உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Sunday, March 24, 2013

அப்படி என்ன அமெரிக்கர்களுக்கு இல்லாத சுதந்திரம் இந்தியர்களுக்கு இருக்கிறது? அப்படி என்ன அமெரிக்கர்களுக்கு இல்லாத சுதந்திரம் இந்தியர்களுக்கு இருக்கிறது?


1. நீங்கள் நினைத்த இடத்தில் தெருவில் எங்க வேணா மூத்திரம் மலம் கழிக்கலாம்

2. குப்பைகளை எங்க வேணுமுனா தூக்கி ஏறியலாம்

3. ஆசிட்டை யாரு வேணுமுனா வாங்கி யாருமேலேயும் வீசலாம்.

4. குழந்தைகள் கடைகளில் சிகரெட், மதுவாங்க தடைகள் இல்லை வயது வரம்புகளும் தேவை இல்லை.

5. ரோட்டில் கார் பைக்குகளை இரண்டு லேனுக்கும் நடுவில் ஒட்டலாம்.

6. அதிக கூட்டம் உள்ள பஸ் மற்றும் ரயில் வரும் பெண்களை இடிக்கலாம் அவர்கள் இடுப்பில் கிள்ளலாம்.


7. தேர்ந்து எடுக்கும் தலைவர்கள் சட்டசபைக்கே போகாமல் கையெழுத்து மட்டும் போட்டுவிட்டு கடமையை செய்யாமல் இருக்கலாம்.

8. அது போல அரசாங்க ஊழியர்கள் ஆபிஸில் கையெழுத்து போட்டு விட்டு டீகடையில் தங்கள் நேரத்தை செலவழிக்கலாம்.

9 மக்களின் பாதுகாப்புக்காக தேர்ந்தெடுக்கும் காவலர்களை உயர் அதிகாரிங்களின் வீட்டிற்கு சம்பளம் இல்லாத வேலை ஆட்களாக வைத்து கொள்ளலாம்

10. அரசு ஊழியர்கள் தங்கள் வேலைகளை செய்வதற்கு பொதுமக்களிடம் பணம் வாங்கி கொள்ளலாம்.

11 .சட்டத்தை மீறும் மக்களிடம் போலிஸ்காரர்கள் வாங்கும் அபராத பணத்தை அரசாங்கத்திடம் ஒப்படைக்க தேவையில்லை.

12. டிரைவர் லைசென்ஸ் இல்லாமல் எந்த வாகனமும் ஓட்டலாம்

13. லவ்டு ஸ்பீக்கர் வைத்து பாடல்களை சத்தம்மாக ஒலிப்பரப்பலாம்.

14.  எதற்கும் க்யூவுல நிற்க தேவையில்லை ஒருத்தரை ஒருத்தர் முட்டித் தள்ளாலாம்

15. யார் வீட்டு சுவத்திலும் என்ன வேணா எழுதலாம் போஸ்டர் அடித்து ஒட்டலாம்

16. என் பொண்ணு வயசுக்கு வந்துட்டா என்ற பெர்சனல் விஷயத்தை போஸ்டர் அடித்து ஊருக்கெல்லாம் சொல்லாம்.

17. நமக்கு பிடிக்காதவர் அவர் மகாத்மா காந்தியாக இருந்தாலும் கஞ்சா கேஸில் உள்ளே தள்ளலாம்.

18.  ஊருக்கே தெரிந்து சுவிஸ் பேங்கில்  கோடிக்கணக்கான பணத்தை டெப்பாசிட் பண்ணினாலும்  என்னிடம் சொத்து ஏதும் இல்லை என்று தைரியாமாக பொய் சொல்லலாம்.


19.  சட்டத்தை உருவாக்குபவர்கள் சட்டத்தை பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை.

20 .இறுதியாக யாரை வேணா எங்க வேணா எப்போதும் வேணுமுணாலும் கற்பழிக்கலாம்.

இப்ப தெரியுதா சுதந்திரம் சுதந்திரம்  என்று பேசும் அமெரிக்காரர்கள் எப்படி சுதந்திரம் இல்லாமல் கஷ்டப்படுகிறார்கள்

இதெல்லாம் எனக்கு தெரிந்த இந்தியர்களின் சுதந்திரம். இதில் ஏதாவது விட்டு போய் இருந்தால் அதை நீங்கள் இங்கே பின்னுட்டத்தில் சொல்லலாம்.
 
அன்புடன்
மதுரைத்தமிழன்
கடந்த வாரம் வந்த பதிவுகள் .படிக்க தவறியவர்களுக்காக
 


51 comments :

 1. படங்களைப் பார்க்கும்போது மனதில் வேதனைதான் மிஞ்சுகிறது இல்லையா...?

  ReplyDelete
  Replies
  1. இறுதியில் உள்ள படத்தை பார்த்த நமக்கே வலி வரதுன்னா மலரைப் போல உள்ள பெண்கள் ஆசிட்டால் பாதிக்கப்பட்ட போது அவர்கள் என்ன வேதனை பட்டு இருப்பார்கள்

   Delete
 2. என்னாது சட்டமா...? அப்பிடீன்னா...? பணமிருந்தால் சட்டமாவது சாட்டையாவது...?

  ReplyDelete
 3. அதெல்லாம் சரிங்க... அதுக்காக எல்லோரும் கேடு கெட்ட அமெரிக்காவுக்கா வர முடியும்...? வாழ முடியும்...?

  ReplyDelete
  Replies
  1. அதனாலதான் கேடு கெட்ட அமெரிக்கர்கள் வால்மார்ட் மற்றும் மல்டி நேஷன் கம்பெனி போர்வையில் இந்தியாவிற்குள் வருகிறார்கள்

   Delete
  2. ///அதுக்காக எல்லோரும் கேடு கெட்ட அமெரிக்காவுக்கா வர முடியும்//

   அமெரிக்கா கேடு கெட்டதுன்னா அதை காப்பி அடித்து வாழ முயற்சிக்கும் இந்தியாவை என்னன்னு சொல்லாமுங்க

   Delete
  3. பூந்தளிர் அவர்களுக்கு இட்ட கருத்துரை :

   /// இந்தியாவை குறை சொல்ல இந்த பதிவு எழுதப்படவில்லை... ///

   இது எனக்கு நீங்கள் இட்ட கருத்துரை :

   /// அமெரிக்கா கேடு கெட்டதுன்னா அதை காப்பி அடித்து வாழ முயற்சிக்கும் இந்தியாவை என்னன்னு சொல்லாமுங்க ///

   வாழ முயற்சிக்கும் இந்தியா - அப்படியா...?

   /// அன்புடன்
   மதுரைத் தமிழன் ///

   உண்மையில் இதை விட கேவலம் இல்லை தான்...

   Delete
 4. அப்படியே இதையும் சேர்த்துக்கங்க ...
  without owner's permission we will add photo's in our blogs.. even we will not consider to give courtesy...

  ReplyDelete
  Replies
  1. என்னங்க போட்டோ எடுத்து போடுறதை சொல்லுறீங்க அவனவன் ஒனரின் பெர்மிஷன் இல்லாமல் நிலத்தை அபகரிக்கிறார்கள் அதுக்கு முன்னால இந்த போட்டோ விஷயம் ஒண்ணுமில்லைங்க

   Delete
  2. திருட்டு சின்னதா இருந்தா பெருசா இருந்தா என்ன ???

   This is the way we are/were growing up... but we are commenting about our country by comparing with others..... it is all up to you.

   Delete
 5. ஹலோ! மைக் டெஸ்டிங் இன்னா தொரை நம்ம ஏரியாவிற்கு வந்து டகுள் காட்டறே; இது அல்லாம் நம்ம ஏரியா தம்பி...!இருந்தாலும், உங்களுக்கு என் ஒட்டு போட்டிருக்கேன்!

  அதுவும் என் முதல் ஒட்டு... .
  த.ம. 1

  ReplyDelete
  Replies
  1. இது நாள் வரை தமிழ்மணத்தில் என்னை தீண்டதாகாதவனாக வைத்து இருந்த எனக்கும் இந்த பதிவுலகத்தில ஒட்டு போடுறாங்கப்பா..... ஆச்சிரியம் ஆச்சிரியம் ஆச்சிரியம்

   Delete
 6. இப்படி எல்லா படத்தையும் ஒண்ணா போட்டா ஒரு EFFECT-உம இல்லை. சீக்கிரம் ஒவ்வொரு படத்தையும் தனித்தனியா போட்டு update பண்ணுங்கள். அப்ப, உங்க பதிவு தான் இன்னைக்கு மகுடம்...

  ReplyDelete
  Replies
  1. மகுடம் வாங்க நிறைய வேலை பண்ணனுமுங்க அதுனால அதெல்லாம் நமக்கு வேண்டாமுங்க. அது மட்டுமல்ல மகுடம் சூடி தலைவராகிவிட்டால் எல்லோருக்கும் அடிமையாக இருக்கனுமுங்க அப்படி இல்லைன்னா சிபிஐ ரெய்டு எந்த நேரத்திலும் வந்துருமுங்க

   Delete
 7. அமெரிக்கர்கள் அளவுக்கு துப்பாக்கி உபயோகிப்பதில்லை ,ஈவு இரக்கமின்றி பட்டாசு வெடிப்பது போல யாரையும் சுடுவதில்லை.போலீசா பாத்து என்கவுண்டரில் சுட்டாத்தான் உண்டு.அதுக்கு நிகராதான் வெட்டிக் கொலை,ஆசிட் வீச்சு.....

  தனபாலன் சார் கமெண்டுக்கு ஒரு லைக்கு

  ReplyDelete
  Replies
  1. வெட்டுவது சுடுவது போன்ற செயலை செய்யும் அயோக்கியர்கள் எல்லா நாடுகளிலும் உண்டுங்க. ஆனா நம்ம ஊரில் உள்ள நல்லவர்கள் கூட தெருவில் உள்ள குப்பைத் தொட்டியில் குப்பையை போடாமல் கண்ட இடங்களில் தூக்கி போட்டு தங்கள் சுதந்திரத்தை நிலை நாட்டுவதுதான் மனதை வருந்தஸ் செய்கின்றன

   Delete
 8. வலிகறது தான் ...........தேவகி மைந்தனாய் பிறந்துவிட்டு யசோதையின் கிருஷ்ணனாய் வாழ வேண்டுமா ?இங்கு யார்முதலில் யசோதையை போல் இருக்கிறார்கள் .....................

  ReplyDelete
  Replies
  1. உங்களின் கருத்திற்கு நன்றி

   Delete
 9. ஏங்க எல்லாரும் அமெரிக்கா, அமெரிக்கான்னு மாய்ஞ்சு போராங்க அதுவும் இந்தியா போல ஒரு நாடு தானே?
  அங்க உள்ள நடைமுறைகள் சட்டதிட்டங்கள் வேறு வேறாக இருக்கலாம். அதுக்காக நம்ம இந்தியாவும் எந்த விதத்திலும் குறைச்சலில்லே.

  ReplyDelete
  Replies
  1. இந்தியாவை குறை சொல்ல இந்த பதிவு எழுதப்படவில்லை அங்கு எப்படி சுதந்திரத்தை தவறாக பயன்படுத்துகிறார்கள் என்பதை சொல்வதற்காக எழுதப்பட்டதுதான்.

   அமெரிக்காவும் இந்தியா போல உள்ள நாடுதான் ஆனால் இங்கு சுதந்திரம் மிக அதிகமுள்ளது அதில் மிக முக்கியமானது பேச்சுரிமை எழுத்துரிமை இந்த சுதந்திரம் வேறு எந்த நாட்டிலும் கிடையாது என்பது யாராலும் மறுக்கப்படாத உண்மைங்க

   Delete
 10. கழிவுகள், குப்பைகள் முகம் சுளிக்க வைத்தாலும் கிண்டலாய் இருந்தாலும் வருத்த பட வேண்டிய உண்மைதான்! தூங்கிட்டே வந்தா கூட பஸ் ஸ்டாண்ட் வந்திடுச்சின்றதை மூக்கு கண்டுபிடிச்சிடும். சுற்று புற தூய்மைக்கு சட்டம், தண்டனைன்னு கொண்டு வந்தால்தான் மாறும் போலிருக்கிறது. அண்ணனுக்கு ஒண்ணுன்னா.. தம்பிங்க படையோடு வர்றதும். பெற்ற பிள்ளைங்க நலனையே நினைச்சி வாழ் நாள் முழுக்க வாழற தாய், தந்தை,... நண்பனுக்கு ஆபத்துல உதவற நண்பர்கள் கூட்டம்... பிரச்சினைன்னா தெருவே கூடி ஓண்ணா நிக்கறது.. ஒப்பனை இல்லாத கணவன்,மனைவி உறவுகள் இதல்லாம் இந்தியாவுல நிறையவே இருக்குங்க. பசிச்சவனுக்கு தங்க தட்டில் பொற்காசுகளை வைத்தால் வயிறு நிரம்புமா? மண் பாண்டத்தில் கூழ் கொடுத்தால் நிரம்புமா? எத்தனை குறைகள் இருந்தாலும் மனம் நிறைவோடு வாழும் மனித வாழ்க்கை எங்கள் இந்திய நாட்டில் கிடைக்கிறது. i love my india!

  ReplyDelete
  Replies
  1. //கிண்டலாய் இருந்தாலும் வருத்தப்பட வேண்டிய உண்மைதான்/

   நான் இந்திய நாட்டில் நடப்பதை நீங்கள் வருத்தப்பட்ட மாதிரிதான் நானும் வருத்தப்பட்டு அதை நேராக சொல்லாமல் கிண்டலாக சொல்லி இருக்கிறேன் அவ்வளவுதாங்க

   நான் சொன்னவைகள் நாட்டில் நடக்கும் உண்மைகள்தான் நான் இல்லாத எதையும் இங்கே தப்பா சொல்லிவிட வில்லையே இதை நான் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் அது உண்மைதானுங்க அதனாலதான் அதை படித்ததும் நமக்கு மனம் வலிக்கிறது


   நான் வெளிநாட்டில் வசித்து இதை சொன்னதால் இதை பலர் தவறகாக எடுத்து புரிந்து கொண்டவர்கள் இதையே இந்தியாவில் இருக்கும் ஒருவர் பதிவாக போட்டால் நகைச்சுவையாக எடுத்துகொள்கிறீர்கள் அது என்னங்க நீயாயம்

   நான் சொன்னதையே ஆனந்த விகடன் வேறுமாதிரி சொல்லி நகைச்சுவையாக வெளியிட்டு இருக்கிறது அதையெல்லாம் படித்தவர்கள் பொங்கி எழாமல் நான் சொன்னது பொங்கி எழுகிறீர்களே?


   எங்களை போல வெளிநாட்டில் வசிக்கும் அனைத்து இந்தியர்களும் இந்தியாவை உங்களுக்கும் அதிகமாகவே நேசிக்கிறார்கள் என்று உண்மை உங்களுக்கு தெரியுமா

   உஷா நீங்கள் பெண்தானே நீங்கள் புகுந்த வீடு போனதும் பிறந்த வீட்டை நேசிப்பதை மறந்துவீடுவிர்களா என்ன? அது போலதான் நாங்கள் வெளிநாட்டில் வந்து வாழ்வதும்

   Delete
  2. நீங்கள் சொன்னதற்கு பொங்கி என் பதிலை கூறவில்லை. நீங்கள் சொல்லும் குறைகள் கசப்பான உண்மைதான். இங்க குப்பை போடற ஆள் சிங்கப்பூருக்கு போனால் அந்த நாட்டு சட்டத்தை மதிச்சி குப்பை போடறதில்ல ஆனா மறுபடியும் இங்க வந்து இறங்கின உடனயே கையில இருக்கிற போண்டா காகிதத்தை நடு ரோட்ல வீசியடிக்கிற வேலைய ஆரம்பிச்சிடறாங்க. நான் சாலைகளில் போகும் போது பத்துக்கு ஆறுபேராவது ரோட்ல எச்சில் துப்பிகிட்டு போறாங்க.. எனக்கு கோபமாகத்தான் வரும். யாரிடமாவது தப்பிதவறி கேட்டால் உன் வீட்லயே வந்து துப்பினேன் வேலைய பார்த்துகிட்டு போ என்பார்கள். கொஞ்சம் நல்லவிதமாக கூட சொல்லி பார்த்திருக்கேன்.. இப்படி துப்பின எச்சில் மீது நீங்களே கூட மிதிக்க வேண்டி வரும் என்று கூட. வெளியூர் சென்றால் கட்டண கழிப்பிடமாக இருந்தாலும் கூட பொது கழிப்பிடங்களை உபயோகிக்க முடியாது. இதற்காக நல்ல ஹோட்டலாய் பார்த்து சாப்பிட சென்று அங்குதான் சமாளிக்க வேண்டும். சுற்று புற சூழல் பாதுகாக்க ஒவ்வொரு தனிமனிதனுக்கும் உணர்வு வேண்டும். கடுமையான சட்டம் போட்டாலொழிய மக்கள் திருந்த போவதில்லை. நல்ல அரசியலமைப்பும், தனி மனித ஒழுக்கமும்தான் இந்த நிலைகளை மாற்ற முடியும். நான் என் உலகத்தை அழகாக வைத்திருக்கிறேன்..எல்லோருமே அப்படி நினைத்து செயல் பட்டால் இந்த குறைகள் சரி செய்து விடலாம். சக மனிதனை,நாட்டினை நேசிப்பதுதான் மனிதம். நான் உங்கள் ஊரையும் குறை சொல்ல வில்லை என் ஊரையும் குறை சொல்ல வில்லை. என் சொந்தங்களோடு இருக்கும் என் தாய் நாட்டில் இருப்பது எனக்கு பிடித்திருக்கிறது. நீங்கள் பிறந்த வீட்டை நேசிப்பது சந்தோஷம்.

   Delete
 11. kalla nottu adikkalaam

  ReplyDelete
 12. சுதந்திரம் என்கிற பெயரில் ஊரில் இவ்வளவு அட்டுழியம் நடந்தாலும் , ஆனா இந்த பாழபோன மனசு எப்ப ஊருக்கு போவோம் என்றுதானே துடிக்குது .(சொர்க்கமே என்றாலும் நம்ம ஊரு போல ஆகுமா )

  ReplyDelete
  Replies
  1. வெளிநாட்டில் வசிக்கும் அனைத்து இந்தியர்களும் இந்தியாவை அதிகமாகவே நேசிக்கிறார்கள் நண்பரே ஆனால் அதை இந்தியாவில் உள்ளவர்கள் ப்ரிந்து கொள்வதில்லை

   Delete
 13. சட்டத பணம் இருந்தா சட்ட மாதிரி மாத்திக்கலாம்

  ReplyDelete
 14. முதலில் தனபாலன் சார் கமெண்டிற்கும், திருமதி உஷாஅன்பரசு கமெண்டிற்கும் ஒரு like.
  மனம் வலிக்கிறது உங்கள் பதிவைப் பார்க்கும் போது. இது மட்டும் தான் இந்தியா என்று சொல்ல வருகிறீர்களா ?திரு ஸ்ரீராம் அவர்களின் http://engalblog.blogspot.com/2013/03/9-2013-16-2013.html
  link ஐ நேரமிருந்தால் படித்துப் பாருங்கள். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்று உங்களுக்கே புரியும். அது தான் நம் இந்தியா.
  I love my India .

  ReplyDelete
  Replies
  1. ராஜலட்சுமி அம்மா இதை படித்தவர்கள் அனைவருக்கும் உங்களை போல மனம் வலித்தது என்றால் அது என் பதிவிற்கு கிடைத்த வெற்றி.

   நான் இதை மட்டும் இந்தியா என்று சொல்ல வரவில்லை. பல நல்ல செயல்கள் இந்தியாவில் பலதும் நடந்துவருகின்றன. ஆனால் இந்த செய்திகள்தான் என் மனதிற்கு வலியை தந்தன & தருகின்றன.


   நான் இந்தியாவிலேயே இருந்திருந்தால் இது எல்லாம் என் மனதில் உரைத்திருக்காது...ஆனால் வெளியில் இருந்து பார்க்கும் போது நமது சுதந்திரம் எப்படி சிரழிகிறது என்று தெரிகிறது

   நீங்கள் சொன்ன எங்கள் ப்ளாக் சென்று பாசிடிவ் செய்திகள் படித்தேன் மகிழ்ச்சி நீங்கள் வலைத்தளத்திற்கு புதியவர் என நினைக்கிறேன். அதனால் நான் இட்ட பதிவுகள் அனைத்தையும் படிக்க வாய்ப்புக்கள் இருந்திருக்காது. இந்தியா பற்றிய பல பாசிடிவ் பதிவுகளையும் தந்து இருக்கிறேன் அதில் சிலவற்றை உதாரணத்திற்கு இங்கு உங்கள் பார்வைக்காக தந்து இருக்கிறேன் நேரம் இருந்தால் அதனை படித்துவிட்டு விமர்சிக்கவும்

   http://avargal-unmaigal.blogspot.com/2012/10/ceo-worlds-youngest-ceo.html

   http://avargal-unmaigal.blogspot.com/2010/08/rab-music.html
   http://avargal-unmaigal.blogspot.com/2012/04/vs-5.html


   ஒரு பானை சோறுக்கு ஒரு சோறு பதம் என்ற பழமொழி சொல்வதற்கு நன்றாக இருக்கலாம். ஆனால் அந்த பழமொழி ரியல் வாழ்க்கைக்கு பொருந்தி வராது. உதாரணமாக உங்களுக்கு ஐந்து குழந்தைகள் இருந்து அதில் ஒரு குழந்தை மட்டும் நன்றாக இருந்து மற்றவர்கள் கஷ்டப்பட்டும் ஊதாரியாகவும் பொறுப்பில்லாமலும் இருக்கும் போது அவர்களைப் பற்றி கவலைப்பட்டு மற்றவர்களிடம் சொல்லுவீர்களா அல்லது ஒரு பானை சோறுக்கு ஒரு சோறு பதம் என்ற பழமொழிபடி அந்த நல்லவரை மட்டும் மற்ற எல்லோரிடமும் சொல்லி சந்தோஷப்படுவீரகளா சொல்லுங்களேன்

   Delete
 15. I am also in agreement with mrs.Usha Anbarasu and Mr.Dindugal Danabalan. It has become a fashion to talk ill of one's birth place which taught everything to a person. If we go abroad, we can observe that those so called whites will not consider us as a human being at all. While Americans appreciate Indian culture, our people denigrate us.

  ReplyDelete
  Replies
  1. சார் நீங்க என்ன சொல்லவறீங்க

   Whites will not consider us a human being at all என்று சொல்லிறீங்க ஆனா அடுத்த லைனில் American appreciate our culture not indian என்று சொல்லுறீங்க????

   இந்தியன் எல்லாம் human being இல்லை அதைதான் American appreciate பண்ணுறானா?

   நீங்க என்ன அமெரிக்கர்களுக்கு ஆதரவா இல்லை ?

   Delete
 16. இது என்னப்பாஅநியாயமா இருக்குது ரோடு ஓரத்துல ஆய் போனா உச்சா போனா தப்பா? எங்கள் நாட்டில் உள்ள நகரங்களில் கால்வாசி மக்களுக்கு வீடே கக்கூஸ் அளவு கூட இல்ல அப்ப அவங்க எல்லாம் எங்க கக்கூஸ் போரது ஆத்திரத்தை அடக்கினாலும் அடக்கலாம் மூத்திரத்தை அடக்கமுடியாதுனு தெறியாதா. சாப்பிடரதுக்கு அரிசி இலவசமா கொடுக்கிறாங்க அஞ்சு பேர் இருக்கிற ஒரு குடும்பத்துல அஞ்சுரூபாய் கொடுத்து ஆய் போகாவே 25 ரூபா செலவாகும் ஒரு நாளைக்கு 3 தடவை உச்சா போனாலும் ஒரு தடவைக்கு ரெண்டு ரூபவா மூத்தாபோக 30 மொத்தம் 55 ரூபாய் 1 அமெரிக்க டாலர் அதாவது ஆய் மற்றும் மூத்தா போவதற்க்கு மட்டுமே அந்த குடும்பம் வருமைக்கோட்டை கடக்கவேண்டி இருக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. நான் அநியாயம் என்று சொல்லவில்லை தெருவில் மூச்சா போகிரதை இங்கே சட்டம் போட்டு தடுக்குகிறான் ஆனால் நம்ம இந்தியாவில் அரசாங்கமே கட்டடம் கட்டி (அதாவது டாய்லெட் கட்டி ) தடுக்கலாமே. அது உங்களின் சுகாதரத்திற்குதானே நல்லது

   Delete
  2. ஐய்யோ நீங்க ரொம்ப தப்பா புரிஞ்சிகிட்டு இருக்கீங்க நான் சொன்ன இந்த கட்டனம் எல்லாம் அரசாங்க டாய்லெட்டுக்குத்தான். அது உள்ள போனாலே குடலை பிடுங்கும் அந்த காண்ராக்ட்காரன் சரியா பராமரிக்காமல் அவசரமா ஆய்போறவங்ககிட்ட காசு பார்த்துடுவான். எல்லா ஊரிலும் அரசாங்கம் டாய்லெட் கட்டி கொடுத்திருக்கு ஆனால் பிரச்சினையே வேறு. தன்வீடுகளில் இருக்கும் கழிவறைகளை மட்டுமே சுத்தமாக பராமரிக்க இயலும் பொது கழிப்பறைகளை பராமரிப்பது கடினம் நடுத்தர குடும்பத்தில் உள்ளவர்கள் யாரும் ரோட்டு ஓரத்தில் கக்கா போவதில்லை ஆனால் பணக்காரர்கள் கூட நாயை கூட்டிவந்து ரோட்டு ஓரத்தில் கக்கா போக வைக்கிறார்கள்.

   சட்டத்தை கடுமையாக்குவதற்குமுன் மக்களின் வாழிடங்களை அரசு ஆய்வு செய்யவேண்டும் பெரு நகரங்களில் எல்லாம் கழிவறை அளவுக்கு அறைகளை அமைத்து அதில் வாடகைக்கு ஏழைகளை குடி அமர்த்தியிருக்கிறார்கள் அவர்களுக்கு கழிவறை வசதி செய்து கொடுப்பதில்லை. அடுத்து நமது இந்தியன் ரயில்வே என்ன செய்கிறது ஒவ்வொரு இந்தியனும் கட்டாயம் ரயில் நிலையம் சென்றிருப்பார்கள் அங்கென்ன மரிக்கொழுந்து வாசமா வீசுது ரயில் நிலையத்தின் தடம் முழுதும் மலம் நிரம்பி வழியுது அதர்கு ரயில் நிலையத்தை சுத்தமாக வைத்திருக்கவும் என்று போர்டு போட்டால் மட்டும் போதாது அதற்கான நவீன தடுப்பு அல்லது வசதிகளை ஏற்ப்படுத்தவேண்டும்.

   Delete
 17. உலக நாடுகள் அத்தனையிலும் கடன் வாங்கி கடன் வாங்கி படோபடமாக வாழ்தல், ஊரைக் கொள்ளையடிச்சு உலையில் போட்டுக் கொள்ளுதல், காரணமின்றி எந்த நாட்டையும் புகுந்து அநியாயமாகத் தாக்குதல், ரெண்டு அப்பாவி நாடுகளுக்கிடையே சண்டையை மூட்டி இருவருக்கும் ஆயுத சப்ளை செய்து நாலு காசு பார்த்தல், வேண்டாத நாடுகளில் உள்நாட்டுக் கலவரத்தைத் தூண்டி அந்நாட்டின் இறையாண்மைக்கு ஊரு விளைவித்தல், உள்நாட்டு பிரச்சினையில் இருந்து மக்களின் கவனத்தைத் திசை திருப்ப அப்பாவி நாடுகளைத் தாக்குதல்- இது தான் அமரிக்கா. இங்கே இந்தியா சுத்தமில்லை தான், ஆனாலும் மேற்கண்ட ஈனச் செயல்களை செய்வதில்லை. மக்களிடம் கொள்ளையடித்த பணம் வெளிநாட்டு வங்கிகளில் இருந்து திரும்ப மீட்கப்பட்டால் இந்தியாவை விட சிறந்த நாடு இல்லை என்னுமளவுக்குச் செய்ய முடியும்.

  ReplyDelete
  Replies
  1. என்ன ஜெயதேவ் நீங்களும் உணர்ச்சி வசப்பட்டீங்க...நான் இங்கே அமெரிக்கரந்தான் உலகத்தில்தான் சிறந்தவன் என்று எங்கும் சொல்லவில்லையே???

   Delete
  2. ஐயா செயதேவு!

   இலங்கைக்கு ஐ பி கே எஃப் ஐ என்ன எழவுக்கு அனுப்பினீங்க? நீங்கதான் இந்த ஏரியா தாதானுதானே?

   நீங்க இந்த ஏரியா சண்டியரா இருக்கது தெரியாமல் சும்மா பேத்தக்கூடாது.

   உங்க வேலையை பாத்துக்கிட்டு இருந்திருக்க வேண்டியதுதானே?

   ஊருப்பயலைப் பூராம் விமர்சிக்கும் இந்தியர்களும், இந்தியாவும் யோக்கிய சிகாமணிகள்னு சொல்லிக்கிட்டுத் திரியவேண்டியதுதான்!

   Delete
 18. இங்கு வந்து உணர்ச்சி வசப்பட்டு கருத்துக்கள் வழங்கிய அனைவருக்கும் எனது நன்றிகள். இந்த பதிவு எழுத தூண்டியது விஜய் டிவியில் நான் பார்த்த இந்த செய்திதான்.


  டிஸ்கி ; பிரகாஷ் ராஜ் விஜய் டிவியில் நடத்தும் நீங்களும் வெல்லாம் ஒரு கோடி நிகழ்ச்சியில் வந்த போட்டியாளரிடம் கேட்ட கேள்விக்கு போட்டியாளர் சொன்ன ஒரு பதில்தான் என்னை இந்த பதிவு எழுத தூண்டியது

  அந்த போட்டியாளர் அமெரிக்கா சென்று வந்தவர் அவரிடம் பிரகாஷ் ராஜ் அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் உள்ள வித்தியாசம் என்ன என்று கேட்டார்

  அதற்கு போட்டியாளர் சொன்னார் இந்தியாவில் நாம் சுதந்திரம் என்று சொல்லி கொண்டு காரை 2 லேன் களிலும் ஒட்டிச் செல்கிறோம் ஆனால் அதே அமெரிக்காவில் சிக்னல் இல்லாத நாலு முனை ரோடுகளில் கூட யார் முதலில் வந்து ஸ்டாப் லைனில் நிற்கிறார்களோ அவர்கள்தான் முதலில் செல்லுகிறார்கள் எப்போதும் யாரும் இதை மீறுவதில்லை எவ்வளவு டிராபிக் இருந்தாலும். இப்படிதான் அவர்கள் சுதந்திரத்தை பேணுகிறார்கள் என்று சொன்னார். அவர் சொன்னவிதம் என்னை மிகவும் கவர்ந்தது அவர் அமெரிக்கா வந்து சென்றது குறுகிய காலமாக இருந்தாலும் அவரின் பார்வை மிக தெளிவாக இருப்பது என்னை வியக்கவைக்கிறது.


  இந்த பதிவைபடித்துவிட்டு உணர்ச்சிவசப்பட்டவர்கள் தெருவில் மூச்சா போகாமலும் குப்பைபோடாமலும் இருந்தார்களேயானால் அவர்கள் I LOVE INDIA என்று சொல்ல தகுதிவாய்ந்தவர்களே அவர்களுக்கு வெளிநாட்டில் வசிக்கும் இந்த இந்தியன் சார்பாக ஒரு பெரிய சல்யூட்

  ReplyDelete
 19. ஒவ்வொரு படமும் மனதில் வேதனையினை ஏற்படுத்துகின்றன

  ReplyDelete
 20. இந்தியாவில், தொலைக்காட்சிகள், பத்திரிக்கைககள், சுவரொட்டிகள்
  போன்ற பொது வெளிகளில் - மனதை பாதிக்கக்கூடிய, படங்கள் செய்திகளை எந்த முன் அறிவிப்பும் இல்லாமல் வெளியிடும் சுதந்திரத்தையும் சேர்த்துக்கொள்ளலாம்.

  ReplyDelete
 21. saryaakach sonneerkal thodara vaazhththukkal

  ReplyDelete
 22. என்னங்க நீங்க? அமெரிக்காவில் வாழ்ந்துகொண்டு இந்தியாவைப்பத்தி எந்த வகையிலும் குறை சொன்னால், நீங்க தேச துரோகியாகிடுவீங்க. இதுகூடத் தெரியாதா உங்களுக்கு?

  சும்மா இந்தியாதான் உலகிலேயே சிறந்த நாடுனு சொல்லுங்க.

  பொய்தான், அதனாலென்ன?

  * டெல்லியில் நடந்த கற்பழிப்பு??

  * 3 வயது சிறுமியை கற்பழிக்கும் செய்தி???

  மேற்படியார்கள் எல்லாம் நம்ம தனபாலனுடைய சகோதரர்கள். நீங்களும் நானும் இந்திய துரோகிகள். அமெரிக்க கைக்கூலிகள்!

  அவங்கள பொறுத்தவரையில் எது நடந்தாலும், இந்தியா உயர்வான நாடுதான். "ஐ லவ் இந்தியா" தான். தன்பாலனுடிஅய சகோதரர்கள் ஏதோ சின்ன தப்பு செஞ்சிட்டாங்க, அவ்வளவுதான். அதனாலென்ன இப்போ? யாரு தப்பு செய்யலை??

  உண்மையைச் சொன்னால், ஏன் இப்படியெல்லாம் இவங்களுக்கு கோவம் வருது?? தப்பை தப்புனு சொன்னால் உடனே கோவிச்சுக்கிறாங்க?னு யோசிக்கிறீங்களா? நாட்டுப்பற்று அப்படிம்பாங்க.

  அப்படினா?

  சாக்கடையில் வாழ்ந்தாலும் அதுதான் எனக்கு சந்தனம்னு சொல்லணும்! அதுதான் நாட்டுப்பற்று

  ஆமா, எதுக்கு இந்த நாட்டுப்பற்று?? அதெல்லாம் தெரியாது.

  Just let it go, madurai tamilan! Even Gandhi was murdered in dhanabhalan's India! You and I are no Gandhis. But these patriots are superior than Gandhi. They know how to fix their problems. Why do you care??!!

  ReplyDelete
  Replies
  1. தெருவுல மூச்சா போறவருக்கு உண்மை சுட்டுருச்சு போல அதுதான் அப்படி சொல்லி இருக்கிறார். வுடுங்க வருண். நான் பதிவிட்டு விட்டு படிக்கிறவன் படிக்கிறான் புரிஞ்சுக்கிறவன் புரிஞ்சுக்குறான் மற்றவன் எப்படியும் போறானுட்டு போற டைப்புங்க நான். நேற்று எனக்கு விடுமுறை அதுனாலதான் அவரின் கருத்துக்கு மனதில் பட்ட விளக்கம் சொல்லிட்டு இருந்தேன்.அவ்வளவுதாங்க... கருத்திட்டதற்கு நன்றிங்க

   Delete
 23. //தேர்ந்து எடுக்கும் தலைவர்கள் சட்டசபைக்கே போகாமல் கையெழுத்து மட்டும் போட்டுவிட்டு கடமையை செய்யாமல் இருக்கலாம்.//
  ராஜ்ய சபாவுக்கு போய் சும்மாதனே இருக்கப்போறோம்னு நம்ம சச்சின் ராஜ்யசபாவுக்கு போகாம கிரிக்கெட் விளையாட போயிட்டார். என்னன்னா அங்கயும் போய் சும்மாவே இருந்துட்டார்.

  ReplyDelete
 24. நம்பள்கி உங்களுக்கு ஒட்டு போட்டாரா எப்படி போட்டார் என்று தெரியவில்லை. நானும் பலமுறை முயற்சி செய்தும் முடியவில்லை. தமிழ் மணம் உங்களை தீண்டதகாதவனாக வைத்திருப்பதாக கூறி இருக்கிறீர்கள். ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது. உங்கள் வலைப்பதிவில் தமிழ் மண இணைப்புப் பட்டை மூலம் இணைத்தபின் தோன்றும் வாக்குப் பட்டை இருப்பதில்லை. சில டேம்ப்லேட்டுகளில் தமிழ்மண வாக்குப் பட்டை வேலை செய்வதில்லை. காரணம் கடந்த ஆண்டின் துவக்கத்தில் கூகிள் செய்த அதிரடி மாற்றமே!
  நீங்கள் அமெரிக்காவில் இருப்பதால் உங்கள் வலைபூ முகவரி அங்கிருந்து பார்க்கும்போது http://avargal-unmaigal.blogspot.us/ என்று தெரியும் என்று நினைக்கிறேன்.(சரிதானா?) இந்தியாவில் http://avargal-unmaigal.blogspot.in இப்படித் தெரிகிறது. ஆரம்பத்தில் http://avargal-unmaigal.blogspot.com என்று இருந்திருக்கும். எந்த நாட்டில் இருந்தாலும் http://avargal-unmaigal.blogspot.com என்று redirect ஆகும்படி செய்துவிட்டால் தமிழ்மணம் வாக்குப் படி சரியாக வேலை செய்யும். . இதற்கான வழிமுறைகளை பிரபல தொழில் நுட்ப பதிவர்கள் எழுதி இருக்கிறார்கள். நானும் கடந்த செப்டம்பர் மாதம் இது தொடர்பாக பதிவிட்டிருக்கிறேன். இதில் உங்களுக்கு ஆர்வம இல்லாமல் இருக்கலாம். என்றாலும் இந்த மாற்றத்தை செய்யும்படி அன்புடன் கேட்டுகொள்கிறேன்.
  உங்களுக்கு தெரியாததல்ல.. இருந்தாலும் மனதில் தோன்றியதை கூறி இருக்கிறேன். மன்னிக்கவும்
  முன்னணிப் பதிவர்களின் தரவரிசை பின்னிலை ஏன்...

  ReplyDelete
 25. ஹி...ஹி இப்படிலாம் ஒப்பிட தூண்டுவது அயல்நாட்டு சிண்ட்ரோம் ஆகும்.

  அறியாமையின் வெளிப்பாடு,அமெரிக்கா போன்ற தேசங்களின் உண்மை முகம் அறிய வந்தால், குப்பையாக இருந்தாலும் இந்தியா ஒன்னும் மோசமில்லைனு தோன்றும்.

  டிராபிக் சிக்னல் மதிப்பாங்க, சட்டம் மீற மாட்டாங்கன்னு சொல்லும் தேசத்தில் தான் மிக அதிகமான போதை மருந்து புழக்கம் இருக்கு,ஏன் சட்டத்துறையால் அடக்க முடியவில்லை.

  உலகிலேயே மிக அதிக கற்பழிப்புகள் நடைப்பெறுவது அமெரிக்காவில் தான்,என்ன அதுக்கு எல்லாம் போராடவோ, பெருசா செய்தியாக்கவோ மாட்டார்கள்,போலீசில் புகார்க்கொடுத்துவிட்டு அடுத்த வேலையை பார்க்கப்போயிடுவாங்க.

  ReplyDelete

 26. என்னதான் ஆதங்கங்களை வெளிப் படுத்தினாலும், இந்தியர்கள் ரத்தத்தில் ஊறிய சில குணங்களைக் கட்டுப்படுத்தமுடியாது. வெளிநாடுகளில் சட்டத்தை மதித்து நடக்கும் இந்தியர்கள் நம் நாட்டில் ஏன் அதைக் கடைபிடிக்கக் கூடாது.. இன்னொன்றும் சொல்ல வேண்டும் இங்கிருந்து அமெரிக்கா போனவர்களில் பெரும்பாலோர் தங்களை அவர்களைவிட சிறந்த அமெரிக்கர்களாகக் காட்டிக்கொள்ளத் தயங்குவதில்லை. இது குறித்து வேர்கள் என்னும் பதிவு எழுதி இருந்தேன்.

  ReplyDelete
 27. உங்க கவலை நிஜம்தான்...ஆதங்கத்தை அழகாய் வெளிபடுத்தி உள்ளீர்கள். இங்கு இருப்பவர்கள் சுதந்திரத்தை எப்படி எல்லாம் தாங்கள் வசதிக்கு ஏற்ப வளைக்க முடியுமோ அப்படியெல்லாம் செய்து கொள்வார்கள். ஆனாலும் இந்த மாதிரி அவஸ்தைகளுடன் குறை சொல்லிக்கொண்டு சந்தோஷமாய் தானே இங்கே இருக்கிறோம்...ஒன்றும் மாற்றமுடியாத கோபம் வருகிறது சில நேரங்களில்....
  என்ன செய்வது....

  ReplyDelete
 28. sir,

  not only in India ..all the third world countries are same as ugly maintaining cleanliness...i accept it...

  but the entire deveoped countries always maintain very high standards..ok..but at which one is criminal...

  giving all dirty industries in the third world countries and destroying their natural resources...etc etc

  pushing them from their villages and forest in to cities ...makes this photos possible...


  pls thank third world ....because of them only ...developed nations shining

  ReplyDelete
 29. உங்களின் கவலையும் ஆதங்கமும் தெரிகிறது. நம் நாட்டில் சுதந்திரத்தை எவ்வளவு அவரவருக்கு சாதகமாய் வளைக்க முடியுமோ அவ்வளவு வளைத்துக் கொள்வார்கள்.

  They like to live here as there is no rigid laws and if there is, there are loop holes, more flexibility in living...no other country offers you all these. We are the people used to live in this setup. we will adjust the surroundings of the country we work. but when we touch our Indian soil, we heave a sigh of relief.
  Pure Indian Democracy....

  ReplyDelete
 30. சில நேரங்களில் இப்படி ஆகிவிடுகிறது அல்லவா ? ஆனா ஒன்னு சொல்ல விரும்புகிறேன் தன் வீட்டு பிள்ளைகளை யாரவது அதிகம் பில்டப்பு கொடுத்து குறை சொன்னால் யார்க்குதான் பிடிக்கும் உங்களுக்கு பிடிக்குமா உங்க பெற்றோரை கீழ் நிலை படுத்தி பேசினால் என்னதான் அவங்க தப்பு பண்ணி இருந்தாலும் அப்படிதாங்க இதுவும் மல்லாக்கா படுத்து எச்சில் துப்பிகிற மாதிரி இல்லையா?
  அப்புறம் இங்க ஏழை பணகாரன் மட்டுமில்லை நடுத்தரவர்க்கம் என்ற மிக பெரிய இடத்தை பிடித்து கொண்ட நாடு அங்கே?இங்கே தப்பு செய்தவன் கையில கிடச்சா 10 பேருல 2 பேரு கம்முனு போவான் 3 பேரு வேடிக்கை பார்ப்பன் 5 பேரு தப்பு செய்தவனை போடு தள்ளுவாங்க இதுக்கு ஆதரவு தெரிவிச்சி ஆயிரம் பேரு வருவாங்க அங்கே ?
  உலக கொள்ளைகாரன் கொள்ளைகாக ஆயிரம் தவறுகள் அடுக்கடுகாய் செய்து தன் இடத்தை சுபிட்சமா வைத்து கொள்வது பெரிய விஷயமா ?தன் பண வலுவால் தந்திரமாய் சாகசத்தால் தானே ராஜா தானே மந்திரியாக இருப்பவனுக்கு என்ன பெரிய பிரச்சனை? ஆளுமை செய்ய, எல்லோரையும் ஆடுகளாய் பார்பவனுக்கு என்ன பிரச்சனை அடிமைகளை வழிநடத்த ஒரு பழமொழி சொல்லுவாங்க நம் நாட்டில் உங்களுக்கு தெரியாததா அற்பனுக்குவாழவந்தா அர்த்தராத்திரியில் குடைபிடிப்பான்னு சொந்தமுமில்லை பந்தமுமில்லை குடிஏறினவர்கள்தான் எனக்கு தோணுது அவன் படிப்பது பகவத்கீதை இடிக்கிறது ராமர்கோவில் என்பது போல் வாழ்ப்பவன் புரியலையா உலகத்திலேயே தான் மட்டுமே மனிதநேயத்தோடு இருப்பவன் போல் காட்டிக்குவான் ஆனா உள்ள இருந்து எல்லாருடைய மனிதநேயத்தையும் குலைப்பதற்கு வழிசெய்பவன் பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுபவன் இன்னைக்கு உலகத்தில் நடக்கும் முக்கவாசி பிரச்னைக்குஉள்குத்தே இவன்தான் நான் சொல்றேன் அதுக்குனு அங்கே நல்லதே இல்லைனு சொல்ல மாட்டேன் இங்கே கெட்டதே நடக்குதுனும் சொல்ல மாட்டேன் வீட்டுக்கு வீடு வாசபடிங்க ரொம்ப அதிகமா சொல்லி இருந்தால் பதில் சொல்லுங்க மாத்தி கொள்கிறேன் எண்ணத்தை நான் கோச்சிகிட்டு இதெல்லாம் சொல்லலைநானும் ஆதங்கத்தில்தான் எனக்கு தோணினதை சொன்னேன் திரும்பவும் வருவேன்

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog