உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Wednesday, March 20, 2013

அதிகம் சரக்கு அடித்தால் பெண்களாக மாறும் அபாயம் ( ஆண்களுக்கோர் எச்சரிக்கை )

அதிகம் சரக்கு அடித்தால் பெண்களாக மாறும் அபாயம் ( ஆண்களுக்கோர் எச்சரிக்கை )


மச்சி சரக்கு அடித்தால் சொத்து எல்லாம் அழிஞ்சுடும் என்று சொல்லுறாங்களே அது உண்மையாடா

டேய் அது உன்னை மாதிரி ஒசியிலே வாங்கி குடிக்கிறவங்க கவலைப்படற விஷயம் இல்லைடா

சரி அதை விடுடா... இந்த மதுரைத்தமிழன் அதிகம் சரக்கு அடித்தால் பெண்களாக மாறும் அபாயம் அப்படின்னு தலைப்பு போட்டு இருக்கானே அதை பற்றி என்ன நினைக்கிறே?

ஆமாம்டா அந்த சரக்குல (ஆல்கஹால்) பெண்களின் ஹார்மோனு இருக்கிறதா கண்டுபிடிச்சிருக்கிறங்கடா

டேய் நீ உண்மையாகதான் சொல்லுறாயாடா?

ஆமாம் டா அது உண்மைதான்

நீ வேணும்னா கொஞ்சம் அதிகமாக சரக்கு காசு கொடுத்து வாங்கி அடிச்சு பாரு...அதன் பின்னால் நீ பெண்களைப் போல அதிகமா வள வள என்று பேச ஆரம்பிப்பாய். அதன் பின் காரை நீயே ஒட்டி வீட்டுக்கு செல் பெண்கள் போல  உன் டிரைவிங்கும் மோசமாக இருக்கும் . பெண்கள் தங்கள் மாமியாரை பற்றி பாட்டு பாடுவது போல நீயும் உன் பொண்டாட்டி, உன் மேனேஜர் போன்றவர்களைப் பற்றி பாட்டு பாட ஆரம்பித்து விடுவாய்


அன்புடன்
மதுரைத்தமிழன்

டிஸ்கி : கடந்த ஞாயிற்று கிழமை என் மனைவியுடன் வேலை பார்க்கும் ஒருவர் இந்தியா போய் செட்டில் ஆவதால் அவருக்கு என் வீட்டில் வைத்து பேர்வெல் பார்ட்டி நடந்தது அதனால் அவருடன் வேலை பார்ப்பவர்கள் குடும்பத்தினருடன் வந்தனர். இந்த குருப்பில் வந்தவர் அனைவரும் குடிக்காதவர்கள் . ஆனால் குடிக்காமல் இவர்கல் பேசிய பேச்சு குடிகாரர்களின் பேச்சை தூக்கி சாப்பிட்டுவிட்டது .

இந்த வாரம் தண்ணிருக்கு லீவு..ஹூம் கடவுள் என்னை பழிவாங்கி விட்டார் . அதனால் நான் விட்ட சாபமோ என்னவோ கடவுள் எனக்கு பயந்து அமெரிக்காவில் இருந்து இந்தியாவில் செட்டிலான எனது நண்பரின் குடும்பம் வெகேஷனுக்கா இங்கே இந்த வார இறுதியில் என் வீட்டிற்கு வருகிறார்கள். அவர்கள் வருவதால் மீண்டும் என் வீட்டில் பார்ட்டிதான் இந்த பார்ட்டியில் நல்ல பசங்க எல்லாம் கலந்துக்குவாங்க... எஞ்சாய் பண்ணி விட்டு அதைப்பற்றி எழுதுகிறேன்

No comments :

Post a Comment

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog