தமிழ் தலைவர்கள் சந்தர்ப்பவாதிகளா? அல்லது சமுகப் பிரச்சனைகளை தீர்ப்பவர்களா?
ஒரு சமுகத்தின் தலைவர்கள் என்பவர்கள் அந்த சமுகத்திற்கு ஒரு பிரச்சனை என்று வரும் போது அதை ஆராய்ந்து யாரையும் பாதிக்காத வகையில் கருத்துகளை கூறி சமுகத்தில் ஏற்படும் பிரச்சனைகளை தீர்க்க வேண்டும். அப்படி செய்பவர் யாரோ அவர்தான் அந்த சமுகத்தின் தலைவர் ஆவார்
ஆனால் அப்படி செய்யாதவர்கள்தான் தமிழ் சமுதாயத்தின் தலைவர்களாகவும் காவலர்களாகவும் இருக்கின்றனர். இதை சொல்லவே வெட்க கேடாக இருக்கிறது.
தமிழ் சமுகத்தில் இப்போது நடப்பது என்ன என்று பார்போமா?
இப்போதைய ஆளுங்கட்சியின் தலைவர் ஜெயலலிதா, இவர் இந்த சமுகத்தை நன்றாக காக்க கூடியவர் என்று தமிழ் மக்களால் மிகவும் அதிக அளவு நம்பபட்டு ,ஆதரவை கொடுத்து, அவர் தலையில் "கீரிடம்" வைத்து அழகு பார்க்கப்பட்டவர். இவர் வந்தால் பலப் பிரச்சனைகள் தீரும் என்று மக்கள் நம்பினார்கள் ஆனால் இவர்தான் பலப் பிரச்சனைகளுக்கும் காரணகர்த்தாவாக உள்ளார். கடந்த சில வாரங்களாக தமிழகத்தில் எல்லா இடங்களிலும் பேசப்பட்டு ,சகோதர்களாக பழகி வந்த மக்களிடையே வேற்றுமையை உண்டாக்க காரணமாக இருந்து வருகிறது விஸ்வரூபம். இந்த படத்தில் உள்ள காட்சிகளால்தான் இந்த பிரச்சனை என்று வெளிப்படையாக எல்லோராலும் பேசப் பட்டாலும் உண்மையில் அது பிரச்சனை அல்ல படத்தை எடுத்தவருக்கும் ஆளுங்கட்சி தலைவருக்கும் இடையில் ஏற்பட்ட சொந்த பிஸினஸ் பிரச்சனைதான் காரணம் என்பது மறைந்து இருக்கும் உண்மை. இந்த படத்தின் மூலம் ஆளுங்கட்சி தலைவர் ஆதாயம் அடையும் வாய்ப்புகள் நழுவியதால், என்னால் ஆதாயம் அடைய முடியவில்லை அதனால் உனக்கு நட்டத்தை ஏற்படுத்தி அதன் மூலம் வருங்காலத்தில் நான் ஆதாயம்((ஒட்டுகள்)) அடைய வழி ஏற்படுத்தி கொள்வேன் என்று பிரச்சனையை தம் அதிகாரத்தை வைத்து வளர்த்து கொண்டிருக்கிறார். இவர்தான் இப்போதைய ஆளுங்கட்சி தலைவர்.
அடுத்தாக தலைவர் கலைஞர். இவரும் தமிழ் சமுகத்தின் தலைவர்தான். இந்த பிரச்சனையில் கருத்துக்கள் சொல்லக் கூட தைரியமில்லாத தலைவராகி இந்திய பிரதமர் கூட நட்பு வைத்ததினால் என்னவோ அவரும் வாய் திறவா மெளன தலைவராகவே ஆகிவிட்டார்.காரணம் கருத்து சொல்லி தனக்கு வரும் ஒட்டுக்கள் திசை மாறிப் போய்விடுமோ என்று நினைப்பதுதான்
அடுத்தாக ஒரு மத தலைவர். இந்த படத்தில் வரும் கருத்துகள் எங்கள் மதத்தை இழிவு படுத்துகிறது இந்த இந்த இடத்தில் வரும் இந்த இந்த காட்சிகள் எங்களை பாதிக்கிறது என்று விளக்கமாக எடுத்து மாற்று மதத்தினருக்கும் கூறி, மாற்று மதத்தினரே நாம் உடன் பிறவா சகோதர்கள் போல பழகி வருகிறோம் அதனால் உங்கள் சகோதர்களாகிய நாங்கள் மனவருத்தம் அடைவதால் நீங்களும் எங்களுடன் சேர்ந்து அதை நீக்க போராடவாருங்கள் என்று கூறி இருக்க வேண்டும் அதை விட்டு விட்டு யாரிடமோ பணம் வாங்கியதாலோ அல்லது நானும் தலைவன் எனக்கும் மேடை கிடைத்துள்ளது என்று தரக் குறைவாக படம் எடுத்தவரை பேசுவதனால் பிரச்சனைகள் தீர்ந்துவிடுமா என்ன? எவனோ ஒருவன் சாக்கடை தண்ணியை தன் மேல் ஊற்றி விட்டான் என்பதால் அவனை மேலும் அதே மாதிரி ஊற்ற வேண்டுமென்று சாக்கடைக்குள் இறங்கியது மட்டுமல்லாமல் அதை தன் கையால் அள்ளி அவன் மேல் ஊற்றச் செய்வதானால் நாம்தான் மேலும் நாறிப் போவோம் என்பது இந்த மத தலைவருக்கு தெரியாவில்லையா என்ன? மதம் அப்படிதான் நம்மை செய்ய சொல்லி போதித்தா என்ன?
இப்படிபட்ட தலைவர்கள் சமுகப் பிரச்சனைகளை சுமுகமாக தீர்ப்பதை விட்டுவிட்டு சந்தர்ப்பவாதிகளாக ஆகிப் போனார்கள். இதுதான் தமிழ் சமுகத்தின் சீர்கேடு.
இன்றைய அவசர யுகத்தில் மறதி என்பது நம் மக்கள் இயல்பு!.விழிப்புணர்வு ஏற்படுத்த உண்மையை உறக்கச் சொல்வது, வெளிவராத, மறைக்கப்பட்டவற்றை, பதிவாக இடுகிறேன்.
அன்புடன்
உங்கள் அபிமானத்திற்குரிய
மதுரைத்தமிழன்
டிஸ்கி : யாரையும் காயப்படுதும் நோக்கில் எழுதப்பட்டது அல்ல. மனதில் பட்டதை எழுதி இருக்கிறேன். அவ்வளவுதான் .உங்களுக்கு முடிந்தால் உங்கள் கருத்துகளை சொல்லுங்கள். ஒரு வேளை நான் நினைப்பது தவறு என்றால் திருத்தி கொள்கிறேன். தரம் குறைந்த வார்த்தைகள் இங்கு வெளியிடப்படமாட்டாது. மதப்பதிவுகளுக்கு இட்டுச் செல்லும் பின்னுட்டமும் வெளியிடப்படமாட்டாது
தமிழ் அரசியல்வாதிகள் சந்தர்பவாதிகளும் அல்ல சமூக பிரச்சனையை தீர்ப்பவர்களுமல்ல. அவர்கள் சுயநலவாதிகள்
ReplyDeleteநண்பரே ,
ReplyDeletedemocracy-ல இருக்கோம் நான்non-democracy இல்ல நினைத்து கொண்டு இருக்கேன் நீங்க என்னனா சிந்திக்க சொல்ரீங்க
அனைத்தையும் சுயலாபத்திற்க்கு பயன்படுத்தவே முயற்சி செய்கிறார்கள் என்பது வருந்தத் தக்கது.
ReplyDelete