்கி தரணும் ஒகேவா
How can I come to America...? How to get job and get settled there.. Can you guide me ?? (not for joke... really I am asking sir)
ReplyDeleteபிரதர் அமெரிக்கா முன்பு போல இல்ல...உங்களுக்கு நல்ல பேச்சுரிமை எழுத்துரிமை மற்றும் கொஞ்சம் சுகாதாரமாக இருக்க வேண்டுமென்றால் மட்டும் வரவும் பணம் சம்பாதித்து நிம்மதியாக செட்டில் ஆக வேண்டுமென்றால் இந்தியாவிலேயே இருங்கள்
Deleteஏண்டா தம்பி,
ReplyDeleteபெத்து வளர்த்த தாய் தகப்பனை அம்போன்னு விட்டுட்டு ஆயிரம் வருத்தம் இருந்தாலும் நாம் பார்த்து வளர்ந்த சொந்தங்களை, ஊரை, அண்ணன், தம்பி, அக்கா, தங்கையை விட்டுவிட்டு, போன எடத்துல அக்கம் பக்கம் உள்ள இந்தியர்களை சொந்த பந்தமா நெனச்சி சில காலம் வாழ்ந்து ..அப்பறம் பொம்பளைங்க சில்லறை சண்டைல அதையும் தொலைச்சிட்டு, வெரும் அனாதையா ஊரு பேரு தெரியாம, வெறும் ஒரு சொகுசு காரு, சின்ன வீடு அப்புறம் டே டு டே பெட்டர் லைப் ..இது மாதிரி மிருகங்களா வாழுறதுதானே யு.எஸ் லைப் ????
ஒங்கப்பன் சீக்கிரம் செத்துட்டா பரவாயில்ல..இல்லேன்னா அவன் செத்த தகவல் கேட்டு தானே வருவ...
நீ பேசுறது வாழ்க்கைத்தரம்...அது இங்க இல்ல...ஆனா வாழ்க்கைத்தரம் மட்டுமே வாழ்க்கை இல்லையே தம்பி..????
டேய் அண்ணா செளக்கியமாடா
Deleteஎன் பெற்றோர்களை நான் அம்போ என்று வீட்டுவிட்டு வரவில்லையடா அவர்கள் யாருடைய கைகாசை எதிர்பார்காமல் தன் கையை நம்பி எனது சகோதரகளுடன் நிம்மதியாகவும் மகிழ்வாகவும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்களடா
எனக்கு அண்ணன்மாரகள் மட்டும்தானடா நாந்தான் கடைக்குட்டிடா தங்கை அக்கா என்றும்யாரும் கிடையாதுடா நமது பெண்பாதிவாளர்கள் தான் இதுவரை எனது அக்கா தங்கையாக இருந்து வருகிறார்களாடா
யாரிடமும் நட்புபாராதவர்கள்தான் அனாதைகளாடா. அதனால் நான் என்றும் அனாதை இல்லடா...அமெரிக்காவிலும் எனக்கு சொந்தங்கள் உண்டா?
எனது வருங்கால சம்பந்தியும் அமெரிக்காவில்தான் எங்கோயோ வாழ்ந்து கொண்டிருக்கிறார் அப்படிபட்ட ஒரு சொந்தத்தை கண்டுபிடிக்க இன்னும் 15 , 20 ஆண்டுகள் ஆகுமாடா அதன் பின்னும் எனக்கு இங்கு சொந்தங்கள் பெருகி கொண்டுதான் இருக்குமாட அதனால் நான் என்றும் அனாதை இல்லையடா
மிருகங்கள் வாழுவது காட்டிலும் மிருக காட்சி சாலையிலுமடா நீ என்ன சர்க்கு அடித்துவிட்டு டிஸ்கவரி சேனலை பார்த்துவிட்டு அதுதான் அமெரிக்க என்று நம்பி கொண்டிருக்கிறாயா அல்லது உங்கள் பள்ளி வாத்தியார் ஆப்பிரிக்கா காட்டை அமெரிக்கா என்று தவறா சொல்லி கொடுத்திருகாராடா?
எல்லாரும் அப்பா செத்தா தகவல் கேட்டுதான் வருவாங்க இதில் என்ன அதிசியம்டா?
எங்கப்பா எதுக்குடா சாவணும் அவர் செத்துட்டா சிகரெட் கடைக்காரன் பொழப்பு போய் அவன் தெருவல வந்துடுவாண்டா அப்புறம் நீயா அவன் குடும்பத்தை பார்த்துக்கவ
வாழ்க்கைதரம்தானடா வாழ்க்கை இது கூட உன் பெற்றோர்கள் உனக்கு சொல்லித் தரவில்லையாடா? நன் கு படித்து நல்ல வேலையில் அமர்ந்து சுயமா நியாமா சம்பாதித்து வீடு வாசல் வாங்கி ஹெல்தியா வாழ்ந்து தன்னை நம்பி இருக்கும் குடுமப்ததை பார்த்து தன்னை சுற்றியுள்ளவர்களுக்கு முடிந்தவரையில் உதவி செய்து வாழ்வதுதான் நல்ல வாழ்க்கை தரம்டா அது என்னிடம் இருக்கிரதுடா ஆனா தருதலை உனக்கு அது இல்லாமே போச்சேடா
டேய் உங்கப்பா அம்மா திரைகடல் ஒடி திரவியம் சேர்த்தவர்கள் தமிழ்ரென்று சொல்லிதரவில்லையாடா? உள்ளூரில் நல்ல வாழ்க்கைதரம் உயர வசதி அமையவில்லையென்றால் எங்கே வாய்ப்புகள் கிடக்கிறதோ அங்கே சென்று வாழ்க்கை தரத்தை உயர்த்தி கொள்வதுதான் புத்திசாலிகள் செய்யும் செயல்களடா.
இறுதியாக உங்க அப்பன் ஆத்தா என்று பேசுவதைவிட்டுவிட்டு அப்பா அம்மா என்று அழகாக அழைக்க கற்றுக் கொண்டு அதுக்கு அப்புறம் கருத்து சொல்லவாடா கூமுட்டை அண்ணா
தம்பி நானும் "ஒங்க" நாட்டுல சிலகாலம் வாழ்ந்திருக்கிறேன். அப்ப பாத்ததுதான்..ஒங்க லட்சனங்கள ...அங்கயும் சாதி சங்கம் வச்சுகிட்டு சாதிக்கு உள்ளேயே பொண்ணு/மாப்ள தேடுறது... வாழப்போன நாட்டு கலாசாரத்த கொறை பேசிக்கிட்டு ஒட்டாம தனியா திரிவீங்க.....சொல்லிக்கிட்டே போகலாம்..
Deleteமிருககாட்சி சாலை..அப்டி, இப்டின்னு எதோ பிளிறி இருக்கீங்க.மனித மிருகக்காட்சி சாலை பாத்து இருக்கீங்களா..? இல்லைனா சென்னை போங்க..ஒவ்வொரு அப்பார்த்மேன்ட்லயும் ஒன்னாவது இருக்கும்..சன்னல் கம்பி வழியா காலன் வர்றானான்னு பாத்துகிட்டு பரிதாபமா ஒரு கெழவன் கெழவி உக்காந்து இருக்கும்..நீங்க ஒங்க தரமான வாழ்க்கைக்காக உட்டுட்டுப் போனீங்களே அந்த ஆயி, அப்பன் ...ஒரு பெருங்கூட்டமே கெடக்குது இங்க...
தம்பி, இங்க எல்லாரையும் உட்டுபுட்டு அங்க புதுசா சொந்தங்கள மேனுபாக்சர் செய்ய நீங்க போடுற ப்ளான் புல்லரிக்குது..இன்னும் 15,20 வருஷம் வெயிட் பண்ணி ஒங்க சம்பந்திய கண்டுபிடிச்சு (இன்னும் 20 வருஷம் ஆனாலும் நீங்கதான் சம்பந்திய கண்டு பிடிபீக..ஒங்க கொழந்தைக லைப் பார்ட்னர்-அ கண்டுபிடிச்சிக்காது??!!) அப்புறம் ஒங்க சந்ததிக வளர்ந்தது பெருகி, சொந்தங்க உருவாக்கி..ஸ்ஸ்ஸ் ..அப்பா...இப்பவே கண்ணக்கட்டுதே...
Deleteஆனா தம்பி ஒங்க நேர்மை எனக்கு புடிச்சிருக்கு...
@திண்டுக்கல்லார்
ReplyDeleteஅண்ணன் மதுரைத்தமிழன் முன்பு அமெரிக்கர்களை கண்டித்து பதிவுகள் போட்டிருக்கிறார். நான் ஒன்றை ஆட்சேபித்து பின்னூட்டம் போட்டிருக்கிறேன். நீங்கள் மற்ற அமெரிக்க பதிவர்களைப் போல இவரையும் நினைத்துவிட வேண்டாம்.
@மதுரைத்தமிழன்
இந்த பிரச்சனைக்கு காரணமே பெரும்பாலான அமெரிக்காவாழ் பதிவர்கள் இந்தியாவில் நடக்கும் எல்லா விடயத்தையும் குறை சொல்லுவதும் அமெரிக்காவில் தேனாறும் பாலாறும் ஓடுவது போல் ஸீன் போடுவதுமே ஆகும். உதாரணமாக இந்தியாவில் நடந்த வன்புணர்வுகள் குறித்து குய்யோ முறையோ என கத்தியவர்கள், அமெரிக்காவில் பரபரப்பான ஒஹாயோவில் ஸ்டெபன்வில்லி ஸ்கூல் பொண்ணுக்கு நடந்த அநியாயம் குறித்து யாரும் மூச்சுவிட வில்லை. இந்தியா தமிழ்நாட்டில் இருந்து வந்த கோரிக்கைக்கு இணங்கியே இலங்கைக்கு படையை அனுப்பியது, இதை குறை சொல்லுபவர்கள் அமெரிக்கா லிபியா/ ஈராக்கில் செய்ததை ஆதரிப்பார்கள். இந்த மாதிரி ஒருதலைபட்சமாக பிறர் எழுதுவது உங்களை பாதித்துவிட்டது. அவ்வளவுதான். நீங்கள் அமெரிக்காவினை குறித்து அமெரிக்கர்களிடம் நியாயமாக குறை சொன்னாலும் இதே விதமான ஆட்சேபங்களை சந்திப்பீர்கள் அல்லவா?
நந்தவனத்தான் என்னை பற்றி நல்லவிதமாக தனபாலனிடம் அறிமுகபடுத்தியதற்கு நன்றி
Deleteஅமெரிக்காவில் பாலாறு தேனாரு ஒடுகிறது என்று சொல்பவர்கள் & எழுதுபவர்கள் ஆகட்டும் அல்லது அதை படித்து நம்புபவர்கள் ஆகட்டும் இரண்டு பேருமே வடிகட்டின முட்டாள்களே.
இந்த நேரத்தில் நான் சொல்ல விரும்புவது இதுதான். மனிதர்களுக்கு தன் குடும்பம் தனது ஊர், நாடு, இனம் என்ற சுய உணர்வும் அதைபற்றிய பெருமை உணர்வும் எல்லோருக்கும் அடிமனத்தில் இருக்கிறது அதை தாண்டி பார்ப்பவர்கள் அதிகம் இல்லை அப்படி பார்ப்பவர்கள் ஒரு சிலரே அவர்கள்தான் உலகில் பலரும் போற்றும் தலைவர்களாக இருக்கிறார்கள் அதனால் தன் ஊரை நாட்டை இனத்தை யாரும் குறை கூறும் போது அதில் உண்மைகள் இருந்த போதிலும் அது அமெரிக்கானாக இருந்தாலும் சரி இந்தியனாக இருந்தாலும் சரி மற்றும் வேறு எந்த நாட்டவர்களாக இருந்தாலும் சரி அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்பது மறுக்க முடியாத உண்மைதானே
நான் பதிவுகள் எழுதும் போது இந்தியருக்கோ அல்லது அமெரிக்கர்களுக்கோ ஆதரவாகவோ அல்லது எதிராகவோ பதிவுகள் போடவேண்டுமென்று யோசித்து பதிவுகல் எழுதவதில்லை. தினமும் வேலையில் இருந்து திரும்ப வந்ததும் இந்திய மற்றும் அமெரிக்க செய்திகளையும் வார இதழ்களையும் சில பதிவுகளையும் வீட்டில் உள்ளவர்களுக்கு உதவி கொண்டே படிப்பேன். அப்போது சிறு பொறிபோல என் மனதில் ஏதாவது ஒரு விஷயம் படும் அது எது பற்றிவேண்டுமானாலும் இருக்கலாம். அந்த விஷயத்தை பற்றி என் மனதில் என்ன தோன்ருகிறதோ அதை எழுதி அதற்கான சில படங்களையும் தயார் செய்து பதிவு போட்டு விட்டு தூங்க செல்வேன்
இப்படித்தான் எனது பொழுது போகிறது பதிவும் வருகிறது
Excellent Article Thalaiva. I am bookmarking it and sending it to my group. Please write more along these lines.
ReplyDeleteதிண்டுக்கல் தனபாலனை நீங்கள் தாக்கியிருப்பது வருத்தத்தை தருகிறது. அவர் எல்லா பதிவுகளும் படிப்பது, பதிவர் சந்திப்புக்கு சென்னை வரை வந்து ஆதரித்தது என்றெல்லாம் அவரது ஆர்வத்தை பார்த்து நான் வியந்ததுண்டு. அவர் சொன்ன மாற்று கருத்தை நீங்கள் கொஞ்சம் பக்குவமாக எடுத்துக் கொண்டிருக்கலாம். புலி அது இது என்று சொல்லி அவரது ம்மனத்தை புண்படுத்தியிருக்க வேண்டியதில்லை [ இது என் கருத்து தவறாகவும் இருக்கலாம்.]
ReplyDeleteஇந்திய அவலநிலையை பற்றி நீங்கள் தனிப்பட்ட முறையில் சொல்லியிருந்தால் அது ஏற்கத் தக்கதே. அதை விடுத்து, \\அப்படி என்ன அமெரிக்கர்களுக்கு இல்லாத சுதந்திரம் இந்தியர்களுக்குஇருக்கிறது? \\ என்று அமரிக்காவுடன் ஒப்பிட்டு தலைப்பை வைத்து விட்டு அமரிக்கவுடன் நான் எங்கு ஒப்பிட்டேன் என்றும் கேள்வியும் எழுப்புகிறீர்கள்.
அமரிக்காவின் சொகுசு வாழ்க்கை எதனால் ஆனது என்பதை மறந்து விட்டு அல்லது மறைத்து விட்டு, தெரிந்தும் தெரியாத மாதிரி இருந்து கொண்டு இங்கே பல்வேறு குற்றச் சாட்டுகளை இந்திய வாழ்க்கை முறை அவலங்கள் மீது விமர்சனம் வைத்துக் கொண்டிருக்கிறீர்கள். தங்கள் சொந்த மண்ணில் சுதந்திரமாக வாழ்ந்து கொண்டிருந்த பல்லாயிரக்கணக்கான கறுப்பின மக்களை ஆடு மாடுகளைப் போல கொன்று உருவாக்கப் பட்ட இடம் அமரிக்கா, அந்த மாதிரி கொடூர புத்தியை இன்று வரை அவர்கள் விடவில்லை என்பதே நிதர்சனம்.
உள்நாட்டில் பிரச்சினையா போய் வியட்நாம் மாதிரி அப்பாவியைத் தாக்கு. எண்ணெய் வளத்தை சுரண்டுவதில் இடையூறு வருமா ஈராக்கைத் தாக்கு. ரஷ்யாவை உடைக்க ஆப்கானிதான் வழியே ஆப்பு வை. இத்தனை கிரிமினல் வேலை செய்தும் இவர்கள் சொந்த உழைப்பில் வாழ்கிறார்களா? அது தான் இல்லை. ஊரைச் சுத்தி கடன் வாங்கி உடம்பு வளர்க்கிறார்கள், அந்த கடனுக்கும் வட்டிக்கும் புது கடன் வாங்கப் படும். இது மானங் கெட்ட பிழைப்பு, அங்கே சொகுசு வாழ்கை வாழ்ந்து கொண்டு எங்களைப் போல நீங்க இல்லியேன்னு இந்தியாவைப் பார்த்து ஏளனம் செய்வது, திருடி சொகுசு வாழ்க்கை வாழ்பவன் உழைத்து வாழும் கூலித் தொழிலாளியைப் பார்த்து உன் உடம்பு நாறுகிறது, நான் பார் சிங்கப்பூர் செண்டு போட்டிருக்கிறேன் என்பது போல உள்ளது.
ஜெயதேவ்! அமெரிக்கா வாழ்க்கை சொகுசு வாழ்க்கைனு எவன் சொன்னான்?! சொகுசு வாழ்க்கை மண்ணாங்கட்டினு எப்படி இந்தியாலயே குப்பை கூட்டுறவங்களுக்கு தெரியும்னு தெரியலை! சும்மா கிணற்றுத் தவளையாக வாழ்ந்துகொண்டு நாங்கதான் க்ரேட்னு சொல்லிக்கிட்டே திரிய வேண்டியதுதான்.
Deleteஇந்தியாவின் வரிப்பணத்தில் உருவாக்கப்பட்டவர்கள் அமெரிக்காவுக்காக உழைக்கிறார்கள். இந்தியா செலவு செய்து ஏமாந்து கிடக்கிறது அமரிக்கா இந்தியர்களின் உழைப்பில் சில்லரை பார்க்கிறது.
Deleteபுளியாப்ப காரணுக்கு ஜீரனிக்க கோலா கேக்குது குடிக்ககூட தண்ணி இல்லாதவன் என்ன செய்வது. வேணுமுனா நாமலும் அமெரிக்கா பழங்குடிகளை சுட்டுகொன்றது போல ரோடுல அசிங்க பன்றவன எல்லாம் சுட்டுத்தள்ளிட்டு இந்தியாவுல ஒரு 5 கோடி மக்களை மட்டும் வச்சிக்கலாம் அப்ப மக்களை சுத்தம் பண்ணிட்டு சுத்தமா இருப்போம்.
என்ன ஜெயதேவ் அரசியல்வாதி போல தாக்கி இருக்கிறீர்கள் என்று எழுதுகிறிர்கள் அப்படி சொல்வதை மாற்றிக் கொள்ளுங்கள் இது எனது கருத்து அவர் அவர் கருத்தையும் நான் எனது கருத்தையும் சொல்லி இருக்கிறோம். அவ்வள்வுதாங்க நீங்கள் சொன்னது மாதிரி நான் பக்குவம் இல்லாமல் பதில் போட்டுவிட்டேணோ என்று என்னை நினைக்கச் செய்துவிட்டீர்கள்
Deleteஎங்களது மோதல் பதிவால் ஏற்பட்ட கருத்து மோதல்தான் என்பதை தவிர தனிப்பட்ட முறை தாக்குதல் அல்ல என்பதை இங்கே சொல்ல விரும்புகிறேன் தனபால் நல்லவரா இல்லையா என்பதில் எனக்கு துளியும் சந்தேகமில்லை அவர் நிச்சயம் நல்லவராக இருப்பார் என்பதை அவர் பால் வடியும் மீசை வைத்த முகத்தே வைத்தே என்னால் அறிய முடியும்
நீங்கள் உங்கள் கருத்து தவறாக கூட இருக்கலாம் என்று சொல்லி இருக்கிறீர்கள் இனிமேல் நீங்கள் அப்படி எங்கேயும் சொல்லாதீர்கள் அப்படி சொன்னால் நீங்கள் சொல்லும் கருத்து வலிவு இல்லாமல் போய்விடும் அதற்கு பதிலாக இது எனது கருத்து இந்த கருத்திற்கு நீங்கள் உடன்படாமல் கூட இருக்கலாம் ஆனால் அதை உங்கள் மேல் வலியுருத்தவில்லை என்று சொல்லிவிட்டு போங்கள் அதை அவர்கள் ஏற்றுக் கொள்வதும் இல்லாதது அவரவர் விருப்பம்
அடுத்தாக எனது பதிவின் தலைப்பு பற்றி நீங்கள் எனது வலைதளம் தொடர்ந்து வாசிப்பவராக இருந்தால் ஒன்றை நன்றாக கவனித்து இருக்கலாம் அது நாலு பேரை கவர்ந்து இழுக்கமட்டுமே நான் பயன்படுத்தி வருகிறேன் என்று .
நான் வைக்கும் தலைப்புதான் எனது பதிவை நாலுபேரை படிக்க வைக்கஸ் செய்கிறது. ஆனால் அந்த பதிவுகளில் வரும் செய்தி தரமானதாகவோ சிந்திக்க வைப்பதாகவோ சிரிக்க வைப்பதாகவோ இருக்கும் என்பது உறுதி
இறுதியாக நீங்கள் அமெரிக்காவைப்பற்றி நிறைய படிக்க வேண்டும் என்பது எனது கருத்து கறுப்பர்கள் அடிமையாக இருந்தகாலம் உண்டு ஆனால் இப்போது துளிக்கூட இல்லை .இப்போது இங்கு அடிமையாக இருப்பவர்கள் IT துறையில் இருக்கும் இந்தியர்களே. ஆனால் இந்த அடிமைகள் வாங்கும் சம்பளம் மற்ற வேலைகளில் உழைத்து வாங்கும் சம்பளத்தை விட அதிகம்.
அமெரிக்காவில் மட்டுமல்ல உலகின் பல நாடுகளிலும் பலரை அடிமையாக வைத்திருந்தனர் இன்னும் அவைத்துள்ளனர். இந்தியாவில் ஒரு காலத்தில் மேல்சாதியினர் என்று சொல்லப்படுபவர்கள் கிழ்ஜாதியினர் என்று சொல்லப்படுபவர்களை அடிமையாக வைத்திருந்ததை பெரியவர்களின் வாயிலாகவும் நூல்களின் மூலமாகவும் நீங்கள் அறிந்து கொண்டனர் பல நாடுகளில் அடிமைகளை வைத்திருந்தாலும் அவர்களைத் தீண்டத்தாகதவர்களாக இந்திய மேட்டுக் குடியினர் வைத்தது போல வேறு எந்த நாடும் வைத்திருக்கவில்லை என்பது நான் படித்தது அறிந்தது. எப்போதும் வலிமை உள்ள நாடும் தலைவர்களும் மக்களும் வலிமை இல்லாதவர்கலை அடிமையாகவே வைத்திருக்க முயல்கிறது அதை குடும்பங்களிலும் கூட பார்க்கலாம்
நீங்கள் இறுதியாக சொன்ன பிரச்சனையை பற்றி சொல்ல வேண்டுமானால் மிகப் பெரிய பதிவாகவே போட வேண்டும்
உங்கள் கருத்துக்களை பார்க்கும் போது, உங்களின் சிந்தனை அப்படியே அமெரிக்கர்கள் போல் உள்ளது. உலகத்தில் உள்ள எல்லோருக்கும் தெரியும் ஏன் அமெரிக்கா ஈராக், அப்கானிஸ்தான் போன்ற நாடுகளின் மீது படையெடுத்தது. எப்படி இரட்டை கோபுரம் தகர்ப்பட்டது, அதன் பின்னணி யார் என்று.
ReplyDeleteஎவ்வளவு சுதந்திரம் அமெரிக்காவில் இருந்தாலும் உங்களால் ஒரு கார் அல்லது வீடு வங்கியில் கடன் வாங்கி கட்ட முடியுமா? அந்த கடன் வாங்க எத்தனை வருடம் ஆகும்? ஒருவன் ஒரு முறை கிழே விழுந்து விட்டால் அதான் பேங்க் கரப்ப்சி ஆகிவிட்டால் அவனால் அங்கு வேலை வாங்க முடியுமா? அமெரிக்க கல்லூரியில் படிக்க எவ்வளவு காசு என்று தெரியுமா?
நம்ம ஊரில் உள்ள கெட்ட விசயங்களை பட்டியல் போடும் நீங்கள், ஏன் நல்ல விசயங்களை பேசக்கூடாது?
நம்ம ஊரில் காசே இல்லாமல் முனைவர் பட்டம் வரியும் படிக்கலாம், அங்கே?
என்னிடம் நூறு காசு இருந்தால் தூக்கு சட்டியில் டீ விற்று பிழைக்கலாம், அங்கே?
என்னால் உடல் உழைக்க முடியும் என்றால், இங்கே கட்டிட வேலைக்கு போலாம், அங்கே?
இதெல்லாம் அங்கே முடியாதுண்ணே....
நம்ம ஊரில் உள்ள குழைந்தைகள் மற்ற பிள்ளைகளுடன் விளையாடுவது போல் அங்கே உங்கள் பிள்ளையும் வெள்ளைக்காரரின் பிள்ளையும் விளையாட முடியுமா? இன்னும் நிறைய இருக்குன்னே...
உங்களை பொறுத்த வரை அமெரிக்க சொர்க்கமாக இருக்கலாம், ஆனால் பலருக்கு????
அண்ணே ஜிவா பரமசாமி உங்கள் கருத்துக்கு நன்றி. நீங்கள் அமெரிக்கபற்றி நிறைய தெரிந்து கொள்ள வேண்டும்
Deleteகடன் வாங்க இங்கு சுதந்திரம் தேவையில்லை அண்ணா, வேலையில் இருந்தா மட்டும் போதுமண்ணா. நீங்கள் வாங்கும் சம்பளத்திற்கு தகுந்து கடன் வாங்கி வீடு வாங்கலாம். ஆனா 10 வருடங்களுக்கு முன் நீங்கள் எதாவது ஒரு வேளையில் இருந்தால் நீங்கள் கேட்பதற்கு மேலாக கடனை அள்ளித்தருவார்கள் அவன் திருப்பி தருவதற்கு தகுதியாளனா என்று யோசித்து பார்க்காமல் கடனை தந்தார்கள் என்று சொல்லலாம் அதனால் 2 விளைவுகள் இங்கு ஏற்பட்டன எல்லோரும் போட்டி போட்டு வீடு வாங்கினார்கள் அதனால் வீட்டுக்கு டிமாண்ட் அதிகரித்தது விலையும் ஒவ்வொரு மாதமும் கண்ணா பின்னா என்று அதிகரித்தது. வீட்டின் உண்மையான மதிப்பை விட இந்த விலைகள் பல மடங்குகள் அதிகரித்தன சொந்த வீடு என்ற கனவு இங்குள்ள குப்பனுக்கும் சுப்பனுக்கும் வந்தது ஆனா பாருங்க இந்த எக்கானாமியில வந்த ஆட்டத்தில் பலர் வேலை இழந்தனர் பலர் தெருவிற்கும் வந்தனர் இப்போது வீடுகளின் விலை தாறுமாறாக குறைந்து விட்டது. உதாரணமாக நான் வாங்கிய வீட்டின் மதிப்பு நான் வாங்கிய விலையை விட $ 90,000 இப்போது குறைந்து இருக்கிறது நான் வாங்கிய வீட்டை போல உள்ள வீட்டை நான் வாங்கிய ஒரு வருடத்திற்கு அப்புறம் வாங்கியயவர்களுக்கு என்ன நஷ்டம் என்று தெரியுமா $ 1,40,000 டாலர்கள் ஆகிற்று இப்ப புரிஞ்ச்சுகிட்டீங்களா அண்ணா 10 வருடத்திற்கு முன்னால் வீடு வாங்கியவர்களின் நிலமை.
இப்போ பேங்குகள் நல்லாவே உஷாராகிவிட்டார்கள் அதனால் இந்த மாதிரி வீடு வாங்குவதற்கு தரும் லோனின் அளவை கட்டுபடுத்த ஆரம்பித்துவிட்டார்கள் இப்போ இன்னும் ஒன்றை சொல்லுறேன் கேட்டுகோங்க அண்ணா இந்த எக்கனாமி டவுன் டமிலும் வீடுகளை வாங்கி கொண்டிருப்பவர்கள் நம் இந்தியர்கள் , சைனிஷ் மற்றும் ஏசியா நாட்டவரும் இஸ்ரேலியர்கள் மட்டுமே காரணம் இவர்கள் இராப்பகல் பாராமல் கண்ணா பின்னா என்று தீயா வேலை பார்ப்பவர்கள் இவர்கள் எல்லோரும் வெள்ளைக்காரனை போல சோம்பேறி அல்லர் என்பதுதான் காரணம். அதனால் இங்குள்ள வெள்ளையர்களுக்கு இவர்கள் மீது நல்லா கடுப்பு.
தனிமனிதர்கள் பேங்கர்ப்சி ஆனால் உடனே கடன் மட்டும்தான் வாங்க முடியாது. ஆனால் அவன் உழைக்க ரெடியானால் அவனால் வேலை வாங்க முடியும்
நம்ம ஊரில் நடந்த நல்ல விஷயங்களை பல பதிவில் சொல்லி இருக்கிறேன் ஆனால் அதை நம் ஊர் மக்கள்தான் எட்டிபார்த்து படித்து ஆதரவு தரவில்லை ஆனால் நான் ஆதங்கமாக சொன்ன விஷயத்தை மட்டும் குறை சொல்லியதாக கூறி பலத்த ஹிட் பதிவாக்கியுள்ளீர்கள் நான் முந்தைய பதிவில் திருமதி ராஜ லட்சுமி அம்மா அவர்களுக்கு பதில் அளிக்கையில் அங்கு நான் போட்ட சில பதிவுகளுக்கான லிங்கை கொடுத்துள்ளேன் அதை படித்து பார்த்து கருத்து எழுதுங்கள்
அட அட நான் ரொம்ப சீரியசா பதில் சொல்லி விட்டேனோ அப்ப கொஞ்சம் நகைச்சுவையாய் பதில் சொல்லுறேன்
நம்ம ஊரில் காசே இல்லாமல் பட்டம் வாங்க முடியும் அங்கே எப்படி என்று கேள்வி கேட்டு இருக்கிறீர்கள்
இங்கும் காசு இல்லாவிட்டால் பட்டம் வாங்கலாம் ஆனா கண்டிப்பாக நிறைய டாலர் இருக்க வேண்டும்
அண்ணா நீங்க ஒன்று சொல்ல மறந்துட்டிங்கண்னா நம் ஊருல படிக்காம கூட பட்டம் வாங்கலாம் ஆனா அதற்கு காசு கொஞ்சம் அதிகம் செலவாகுமண்ணா
அமெரிக்கா எங்களுக்கு சொர்க்கம் என்று நாங்கள் எப்போதும் சொல்லவில்லை இந்த சினிமாக்காரகள் படம் எடுத்து காண்பித்து உங்களை அப்படி சிந்திக்க வைத்து இருக்கிறார்கள் அவ்வளவுதான்
இன்னும் நிறைய சொல்லலாம் மீதியை அப்பறம் வந்து சொல்லுறேண்ணா
Interesting post on the cultural differences. I too hold some of your same values that you have called out here.
ReplyDeleteWe also have to remember that people of different religion and sub-race in India gave asylum to total strangers during time of crisis, such as for Muslims during bomb blasts, for Sikhs during Murder of Indra Gandhi, and for Hindus during murder of Gandhi.
There are good and bad on both sides of the world.
அடேங்கப்பா இப்படி ஆளு ஆளுக்கு பின்னுட்டம் போடுகிறீர்கள் பதில் சொல்லியே( ஒவ்வொரு பதிலும் ஒரு பதிவைப் போல போய் கொண்டிருக்கிறது கல்லுரியில் நான் எக்கனாமிஸ் தேர்வுக்கு பதில் எழுதியது போல இருக்கிறது)
ReplyDeleteஇந்த பதிவிற்கு வரும் பின்னுட்டத்திற்கு மட்டும் உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி என்று டெம்ளேட் பதில் போட முடியவில்லை )
நல்ல வேலை குழந்தைக்கு Spring break விட்டிருக்கிறார்கள் இல்லையென்றால் இப்படி பதில் எழுதி இருக்கமாட்டேன்.
ஜீவா பரமசாமி!
ReplyDeleteசில விஷயங்கள் உங்களுக்கு தெரிந்து இருக்காது. ஒருவன் அமெரிக்க கலாச்சாரத்தை நடை முறையை பிரிந்து கொள்ள குறைந்து 20 வருடங்கள் ஆகும்; அதே சமயம் இங்கு பிறந்து வளரும் குழந்தைகளுக்கு தெரிந்த விஷயங்கள் முழுவதும் [என்னை மாதிரி] இந்தியாவில் படித்து முடித்து விட்டு வந்தவர்களுக்கு தெரியாது. என் குழந்தைகளுக்கு என்னை விட அமெரிக்காவைப் பற்றி நன்கு தெரியும்.
ஒரு மாதம் இங்கு சினிமா ஷூட்டிங் செய்து விட்டு இந்த நாட்டைப் பற்றி நடிகர்கள் இந்தியர்கள் நம்பலாம். நாங்கள்...அந்த நடிகர்கள் ஒளறல்களைப் பார்த்து....
ஒரு சிறிய உதாரணம்...
இங்கு $400, 000 (நாலு லட்சம் டாலர்கள்) கொடுத்து வீடு வாங்கின பலர் வேலை போய் வீட்டு மார்கெட் கீழே விழுந்து இன்று அதே வீட்டின் விலை இன்று, 150, 000 டாலர்கள். பணம் கட்ட முடிய வில்லை என்று கையை வீட்டு சொந்தக்காரர்கள் தூக்கி விட்டார்கள். இப்படி இந்தியாவில் இந்தியாவில் என்ன நடக்கும் என்று உங்களுக்கு தெரியும்...வீடு பூந்து அடிப்பான்...பெண்கள் குழந்தைகளை சிறை வைப்பான்...இங்கு...அமேரிக்கவில் இப்படி நடந்தால் நடக்கிறது இது தான்.
இங்கே, வங்கிகள் அதை short sale என்று சொல்லி, மீதி, 250,000 டாலர்கள் "காந்தி கணக்கில்" எழுதி அந்த வீட்டு சொந்தக்காரன் கடனில் இருந்து விடுவித்து விடுவார்கள்...அது மாதிரி வேலை இழந்தவர்கள் பலரை இங்கு வங்கிகள் காப்பாற்றி உள்ளது....காப்பாற்ற வேண்டும். காப்பாற்றி உள்ளது எனபதை விட....இந்த மனிதர்களை காப்ப்பதுதடா என்ரு அமெரிக்கா அரசாங்கதின் ஆணை!
ஏன் ஒரு தனிமனிதனுக்கு அரசாங்கம் இப்படி உதவி செய்யணும்...அது தான் எங்கள் அரசாங்கம்...
உங்கள் அரசாங்கம்....உங்களுக்கு அதில் ஒரு பங்கும் இல்லையே...உங்களுக்கு ஒரே ஒரு கடமை ஓட்டுப்போடுவது மட்டுமே...!
நம்பள்கி நானே எவ்வளவு விளக்கம் தரது என்று யோசித்த சமயத்தில் நீங்கள் வந்து ஜீவாவிற்கு விளக்கம் தந்தற்கு நன்றிகள்
DeleteIn India, they never massacred 20 little children. They dont kill people in theaters, offices and shopping malls. All these things happening everyday in your so called civilized America only. Bad apples will be there anywhere. Dont take them as examples of that countries civilization.
ReplyDeleteபதிவு மற்றும் பின்னூட்டங்களையும் உங்கள் பதில்களையும் முழுமையாக படிக்க நேரம் கிடைத்தது.
ReplyDeleteரசித்த வரிகள் டேய் அண்ணா.
தனபாலன் வெகு இயல்பானவர் நண்பா. விமர்சனங்களையும் வைத்து இருவரும் தனித்தனியாக நிற்க வேண்டாம். அமெரிக்காவைப் போல கருத்து சுதந்திரத்தையும் நீங்க ஆதரிக்க வேண்டும். நல்ல வேளை உங்கள் பதில்கள் இயல்பாக இருப்பதற்கு என் வாழ்த்துகள்.
ஜோதிஜி உங்கள் அட்வைஸுக்கு நன்றி நான் இட்டது ஆதங்கமான பதிவு அப்படித்தான் நான் நினைத்து பதிவிட்டேன் ஆனால் அதை இந்தியாவை குறை கூறும் பதிவாக திசை மாறிய போது எனது கருத்துகளும் கோபமாக திசை திரும்பியது அதன் பின் வேலைக்கி சென்ற போது யோசித்து பார்த்ததில் இந்தியாவில் உள்ளவர்களின் மனநிலையும் புரிய ஆரம்பித்ததால் அதன் பின் வந்த கருத்துக்கள் இயல்பாக மாறிவிட்டது
Deleteநான் இந்த பதிவை குறை கூறும்பதிவாக நினைத்து எழுதி இருந்தால் ஆமாம் நான் அப்படிதான் எழுதி உள்ளேன் என்று தைரியமாக அடித்து சொல்லும் மனநிலை உள்ளவந்தான். அதற்க்காக யாருக்காகவும் நான் பயப்படுவதில்லை ஆனால் அப்படி நினைத்து எழுதாததால்தான் இவ்வளவு தூரம் வந்து பதில் சொல்லிக் கொண்டிருக்கிறேன்
தனபாலன் சார்தான் இதற்கு போய் என்னிடம் 'கா' சொல்லி போய்விட்டார் அவருக்கு போட்ட பதிலில் பழம் சொல்ல சொல்லி திண்டுக்கள் தலைப்பா கட்டு பிரியாணி வாங்கி தரச் சொல்லி இருக்கிறேன் அதை படித்துவிட்டு வாங்கி தருவார இல்லையா என்று பார்த்து கொண்டிருக்கிறேன் நண்பரே
அப்பாடா ,கா முடிந்து பழம் விட்டுடிங்களா , சந்தோசம் . தனபாலன் சார் கோச்சுக்க மாட்டார் . அடுத்த பதிவுக்கு பின்னூட்டம் போடுவார் பாருங்க .
ReplyDeleteநான் என் நாட்டில் கண்ட காட்சிகள்.
ReplyDeleteஎந்த நாட்டுடனும் ஒப்பிடவில்லை.
சுதந்திரம் ஆகி 66-67 வயது ஆகிறது.
பழனி பவித்திர நகரம்.
அதிக பக்தர்கள் வரும் நகரம்.
அங்கு கடைகள் ஆக்கிரமிப்பால் பக்தர்கள் நிம்மதியாக நடக்க முடியாது.
புனிதமான வையாபுரிக்குளம் . பாதி நிரப்பி பேருந்து நிலையம்.
பேருந்து நிலையம் இறங்கியதும் சிறுநீர் நாற்றம்.
கிரிவலம் கடம்பமரம் பூ மனம் கிடையாது.
திருவண்ணாமலை கோயிலைச்சுற்றி சிறுநீர் நாற்றம்..
பக்தர்களுக்கு எவ்வித அடிப்படை வசதிகள் கிடையாது.
வாகனங்கள் நிறுத்த முடியாது.
குடி தண்ணீர் வசதி கிடையாது.
இருப்பினும் பக்தர்கள் கூட்டம். தன்னார்வ தொண்டர்கள் பக்தர்கள் தண்ணீர்
விநியோகம் செய்கின்றனர். சிறுநீர் கழிக்க தனியார் கட்டண க்கழிப்பிடம்
புகைவண்டி நிலையங்களில்.லிக் போன்ற 14 மாடி கட்டடங்களில் வெற்றிலைப்பாக்கு மென்று துப்பிய கரைகள். மெட்ரோ சென்னை.
இந்தியாவை முன்னேற்றுவதற்கான உருப்படியான கருத்துகளை ஒருவரும் சொல்லக் காணோம்.
ReplyDelete