Monday, January 28, 2013





கண்டிப்பாக தடை விதிக்க வேண்டும் - பொறுத்தது போதும் பொங்கி  எழுங்கள்

தடை தடை....இதுக்கு தடை....அதுக்கு தடை அப்பப்பா எங்க பார்த்தாலும் தடை .

தடை என்றுதான் எங்கு பார்த்தாலும் பேச்சு. ஆனா "அதற்கு" தடை போட வேண்டும் என்று சொல்லக் கூட பல இடங்களில் தடை

அதற்கு  தடை என்று சொல்லும் மதுரைத்தமிழா அது எது என்று சொல்லாவிட்டால் உன்னை ஃப்ளாக்கில் இருந்து தடை செய்ய நாங்கள் போராட வேண்டும் என்று நீங்கள் சொல்ல வருவது புரிகிறது அப்படியெல்லாம் என்னை செய்து விடாதீர்கள்

நான் இப்போதே சொல்லி விடுகிறேன். அது வேற ஒன்றும் இல்லைங்க இந்த பெண்கள் நமக்கு செய்து கொடுக்கும் உப்புமாவிற்குதான் தடை  வேண்டுமென நினைக்கிறேன் அது தப்பா..

அதை பற்றி பேச்சை எடுத்த்தாலே பூரி கட்டையை எடுத்து நம்ம மிரட்டுராங்க.....மக்களே இந்த நிகழ்ச்சி உங்க வீட்டில் கூட நடந்திருக்க வாய்ப்பு உண்டு. இந்த உப்புமாவினால் நாம் மன உளைச்சலுக்கு ஆளாகி விடுவது மட்டுமல்ல நம்ம இனிய குடும்பத்தில் அடி தடி கூட நடக்கிறது அதானல் தான் கட்டாயமாக தடை செய்ய வேண்டும்..

நேற்று எங்க வீட்டில் உப்புமா பண்ணியதும் பொறுக்க முடியாமல் புகார் கொடுக்க போனேன் போன பிறகுதான் அவர்கள் சொன்னார்கள் FOOD "COURT" ல் உணவை ஆர்டர்தான் பண்ண முடியும் அங்கு புகார் கொடுக்க முடியாது என்று சொன்னார்கள்

அட கொடுமடா.....இதை போய் யாருக்கிட்ட சொல்லுறதுன்னு முழுச்சிகிட்டு இருந்தேன் கடைசியில மை மைண்ட் சொல்லுச்சு..

இதுக்கெல்லாம் ஒரு இடம் இருக்கு அது உனக்கும் தெரியுமடா என்று சொல்லியது. அப்பவும் இந்த அப்பாவி கணவன் முழிக்கும் போது என் மனைவி வந்து என்னங்க இப்படி முழிச்சிகிட்டு இருக்கீங்க நீங்க இப்படி முழிப்பதை போட்டோ எடுத்து தரேன் உங்க தளத்தில் போடுங்க ரொம்ப ஹிட்டாகுமுங்க என்றாள்.

அப்போது ஙே....என்று முழிக்கும் போது மீண்டும் என் மைன்ட் வாய்ஸ்  உப்பாமா பற்றி எங்க புகார் கொடுக்குறது தெரியல்லைன்னா பேசாம பதிவா போட்று அதுக்கு அப்புறம் பாரும் உலகம் பூரா உனக்கு ஆதரவு வந்து சேரும் சொல்லிச்சு!!

என்னங்க எனக்கு ஆதரவு கிடைக்குமா இல்லை விஸ்வரூபம் கமல் மாதிரி எல்லோரும் என்னை தவிக்க விட்டுவிடுவீர்களா?


அன்புடன்
உங்கள் அபிமானத்திற்குரிய
மதுரைத்தமிழன்
28 Jan 2013

21 comments:

  1. உப்புமாவாவது செஞ்சு போடுறாங்களேன்னு சந்தோசப்படாம இதென்ன குற்றப்பத்திரிக்கை தாக்கல் பண்ணிக்கிட்டு??!!

    ReplyDelete
    Replies
    1. அது பண்ணி போடுறதுக்கு பதிலாக தட்டுல ஒரு 10 டாலர் அல்லது 500 ரூபாயை வைத்துவிட்டால் நாங்கள் ஹோட்டலில் பிடித்ததை ஆர்டர் பண்ணி சாப்பிட்டுக்கோவம்ல

      Delete
    2. ஹோட்டல்லாம் சாப்பிட்டா உடம்பு கெட்டுடும்ன்னு ஒரு அக்கறைதான்

      Delete
  2. நான் உப்புமா ரசிகன்
    அண்ணன் தம்பி உதவுவது மாதிரி
    அவசரத்திற்கு உதவுவது உப்புமாதான் என்பது
    எனது கருத்து
    ரசித்துப் படித்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. உப்புமா நான் நன்றாக பண்ணுவேன் ஆனால் எனக்கு அது கடைசி சாய்ஸ்தான்

      Delete
  3. நீங்க சொல்றது ரவா உப்புமாவா? அரிசி உப்புமாவா?அரிசி உப்புமாதான் நிறையப் பேருக்கு புடிக்குது ஆனா எனக்கு ரவா உப்புமாதான் புடிக்கும். நூடூல்சுக்கு முன்னாடியே கண்டுபுடிச்ச இன்ஸ்டன்ட் உணவு ரவா உப்புமாவாதான் இருக்குன்னு நினைக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. நான் சொல்வதௌ ரவா உப்புமாதான். இன்ஸ்டெண்ட் உணவு என்றால் தயீர் சாதம் ஊறுகாய்தான் பெஸ்ட்

      Delete
  4. இப்படிதான் சொல்லனும்னு யாரும் சொல்லியே கொடுக்கலங்க

    ReplyDelete
  5. உப்புமாவிற்கு நிலைய வித்வான் என்று ஒரு பெயர் உண்டு.ஏன் தெரியுமா? ஆல் இந்தியா ரேடியோவில்,ஏற்கனவே தயாரித்து வைத்திருந்த நிகழ்ச்சிகளை ஒலிபரப்புவதில் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால்,உடனே மாத சம்பளத்திற்கு வேலை செய்யும் நிலைய வித்வான்களை எதையாவது வாசிக்கச்சொல்லி சமாளித்துவிடுவார்கள்.ஆகவே உப்புமா ஒரு ஆபத்பாந்தவன். அவனை வைத்தே ஒரு பதிவும் ஒப்பேத்திவிட்டீர்கள்.உங்களுக்கு அதுவே அடிக்கடி செய்து கொடுப்பார்களேயானால்,உங்கள் புகார் நியாயமானது;நான் உங்களுக்கு சப்போர்ட் பண்ணுறேன்.

    ReplyDelete
    Replies
    1. அட நீங்க ஒருத்தராவது என் நிலைமையை புரிஞ்சு சப்போர்ட் பண்ணுறீங்களே ரொம்ப நன்றிங்க இந்த அப்பாவி கணவனை புரிஞ்சுகிட்டது நீங்கள் மட்டும்தான் ஹும்ம்ம்ம்ம்

      Delete
  6. ரவா உப்புமா பண்ணாமல் கிச்சடி மாதிரி காய்கறிகள் சேர்த்து தொட்டுக்க தேங்காய் சட்னி வைச்சு சாப்பாடு செஞ்சு போட்டீங்கன்னா உங்க மனைவி அடுத்த முறை நீங்க உப்புமா பண்ணும் போது பூரிக்கட்டை தூக்க மாட்டார்.

    ReplyDelete
    Replies
    1. இங்க அவங்க பூரி கட்டையை கையில் எடுப்பது நான் வாயை திறக்கும் போதுதான். இப்ப சாப்பிட கூட வாயை திறக்க பயமா இருக்குங்க்.

      Delete
  7. Upma my favorite...-:)

    இதாவது கிடைச்சுதேன்னு நினைச்சு மனதை தேத்திக்குங்க...

    ReplyDelete
    Replies
    1. உப்புமா உங்க favoriteனா நானும் உங்களுக்கு favoriteனா ஆளுதான், காரணம் நான் உப்புமா சூப்பரா பண்னுவேன்

      Delete
  8. இதுக்குத்தான் சொல்லுறது...
    ஆண்களும் சமையல் பண்ண கத்துக்கனும் என்று.
    அப்படி கத்துக் கொண்டிருந்தால்
    இப்படி எல்லாம் வந்திருக்குமா...?

    ReplyDelete
    Replies
    1. என்னமோ எங்களுக்கு சமைக்க தெரியாது மாதிரி பேசுறீங்க.... நான் சமைப்பதை ரசிச்சு விரும்பி சாப்பிடுவதெற்கென்றே இங்க எனக்கொரு ரசிக பட்டாளமே இருக்குங்க

      Delete
  9. பதிவுகளையெல்லாம் உப்புமாவை போல் கிண்டி கிண்டி படைப்பப்வர்க்கு உப்புமா பிடிக்கவில்லையாம் உப்புமாவை சாப்பிட்டுவந்து தெம்பா பதிவு போடுங்க சார் சமையலிலேயே உப்புமா பதமா பண்ணுவது தான் ரொம்ப கஷ்டம் தெரியுமா ?

    ReplyDelete
    Replies
    1. பதிவுகளை போடுவதும் உப்புமா பண்னுவதும் மிக எளிது ஆனா அதை சாப்பிடறதுதான் மிக கடினம்

      Delete
  10. உப்புமா எப்படி உதவியிருக்கிறது பாருங்கள், ஒரு பதிவு போடுமளவிற்குக் கூட.அதைப் போய் தடை செய்ய சொல்கிறீர்களே.இது நியாயமா?

    ஆமாம் ஒன்று கேட்டால் தப்பாக எடுத்துக் கொள்ள மாட்டீர்களே.
    உங்கள் வீட்டில் எத்தனை பூரிக் கட்டை இருக்கிறது.(Just for fun)

    ராஜி

    ReplyDelete
    Replies
    1. எங்க வீட்ல 2 பூரிக்கட்டை இருக்குது... என்னை நீங்க என்ன யாரும் நல்லா கிண்டல் பண்ணலாம் நான் தப்பாவே எடுத்துக்க மாட்டேன்...


      நானும் என் மனைவியும் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள். நான் பண்னும் கிண்டல் கேலிகளினால் தான் என் மனைவி என்னை விரும்பியது. இங்கே நான் பூரிக்கட்டைடையை பற்றி எழுதுவது நகைச்சுவைக்காக மட்டுமே

      Delete
    2. நான் கேட்டதும் சும்மா just for fun .


      Delete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.