சாப்பிடாத குழந்தைகள் சாப்பிட சான்விட்சை (Sandwiches)இப்படி செய்து கொடுக்கலாமே?
என் குழந்தை ஒழுங்காக சாப்பிடமாட்டேங்கிறது என்று சொல்லாத அம்மாக்களே இருக்க முடியாது. அவங்க அடுத்தவங்கள பார்க்க வேண்டி மேக்கப் போட செலவழிக்க வேண்டிய நேரத்தை சிறிது குறைத்து அல்லது டிவி பார்க்கும் நேரத்தை சிறிது குறைத்து அல்லது மாமியார் வீட்டை அல்லது கணவரை குறை சொல்லும் நேரத்தை சிறித்து குறைத்து கிழே படத்தில் உள்ளது படி சான்விட்சை செய்து கொடுத்த்தால் பிள்ளைகள் இன்னும் வேண்டும் இன்னும் வேண்டும் என்று கேட்டு வாங்கி சாப்பிடுவார்களே
என்ன முயற்சி செய்வீர்களா?
படத்தை மட்டும் போட்டா நல்லா இருக்காதே அதனால் ஏதாவது எழுதவேண்டும் என்றுதான் எழுதி இருக்கிறேன் அதனால் அம்மாமார்கள் பூரி கட்டையை எடுத்து வர வேண்டாம் என்று கேட்டு கொள்ளப்படுகிறார்கள். நான் அடி வாங்க பயப்படுகிறவன் அல்ல தினமும் வடிவேல் மாதிரி அடி வாங்கி கொண்டுதான் இருக்கிறேன் அதனால் அடி வாங்க பயப்படுவதில்லை ஆனால் என்னை அடிப்பவர்கள்தான் இறுதியில் அடித்து அடித்தே கை வலிப்பதாக சொல்லுவார்கள். அதனால் உங்கள் கையும் இப்படி வலிக்க கூடாது என்ற அக்கறையில்தான் கூறுகிறேன்..
புரிந்து கொண்டதற்கு நன்றி அப்படியும் அடிக்க வேண்டுமென்று நினைப்பவர்கள் பின்னுட்டத்தில் வேண்டுமென்றால் கும்மு கும்மு என்று போட்டுதாக்குங்கள்
அன்புடன்
உங்கள் அபிமானத்திற்குரிய
மதுரைத்தமிழன்
இப்படி எல்லாம் செய்து கொடுத்தாக்கூட சாப்பிடாம அத வச்சி விளையாட ஆரம்பிச்சிடும் பிடிவாத குழந்தைகள். சாப்பிடாத குழந்தைகளை எப்படியும் ஏமாத்த முடியாது. நிறைய அம்மாங்க அடித்து அடித்து வாயில் திணிப்பதை பார்த்திருக்கிறேன்.
ReplyDeleteசாப்பிடக் கூடாது என்று தீர்மானித்து விட்டால் அவ்வளவு தான் குழந்தைகள் எதை கொடுத்தாலும் சாப்பிடாமல் அடம் பிடிக்கும்.
ReplyDeleteபார்க்க அருமையாக இருக்கிறது. நீங்கள் சொல்வதால் தெரிகிறது அது சான்ட்விச் என்று. இல்லையென்றால் பொம்மை என்றே தோன்றும்.
நன்றி பகிர்விற்கு.
ராஜி
அருமையான பகிர்வு !...இதுக்கு எதுக்குத்தான் அடிப்பான் வாழ்த்துக்கள்
ReplyDeleteவாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் சகோதரரே போதுமா :) மிக்க நன்றி சிறந்த
பகிர்வொன்றினைப் பகிர்ந்துகொண்டமைக்கு