Thursday, February 21, 2013



பா.. நிறுவனர் டாக்டர் ஐயா ராமதாஸ் அவர்களுக்கு தமிழக பெண் எழுதிய கடிதம்


எனக்கு வந்த இந்த கடிதம் சி.எம் செல்லுக்கும் பல நீயூஸ் மிடியாவிற்கும் அனுப்பபட்டுள்ளது.. பதிவுலகத்தின் குரல் இப்போது உலகெங்கும் ஒலிக்க ஆரம்பிப்பதால்  பொள்ளாச்சி பொது மக்கள் மற்றும் பெண்கள் சார்பில், சே. வளர்மதி  அவர்கள் எனக்கு அனுப்பிய கடிதம் இங்கு பதிவாக வெளியிடப்படுகிறது.

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------


பா.. நிறுவனர் டாக்டர் ஐயா,

ஓட்டுக்கு செயல்படாமல், மதுவிலக்கு கொள்கையில் நிறைய வருடங்களாக பாமக உறுதியாக இருப்பது குறித்து மகிழ்ச்சி. எங்களைப்போன்ற பெண்களின் காவலனாக செயல்படுவது மிக்க மகிழ்ச்சி கொடுக்கிறது.

எங்கள் ஊரான பொள்ளாச்சியில் தேர்நிலையத்தில் உள்ள சுப்ரமணியசுவாமி கோவில் அருகில் செயல்படும் டாஸ்மாக்  "பாரால்' குடிமகன்கள் தொல்லை அதிகரித்துள்ளது.

இந்த பாருக்கு, கோவில் நிலம் வழியாக செல்ல வேண்டும். பாருக்கு வரும் குடிமகன்கள், காலி சரக்கு பாட்டில்கள், பிளாஸ்டிக் கவர்களை பராமரிக்கப்பட்டு வரும் நிலத்தில், வீசுகின்றனர். இதனால், கோவில் நிலம் குப்பை மயமாக காட்சியளிக்கிறது. குடிமகன்களின், இப்பகுதியை ஆக்கிரமித்து கொள்வதால், இரவு நேரத்தில் இவ்வழியாக பெண்கள், குழந்தைகள் செல்ல முடியாத நிலை உள்ளது. குடியிருப்புகள் நிறைந்த பகுதியில், இதுபோன்ற தொல்லையினால் மக்களும் அவதிக்குள்ளாகின்றனர். இப்பிரச்னைக்கு, நிரந்தர தீர்வு ஏற்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அலட்சியமே மிஞ்சியுள்ளது. இந்தப்பகுதி பெண்கள் அனைவரும் விவாசய மந்திரி தாமோதரன், துணை சபா நாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், பொள்ளாச்சி எம்.பி. சுகுமார் என்றும் நடையாய் நடந்து விட்டோம். ஓட்டு கேட்கத்தான் வருகிறார்களே தவிர, மக்கள் குறைகள் குறித்து கவலை இல்லை. என் கணவர் நண்பர் ஒருவர் பத்திரிகை நிருபர். அவரிடம் பிரச்சினையை சொன்னவுடன் இந்த பிரசினையை முக்கிய செய்தி தாளில் வர வைத்து விட்டார். இந்த பிரசினையை அவள் விகடனுக்கு எழுதி பிரசுரம் செய்ய வேண்டி கேட்டுள்ளோம். கவனிப்பார்கள் என்று நம்புகிறோம்.

என் கணவர்  ஒரு யோசனை சொன்னார். உங்களை போன்ற ஒருவர் தலைமை தாங்கி மதுக்கடையை பூட்டு போட செய்தால் அரசாங்கம் தன்னால் பணியும் என்று யோசனை சொன்னார். நீங்கள் தலைமை தாங்கி இந்த மதுக்கடைக்கு பூட்டு போட்டால், பெண்கள் கூட்டம் தன்னால் சேர்ந்து விடும். தமிழ் நாட்டில் உங்களை மாதிரி எந்த தலைவரும் மதுவிலக்கை ஆக்ரோஷமாக எதிர்ப்பது இல்லை. பொள்ளாச்சி பொது மக்கள் குறிப்பாக பெண்கள் சார்பில் உங்கள் தலைமையில் இங்குள்ள மதுக்கடைக்கு பூட்டு போட அழைக்கிறோம்.

எங்கள் கோரிக்கைக்கு இசைந்து பொள்ளாச்சிக்கு வருகை தந்து மது கடைக்கு பூட்டு போடும் போராட்டத்துக்கு தலைமை தாங்க வேண்டுகிறேன்.

நன்றி. வணக்கம்.

பொள்ளாச்சி பொது மக்கள் மற்றும் பெண்கள் சார்பில்,
சே. வளர்மதி

இடம்: பொள்ளாச்சி
நாள்: பிப்ரவரி 18, 2013

3 comments:

  1. என்ன நடக்கிறது என்று பார்ப்போம்.

    ReplyDelete
  2. அய்யாவின் கரம் நிச்சயம் பூட்டும் அந்த சாக்கடையை

    ReplyDelete
  3. நல்ல அரசியல் செய்ய ஒரு அறிய வாய்ப்பு ....

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.