Thursday, February 14, 2013







நாட்டுபற்று மிக்க பா.. உறுப்பினர்கள் யார் பிரதமர் ஆக வேண்டும் என்று சொல்லிறார்கள்? அது சரியா?


எனக்கு நாட்டுபற்று மிக்க பா.. உறுப்பினர்கள் இமெயிலில் அனுப்பிய மெயிலை இங்கு பதிவாக பதிவிடுகிறேன். இங்கு கருப்பு கலரில் இருப்பவைகள் எல்லாம் நாட்டுபற்று மிக்க பா.. உறுப்பினர்கள் அனுப்பியது அடைப்பு பகுதியில் சிவப்பு கலரில் இருப்பவைகள் எல்லாம் 'மதுரைத்தமிழனின்' கருத்துக்கள். நீங்கள் இதை படித்துவிட்டு கண்ணியாமான முறையில் உங்கள் கருத்துக்களை பதியலாம். தலைவர்களை அவன், அவள் என்று மரியாதை இல்லாமல் விழிக்கும் கமெண்டுக்களுக்கு இங்கு அனுமதியில்லை அதனால் அப்படி கண்ணியக் குறைவான பதிலை எழுதி உங்கள் நேரத்தை வீணடிக்க வேண்டாம். அது போல பின்னுட்ட கருத்துகளுக்கு அதை எழுதியவறே பொறுப்பாவார் என்பதை இங்கு அறிவித்து கொள்கிறேன்

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
அன்புள்ள தமிழக மக்களே,

நாட்டுபற்று மிக்க பா.. தொண்டர்கள் சார்பில் ஒரு ஆரோக்கியமான விவாதத்தை தொடங்கி வைக்கிறோம். இதை உங்கள் நண்பர்களிடம், உறவினர்களிடம் விவாதம், தமிழக பொது மக்களிடம் விவாதம் செய்யுங்கள்.

கடந்த ஒரு வருடமாக அதிமுகவினர் முதல்வர் ஜெயலலிதாவை அடுத்த பிரதமர் என்று வர்ணிக்கின்றனர்.( அதில் என்ன தப்பு? அவர்கள் ஆசைபடக் கூடாதா என்ன ) பா.. என்றுமே, அதிமுகவை கொள்கை அளவில் நட்பு கட்சியாகவே பார்க்கிறது. தென்னிந்திய அளவில் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் ஒரு மூத்த மற்றும் முக்கிய தலைவர் என்பதை ஒப்பு கொள்கிறோம். ஆனால் இந்தியாவை ஆள்வதற்கு நரேந்திர மோடி அவர்களே மிகச்சிறந்த தகுதியானவர் என்பது பா..கவின் நிலைப்பாடு. இதற்கான காரணத்தை ஒன்றன்பின் ஒன்றாக வைக்கிறோம். ( அதிமுக தொண்டர்கள் ஆசைப்பட்டா தவறு ஆனா நீங்க ஆசைபடுவது மட்டும் தவறில்லையா? ///மோடி அவர்களே மிகச்சிறந்த தகுதியானவர் என்பது பா..கவின் நிலைப்பாடு. ///  உங்க கட்சியின் நிலைப்பாடும் இந்திய மக்களின் அதிலும் தமிழக மக்களின் நிலைப்பாடும் வேறாச்சே.அதை மறந்துட்டீங்களே இந்த பதிவை படிக்கும் மக்கள் பின்னுட்டத்தில் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம் )

1. நரேந்திர மோடி அவர்கள் ஜெயலலிதா அவர்களுக்கு பின் 10 ஆண்டுகள் கழித்து முதல்வர் ஆனவர். ஜெயலலிதா அவர்கள் 1991 ல் முதல்வர், மோடி அவர்கள் 2001 ல் முதல்வர் ஆனார். மோடி அவர்கள் சாதனையை வைத்து 2002 ஆம் ஆண்டு, 2007 ஆம் ஆண்டு, 2012 ஆம் ஆண்டு என்று தொடர்ச்சியாக வெற்றி பெற்றுள்ளார். தமிழகத்தை பொறுத்தவரை, திமுக மீது உள்ள வெறுப்பினால் அதிமுகவுக்கு ஓட்டு போடுவதும், அதிமுகவில் உள்ள வெறுப்பினால் திமுகவுக்கு ஓட்டு என்று கடந்த 1989 ஆம் ஆண்டு முதல் நடந்து வருகிறது. மோடி அவர்களைப்போல் சாதனை வைத்து வெற்றி பெரும் அளவில் இரு ஆட்சிகளும் தமிழகத்தில் இல்லை என்பதுதான் நிதர்சன உண்மை.( மோடி அவர் வாழும் மாநிலத்தில் வேண்டுமானாலும் சாதனை புரிந்து இருக்கலாம் அவர் உண்மையில் சாதனையாளர் என்று நிறுபிக்க அவரது மாநிலத்தை தன் கட்சியில் உள்ள வேறு ஒருவருக்கு கொடுத்துவிட்டு அண்டைய மாநில தேர்தலில் நின்று வென்று அதன் பின் அங்கும் சாதனையை செய்து காண்பிக்க அவரால் முடியும் என்றால் அவரும் ஒரு சாதனையாளர் என்பதை ஒத்துக் கொள்ளவோம் அது அவரால் முடியுமா?

2. ஒரு நாட்டின் பிரதமர் என்பவருக்கு இந்திய அளவில் ஆதரவு இருக்க வேண்டும். மோடி அவர்கள், சமீப காலங்களில் இந்தியா முழுவதும் சுற்றி பிரச்சாரம் செய்கிறார். ( இந்தியா என்பது செளத் இந்தியாவையும் சேர்த்துதானே சொல்லிகிறீர்கள் ஆனால் அப்படி தெரியவில்லையே )பா.. என்பது காங்கிரசுக்கு இணையான தேசிய கட்சி. பிரதமர் பா.. கட்சியில் பிரதமர் வேட்பாளார் வந்தால்தான் அது ஸ்திரமான ஆட்சியாக இருக்க முடியும்.( நீங்கள் சொல்லவது உண்மை என்றாலும் நீங்கள் அதிமுக ஆதரவை எதிர்பார்க்கிறீர்கள் அவர்கள்தான் உங்கள் ஆட்சியை ஸ்திரமாக இல்லாமல் கவுத்துவிட்டவர்கள். மோடியும் ஜெயலலிதா அவர்களும் நண்பர்களாக இருந்தாலும் தான் தன் கட்சி என்று வரும் போது வேறுபட்டுதான் நிற்பார்கள்தானே ) இதற்கு முன் பிராந்திய அளவில் அரசியல் செய்த தேவ கவுடா போன்றவர்கள் தேசிய அளவில் நிலைக்க முடியவில்லை. ஒரு வேளை அதிமுக அமோக வெற்றி பெற்றாலும், 30 எம்.பிக்களை வைத்து கொண்டு பிரதமர் ஆனால் அது நீண்ட நாள் நிலைக்காது. ஜெயலலிதா, நிதிஷ் குமார் போன்றவர்கள் உதவி பிரதமர் அல்லது, துணை பிரதமர் ஆகும் வாய்ப்புக்கள், சாத்திய கூறுகள் உண்டு. ஜெயலலிதா, நிதிஷ் குமார் போன்றவர்கள் பிரதமர் ஆவது அவர்கள் பிரதமர் கனவை ஒரு சில ஆண்டுகளுக்கு நிறைவேற்ற உதவுமே தவிர, இந்தியாவின் கனவை நிறைவேற்றாது.  தனிப்பட்ட ஒரு சிலரின் கனவு முக்கியமா இல்லை 120 கோடி மக்களின் கனவு முக்கியமா?

3. பிரதமர் போட்டி என்றால் தேசிய கட்சியை சேர்ந்த பா.. சார்பில் மோடி அவர்களுக்கும், காங்கிரஸ் சார்பில் சிதம்பரம் போன்றவர்களுக்கும்தான் என்ற கருத்து பெரும்பாலான மக்களிடம் பரவி உள்ளது.(பரவலாக என்று சொல்வதைவிட இந்த மாதிரி ரூமைரை கிளப்பி விட்டு ஜெயலலிதாவை காங்கிரஸ் பக்கம் போகவிடாமல் பிஜேபி செய்யும் சதி என்று எடுத்து கொள்ளலாமே ) முதல்வருக்கு நெருக்கமான பத்திரிக்கையாளர் சோ மோடி பெயரையும், கட்சி சார்பற்ற நடிகர் கமல ஹாசன் நிதி அமைச்சர் . சிதம்பரம் பெயரையும் பிரதமர் வேட்பாளராக குறிப்பிட்டுள்ளனர். பிரதமர் போட்டிக்கு சாத்திய கூறு உள்ள வேட்பாளர்கள் தேசிய கட்சியில் இருந்துதான் வரமுடியும் என்பது அரசியல் நிர்பந்தம்.(நிர்பந்தங்கள் பல சமயங்களில் உடைக்கப்பட்டு இருப்பதை உலக அரசியலில் இருந்து நாம் பார்க்கலாமே ) ஒரு வேளை ஜெயலலிதா அவர்கள் பா.. கட்சியில் இருந்திருந்தால் பிரதமர் ஆக சாத்திய கூறுகள் உண்டு.

4. முதல்வர் ஜெயலலிதாவை பொறுத்தவரை, அவர்கள் தமிழ் நாட்டுக்கு செய்ய வேண்டிய பணிகள் நிறைய உள்ளன. அவர் தேர்தல் வாக்குறுதியில் சொன்னது போல், தமிழ் நாட்டை முதல் மாநிலம் ஆக்க பல ஆண்டுகள் பிடிக்கும். அதை செய்யாமல் மக்களிடம் பிரதமராக ஓட்டு கேட்டால் அது செல்லுபடியாகாது என்பதை பா.. சார்பில் பணிவன்புடன் சொல்லி கொள்கிறோம். ( இப்படி பணிவன்புடன் சொல்லிக் கொள்வதற்கு பதிலாக மின்வெட்டை பிரச்சனையை தீர்க்க சாதனை புரிந்த மோடி அவர்கள் நல்ல தீர்வை பப்ளிக்காக அறிவிக்கலாமே அது உண்மையாக நன்மை பயக்கும் பட்சத்தில் அவர் கேட்காமலே தமிழக மக்களின் ஒட்டுக்கள் அவருக்கு வந்து சேருமே )ஏற்கனவே, தமிழக அளவில் மின் வெட்டை தீர்க்காதவர் இந்திய அளவில் எப்படி நல்ல ஆட்சி கொடுக்க முடியும் என்று தமிழக எதிர்க்கட்சிகள் பிரச்சாரம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

5. சரி ஒரு வேளை முதல்வர் ஜெயலலிதா தேசிய அரசியலுக்கு சென்றால், தமிழ் நாட்டில் முதல்வர் யார்? இது அதிமுக கட்சி சம்பந்தப்பட்ட விவகாரம் மட்டுமில்லை. இது பொது மக்கள் நலன் சார்ந்த கேள்வியாகும். இதை முதல்வர் ஜெயலலிதா ஓட்டு போட்ட விளக்க வேண்டி கடமை பட்டுள்ளார். நிதி அமைச்சர் . பன்னீர் செல்வமா? முன்னாள் நிதி அமைச்சர் சி.பொன்னையனா?நத்தம் விஸ்வனதனா?முன்னால் சபாநாயகர் டி. ஜெயக்குமாரா?முன்னால் அமைச்சர் சிவி சண்முகமா?எம்.பி. தம்பிதுரையா என்று மக்கள் அறிய வேண்டும். தமிழ் நாட்டுக்கு நல்ல முதல்வர் கிடைத்தால்தான் முதல்வர் ஜெயலலிதாவை தேசிய அரசியலுக்கு அனுப்புவார்கள்.

ஒரு பக்கம் திமுக + காங்கிரஸ் + தே.தி.மு. ( அட நீங்களே முடிவு பண்ணிடிங்களா )என்று கூடி வரும் சூழ்நிலையில்  தேச பக்தி உள்ள கட்சிகள் பா.. தலைமையில் ஒன்று கூடினால்தான் வெற்றி பெற முடியும். எனவே, நாட்டின் நலன் கருதி, மோடி அவர்களை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க தென்னிந்திய அளவில் மூத்த தலைவரான, தேசப்பற்று மிக்க தலைவரான ஜெயலலிதா அவர்களை பணிவன்புடன் கேட்டு கொள்கிறோம். முதல்வர் அருகில் உள்ள ஆலோசகர்களும், பத்திரிக்கையாளர்களும், உளவுத்துறை அதிகாரிகளும் பக்குவமாக எடுத்து சொல்லுமாறு கேட்டு கொள்கிறோம்.( அட அவரை கேட்பார் கைபிள்ளையாக்கி மூத்த தலைவரை காமடி பீஸாக்கி விட்டீர்களே?

இங்கனம்
நாட்டுபற்று மிக்க பா.. உறுப்பினர்கள்
குறிப்பு: இந்த கடிதம், தமிழத்தில் உள்ள முக்கிய தொழில் பிரமுகர்களுக்கும், முக்கிய பத்திரிக்கையாளர்களுக்கும், முக்கிய இணைய தளங்களுக்கும் அனுப்பி வைக்கபடுகிறது.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------


மிகப்பெரிய ஜனநாயக நாடான  இந்தியாவில் பிரதமர் பதவியை அலங்கரிக்கத் தகுதியானவரை அடையாளம் காட்ட தேசியக் கட்சிகள் தயங்கி நிற்கின்றன. காங்கிரஸýம், பாஜகவும் எப்படியும் சேர்ந்து போட்டியிடப்போவதில்லை. அப்படியெனில் இரு அணிகள் இப்போதே உறுதி செய்யப்பட்டவை தானே. அதனால் ஏன்  இந்த இரு கட்சிகளாலும் பிரதமர் வேட்பாளரைச் சுட்டிக்காட்ட இயலவில்லை. இங்கு பிஜேபி பெயரில் மெயில் அனுப்பியவர் முதலில் தன் கட்சியில் யார் பிரதமராக நிற்கப் போகிறார் என்பதை அதிகாரப் பூர்வமாக அறிவித்துவிட்டு அதன் பின் தமிழக முதல்வரை வம்பிலுக்கலாமே


அன்புடன்
உங்கள் அபிமானத்திற்குரிய
மதுரைத்தமிழன்

டிஸ்கி : பெண்களுக்கு ஒரு வேண்டுகோள் இந்த வலைத்தளம் பல்சுவை செய்திகளை தாங்கி வருகிறது அதனால் இங்கு சில சமயங்களில் அரசியல் சார்ந்த பதிவுகளும் வருகிறது இங்கு நடுநிலைமையோடு பதிவுகள் வரும் அதானால் அதை ஒதுக்கிவிடாமல் படியுங்கள் கவிதை கதைகளை மட்டுமே படிப்பதுதான் பெண்களின் வழக்கம் என்று சமுக பிரச்சனைகளை அறியாமல் இருந்து வீடாதீர்கள் எனப்துதான் எனது வேண்டு கோள்.  தைரியமாக உங்கள் மனதில் தோன்றும் கருத்துக்களை பதியுங்கள் .நன்றி


சமுக சிந்தனை உள்ள கவிதைகளை  கட்டுரைகளை எழுதி அனுப்பினால் அது இங்கு உங்கள் பெயரைத்தாங்கி பதிவாக வெளியிடப்படும். நீங்கள் வலைத்தளம் வைத்து இருந்தால் அதற்கான லிங்கும் இங்கு இடப்படும்.


நன்றி

அன்புடன்
உங்கள் அபிமானத்திற்குரிய
மதுரைத்தமிழன்


1 comments:

  1. //தேச பக்தி உள்ள கட்சிகள் பா.ஜ.க தலைமையில் ஒன்று கூடினால்தான் வெற்றி பெற முடியும்.//

    அப்புடியா, பா.ஜ.க வை ஆதரிக்குறது அவ்ளோ பெரிய தேச பக்தியா? சொல்லவே இல்ல? ஆமா, அவுங்கல்லாம் எவ்வளவு கச்ச்டப்பட்டு (?) இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கி குடுத்தவங்க(!?) இதுக்கு முன்னாடி ஆட்சி செஞ்சப்ப இந்தியாவுக்காக பல அறிய பெரிய சாதனை எல்லாம் பண்ணியிருக்காங்க, கார்கில் சவப்பெட்டி ஊழல், பங்காரு லக்ஷ்மன் தெகல்கா ஊழல், மாநில அளவில் பல பல ஊழல், இன்னும் சொல்லிகிட்டே போகலாம், இதெல்லாம் தேச பக்தியின் அடையாளமில்லையா(!?).

    தேச பக்தி....

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.