உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Sunday, January 13, 2013

விகடன் தர மறந்த அவார்டுகள் - 2012
விகடன் தர மறந்த அவார்டுகள் - 2012
விகடன் 2012 க்கான அவார்டுகளை பல பேருக்கு கொடுத்துள்ளனர்.ஆனால் மிக முக்கியமான பலருக்கு கொடுக்க   மறந்துள்ளனர். அவர்கள் எல்லாம் வருத்தப்படுவார்கள் என்று அவர்களை எல்லாம் தேடி கண்டுபிடித்து அவர்களை அவர்கள்...உண்மைகள் வலைத்தளம் சார்பாக கொடுத்து சிறப்பித்துள்ளோம்.


இது நகைச்சுவைக்காக மட்டும் எழுதப்பட்டுள்ளது. யாரையும் காயப்படுத்துவதற்காக எழுதப்பட்டது அல்ல. இது அவர்களை காயபடுத்தி இருப்பதாக கருதினால் "அவர்கள் மட்டும்" எனக்கு மெயில் எழுதி அனுப்பினால் அது இங்கு நீக்கப்படும்.மன்மோகன் சிங் :  அமெரிக்க சேல்ஸ் ஏஜெண்டு  அல்லது அமெரிக்காவின் சிறந்த கொள்கை பரப்பு செயலாளர்

சோனியா : இந்தியாவின் ஸ்டெப் மாம்

கலைஞர் : கலகத் தலைவர்

விஜய் : கனவுலக முதலைமைச்சர்

விஜயகாந்த் - 'குடி' மகன்

வைகோ : தனிக்காட்டு ராஜா

ஜெயலலிதா :  டபுள் "பவர்" ஸ்டார்  ( ஆட்சி பவர், மின்சாரபவர்)

சாரு :  இணைய பிச்சைகாரர்

ரஜினி : ஊழல்வாதிகளின் நண்பன் ( அரசியல்வாதிகளின் நண்பராக மட்டும் இருப்பதால்

நயன்தாரா : தமிழகத்தின் கிளியோபட்ரா

இந்தியா :  'பலாத்கார சாம்பியன்' உலகின் சிறந்த பலாத்கார வீரர்களை பெற்றுள்ளாதால்

மதுரைதமிழன் : பல்சுவை பதிவாளர் : நமக்கு நாமே அவார்டு தரவில்லையானால் வேறு யாரு தருவார்கள்

அது மட்டுமல்ல மிக பிரபலமானவர்கள் அவார்டுகள் வாங்கும் போது நாமும் அவார்டுகள் சேர்ந்து வாங்கினால் நாமும் பிரபலமாக கருதப்படுவதால் எனக்கு நானே அவார்டு தந்துள்ளேன்


மக்களே இங்கு அவார்டு கிடைக்காமல் மிஸ்ஸான தகுதியானவர்கள் யாரேனும் இருந்தால் அவர்களை நீங்கலே அறிமுகப்படுத்தி அவர்களுக்கான அவார்டுகளை நீங்களே அறிமுகப்படுத்தலாமே

அன்புடன்
மதுரைத்தமிழன்

டிஸ்கி :  ஆனந்த விகடனில் இருந்த கிராபிக்ஸ் இங்கு ரீமிக்ஸ் பண்ணப்பட்டு உபயோகிக்கபட்டுள்ளது. ஓரிஜினல் கிராபிக்ஸிற்க்காக விகடனாருக்கு நன்றி

13 comments :

 1. ஜாக்கிரதை சார். ஆட்டோ அனுப்பிடுவாங்க.

  ReplyDelete
  Replies
  1. இது நகைச்சுவைக்காக எழுதப்பட்டுள்ளது. இதற்கெல்லாம் ஆட்டோ அனுப்பினால் அவர்கள் என்னை பெரிய ஆளாக ஆக்குகிறார்கள் என்று அர்த்தம். அப்படி நான் பெரிய ஆளாக ஆனால் நான் வருங்கால தமிழக அமைச்சர்களில் ஒருவராகிவிடுவேன். அதன் தலைவர்களை விட்டு விட்டு மக்களை கேலி செய்ய தொடங்கினாலும் தொடங்களாம் யார் கண்டது

   அதுமட்டுமல்ல இந்த நகைச்சுவையை ரசிக்க தெரியாத பெரிய மனிதர்களாகிவிடுவார்கள்

   Delete
 2. ஹா ஹா ஹா
  இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்
  அன்புடன்
  நாடிகவிதைகள்

  ReplyDelete
 3. ஹிஹி அண்ணே விஜைய விட அவங்க அப்பா தான் கனவு காண்கிறார் அவர் படத்த போட்டு இருக்கலாம்

  ReplyDelete
 4. அண்ணே தலிவர் அரசியல்லுவருவேன் என்று பொய்வாக்குறுதிகொடுக்க தயாரில்லை என்று கூவிய பின்னர் சிதம்பரத்தின் புத்தகவெளியீட்டில் அரசியலுக்கு வந்தால் என் வழி தனி வழி என்றாரே அதுக்கொருஅவார்ட் கொடுத்திருக்கலாமே

  பொங்கள் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 5. பதிவு அருமை.
  சிரித்து மகிழ்ந்தேன்.

  உங்களுக்கும் உங்கள் குடும்பத்தவர் அனைவருக்கும்
  பொங்கல் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 6. நீங்கள் தந்துள்ள விகடன் தர மறந்த அவார்ட்களில் கடைசியில் தந்திருக்கும் அவார்ட்தான் தகுதியான பதிவருக்கு தந்ததாக நினைக்கிறேன்.
  உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் எனது உளங்கனிந்த பொங்கல் நல் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 7. வடிவமைப்பில் கில்லாடி நீங்க.

  ReplyDelete
 8. ரீ மிக்ஸ் சூப்பர்
  கடைசி அவார்ட் நாங்களும் தர தயாரா இருக்கோம்

  ReplyDelete
 9. அவர்களே மெயில் அனுப்பினால் எதுவும் விருது கொடுக்கப்படும் என்றால் இன்றே நான் மெயில் அனுபிவிடுவேன் #எப்புடி

  ReplyDelete
 10. கலகிட்டீங்க தலைவா!!

  ReplyDelete
 11. ரசித்தேன். நகைச்சுவையாக யார் மனதையும் புண்படுத்தாதவாறு அருமையாகத்தான் இருந்தது.

  ReplyDelete
 12. sir,

  power star srinivasanai maranthiteengala.....

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog