Monday, February 4, 2013

விஸ்வரூபம் பிப்ரவரி 7ம் தேதி தமிழகத்தில் வெளியிடப்படுகிறது


தடை பல கடந்து உங்கள் விஸ்வரூபம் வரும் வியாழக்கிழமை 7ஆம் தேதி தமிழகமெங்கும் வெளியாக உள்ளது.


இதனால் மக்களுக்கு சொல்லவருவதென்றால் சமுதாயத்தை நல்வழிபடுத்த வரும் இந்த படத்தை உங்கள் பொண்டாட்டி தாலியை விற்றாவது பார்த்து விடுங்கள். சொந்த வீடு வாசலை அடகு வைத்து எடுத்த படம் நஷ்டத்தில் ஓடக் கூடாது அதனால் மக்கள் எல்லோரும் ஓன்றுக்கு இரண்டு தடவை பார்த்துவிட வேண்டும்.


அப்போதுதான் கமல் அவர்கள் அடுத்த படம் எடுத்து இந்த சமுதாயத்தை முன்னேற்ற பாதையில் அழைத்து சென்று தமிழகத்தை அமெரிக்காவாக மாற்றி விடுவார்.

நாட்டில் எவ்வளவோ விஷயங்கள் நடக்கும் போது ஒரு படத்திற்காக கடந்த இரண்டு வாரங்களாக தமிழக முதல்வரில் இருந்து கடைக் கோடி தமிழன் வரை தங்களின் பொன்னான நேரத்தை செலவழித்து அந்த படம் மீண்டும் வெளியிட உதவியாக இருந்தததை எண்ணினால் மிகவும் வியப்பாகவும் ஆச்சிரியமாகவும் இருக்கிறது

வாழ்க தமிழினமே.
04 Feb 2013

6 comments:

  1. படத்துக்கு நல்ல பப்ளிசிட்டி கிடைச்சிடுச்சு. டிவி பக்கமே போகாத நானே!? கமல் பேட்டியை ஒரு முறைக்கு நாலு முறை பார்த்தேன்:-(

    ReplyDelete
  2. வாதங்களும் விவாதங்களும் சுவாரசியமா இருந்தது.பதிவர்களுக்கு நல்ல தீனி கிடைச்சது.
    ம்ம்ம்ம் நான் மட்டும் இதைப் பத்தி எழுதாம மிஸ் பண்ணிட்டேன்.

    ReplyDelete
  3. ஆஹா...... பரவாயில்லையே............. நீங்க ஆப்பு எல்லோருக்கும் வைக்கிறீங்க போலிருக்கே!!

    ReplyDelete
  4. தமிழகத்திலிருந்து கேரளா மற்றும் ஆந்திராவிற்கு வண்டி கட்டி விஸ்வரூபம் பார்க்க சென்றோரும் உள்ளபோது,தமிழக முஸ்லீம்கள் மனதை பாதிக்கும் வகையில் படம் எடுத்த கமலின் துணிச்சலுக்கு நிகரான பதிவு இது.

    ReplyDelete
  5. மற்ற மாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் ஓடிக்கொண்டிருக்கும்போதே, நான் சொத்துக்களை அடமானம் வைத்துவிட்டேன். இங்கு ஓடாவிட்டால் எனது சொத்துக்கள் போய்விடும் என்று பேட்டி கொடுத்தார். அப்படியானால் செலவு முழுதும் தமிழ்நாட்டிலேயே சம்பாதிக்கத் திட்டம் போட்டிருந்தாரா? ஏனென்றால் DTH பற்றி அறிவித்தபோது ஹிந்திக்கு ரூ.500ம் தமிழுக்கு ரூ.1000 என்றும் அறிவித்திருந்தார்.

    ReplyDelete
  6. என்ன என்ன???, "செய்வதரியேன்" ஆ?"

    ஆங்கில மாயைல கமலிடமும் தமிழ் தள்ளாடுது பாவம்! :(

    "பிருந்தாவனத்தில்" உக்காந்து "நொந்து நொந்து" எழுதினாரோ என்னவோ? அதான் தமிழ் இப்படி வருது!

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.