Wednesday, January 5, 2011

தெலுங்கு பையனிடம் பெயரைக் கேட்ட அமெரிக்கருக்கு நேர்ந்த விபரீதம்.


எச்சரிக்கை எச்சரிக்கை ...இந்த பதிவை தனியாக உட்கார்ந்து படிக்க வேண்டாம்.

தமிழ் தெரிந்த ஒரு தெலுங்கு பையன் சென்னையில் உள்ள கம்பியூட்டர் கம்பெனியில் வேலை பார்த்து வந்தான். அவனுக்கு

அமெரிக்கா செல்ல வேண்டும் என்ற ஆசை. அதனால் அமெரிக்காவில் உள்ள பழக்க வழக்கங்களை நெட் மூலம் கற்று வந்தான்.

அப்போது அவன் நம் சக பதிவளார் திருமதி.சித்ரா அவர்களின் கொஞ்சம் வெட்டிப்பேச்சு என்ற ப்ளாக்கில் ஆண்களின் டிரெஸ் என்ற பதிவை படித்த பின் அதனுடைய பாதிப்பால் எதை பேசினாலும் அமெரிக்கர்கள் பேசுவது போல பேச வேண்டும் என்று முடிவு செய்தான். நேற்று அவன் கம்பெனியில் திடீர் என்று முடிவு செய்து அவனை அமெரிக்கா அனுப்பிவைத்தனர். அவனும் ப்ளைட்டில் உட்கார்ந்து அருகில் உள்ளவரை பார்த்தான் அவர் அமெரிக்கர் போல இருந்ததால் அவரிடம் பேச முடிவு செய்தான். பழக்க தோஷத்தில் வாட்ஸ் யுவர் குட் நேம் என்று கேட்க போனான். சட்டென்று சித்ரா அவர்களின் ப்ளாக்கில் அப்படி கேட்க கூடாது என்று படித்து ஞாபம் வர உடனே கண்ட்ரோல் செய்து வாட்ஸ் யுவர் நேம் என்று கேட்டான். அதற்க்கு அந்த அமெரிக்கரோ என் பெயர் பாண்ட்... ஜேம்ஸ் பாண்ட் என்று சொன்னார். பிறகு அவர் இவனிடம் உன் பெயர் என்னவென்று கேட்டார். அதற்கு அவன் பெயரை இப்படித்தான் பிரித்து 2 முறை சொல்லவேண்டும் என்று கருதி அவரைப்போல சொல்லத் தொடங்கினான்.

என் பெயர் சாய்....

வெங்கட சாய்......

சிவ வெங்கட சாய்......

லக்ஷிமிநாராயண சிவ வெங்கட சாய்......

ஸ்ரீனிவசலு லக்ஷிமிநாராயண சிவ வெங்கட சாய்.......

ராஜாசேகர ஸ்ரீனிவசலு லக்ஷிமிநாராயண சிவ வெங்கட சாய்.........

சீத்தாரமன்ஜனயுல ராஜாசேகர ஸ்ரீனிவசலு லக்ஷிமிநாராயண சிவ வெங்கட சாய்.......

பூமிராஜூ சீத்தாரமன்ஜனயுல ராஜாசேகர ஸ்ரீனிவசலு லக்ஷிமிநாராயண சிவ வெங்கட சாய்........ என்று சொல்லி முடித்து பார்த்தால் இதை கேட்டஅந்த அமெரிக்கர் மயங்கி விழுந்து கிடந்தார்.

என்னங்க நீங்களும் மயங்கிவிட்டிர்களா? அதற்கு நான் பொறுப்பு அல்ல..

*** ***என் கூட மதுரைக்கல்லூரியில் எக்கனாமிக்ஸ் படித்த பையனின் முழு பெயர் "கணபதி ஹரிகர சங்கர சுப்புர மணியன்." இதுதான் எனக்கு தெரிந்த நீளமான பெயர். உங்கள் கூட படித்தவரின் பெயர் அல்லது நண்பர்களின் பெயர் இதைவிட பெரிதாக இருந்தால் அவரின் பெயரை பின்னுட்டமாக போடலாம்.*******

அன்புடன்,

22 comments:

  1. எப்பா..............

    பால ரஞ்சித் குமார்

    இதையே பெருசுன்னு சொல்லி எங்க சார் அந்த பையனை கேலி செய்த ஞாபகம்!!!!!

    ReplyDelete
  2. ஹ ஹ...செம லொள்ளுங்க உங்களுக்கு...செமையா காமடி...:)))

    ReplyDelete
  3. ha,ha,ha,ha,ha,ha....

    To contribute:

    The award for the longest name for a person belongs to a German immigrant to Philadelphia (USA) , Pennsylvania. The name he was given at birth, and which somehow fit on his passport was:

    (First and "middle" names)
    Adolph Blaine Charles David Earl Frederick Gerald Hubert
    Irvim John Kenneth Loyd Martin Nero Oliver Paul Quincy
    Randolph Sherman Thomas Uncas Victor Willian Xerxes Yancy
    Zeus

    (Last name)
    Wolfeschlegelsteinhausenbergerdorffvoralternwarengewissenhaf
    tschaferswesenchafewarenwholgepflegeundsorgfaltigkeitbeschut
    zenvonangereifenduchihrraubgiriigfeindewelchevorralternzwolf
    tausendjahresvorandieerscheinenbanderersteerdeemmeshedrraums
    chiffgebrauchlichtalsseinursprungvonkraftgestartseinlangefah
    rthinzwischensternartigraumaufdersuchenachdiesternwelshegeha
    btbewohnbarplanetenkreisedrehensichundwohinderneurassevanver
    standigmenshlichkeittkonntevortpflanzenundsicherfreunanleben
    slamdlichfreudeundruhemitnichteinfurchtvorangreifenvonandere
    rintlligentgeschopfsvonhinzwischensternartigraum

    Senior

    In case you didn't notice, he has one given name for every letter of the alphabet plus his surname. Needless to say, he shortened it, and was commonly known as Mr. Hubert Wolfe, though officially it was said that he signed his name Hubert Blaine Wolfeschlegelsteinhausenbergerdorff, Sr.

    http://everything2.com/title/Longest+names

    ReplyDelete
  4. One of my colleague name:

    Raja Rajeswara Palani Vel

    ReplyDelete
  5. இராஜாதி இராஜ இராஜ குலோத்துங்க காத்தவராய கிருஷ்ண.....

    ன்னு மன்சூர் அலிகான் பேரு வச்சு நடிச்சாரு

    ReplyDelete
  6. பதிவு அருமை பாஸ்!

    சாம்பார் காபி போல இருந்தது.

    (சாம்பார் வடை மாதிரி புதுசு நீங்க அமெரிக்கா போனப்பறம் கண்டுபுட்சது, அடையார் கிராண்ட் ஸ்வீட்ஸ்-ல கிடைக்கும்)

    சந்தனவீரராமுலு
    அ(வ/னா)னியாபுரம்

    ReplyDelete
  7. நம்ம பேரு சின்னதா இருந்தாலும், அதை, அப்பா பேரு, குடும்பத்துப் பேரு சேத்து பாஸ்போர்ட்டில எழுதும்போது ஒரு பெரிய பேர் நமக்கும் வந்துட்து. அதை அரபி/ஆங்கிலேயர்கள் சொல்லிக் கேட்கும்போது வர்ற சுகானுபவம் இருக்கே..

    ReplyDelete
  8. ஆமினா,ஆனந்தி,கோவி.கண்ணன், எல்.கே, அமைதிச்சாரல் மற்றும் அனானிமஸாக வந்தது படித்து கமெண்ட்ஸ் போட்ட அனைவருக்கும் நன்றி

    ReplyDelete
  9. கமெண்ட்ஸ் போட்ட ஹுசைனம்மாவுக்கு நன்றி . என் பெயரை கொலை செய்யாத அமெரிக்கர்களே இல்லை எனலாம் என் பெயர் மிகவும் எளிதானது .

    ReplyDelete
  10. வாங்க வாங்க சித்ரா மேடம்...உங்கள் வருகைக்கு நன்றி. என் பதிவை படிப்பவர்களிடம் உங்களூக்கு தெரிந்த நீளமான பெயரை கேட்டேன். ஆனால் நீங்க ஒரு வயது குழந்தையிடம் உங்கள் லேப் டாப்பை கொடுத்து அந்த குழந்தை கீபோடில் புகுந்து விளையாடியதை அப்படியே காப்பி செய்து போட்டுவிட்டு இதுதான் உலகதின் நீளமான பெயர் என்று சொல்லிவிட்டிர்கள்.ஒகே..ஓகே

    வெட்டிப்பேச்சு பேசும் சித்ரா உபயோகமான தகவலை என் பக்கத்தில் தந்தற்கு நன்றி

    சித்ரா மேடம் உங்கள் அனுமதி இல்லாமல் உங்கள் பெயரை என் பதிவில் யூஸ் பண்ணியதை தவறாக எடுத்து கொள்ளமாட்டிரகள் என நீனைக்கிறேன். தவறு என்றால் மன்னிக்கவும்

    ReplyDelete
  11. மூச்சு வாங்குது

    ReplyDelete
  12. பழைய ஜோக்.. இப்பவும் புதுசா சிரிப்பு வருது.

    ReplyDelete
  13. அய்யம் பேட்டை அறிவுடை நம்பி கலிய பெருமாள் சந்திரன் - இதுதான் எனக்கு தெரிஞ்ச நீளமான பெயர்.......

    அய்யம் பேட்டை அறிவுடை நம்பி கலிய பெருமாள் இந்திரன் - இது தம்பி பெயர்.

    ReplyDelete
  14. என் இள வயது நண்பன் ஒருவன் பெயர்-
    “குப்பு சுந்தர ஸ்ரீனிவாசக வெங்கட ரங்கநாதன்”!

    ReplyDelete
  15. இந்தப் பதிவையும் சித்ரா அவர்களின் அமெரிக்க ஆங்கில கலாட்டா பதிவையும் படித்ததும் என் சென்னைத் தமிழ் அனுபவங்கள் நினைவில் அணிவகுத்தன. நினைவுகளை மலர வைத்தமைக்கு நன்றியுடன் உங்களிருவரின் பதிவுகளை reference கொடுத்து ஒரு பதிவு போட்டிருக்கிறேன்.

    ReplyDelete
  16. எல்லாரும் வாங்க என்ற எஸ்.வீ.சேகர் நாடகத்துல வர ஒரு தெலுங்கு பெண்ணின் பேர் :

    எச்ச குஞ்சல நாத எல்பி பிசிபேள ஊளி சாமுத்திரிகா லட்சன சுந்தர வராண்ட குனமுருட்டி சீதா லக்ஷ்மி நரசம்மா!!!

    இந்த இடுகையைப் படித்தவுடன் அந்த ஞாபகம் வந்தது...

    ReplyDelete
  17. கோகுலவாச நவநீதகிருஷ்ண ராஜசேகர சந்திரமூர்த்தி

    ReplyDelete
  18. Hilarious!
    I once worked with a manager whose name was JUBV Prasad.

    ReplyDelete
  19. sri iyappaswamy venkadesha raju hanumantha rao

    எனக்கு தெரிந்த தெலுங்கு பெயர்

    ReplyDelete
  20. 60 - 70 களில்; இலங்கை வானொலியில் ஒரு அறிவிப்பாளர் பெயர் ; ராஜகுருசேனாதிபதி கனகரத்தினம்.
    இலங்கையில் கண்டிச் சிங்கள மக்களின் பெயர்களும் மிகப் பெரிதாக இருக்கும்.
    ஆனாலும் தெலுங்குப் பெயர்கள். பெரிரிரிதே!

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.