Friday, February 1, 2013





வீட்டுக் கதவை திறக்காமலே உங்கள் வீட்டிற்குள் நுழையும் ஆபத்து (எச்சரிக்கை பதிவு)



பெண்களே உங்கள் வாழ்க்கையில்  சமூக இணைய தளப் பயன்பாடும் ஒரு நாள் நரகமாகலாம் அதை நீங்கள் கவனமாக கையாளவிட்டால்!.



எப்போதுமே பெண்களுக்கு எங்கும் பாதுகாப்பில்லாத நெருக்கடியான சூழல்தான் நிஜ வாழ்க்கையில் மட்டுமல்ல இப்போது நம்மை நிழல் போல தொடர்ந்து  வரும் இணைய வெளியிலும் மிகவும் எச்சரிக்கையோடு இருக்க வேண்டியிருக்கிறது. தோழிகளுடன் உறவுகளுடன் தொடர்பில் இருக்க...பெண்கள் முன்பைவிட மிக அதிகமாக ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் பங்கெடுத்து வருகின்றனர், அவர்கள்  அதோடு நின்றிருந்தால் பிரச்சனை இல்லை ஆனால் ஆர்வக் கோளாறினாலும் தெரியாத ஆட்களின் பேச்சு சாமர்த்தியத்தாலும் மேலும் சில நபர்களை  நட்பு வட்டாரத்தில் சேர்த்து  உணர்ச்சிவசப்பட்டு தம் சொந்த விஷங்களை பகிரும் போதுதான்  பல வித பிரச்சனைகளில் சிக்கி சிரழிய  நேரிடுகிறது.


 I came across this document yesterday and thought I would share it. The document was created by the U.S. Department of States Bureau of Educational and Cultural Affairs CLICK HERE  

பெண்களுக்கே உரிய உள்எச்சரிக்கை உணர்வு சமூக இணைய தளங்களில் அதிகம் அவசியமாகிறது. சமூக தளங்கள் எத்தனை உத்தரவாதங்கள் வழங்கினாலும், இணைய குற்றவாளிகள் மத்தியில் அவை ஒரு பொருட்டே இல்லை. உண்மையைக சொல்வதென்றால், இணைய வெளியில் பிரைவஸி என்பதற்கே இடமில்லை. அதனால் தொலைவுகளைக் கடந்து உங்கள் தோழிகளின் அருகாமை கிடைக்கப் பெற்ற மகிழ்ச்சியில் எல்லை மீறி அந்தரங்கத்தை வார்த்தையாகவோ புகைப்படமாகவோ பொதுவில் வைத்து விடாதீர்கள். 'சைபர்ஸ்டாக்கிங்' மூலமாக, உலகில் பெண்கள் மிகவும் அதிகம் பாதிக்கப்படுகிறாரகள் என்று செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன.

பெண்கள் லைக்ஸ், கமென்ட்ஸ், முகஸ்துதி இவற்றுக்கு தூண்டிலாகி தாங்கள் முன்பின் அறியாதவர்களை எல்லாம்  நட்பு வட்டத்துக்குள் சேர்த்து கொள்வார்கள். அப்படி சேர்க்கும் போது புதியவர்கள் தவிர்க்க முடியாதவர் என்றால், உங்கள் நம்பகமான நட்பு வளையத்தில் அவரைப்பற்றி நன்கு விசாரித்து சேர்த்து கொள்வதுதான் நல்லது.


சில நேரங்களில் சக பணியாளரையோ  உயரதிகாரியையயோ  வேண்டா வெறுப்பாக சேர்த்துத் தொலைக்க வேண்டியிருக்கும் அதனால்தான் நாம் பெர்சனலுக்கு ஒன்றும்  அலுவல்பூர்வமான நட்புகளை பராமரிக்கவும்  தனி .டி-யை உருவாக்கிக் கொள்ளலாம். இதனால் உங்கள் தோழிகள் மற்றும் உங்கள் உறவுகளை குறித்த தகவல்களையும் உங்கள் அலுவலக ஆண் மற்றும் பெண்களிடம் இருந்து பாதுகாக்க முடியும். புகைப்படங்கள் மட்டுமல்ல, வார்த்தைகளைப் பகிர்ந்துகொள்வதிலும் சமூக தளங்களில் எச்சரிக்கை வேண்டும். உங்கள் மேலதிகாரி பற்றியோ, ஆபீஸ் பற்றியோ நீங்கள் ஜாலியாக பதியும் கமென்ட், உங்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கைக்கு வழி செய்யக்கூடும். இதனால் வேலையை பறி கொடுத்தவர்கள் பலர்.


அதுமட்டுமல்ல சிலர் பெருமைக்காக எங்கே சென்றாலும் தாங்கள் என்ன செய்கிறோம் எங்கே போகிறோம் எப்போது வருவோம் என்பது போன்ற விபரங்களை  சமூக தளங்களில் பறை சாற்றிக்கொண்டிருப்பார்கள். அல்லது, தங்கள் வழக்கமான பதிவுகள் தோறும் செல்லுமிடத்தையும் தானாகப் பதியும்படி விட்டிருப்பார்கள். இந்த அலட்சியமற்ற தகவல்கள், ஃப்ரெண்ட் போர்வையில் நட்பு வளையத்தில் நம்மால் அனுமதிக்கப்பட்ட ஒரு விபரீத பேர்வழிக்கு உதவக்கூடும்.

அடுத்த ஆபத்து, -மெயில் மற்றும் பிறந்தநாள் விவரத்தை பதிவதில் இருக்கிறது. உங்களது பிரத்யேக -மெயில் மற்றும் பிறந்த நாள் விவரத்தை தெரிவிப்பதன் மூலம் உங்களது பல்வேறு இணையப் பயன்பாடுகள், பாஸ்வேர்டுகள் கிரெடிட் கார்டு பரிமாற்றம் வரை குற்றவாளிகளுக்கு எளிதில் கிடைத்து விடுகிறது. இதிலிருந்து தப்பிக்க சமூக வலைதள பயன்பாட்டுக்கென டம்மியாக தனி -மெயிலை உருவாக்கிக் கொள்ளலாம். பிறந்தநாளை பதியும்போது உண்மையான நாள் மாதம் மற்றும் வருடத்தை தவிர்ப்பது புத்திசாலிதனம்.


சமூக தளங்களின் மூலம் நமக்கு வரும் தொல்லைகள் அவைகள் இலவசமாக அளிக்கும் கவர்ச்சிகரமான அப்ளிகேஷன்களில் மறைந்திருக்கிறது. குறிப்பிட்ட அப்ளிகேஷனுக்கு நாம் அப்ரூவல் வழங்கும்போது அதன் மூலம் நம்மைபற்றிய  தகவல்கள் கடத்தப்பட நாமே  வழி செய்கின்றோம். அடுத்தாக உங்கள் சமூக கணக்கை உபயோகித்து ஆன்லைன் விளையாட்டுகளில் ஈடுபடும்போதும்   நம்மை பற்றிய பெர்சனல் தகவல்கள் நமது  கம்பியூட்டரில் இருந்து திருட வழி செய்து கொடுக்கிறோம்


ஃபேஸ்புக் போன்ற சமுகதளங்கலில்  பெண்கள் சந்திக்கும் பெரும் பிரச்னனையே  புகைப்படங்கள் வக்கிரபுத்திக்காரர்களால் காப்பி செய்யப்பட்டு  பலான இணைய தளங்களில் சுற்றுக்கு விடப்படுவதும் தவறான முறையில் பயன்பத்துவதும்தான். இதனை தடுக்க  பாதுகாப்பு மென்பொருள் நிறுவனமான McAfee வழங்கும் இலவச சோஷியல் அப்ளிகேஷனை உங்கள் ஃபேஸ்புக் கணக்கு வாயிலாக நிறுவிக் கொள்வதன் மூலம் உங்கள் புகைப்படங்களைப் பாதுகாக்கலாம் என்று சொல்லப்படுகிறது. இப்படி செய்வதன் மூலம் உங்கள் நட்பு வட்டத்தில் நீங்கள்  உண்மையான உறவுகள் நம்பிக்கை உள்ளவர்கள் என்று கருதுபவர்களை  மட்டுமே உங்கள் படத்தைப் பார்க்க செய்ய முடியும். மற்றவர்களால் பார்ப்பது மட்டுமல்ல, காப்பி செய்வதோ டவுன்லோட் மற்றும் ஸ்கிரீன் ஷாட் செய்வதோ முடியாது.


பெண்கள்  சைபர் ஸ்டாக்கிங் (Cyberstalking) என்பதை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்,சைபர் ஸ்டாக்கிங் என்பது  நம்மை அறியாது நிழலாக பின்தொடர்பவர்களினால் வரும் ஆபத்து. ஆர்வக்கோளாறோ அல்லது பெரும்விஷமமோ இவர்களின் பின்தொடர்தலில் ஒளிந்திருக்கும். செக்யூரிட்டி செட்டிங்ஸில் பாதுகாப்பு வளையங்களை இறுக்கமாக நிர்ணயிப்பதன் மூலம், இவர்களைக் கட்டுப்படுத்தலாம். சமூக வலைதளங்கள்,  அடிக்கடி மாற்றிக்கொண்டே இருக்கும். அதனால், முடிந்த போதெல்லாம் உங்களது செக்யூரிட்டி வளையத்தை அப்டேட் பண்ணிக் கொள்வது நல்லது. ஃபேஸ்புக்கின்  செக்யூரிட்டி பற்றிய அப்டேட்டுக்கு  இங்கே செல்லவும்


அதேபோல, ட்விட்டரில் பாதுகாப்பைத் பலப்படுத்த, அவர்கள் தரும் கட்டமைப்பையே முழுமையாக பயன்படுத்திக் கொள்ளலாம். . புதியவர்களுக்கும் உங்களைப் போன்ற பாதுகாப்பு உணர்வாளர்களுக்கும் ட்விட்டர் வழங்கும் இந்தப் பக்கங்களில் இருந்து கூடுதல் தகவல்களை பெறலாம்.


மேலும் பாதுகாப்பான ட்விட்டர் உலாவலுக்கு இந்த இலவச டூல் உதவும்


அதனால் சமுக இணைய தளங்களில் தகவல்கள் வெளியிடும் போது  எச்சரிக்கை உணர்வோடு செயல்பட்டு மாதம் ஒரு முறையேனும் செக்யூரிட்டி செட்டிங்ஸ்களை ஆராய்ந்து சரி செய்து பாஸ்வேர்டு மாற்றம் உட்பட உங்களுக்கான பாதுகாப்பை இறுக்கிக்கொள்ளுங்கள். இதில் சிறிது அலட்சியம் காட்டினால் வாழ்க்கையில் பெரும் சொர்க்கமாக நாம் கருதி கொண்டிருக்கும் சமூக இணைய தளப் பயன்பாடு உங்கள் வாழ்க்கையில் ஒரு நாள் நரகமாக கூட ஆகலாம்.


அன்புடன்
உங்கள் அபிமானத்திற்குரிய
மதுரைத்தமிழன்

டிஸ்கி :நான் பல இடங்களில் படித்ததை அறிந்ததை தொகுத்து பலரும் குறிப்பாக பெண்கள் பலன் அடைய வேண்டும் என்பதால் இதை பதிவாக இட்டுள்ளேன். அது போல நீங்களும் உங்களது அறிவுரைகளை பின்னுட்டமாக இடலாம். சமுக தளங்களால் நீங்கள் பாதிக்கப்பட்டிருந்தால் உங்களது அனுபவங்களை வெளியிடலாம். அல்லது அதது போல பதிவுகள் நீங்கள் இட்டு இருந்தால் அதற்கான லிங்கை இங்கே தரலாம்
  

17 comments:

  1. மிக விரிவான அருமையான தேவையான விழிப்புணர்வு பதிவு MTG !
    கணினி என்றாலே கண்காணி என்றே சொல்லலாம்.
    வலைப்பூ விஷயத்திலும் உலவலிலும் கூட எச்சரிக்கையாய் இருப்பது நல்லது.
    விரிவான விவரமான தங்கப் பகிர்விற்கு நன்றி !

    ReplyDelete
  2. மிக அருமையான பதிவு.
    இந்தப் பதிவை நீங்கள் fb போன்ற தளங்களில் ஷேர் செய்தீர்கள் என்றால் நிறைய பேர் பயனடைவார்கள்.
    நான் உங்களை தொடர்கிறேன்.
    ஆனால் இந்த உங்களுடைய பதிவு என் dash board ற்கு வரவில்லை. இதை tamil manam மூலமாக நான் படித்து கமென்ட் எழுதுகிறேன்.
    என்னவென்று புரியவில்லை.

    பகிர்விற்கு மிக்க நன்றி

    ராஜி

    ReplyDelete
  3. பயனுள்ள்ள அருமையான பதிவு
    பகிர்வுக்கு ம்னமார்ந்த நன்றி

    ReplyDelete
  4. ஒவ்வொருவரும் தெரிந்திருக்க வேண்டிய மிகவும் தேவையான பதிவு.

    ReplyDelete
  5. நல்ல பதிவு.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. நல்ல விழிப்புணர்வு பதிவு
    பகிர்விற்கு மிக்க நன்றி “உண்மைகள்“

    ReplyDelete
  7. அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய பகிர்வு.

    ReplyDelete
  8. நல, நல்ல வழிகாட்டுதல் பகிர்வு நன்றி

    ReplyDelete
  9. தகவலுக்கு நன்றி அவசியம் அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய பதிவு

    ReplyDelete
  10. அனைவருக்கும் தெரிந்துகொள்ள வேண்டிய பகிர்வு .மிக்க நன்றி.

    ReplyDelete
  11. அவசியமான அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய விடயங்கள் நன்றிங்க.

    ReplyDelete
  12. உங்களுடைய இந்த பதிவு அனைவரும் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய பகிர்வு நன்றி

    ReplyDelete
  13. அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய
    பயனுள்ள தகவல்கள் ,குறிப்பாக பெண்களுக்கு
    மிகவும் பயனுள்ளதாக இருக்கும் .........
    பகிர்வுக்கு மிக்க நன்றி ..............

    ReplyDelete
  14. தெரியாத பல தகவல்களைத் தெரிந்து கொண்டேன். இணையத்தில் உலா வருபவர்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். தெளிவான தகவல்களுக்கு நன்றி.

    வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்!

    ReplyDelete
  15. அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள பதிவு நிறைய விடயங்கள் அறியத் தந்துள்ளீர்கள் மிக்க நன்றி !

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.