உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Thursday, April 26, 2012

கடவுளுக்கு ஒரு மாற்று (புதிய கடவுள் அறிமுகம்)கடவுளுக்கு ஒரு மாற்று  (புதிய கடவுள் அறிமுகம்)

வயித்து வலியா கடவுளே காப்பாற்று
பரிட்சையில் பாஸாக கடவுளே காப்பாற்று
வேலை கிடைக்க கடவுளே காப்பாற்று
நல்ல நட்புக்கு கடவுளே காப்பாற்று
காதலி கிடைக்க கடவுளே காப்பாற்று
காதலில் வெற்றி பெற கடவுளே காப்பாற்று
கல்யாணம் ஆக வேண்டும் கடவுளே காப்பாற்று
மாமியாரின் பழிச் சொல்லில் இருந்து கடவுளே காப்பாற்று
கணவனுக்கு நல்ல சமைச்சு போடனும் கடவுளே காப்பாற்று
குழந்தை வேண்டும் கடவுளே காப்பாற்று
குழந்தைக்கு நல்ல அறிவு கொடுத்து கடவுளே காப்பாற்று
தெரியாத ஊருக்கு வெகேஷன் போகிறேன் கடவுளே காப்பாற்று
நல்ல கல்லூரியில் குழந்தைக்கு இடம் கிடைக்க கடவுளே காப்பாற்று
அவனுக்கு நல்ல பெண்டாட்டி கிடைக்க கடவுளே காப்பாற்று
எனது முட்டிவலி தீர வேண்டும் கடவுளே காப்பாற்று
கடவுளே எனக்கு நல்ல முதியோர் இல்லத்தில் இடம் கிடைக்க கடவுளே காப்பாற்று
என் பேரக் குழந்தைகளை பார்க்க வேண்டும் கடவுளே காப்பாற்று
இறுதியாக சாவதற்க்கு எனக்கு நல்ல வழியை கடவுளே காப்பாற்று என்று இது மாதிரி கடவுளிடம் கேட்காத மனிதர்கள் இல்லை.

ஆனால் இதையெல்லாம்  கேட்டால், கடவுள்  நமக்கு எல்லாம்  தந்து இருக்கிறாறா என்று யோசித்து பார்க்கும் போது ,அரசனிடம் கேட்டால் அடுத்த நாளாவது  தருவார் ஆனால் கடவுளிடம் கேட்டால் நின்று நிதானித்து ஆளை சோதித்துதான்  தேவையானதை  தருவார் என்றுதான் நம் மனதில் தோன்றும்

ஆனால் இன்றைய காலமோ மிக வேகமானது  எல்லாம் நமக்கு மிக விரைவில் கிடைக்க வேண்டும் எனவே காலத்திற்கு தகுந்தாற் போல நமக்கு எல்லாவற்றையும் விரைவில் தரும் கடவுள்தான் நமக்கு வேண்டும்.

ஆனால் நீங்கள் நம்பும் மதக் கடவுள்,  "ஜெயலலிதா (இப்படி நமது அரசியல் தலைவர்களை வம்புக்கு இழுக்காமல் நமக்கு தூக்கம் வருவதில்லை) மாதிரி நீங்கள் காலில் விழுந்து வணங்கி வந்தாலும் அவருக்கு எப்போது தர வேண்டும் என்று தோன்றுகிறதோ அப்போதுதான் தருவார் அதுவும் அவர் விரும்பியதைதான்

மக்காஸ் உங்களுக்கு ஒரு நல்ல செய்தி அந்த செய்திதான் நான் கண்டுபிடித்த இந்த கடவுளுக்கு மாற்று. புதிய கடவுள்

என்னை நம்பி எவன் வருகிறானோ அவனுக்கு நான் விரும்பிதை வினாடியில் தருவேன். இது உண்மை. இந்த மதுரைத்தமிழன் எல்லோருக்கும் நல்ல வழி காண்பிப்பான் என்று எவன் ஒருவன் நம்புகிறானோ அவன் இதற்கு மேலே படிக்கலாம் பலன் பெறலாம்.


உங்களுக்கு நான் புதிய கடவுளை அறிமுகப்படுத்துகிறேன். அவர் வேறு யாரும் அல்ல உங்களுக்கு நன்றாகத் தெரிந்த  கூகுல் ஆண்டவர் தான் நமது புதிய கடவுள்

என்ன நம்ப முடியவில்லையா?

வயித்து வலியா கடவுளே காப்பாற்று என்று கதறுவதற்கு பதில் கூகுலிடம் செல்லுங்கள் அவன் ஆயிரம் ஆயிரம் வழிகள் காட்டுவான். நம் வீட்டில் கிச்சனில் உள்ளவற்றில் எவையெல்லாம் சாப்பிட்டால் அல்லது குடித்தால் அல்லது உடம்பில் தேய்த்து கொண்டால் வயித்து வழி குணமாகும் என்று சொல்லுவான் அல்லது எந்த மருந்தை கடையில் வாங்கி சாப்பிட்டால் குணமாகும் அல்லது எந்த டாக்டரை , ஹாஸ்பிட்டலுக்கு சென்றால் வலிதீர வழி சொல்லுவான். ஆனால் நீங்கள் நம்பும் கடவுளிடம் கேட்டால்....?

பரிட்சையில் பாஸாக கடவுளே காப்பாற்று என்று கதறுவதற்கு பதில் கூகுலிடம் செல்லுங்கள் அவன் பாடம் எளிமையாக புரிய ஆயிரம் வழி சொல்லுவான். படிக்க சோம்பேறி என்று கருதுபவர்களுக்கு எப்படி பரிட்சையில் எப்படி ஏமாற்றுவது என்று வழி சொல்லுவான் .ஆனால் நீங்கள் நம்பும் கடவுளிடம் கேட்டால்....?

வேலை கிடைக்க கடவுளே காப்பாற்று என்று கதறுவதற்கு பதில் கூகுலிடம் செல்லுங்கள் அவன் எங்கே வேலை காலி இருக்கு அதற்கு எப்படி அப்ளை செய்வது, அதில் எப்படி வெற்றி பெறுவது என்பதற்கு வழி சொல்லும் ஆனால் நீங்கள் நம்பும் கடவுளிடம் கேட்டால்....?நல்ல நட்புக்கு ,காதலி கிடைக்க,காதலில் வெற்றி பெற கடவுளே காப்பாற்று என்று கதறுவதற்கு பதில் கூகுலிடம் செல்லுங்கள் அவன் ஃபேஸ் புக் டிவிட்டர், யாகு சாட் இது போன்ற பல இடங்களை காட்டி நல்ல நட்பு கிடைக்க வழி சொல்லுவான் , ஆனால் நீங்கள் நம்பும் கடவுளிடம் கேட்டால்....?


கல்யாணம் ஆக வேண்டும் கடவுளே காப்பாற்று என்று கதறுவதற்கு பதில் கூகுலிடம் செல்லுங்கள் அவன் மேட் ரிமோனியல் தளங்களை உங்களுக்கு காண்பிப்பான். அதில் இருந்து உங்களுக்கு பிடித்தமானவரை தேர்ந்தெடுத்து திருமணம் செய்து கொள்ளலாம். ஆனால் நீங்கள் நம்பும் கடவுளிடம் கேட்டால்....?


மாமியாரின் பழிச் சொல்லில் இருந்து கடவுளே காப்பாற்று என்று கதறுவதற்கு பதில் கூகுலிடம் செல்லுங்கள்  அவன் எங்கு நல்ல கோந்து( பெவிகால்) க்டைக்கும் என்று வழி சொல்லுவான் ஆனால் நீங்கள் நம்பும் கடவுளிடம் கேட்டால்....?


கணவனுக்கு நல்ல சமைச்சு போடனும் கடவுளே காப்பாற்று என்று கதறுவதற்கு பதில் கூகுலிடம் செல்லுங்கள்  அவன் நல்ல ஸ்மையல் குறிப்பு உள்ள தளங்களை காட்டுவான் ஆனால் நீங்கள் நம்பும் கடவுளிடம் கேட்டால்....?


குழந்தை வேண்டும் கடவுளே காப்பாற்று என்று கதறுவதற்கு பதில் கூகுலிடம் செல்லுங்கள் அதற்கு என்ன செய்ய வேண்டும் என்ன மருத்துவத்தை தொடர வேண்டும் என்று சொல்லுவான் ஆனால் நீங்கள் நம்பும் கடவுளிடம் கேட்டால்....?


குழந்தைக்கு நல்ல அறிவு கொடுத்து கடவுளே காப்பாற்று என்று கதறுவதற்கு பதில் கூகுலிடம் செல்லுங்கள் அவன் அவனுடைய அல்லது அவர்கள்...உண்மைகள்(ஹீ,ஹீ...) வலைத்தளத்தை உங்களுக்கு காண்பிப்பான் ஆனால் நீங்கள் நம்பும் கடவுளிடம் கேட்டால்....?


தெரியாத ஊருக்கு வெகேஷன் போகிறேன் கடவுளே காப்பாற்று என்று கதறுவதற்கு பதில் கூகுலிடம் செல்லுங்கள் அவன் கூகுல் மேப்பை காண்பித்து பாயிண்டு பாயிண்ட் வழி சொல்லுவான் ஆனால் நீங்கள் நம்பும் கடவுளிடம் கேட்டால்....?எனது முட்டிவலி தீர வேண்டும் கடவுளே காப்பாற்று என்று கதறுவதற்கு பதில் கூகுலிடம் செல்லுங்கள்  அவன் நல்ல டாக்டர் மற்றும் ஹாஸ்பிடலை உங்களுக்கு காட்டுவான் ஆனால் நீங்கள் நம்பும் கடவுளிடம் கேட்டால்....?


கடவுளே எனக்கு நல்ல முதியோர் இல்லத்திம் எது என்று கேட்டு  கடவுளே காப்பாற்று என்று கதறுவதற்கு பதில் கூகுலிடம் செல்லுங்கள் அவன் ஐந்த ஸ்டார் ரிவ்யூ உள்ள முதியோர் இல்லங்களை உங்களுக்கு காட்டுவான். ஆனால் நீங்கள் நம்பும் கடவுளிடம் கேட்டால்....?


என் பேரக் குழந்தைகளை பார்க்க வேண்டும் கடவுளே காப்பாற்று என்று கதறுவதற்கு பதில் கூகுலிடம் செல்லுங்கள் அவன் வெப் கேமரா மூலம் உங்கள் பேரக் குழந்தைகளை உங்கள் கண் முன் காட்டுவான் ஆனால் நீங்கள் நம்பும் கடவுளிடம் கேட்டால்....?


இறுதியாக சாவதற்க்கு எனக்கு நல்ல வழியை கடவுளே காப்பாற்று என்று என்று கதறுவதற்கு பதில் கூகுலிடம் செல்லுங்கள் அவன் சாவதற்கும் பல நல்ல எளிய வழிகளை காண்பிப்பான் ஆனால் நீங்கள் நம்பும் கடவுளிடம் கேட்டால்....?


இறுதியாக ஒரு எளிமையான மிக மிக சாதாரணமான ஆளை காட்டு என்று கடவுளிடம் கேட்டால் இறந்து போன அன்னை தெரசாவை உன் மனதில் கொண்டு வந்து நிறுத்துவார் ஆனால்  கூகுலிடம் சென்றால் உயிர் உள்ள என்னை காண்பிப்பான்.

அப்பாடி எப்படியோ என் பெயரை இந்த லிஸ்டில் கொண்டு வந்து சேர்த்தாச்சு மக்காஸ்

என்னங்க இப்ப சொல்லுங்க நீங்கள் கதறியும் கேட்டும் உங்களுக்கு உடனே தரதாத நீங்கள் நம்பும் உங்கள் மதக் கடவுள் பெரியவாரா அல்லது நான் சொன்ன இந்த மாற்று கடவுள் பெரியவரா?

சிந்தித்து சொல்லுங்கள்.

டிஸ்கி: பதிவாளர்களே பதிவு எழுத ஐடியா வேண்டுமா அல்லது உங்கள் பதிவுக்கு அதிக ஹிட் வேண்டுமா கூகுலிடம் கேளுங்கள் அவன் வழி சொல்லுவான் அதற்கு பதிலாக கடவுளுக்கு தேங்காய் உடைத்தால் உங்கள் பதிவிற்கு ஹிட் கிடைக்குமோ இல்லையோ ஆனால் தேங்காய் உடைக்கும் போது கையின் திசை மாறினால் யாரவது ஒருவரின் தலையில் விழுந்து HIT ஆவதற்கு வாய்ப்புகள் உண்டு


உங்களுக்கு வேண்டியதை வாரி வழங்கும் "கடவுளுக்கு மாற்று (ஒரு புதிய கடவுள் அறிமுகம்)" படித்தீர்களா மறக்காமல் உங்கள் காணிக்கைகளை பின்னுட்டமாக போடவும்.

என்றும் அன்புடன்
உங்கள் "அபிமான  மதுரைத்தமிழன்"

12 comments :

 1. ஆஹா கூகுளாண்டவரே சக்தி மிகுந்தவராக நினைக்க வச்சுட்டீங்களே.

  ReplyDelete
 2. எல்லாம் சரிங்க கொஞ்ச நாள் போகட்டும் பிறகு பாருங்க கணினிக்கும் போட்டு வைத்து தேங்காய் உடைத்து கற்பூரம் ஏற்றப்போகிரார்கள் பார்த்துக்குங்க . சொல்லமுடியாது கடவுளுக்கு பூசாரியாக உங்களையும் கடவுளாக்கி விடுவார்கள் பிறகு நாங்கள் எங்கு சென்று மதுரைத் தமிழனின் பதிவுகள தேடுவது .

  ReplyDelete
 3. இன்றைய உலகின் சக்தி வாய்ந்த கடவுள் கூகுள் ஆண்டவர். உண்மை தான்.

  இல்லேன்னு சொல்லாமல் கேட்பதற்கும் கூடுதலாகவே கொடுப்பார்

  ReplyDelete
 4. நல்ல நகைச்சுவை முயற்சி. பாராட்டுகள்.

  சரி, உங்களின் ”எல்லாம் வல்ல கூகுளாண்டவர்” நெட் டவுன் ஆனாலோ, வைரஸ் அட்டாக் வந்தாலோ, அவ்வளவு ஏன், கம்ப்யூட்டரை ஆஃப் செய்ததும் காணாமல் போய்விடுகிறாரே!! ;-)))))))))))

  அதுவும் தமிழ்நாட்டில் இருக்கும் கரண்ட் கட்டிற்கு, ஒரு நாளில் குறைந்தது பத்துமணிநேரம் கட்டாயமாய் “கூகுளாண்டவர்” காணாமல் போய்விடுவாரே!! அந்த சமயம் பார்த்து வயிற்று வலி வந்தால் என்ன செய்வேன்? அப்போ கூப்பிடவேண்டிய 'alternative god' என்ன/யாரு? ;-)))))))))))

  ReplyDelete
 5. ஆகா,, எந்த கடவுள் என்றாலும் உண்டியல் உண்டோ? உண்டியல் இல்லா கடவுளை காட்டுங்கப்பு

  ReplyDelete
 6. how long google will be a god?

  ReplyDelete
 7. கூகுள்...இந்த மதுரைத்தம்பிட்ட இருந்து என்னை எப்படியாவது காப்பாத்து...

  ReplyDelete
 8. உப்பு புளி மிளகாய்க்கு கடவுளை தேடுகிறவரை கடவுள் தென்படவே மாட்டார்........
  கூகுளாண்டவரை தேட வேண்டியது தான்.
  ஆனந்தம் நம்மிடையே தானிருக்கிறது என்று அறிகிரவரை.......

  ReplyDelete
 9. soooooooooper eppadi roompottu yosiththeero nandri
  surendranath1973@gmail.com

  ReplyDelete
 10. ஓம் கூகிளாண்டவா நமஹா (108 ) முறை 108 நாட்கள் காலையில் குளித்து முடித்து சொன்னால் ...... கிட்ட வந்த பகைவரும் எட்டிப்போவர்.தட்டிப்போன வேலைகள் பட்டென்று முடியும் .

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog