Sunday, March 24, 2013







மக்களின் உணர்வில் பரமபதம் விளையாடும் ரஜினிக்கு இரக்க முகமா அல்லது இறங்குமுகமா ?

நீலச் சாயம் வெளுத்து போச்சு டும் டும்டும் ராஜா வேஷம் கலைஞ்சு போச்சு டும் டும்டும் என்பது போல ரஜினியின்  வேஷம் கலைந்து கொண்டிருக்கிறது

ரஜினிகாந்தின் அபிப்ராயங்கள் என்ற வாய்ஸ் அபத்தங்கள் தமிழக மக்களின் அரசியல் சமூக வாழ்க்கையில் உள்ள எத்தனையோஅபத்தங்களில் ஒன்றாகிவிட்டது  . இதை பலமுறை கேட்டாகிவிட்டது. ஒவ்வொரு முக்கிய பிரச்சினைகளிளும் அவரது வாய்ஸ்களையும் மெளனத்தையும் அர்த்தம் காண முயலும் அவரது ரசிகர்கள் அனைவரையும் பொதுமக்களையும்  பல நேரங்களில்  அவர் தவிடு பொடியாக்கிவிடுகிறார்

ரஜினியின் ரசிகர்களுக்கு இருக்கும் தன்னம்பிக்கை  ரஜினிகாந்திற்கு  ஒருபோதும் இருந்ததில்லை. பொது பிரச்சனைகளில் கூட தனது கருத்து இதுதான் என்று சொல்ல முடியாத கோழை அவர். அப்படியே சொன்னாலும் சந்தர்ப்பம் வரும்போது அவரது நிலைப்பாடுகள் மாறிவிடுகிறது என்பது கடந்த கால நிகழ்வுகளை பார்க்கும்  அனைவருக்கும் நன்றாக தெரிந்து இருக்கும்

ரஜினி தனது தொழிலையும் அதனால் கிடைக்கும் வருமானத்தையும்  & நண்பர்களயும் நேசிக்கும்  ஒரு சாதாரண மனிதர்தான். ஆனால் அப்படிபட்ட ஒரு நடிகரை  இந்த தமிழ் மக்கள் தமிழகத்தை மாற்ற வந்த ஒரு சமுதாய தலைவனாக கருதி கனவு கண்டு வந்திருக்கிறது. அதை தவறு என்றும் சொல்ல முடியாது காரணம் பல தலைவர்கள் நடிகர்களாக இருந்து சமுதாய தலைவர்களாக மாறி இருக்கிறார்கள் அது தமிழகத்தில் மட்டுமல்ல அமெரிக்காவில் கூட நடந்திருக்கிறது. அது போல நிஜவாழ்க்கையில் கெட்டவர்களாக  இருந்த பலர் நாளு பேர் தன்னை  நல்லவனாக கருத வேண்டும் என்று வேஷம் போட்டு வாழ்க்கையை துவங்கிய பலர் நாளாவட்டத்தில் நல்லவனாகவே மாறிவிடும் சம்பவங்கள் பல நடந்து இருக்கின்றன ஆனால் நல்லவனாக வேஷம் போட்ட ரஜினியோ தனது சுயநலம் என்ற குறுகிய மனப்பானமையால் தரம் தாழ்ந்த மனிதராக பலரின் பார்வைக்கு மாறிக் கொண்டிருக்கிறார்.
அவரது சுயநலம் என்ற குறுகிய மனப்பான்மையால் தான் தனது குடும்பம் தனது நண்பர்கள் தனது வருமானம் என்று வாழ்ந்து வரும் அவர் பொதுநலத்தை பற்றி கவலைப்படுவதில்லை அப்படியே அவர் பொதுநலத்தை பற்றி கவலைப்படுகிறார் என்றால் அதில்  அவரது சுயநலம் நிச்சயம் கலந்து இருக்கும்

அப்படிபட்ட ஒருவர் ,தனது நண்பர் சஞ்சய்த்துக்கு நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு அவரை மிகவும் பாதித்துள்ளது என்று சொல்லி இருக்கிறார். ஒரு நடிகன் தன சக நடிகனும் நண்பருமான ஒருவருக்கு குரல் கொடுக்கிறான்  என்றால் சரிதானே அதில் தவறில்லையே .... இதை மக்கள் புரிந்து கொண்டால் சரி . அதைவிட்டு விட்டு அவர் பொதுப் பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்கவில்லை என்று அந்த சுயநலவாதிக்கு கண்டனம் தெரிவிப்பது எந்த விதத்தில் நியாயம் . பொது நலத்தைவிட தமது சுயநலம் மிக முக்கியம் என்பதில் ரஜினி மிக உறுதியாக இருக்கிறார் அது தவறு இல்லை என்பது அவரது நிலைப்பாடு அதை குறை கூற யாருக்கும் தகுதி இல்லை.

ஆனால் பொதுமக்கள் ஒன்று செய்யலாம் அவர்களும் சுயநலவாதிகளாக மாறலாம். அப்படி மாறி பொது நலத்தில் அக்கறை இல்லாத ஒருவர் வாழ்க்கையில் உயர நாம் ஏன் உதவி செய்யவேண்டும் என்று நினைத்து இனி வரும் அவரது படங்களை தோல்வி அடைய செய்யாலாம். அப்படி செய்ய உங்களுக்கு துணிவிருக்கா? துணிவிருந்தா செய்துகாட்டி தமிழ் மக்கள்கள் முட்டாள்கள் இல்லை என்று இந்த உலகுக்கு எடுத்துகாட்டுங்கள் அது முடியுமா உங்களுக்கு?


ஈழத் தமிழர்களே! ஈழத் தமிழர்களை ஆதரித்து போராடும் தமிழக இளைய மாணவ சமுதாயமும் & தமிழ் பேசும் உலகத தமிழ் மக்களே ஈழத தமிழர்களுக்காக உதவி கூட செய்ய வேண்டாம் ஆனால் ஒரு வருத்தத்தை கூட பதிவு செய்யாத இவரின் படத்தை பார்த்து நீங்கள் ஆதரித்து அவரை இன்னும் ஏறு முகத்தில் ஏற்றப் போறிர்களா அல்லது பதமபத விளையாட்டில் உள்ள பாம்பு கிழே கொண்டு வரும் இறங்கு முகத்தை அவருக்கு கொடுத்து அவரின் சுயநல வேஷத்தை கலைக்கப் போகிறீர்களா?

நன்றாக யோசியுங்கள் மானம் உள்ள மக்களே


நான் இணையத்தில் படித்த செய்தியும் அதனை ஒட்டி சிலர் சொன்ன கருத்துக்களும் பெட்டிச் செய்தியாக கிழே காணலாம்

சஞ்சய் தத்துக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை கேட்டதும் மன வேதனை அடைந்ததாக ரஜினி காந்த் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'என் இனிய நண்பர் சஞ்சய் தத்துக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை கேட்டதும் மிகுந்த மனவேதனை அடைந்தேன். அவருக்கு மன்னிப்பு வழங்க வேண்தும் என்ற கோரிக்கை சமீபத்தில் அதிகரித்து வருகிறது என்பது எனக்கு நம்பிக்கை அளிப்பதாக உள்ளது. இதிலிருந்து விடுப்பட்டு மீதி வாழ்க்கையை அவர் அமைதியாக வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்

----
ஈழத் தமிழர்கள் கொத்து கொத்தாய் மடிந்த பொழுதும்,தமிழகமெங்கும் மாணவர்கள் உண்ணாவிரதம் இருந்த பொழுதும்,சிங்கள கடற்படையால் நம் சகோதரர்கள்,நம் தமிழ்நாட்டு மீனவர்கள் இறந்த பொழுதும் வெளி வராத அறிக்கை,தமிழர்களை துச்சம் என நினைக்கும் வட இந்தியர்களில் ஒருவனான இந்தி நண்பன் செய்த தவறுக்காக சிறை தண்டனை பெரும் பொழுது உனக்கு பொறுக்கவில்லை.மானம் கெட்டவனே மதி இழந்தவனே இன்னும் ஏன் தமிழ்நாட்டில் இருக்கிறாய்.அங்கு சென்று அவனுடன் சிறை தண்டனை அனுபவி.அறிக்கை விடுகிறானாம் அறிக்கை.பேடி பயலே செத்து மடி.காவிரியில் தண்ணீர் தராத பொழுது எங்கேடா போனாய்.அவனை தலைவன் என கூறிக் கொண்டு திரியும் சகோதரர்களிடம் அவனை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.வேண்டாம் சினிமா மோகம்.உங்கள் தாய் தந்தையரின் வேர்வை சிந்தி உழைத்த பணத்தை கொண்டு அவன் போன்றோரை வசதியாக வாழ செய்ய வேண்டாம்..
===============
ரஜினிக்கு மூளை இல்லியா?சுப்ரீம் கோர்ட்டு தீர விசாரித்து,அளித்த தண்டனையை ரத்து செய்யணுமாம்.மக்களே இதிலிருந்தே அவரோட உண்மையான முகம் தெரியுது.சட்டத்துக்கு புறம்பான காரியம் செய்யும் பாலிவூட் காரர்களுக்கு கொடி பிடிப்பாருன்னு.இங்க தெனம் நம்ப மீனவர்கள் இலங்கை கப்பல் படையிடம் அடி வாங்கி சாகிறான்,அது பெற்றி கேட்க ஒரு துப்பும் இல்லை.சஞ்சய் தட்டுக்கு வக்காலத்து வாங்குறார் வெக்கமில்லாம.இவருக்கு வேதனை அளிக்குதாம்..நம்ப வேதனையே இப்படிப்பட்ட புல்லுருவிகளால் தான்..



அன்புடன்
மதுரைத்தமிழன்

7 comments:

  1. எதிர்ப்புகள் பல இடங்களிலும் அதிகமாகின்றன என்பது உண்மை...

    எல்லாவற்றிக்கும் மனசு வேண்டும்... இது இல்லை என்று தெரிந்த பின்பும், அதைப்பற்றி பேசி எவ்வித பிரயோசனமும் இல்லை... ரசிகனாக இருந்தாலும் மாறலாம்... கண்மூடித்தனமான வெறியனாக இருந்தால்...?

    ReplyDelete
  2. மானமுள்ள தமிழர்களே இனிமேல் ரஜினி படம் பார்க்காதீர். கமல் படம் விஜய் படம் மட்டும் பாருங்கள். நீங்கள் தமிழன் என்பதை நீருபியுங்கள்.

    ReplyDelete
  3. தமிழர்கள் வாழ்ந்தால் என்ன செத்தால் என்ன என் படம் பார்க்க மட்டும் உயிருடன் இருந்தால் போதும். கேடுக்கெட்ட செயலினை செய்து சிறைக்கு செல்பவன்மீது இரக்கமா. நம் தமிழர்கள் என்ன மாறவா போகிறார்கள். பால் ஊத்தவும், கொடிக்கட்டவும், கற்பூரம் ஏற்றவும் கோச்சடையன் ரீலிசுக்கு காத்துகொண்டிருக்கிறோம். தலைவர் வாழ்க....

    ReplyDelete
  4. இவங்கள திருத்த முடியதுன்னே பாருங்க மொத நாளே போயி நிப்பானுங்க

    ReplyDelete
  5. maanagetta moodargalaana thamizhargalukku enna arivurai sonnalalum maramandaikku ettaadhu evargal ippadi iruppadhaal dhaan andhiraavil ilangai thamizhargal nilamaikkaaga porada anumadhi kettapodhu ange irukkum andhira adhigaari oruvar thamizhanukku thamizhagaththil poraadu inge alla ena kooriyullaar marupadiyum solgiren indha kooththadigalukku palootrum kazhizaadai thamizhargal irukkum varai namkku avamaaame nandri

    ReplyDelete
  6. ம்ம்ம் யோசிக்க வேண்டிய விஷயம் தான்

    ReplyDelete
  7. நீங்கள் சொல்வதில் ஓரளவு நான் ஒத்துப் போகிறேன் நண்பரே...ஆனால் இப்படி யோசித்துப் பாருங்கள்...

    எந்தவித அரசியல்,சினிமா பின்புலம் இல்லாமல் தன்னெழுச்சியாக உருவானது இந்தப் போராட்டம்.இதில் எல்லா மதம்,சாதி,கட்சி,நடிகனின் விசிறிகள் என்று ஒட்டுமொத்தமாக திரண்டுள்ளனர்.சரியான பாதையில் பயணிக்கும் மாணவர்களின் இந்த போராட்டத்தில் அரிதாரம் பூசிய நடிகனின் ஆதரவு குரல் எதற்கு. ரஜினி வாய்ஸ் கொடுத்துதான் இந்தப் போராட்டத்தில் வலு சேர்ப்பது நாம் சினிமா மோகத்திலிருந்து இன்னும் விடுபடவில்லை என்பதை நிருபிக்காதா...

    ஒருவேளை நடிகர்கள் குரல் கொடுத்தால் போராட்டத்தின் திசையே வேறுபக்கம் செற்றுவிடாதா...நெய்வேலி போராட்டம் அப்படித்தானே ஆனது.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.