Wednesday, March 20, 2013




avargal unmaigal



அதிகம் சரக்கு அடித்தால் பெண்களாக மாறும் அபாயம் ( ஆண்களுக்கோர் எச்சரிக்கை )


மச்சி சரக்கு அடித்தால் சொத்து எல்லாம் அழிந்திடும் என்று சொல்லுகிறார்களே அது உண்மையாடா?

டேய் அது உன்னை மாதிரி ஓசியிலே வாங்கிக் குடிக்கிறவங்க கவலைப்படற விஷயம் இல்லைடா
 
சரி அதை விடுடா... இந்த மதுரைத்தமிழன் அதிகம் சரக்கு அடித்தால் பெண்களாக மாறும் அபாயம் அப்படியென்று தலைப்பு போட்டு இருக்கிறானே அதைப் பற்றி என்ன நினைக்கிற?

ஆமாம்டா அந்தச் சரக்குல (ஆல்கஹால்) பெண்களின் ஹார்மோனு இருக்கிறதா கண்டுபிடிச்சிருக்கிறங்கடா

டேய் நீ உண்மையாகத்தான் சொல்லுறாயாடா?

ஆமாம் டா அது உண்மைதான்

நீ வேண்டுமானால் கொஞ்சம் அதிகமாகச் சரக்கு காசு கொடுத்து வாங்கி அடித்து பாரு...அதன் பின்னால் நீ பெண்களைப் போல அதிகமா வள வள என்று பேச ஆரம்பிப்பாய். அதன் பின் காரை நீயே ஒட்டி வீட்டுக்குச் செல்லும் பெண்கள் போல உன் டிரைவிங்கும் மோசமாக இருக்கும் . பெண்கள் தங்கள் மாமியாரைப் பற்றிப் பாட்டுப் பாடுவது போல நீயும் உன் பொண்டாட்டி, உன் மேனேஜர் போன்றவர்களைப் பற்றிப் பாட்டுப் பாட ஆரம்பித்து விடுவாய்


அன்புடன்
மதுரைத்தமிழன்

டிஸ்கி : கடந்த ஞாயிற்றுக் கிழமை என் மனைவியுடன் வேலை பார்க்கும் ஒருவர் இந்தியா போய்ச் செட்டில் ஆவதால் அவருக்கு என் வீட்டில் வைத்து பேர்வெல் பார்ட்டி நடந்தது அதனால் அவருடன் வேலை பார்ப்பவர்கள் குடும்பத்தினருடன் வந்தனர். இந்தக் குருப்பில் வந்தவர் அனைவரும் குடிக்காதவர்கள் . ஆனால் குடிக்காமல் இவர்கள் பேசிய பேச்சு குடிகாரர்களின் பேச்சைத் தூக்கிச் சாப்பிட்டுவிட்டது .

இந்த வாரம் தண்ணீக்கு லீவு..ஹூம் கடவுள் என்னைப் பழிவாங்கி விட்டார் . அதனால் நான் விட்ட சாபமோ என்னவோ கடவுள் எனக்குப் பயந்து அமெரிக்காவிலிருந்து இந்தியாவில் செட்டிலான எனது நண்பரின் குடும்பம் வெகேஷனுக்கா இங்கே இந்த வார இறுதியில் என் வீட்டிற்கு வருகிறார்கள். அவர்கள் வருவதால் மீண்டும் என் வீட்டில் பார்ட்டிதான் இந்தப் பார்ட்டியில் நல்ல பசங்க எல்லாம் கலந்துக்குவாங்க... எஞ்சாய் பண்ணி விட்டு அதைப்பற்றி எழுதுகிறேன்
20 Mar 2013

0 comments:

Post a Comment

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.