Wednesday, January 12, 2011


ஸ்மார்ட் பதிவாளர்கள் என்று யாரும் இங்கே இருந்தால் என் கேள்விக்கு பதில் சொல்லவும்


துன்பங்கள் வரும் போது
கடவுளையும் அழைத்து
எனக்கு ஏன் இப்படி நேர்ந்தது,
ஏண்டா என்னை இப்படி படுத்துற
என்று கேள்வி கேட்கும் மனிதர்கள்.

இன்பங்கள் வரும் போது
பக்கத்தில் இருப்பவர்களையும்
கண்டும் காணாமல் இருப்பது ஏன்?

சந்தோசம் வரும் போது
கடவுளை அழைத்து ஏண்டா
என்னை இப்படி சந்தோசப்படுத்துற என கேள்வி கேட்பதில்லை?
அது ஏன்??????


எனக்கு புரியவில்லை? புரிந்தவர்கள் பதில் சொல்லவும்.








சக பதிவாளர் ஹுசைனம்மா   அவர்கள் எழுதிய நம்பிக்கை மருந்து என்ற பதிவை படித்த பின் என் மனதில் ஒரு பயம் வந்தது. அப்போது கடவுளைப் பற்றிய  சிந்தனை எழுந்தது அதனால் மனதில் பிறந்த சிந்தனையின் விளைவே இந்த பதிவு.











அன்புடன்,
மக்கு பையபுள்ள,

8 comments:

  1. நான் ஸ்மார்ட் பதிவரா இல்லையா என்று தெரியாது... ஆனால், எனக்கு தெரிந்த வரை - ஏற்றி விட்ட ஏணியை எட்டி உதைப்பதும் - புகழ்/பண போதையில் மயங்கி கிடப்பதும் பல மனிதர்களுக்கு சகஜம் தானே! அதே treatment தான் கடவுளுக்கும் போல.

    ReplyDelete
  2. ஹலோ சித்ரா மேடம் உங்களுக்கு ரொம்பவே தன்னடக்கம்தான். நான் கூப்பிட்டது ஸ்மார்ட் பதிவாளர் , ஆனால் நீங்கள் சூப்பர் ஸ்மார்ட் பதிவாளர். நல்ல பதில்....வருகைக்கு நன்றி

    ReplyDelete
  3. நான் இல்லிங்கோ எஸ்கேப்....

    அன்புச் சகோதரன்...
    மதி.சுதா.
    ஒழித்தோடும் அசினும் 109 நாள் துரத்தலும்..

    ReplyDelete
  4. ஐய்யோ....

    சத்தியமா நான் இல்ல....

    ஸ்மார்ட் பதிவாளர்கள் எங்கேயிருந்தாலும் சீக்கிரம் வரவும்......

    ReplyDelete
  5. சித்ரா மேடம் சொன்னதை வழிமொழிகிறேன்... சந்தோஷமாக இருக்கும்போது எதுவுமே கண்ணுக்கு தெரியாது... சிலர் தங்களது வேண்டுதல்கள் நிறைவேறியதற்காக நேர்த்திக்கடன் செலுத்துகிறார்களே...

    http://www.philosophyprabhakaran.blogspot.com/

    ReplyDelete
  6. அருமையான கேள்வி.....
    சூப்பர்ஸ்மார்ட் சித்ரா அக்காவின் பதிலையே நானும் வழிமொழிந்து அமைதியாக சென்றுவிடுகிறேன்.... அப்போ நான் ஸ்மார்ட்தானே!! :-))

    ReplyDelete
  7. சித்ரா அவர்களின் பதில் தான் என்னிதும்...ஆனால் நான் மொக்கை பதிவாளர் என்பதை கர்வத்துடன் கூறி கொள்கிறேன்...:)))

    ReplyDelete
  8. சமீபத்துல ஒரு பதிவு படிச்சேன் (ரியாஸின் பதிவுன்னு நினைக்கிறேன்). ஒரு புகழ்பெற்ற விளையாட்டு வீரர்; ஒரு சிகிச்சையின்போது தவறான ரத்தம் கொடுத்ததால எய்ட்ஸ் வந்துடுது. அப்போ அவர்கிட்ட “why me?"ன்னு ஆண்டவன்கிட்ட கேட்டுருக்கீங்களான்னு கேட்டப்ப, அவர் சொன்னாராம், ‘எனக்கு கணக்கில்லாத வெற்றிகளும், புகழும், பணமும் வந்தபோது நான் “why me?"ன்னு கேக்கலையே. இப்ப மட்டும் எப்படி கேக்கிறது’ன்னு சொன்னாராம்.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.