Sunday, January 2, 2011

அமெரிக்கர்கள் இந்தியர்களை எப்படி அடையாளம் கண்டுகொள்கிறார்கள்!!!!




1. இந்தியனுடைய அம்மா ஷார்ட் ஹேர் வைத்திருப்பார்.

2. இந்தியனுடைய அப்பா நிச்சயம் டாக்டர் அல்லது எஞ்சினியராக் இருப்பார்.

3. 12 வயதுக்கு கிழே உள்ளவர்களுக்கு அரை டிக்கெட் என்கிற இடங்களில் எல்லாம் 15 வயதாகிய தன் பிள்ளைகளுக்கு  12 வயதுதான் என்று சொல்லி வாகுவதம் செய்து டிக்கெட் எடுக்க முயற்சி செய்வார்.

4. கணக்கில் இந்தியபையன் கேட்கும் சிறிய சந்தேகத்திற்கு பெற்றோர்கள் 2 மணி நேரத்திற்கு மேலாக லெக்சர் கொடுத்து கொண்டிருப்பார்கள்.

5. இந்தியனுடைய வீட்டில் 20 lb அரிசி பேக் இருக்கும்.

6. இந்தியனுடைய வீட்டில் குறைந்தது 2 ஜப்பான் தாயாரிப்பு கார்கள் இருக்கும்.

7. படிக்கும் காலேஜ் காம்பஸுக்கு இந்திய பையனை பார்க்க ஏதாவது பெண்வந்தால் பார்க்கும் மற்றவர்கள் கேட்பார்கள் அது உன் அம்மாவா அல்லது சகோதரியா என்று?

8. இந்தியனுடைய அப்பா அல்லது தாத்தாவின் காதில் ஹேர் இருக்கும் அதை எப்போதும் கட் செய்யமாட்டார்கள்.

9. இந்தியனுடைய பிள்ளைகள் முன்னாள் பெற்றோர்கள் ஒரு போதும் கட்டி அனைக்க மாட்டார்கள் அல்லது முத்தம் தரமாட்டார்கள்.

10. இந்தியனுடைய வீட்டில் உள்ள எல்லா சாப்ட்வெரும் ஒரிஜனல் காப்பி கிடையாது.

11. இந்திய பையண் நண்பர்களின் பெற்றோர்களை அங்கிள் & ஆண்ட்டி என்றுதான் கூப்பிட வேண்டும்.

12. இந்தியனுடைய வீட்டில் அகர்பத்தி ஸ்மல் அடிக்கும்

13. இந்திய குடும்பம் விலை உயர்ந்த ஹோட்டலில் சாப்பிடும் போது குடிக்க ஐஸ் இல்லாத வாட்டர் மட்டும் ஆர்டர் செய்வார்கள் சாப்பாட்டின் முடிவில் டெஸர்ட் ஆர்டர் செய்யமாட்டார்கள்.


14. இந்திய பையன்கள் ஏதாவது எலக்ரானிக்ஸ் பொருட்கள் வாங்கி கேட்டால் இந்த வயதில் தாங்கள் காலுக்கு கூட ஷு இல்லாமல் இருந்ததை பெற்றோர்கள் சொல்லிக் காண்பித்து கொண்டிருபார்கள்..


15. இந்தியர்கள் ஆன் லைன் கூப்பனை பார்த்தால் குறைந்தது 10 கூப்பன்களையாவது ப்ரிண்ட் செய்து குடும்பத்தோடு கடை க்யூவில் ஒருவர் மாறி ஒருவராக நின்று பொருட்களை வாங்கி கொண்டிருப்பார்கள். குடும்பத்திற்கு ஓன்று என்று சொன்னாலும் தனித்தனியாக நின்று வேறு குடும்ப ஆள் மாதிரி ஆக்ட் செய்து வாங்குவார்கள்.


16. ஏதோ கிப்ட் கொடுப்பது போல் நண்பர் அனைவருக்கும் அந்த கூப்பனை இமெயிலில் பார்வெட் செய்வார்கள்.

17. சம்மர் தொடங்கியதும் இந்தியனுடைய பெற்றோர்கள் அரை டிரெஸ் போட்டு முதல் ஒரு மாதம் மட்டும் வாக்கிங் போவார்கள்.அதுதான் அவர்கள் ஆண்டு முழுவதும் செய்யும் உடற்பயிற்சி ஆகும்

18. இந்தியனுடைய வீட்டு பார்ட்டிகளில் சமோசா, நாந் ,மலாய் குப்தா, தயிர் சாதம்,குலோப் சாமுன் போன்றவை கண்டிப்பாக இருக்கும். நோ ட்ரிங்க்ஸ். நோ மியூஸிக் அல்லது டான்ஸ், ஆளூக்கு ஆள் கத்திக் கொண்டிருபார்கள், குறைந்தது 2 ஆண்ட்டிகளாவது பிள்ளை உண்டாகி வயிற்றை தள்ளிக் கொண்டிருபார்கள்.



19. கோடைகாலத்தில் பீச்சில் இருந்து எல்லோரும் ஈவினிங் வீடு திரும்பும் போதுதான் இந்தியர்கள் அங்கு செல்வார்கள். கையில் லெமன் ரைஸ் மற்றும் சிப்ஸ் இருக்கும்.

27 comments:

  1. ஹ ஹ...செமையா சிரிச்சேன்...நீங்களே இப்படி அசிங்கபடுதகூடது நம்ம நாட்டை...:))

    ReplyDelete
  2. அதுவும் 3 வது பாயிண்ட் சூப்பர் ஓ சூப்பர்...:))))

    ReplyDelete
  3. வெளி நாடு வாழும் இந்தியனுக்கு இதுவும் வேனும், இன்னமும் வேனும்.

    ReplyDelete
  4. இவ்வளவுதானா?இன்னும் ஏதாவது இருக்கா?எழுதியது மட்டும் அல்ல;படங்களும் நல்லாருக்கு.

    ReplyDelete
  5. point # 13, இன்னிக்கு தான் ஹோட்டல் போய் இதே போல் பண்ணினோம்!

    ReplyDelete
  6. Inthiyarkal paarvaiyil amerikarkal

    kudikaarkal

    ReplyDelete
  7. பயங்கரமா சிரிச்சுட்டேன் சகோ....

    செமயா இருந்துச்சு!!!

    ReplyDelete
  8. ஹய்யோ ஹய்யோ ......

    ReplyDelete
  9. டிவி முதல் கார் வரை எதிலும் உள்ள பிளாஸ்டிக்கை பிரிக்காமல் வருட கணக்கில் வைத்து இருப்பதை விட்டு விட்டீர்களே...

    ReplyDelete
  10. ஹய்யோ ஹய்யோ!
    இதெல்லாம் இப்போ yahoo, cnn, times எல்லா பேப்பரிலும் அமெரிகார்களுக்கான அறிவுரையாக வருது.

    ReplyDelete
  11. சூப்பர்... ஒரு வரி விடாம எல்லாமே சூப்பர்...

    ReplyDelete
  12. ஆனந்தி நம் நாட்டை நான் அசிங்கபடுத்தவில்லை. அயல் நாட்டில் உள்ள நம்மவரின் பழக்க வழக்கங்களைத்தான் நான் இங்கே கூறியுள்ளேன் . வருகைக்கும் கமெண்ட்ஸ்க்கும் நன்றி.

    ReplyDelete
  13. லட்சுமிம்மா உங்களின் வருகைக்கும் கமெண்ட்ஸ்க்கும் நன்றி.

    ReplyDelete
  14. சென்னை பித்தன் உங்களின் வருகைக்கும் கமெண்ட்ஸ்க்கும் நன்றி.
    """""இவ்வளவுதானா?இன்னும் ஏதாவது இருக்கா?எழுதியது மட்டும் அல்ல;படங்களும் நல்லாருக்கு."""
    இன்னும் நிறைய இருக்கு விரைவில் பாகம் 2 வெளியிடப்படும். படங்களுக்குரியவர் நான் அல்ல, படத்தை கூகுலில் கண்டுபிடித்து போட்டது மட்டும் நான்

    ReplyDelete
  15. Bandhu உங்களின் வருகைக்கும் கமெண்ட்ஸ்க்கும் நன்றி
    "point # 13, இன்னிக்கு தான் ஹோட்டல் போய் இதே போல் பண்ணினோம்!"
    சில நேரங்களில் நானும் பாய்ண்ட் 13 கடைபிடிப்பது உண்டு

    ReplyDelete
  16. ஆமினா,ஐத்ருஸ்,வழிப்போக்கன் யோகேஷ், பிலாசபி பிரபாஹரன் உங்களின் வருகைக்கும் கமெண்ட்ஸ்க்கும் நன்றி.

    ReplyDelete
  17. பனிமலர் உங்கள் உங்களின் வருகைக்கும் கமெண்ட்ஸ்க்கும் நன்றி.

    டிவி முதல் கார் வரை எதிலும் உள்ள பிளாஸ்டிக்கை பிரிக்காமல் வருட கணக்கில் வைத்து இருப்பதை விட்டு விட்டீர்களே...
    பனிமலர் இதை பாகம் 2ல்

    ReplyDelete
  18. இது எல்லாம் இந்திய கலசாரம்.. பாரம்பரியம்....... இந்தியர்கள் எங்கு சென்றாலும் இந்தியர் கலகவா இருப்பார்கள்......

    ReplyDelete
  19. ஹாஹா முதல் பாயிண்டே செம்ம காமடி,
    ரொம்ப பட்டுட்டிங்க போல

    ReplyDelete
  20. முற்றிலும் உண்மை... ஆனால் அது தான் நமது பழக்க வழக்கங்கள்... இதில் சிரிர்ப்பதற்கு ஏதும் இல்லை...

    இதே போல அமெரிக்கர்களின் அடையாள சின்னங்களை விரைவில் எதிர்பாக்கிறேன்.

    ReplyDelete
  21. ethai perumaya ezhuthierukanum neenga....epdi nama erukarthalathan...namma muneritu erukom....2020 super poweraga porom...namla pathi nama perusa pesuvom.....

    ReplyDelete
  22. என்னமா தொவச்சு கிழிச்சு காயப் போட்டு க்ளிப் மாட்டி ,தொங்கப் போட்டுட்டாங்க....

    ReplyDelete
  23. நிச்சயம் அவர்கள் தாய் மொழியில் பேச மாட்டார்கள்

    ReplyDelete
  24. True.
    I would add the following points:
    1. They would sit together at work and eat mostly Indian food for lunch.
    2. Send their kids to Japanese / Singapore style Math coaching class just to prove their kids is smarter in the class. But, they would ignore the fact that they were 'just average' back in their student days.
    3. Most of their social gathering is only with other Indians.
    4. If there are enough Indians in a area, then they will start language specific cultural groups and start infighting.

    Cheers.

    ReplyDelete
  25. எல்லாம் உண்மைகள் தான் .
    சிரிச்சி மாலல.அதுவும் அந்த கடைசி,

    ///கோடைகாலத்தில் பீச்சில் இருந்து எல்லோரும் ஈவினிங் வீடு திரும்பும் போதுதான் இந்தியர்கள் அங்கு செல்வார்கள். கையில் லெமன் ரைஸ் மற்றும் சிப்ஸ் இருக்கும்.///

    ReplyDelete
  26. இந்தியன் வீட்டில் உள்ள எல்லா சாப்ட்வேரும் ஒர்ஜினல் காப்பி கிடையாது...அத்தனையும் கிராக் வெர்சன்... 100 சதவீதம் உண்மை ...
    https://www.scientificjudgment.com/

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.