Thursday, January 3, 2013





என் வழி தனி வழி என்று சொல்ல காரணம் என்ன?

சென்னை காமராஜர் அரங்கத்தில்  (29.12.2012) மாலை 4.30 மணிக்கு ’’.சிதம்பரம் ஒரு பார்வை’’ நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.  திமுக தலைவர் கலைஞர் நூலை வெளியிட்டு சிறப்புரை ஆற்றினார்.  மத்திய நிதியமைச்சர் .சிதம்பரத்தின் தாயார் லட்சுமி ஆச்சி நூலில் முதல் பிரதியை பெற்றுக்கொண்டார்.

இந்த விழாவிற்கு ரஜினியை அழைத்து அவர்தங்கள் கூட்டணியில் இருப்பதாக காட்டிக் கொள்ள அரசியல் கட்சிகள்  முயற்சி செய்தன. அதே நேரத்தில் வருங்கால தேர்தலில் தமது  வாய்ஸை இவர்களுக்கு  ஆதரவாக திருப்ப  இந்த கூட்டணி முயற்சிக்கின்றன என்பதை அறிந்த நடிகர் ,  புத்திசாலிதனமாக இவரகளின் இந்த முயற்சிக்கு ஆதரவாக நடந்து கொண்டால தமிழகத்தில் நடக்கும் ஆளும் கட்சியின் கோபத்திற்கு ஆளாகிவிடும் அதனால் தமது புதுபட ரீலிஸில் பிரச்சனைகள் ஏற்படலாம் என்று கருதியாதாலும் அது மட்டுமல்ல கலைஞர் மற்றும் சிதம்பரத்திடம் தான் கொண்டு இருப்பது நட்பு மட்டுமே அவர்கள் சார்ந்த அரசியல் கட்சிக்கு  ஆதரவு இல்லை  என்று அவர்களுக்கு புரிய வைக்கவே 'என் வழி தனி வழி' என்றும் இவர்களுடன் கூட்டு சேரவோ "வாய்ஸ்' கொடுக்கவோ தயாராக இல்லையென்றும் மறைமுகமாகக் கூறிவிட்டதாகச் சொல்கிறார்கள்.

நடிகர் ரஜினி பேசும்போது,  ‘’அரசியல் பற்றி நானும், அவரும் நிறைய நேரம் மனம் விட்டு பகிர்ந்து கொள்வோம்.  நாங்கள் இருவரும் எப்போது பேசிக்கொண்டாலும் அவர் ( .சிதம்பரம் ) தவறாமல் ஒரு கேள்வியை கேட்பார். நீங்கள் எப்போது அரசியலுக்கு வருகிறீர்கள் என்ற கேள்விதான் அது.

நான் அரசியலுக்கு வந்தால் என் வழி தனி வழியாக இருக்கும்’’ என்று தெரிவித்தாக செய்திகள் தெரிவிக்கின்றன


அன்புடன்
உங்கள் அன்புக்குரிய
மதுரைத்தமிழன்

13 comments:

  1. நன்றி! உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்..!

    ReplyDelete
  2. ரஜினி அந்த ரகசியம் காப்பதாக நடிப்பதெல்லாம் கூட
    வியாபாரத் தந்திரம்தான்
    நிச்சயம் நடிப்பதில்லை என முடிவு செய்ததும்
    அரசியலுக்கு வருவதில்லை என
    நிச்சயம் சொல்லிவிடுவார்

    ReplyDelete
    Replies
    1. அவருக்கு வர ஆசை இருந்தாலும் இந்த விஷயத்தில் அவருக்கு அறிவுரை சொல்லி கட்டுபடுத்தி வைத்திருப்பது அவரது துணைவியாரகத்தான் இருக்கும். அவர் மட்டும் இல்லையென்றால் இந்நேரம் எல்லாவற்றையும் இழந்து இருப்பார் என்று நான் கருதுகிறேன்

      Delete

  3. உங்கள் கருத்துதான் என் கருத்தும்! அரசியல் வாதிகளும் நடிகர்களும் ஒன்றுதானே

    ReplyDelete
  4. அரசியல் வாதிகள் தான் நடிகர்கள் என்றில்லை.
    நடிகர்களும் அரசியல்வாதி போல்
    வாழ்க்கையிலும் நடிக்கக் கற்றுகொண்டு விட்டார்கள்.

    வாழ்த்துக்கள் “உண்மைகள்“

    ReplyDelete
    Replies
    1. அரசியல்வாதி மற்றும் நடிகர்கள் மட்டுமல்ல மக்களும் இப்போது நடிக்க ஆரம்பித்துவிட்டனர் என்பது மறுக்க முடியாத உண்மைதான்,

      வாழ்த்துக்கு நன்றி

      Delete
  5. பார்க்க தானே போகிறோம்!!!

    நன்றி,
    மலர்
    http://www.tamilcomedyworld.com/

    ReplyDelete
    Replies
    1. நமது வேலை பார்வையாளனாக இருந்து பார்க்க வேண்டியதே

      Delete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.