Tuesday, March 12, 2013





இந்தியர்கள் சரியான ஏமாளி பசங்களடா என்று உலகம் சிரிக்கும் நிலைமைக்கு இத்தாலி நம்மை இட்டு செல்லுகிறதா?

2 Italian Soldiers Won't Return to India for Trial

 

மக்களின் உயிரை பாதுகாக்கும் இத்தாலியும் மக்களின் உயிரை பலிகாடாவாக்கும் இந்தியாவும் ( வெட்கம் கெட்ட இந்திய தலைவர்கள்)

இந்திய மீனவர்களை சுட்டு கொன்ற இத்தாலிய கடற்படை வீரர்களை, இனி ஒருபோதும்  திருப்பி அனுப்ப முடியாது என இத்தாலி  திட்டவட்டமாக தெரிவித்து விட்டது.

கடந்த வருடம் இந்திய மீனவர்கள் இருவரை சுட்டு கொன்ற விவகாரம் தொடர்பாக இத்தாலிய கடற்படையை சேர்ந்த மேஸிமில்லியானோ லட்டோரே,சல்வோட்டர் ஜிரோன் எனும் இருவரை கேரள போலீசார் கைது செய்தனர்.கப்பலையும் பறிமுதல் செய்தனர். இவர்கள் மீது வழக்கு தொடுத்த குடும்பதினரிடம் பணத்தை கொடுத்து வழக்கை வாபஸ் செய்ய இத்தாலிய அரசாங்கம் முயன்றது. அப்போதே பணத்திற்க்காக இந்திய மக்களின் உயிர் எளிதாக விலைப் போகப் போகிறேதே என்று மக்கள் பேசி காரித்துப்பினர். அதன் வீளைவாக அதிகார வர்க்கத்தின் ஆலோசனையின் பேரில் ஒரு நாடகம் போடப்பட்டது அதன் படி இது தொடர்பான வழக்கு நடந்து வரும் வேளையில்,கிறிஸ்துமஸை கொண்டாடுவதற்காகவும், நாட்டின் பொது தேர்தலில் வாக்களிப்பதற்காகவும் இருவரையும் இத்தாலி செல்ல ஜாமினில் அனுமதிக்க வேண்டும் என இத்தாலி அரசாங்கம் கோரிக்கை  விடுத்தது.

  இந்தியாவை ஆளும் இத்தாலிய அன்னையின்  ஆணையோ அல்லது என்ன மாயமோ தெரியவில்லை இருவரும் உடனே தாய்நாடு இத்தாலி  செல்ல அனுமதிக்க பட்டனர். குறிப்பிட்ட காலத்திற்குள் இருவரையும் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என நிபந்தனையுடன் அனுமதி அளிக்கப்பட்டது ..

 இதனை அடுத்து அவர்களை மிக   இராஜ மரியாதையுடன் அனுப்பி வைக்கபட்டனர். இதற்கு இந்தியாவில் கடும் கண்டனங்கள் கிளம்பின.

  இந்நிலையில் இத்தாலி வெளியுறவு துறை அமைச்சகம் இன்று( திங்கள் ) வெளியிட்ட அறிக்கையில், இந்தியா சர்வதேச சட்டத்தை மீறி எங்கள் நாட்டவரை இந்தியாவில் வைத்து விசாரிக்கிறது. அதனால் இந்த இரு வீரர்களையும் திருப்பி இந்தியாவிடம் ஒப்படைக்க முடியாது. மீனவர்கள் கொல்லபட்ட விவகாரத்தை தூதரக ரீதியில் பேசி தீர்த்துகொள்வோம் என்கிற எங்களது கோரிக்கையை இந்தியா கண்டுகொள்ளவே இல்லை என குற்றம் சாட்டியிருக்கிறது. இதனால் இருவரும் காலகெடு முடிந்தாலும் திரும்பி இந்தியா செல்ல மாட்டார்கள் என மிகதெளிவாகவும் உறுதியாகவும் சொல்லி விட்டது ,

  இது சர்வதேச அளவில்  இத்தாலியால் இந்தியாவிற்கு ஏற்பட்ட  மிகபெரிய அவமானமாகும் , இதற்கு இந்தியாவின் சூப்பர் நடிகர்களான இத்தாலிய அன்னையும் மெளன சாமியாரான சிங்கும்  என்ன பதில் சொல்ல போகிறார்கள்.

சுட்டுக் கொல்கிறவனைக்கூட காப்பாற்ற அரசாங்கம் இருக்கிறது. ஆனால் சுடபட்டு சாகிற தமிழக மீனவர்களுக்கு மட்டும் எந்த அரசாங்கமும் இல்லை. என்ன அரசாங்கமடா இது


இந்தியன் என்று சொல்வதற்கு கூட இனிமேல் வெட்கப்பட வேண்டுமோ?


அன்புடன்
மதுரைத்தமிழன்
12 Mar 2013

4 comments:

  1. கண்டிப்பாக நாம் அனைவரும் இந்தியன் என்று சொல்வதையே வெட்கமாக தான் நினைக்க வேண்டும்!!!அப்படி ஆகி போய் விட்டது நம் நாட்டின் நிலை........!!!


    நன்றி,
    மலர்
    http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    ReplyDelete
  2. என்ன கொடுமை சார் இது! பிறந்த நாட்டுக்கு தனது விசுவாசத்தை காட்டி இருப்பார்களோ? பொதுவாகவே தமிழர்கள் விசயத்தில் இந்த அரசாங்கம் ஓர வஞ்சனைதான் செய்கிறது. ஆனால் இதெல்லாம் ஓவர்! தினமும் கொலை, ரேப், அதற்கு சரியான சட்ட நடவடிக்கை இல்லை, மீண்டும் மீண்டும் அதே தவறைதான் சில மனித உருவின் மிருகங்கள் செய்து வருகிறது.

    என்ன தேசம்டா இது! இனி பாதுகாப்பிற்காக எல்லோர் கையிலும் துப்பாக்கி கொடுக்க வேண்டும்.

    ReplyDelete
  3. இத்தாலி அரசாங்கம் நீதிமன்றம் முதலில் சொன்ன எல்லா நிபந்தனைகளையும் ஏற்று கொண்டதே ஒரு நாடகம் ஏன் தெரியுமா , பெருலோச்கொனி ராஜினாமா செய்த பிறகு அங்கு இருந்தது இடைக்கால அரசு ஆட்சியில் இருந்தவர்களுக்கு பெருலோச்கொனி போல பிரபலமும், தொண்டர் பலமும் இல்லை , ஒட்டு கிடைக்க வேண்டுமே, அனுதாப அலையை தூண்டி தேர்தலில் வெற்றி பெற செய்த தந்திரம் தான் இரண்டு முறை அவர்களை தனி விமானத்தில் கொண்டு போய் கொண்டு வந்தார்கள் , இப்போது தேர்தல் முடிந்து விட்டது ஆட்சியில் இருந்தவர்களுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை ஆனால் எதிர் பார்த்ததை விட அதிக இடங்கள் கிடைத்துள்ளன. இனிமே யாரு சட்டம் நீதி பற்றி கவலை பாட போகிறார்கள். இப்போ புரியூதா பிட்சா பார்டி நம்மளை வச்சு காமடி பண்ணியிருகிறாங்கன்னு.

    ReplyDelete
  4. நாட்டின் தலைமையே இத்தா[லி]ளியாக இருக்கும்போது நாம் என்னய்யா செய்யமுடியும்...?

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.