Monday, February 18, 2013



தமிழக அரசு அறிவிக்கப் போகும் அதிரடி சலுகைகள் ( சந்தோஷப்படப் போகும் தமிழகம் )

தமிழகத்தில், 2003ல், .தி.மு.., ஆட்சியின் போது, டாஸ்மாக் மூலம் மது விற்பனை துவக்கப்பட்டது. மது விற்பனையை துவக்கி ஆண்டில், 3,250 கோடியாக இருந்த மது விற்பனை, 2011- 12ம் நிதி ஆண்டில், 20 ஆயிரத்து,180 கோடியாக உயர்ந்தது.நடப்பு, 2012-13ம் நிதியாண்டுக்கு, 23 ஆயிரம் கோடியாக இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது




டாஸ்மாக் மது விற்பனையை எதிர்த்து பல்வேறு சமூக அமைப்புகள், அரசியல் கட்சியினர் போர்க் கொடி தூக்கும் போது கூட, மது விற்பனை தடை குறித்து அரசு எவ்வித அறிவிப்பும் வெளியிடாமல், மது விற்பனையை அதிகரிக்க செய்யும் முயற்சியிலேயே ஈடுபட்டு வருகிறது

அதனால் வருங்காலத்தில் தமிழக அரசு அறிவிக்கப் போகும் அதிரடி சலுகைகள் இப்படித்தான் இருக்குமோ?

மதுரைத்தமிழனின் கற்பனைகள் டாஸ்மாக் சரக்காக இங்கே வழிந்தோடுகின்றன.


1.  பெண்களுக்கென  பெண்களால்  நடத்தப்படும்  டாஸ்மாக் கடைகள் பெண் குடிகாரர்களுக்காக திறக்கப்படும்.

2. ரெகுலராக தினசரி வந்து டாஸ்மாக் கடைகளில் வந்து குடித்து வரும் வாடிக்கையாளர்களுக்கு எலைட் மெம்பர் ஷிப் அடையாள அட்டை வழங்கப்புடும். அந்த அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் குடித்து விட்டு ரோட்டில் விழுந்து கிடந்தால், அந்த ஏரியாவில் பாதுகாப்புக்கு ரோந்து வரும் போலிஸ் வேன் அவர்களை பாதுகாப்பாக அழைத்து சென்று அவர்களது வீட்டில் விட்டு வரும்.


3. மிகவும் வருமானம் குறைந்த பெற்றோர்கள் தங்கள் பெண் குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைக்கும் போது திருமண விருந்தில் பறிமாற சரக்கை அரசாங்கம் இலவசமாக திருமண அன்பளிப்பாக தரும்.

4. பத்தாம் வகுப்பு மற்றும் ப்ளஸ் 2 வகுப்பில் படிக்கும் மாணவர்கள் படிப்பு முடிந்து தினசரி வீடு திரும்பும் போது அவர்கள் உற்சாகமாக வீடு திரும்ப உற்சாகப் பானங்கள் அருந்தி செல்ல அரசாங்கம் தினசரி ஒரு பாட்டில் பீர் இலவசமாக வழங்கப்படும்.


5. குடியரசு தினத்தில் வழங்கப்படும் நல்லாசிரியர் விருது வழங்கப்படுவதை நிறுத்தி அதற்கு பதிலாக டாஸ்மாக் கடைகளில் அதிகம் விற்பனை செய்யும் விற்பனையாளருக்கு விருது வழங்கப்படும்.


6. குடிப்பழக்க்கத்தால் யாரேனும் இறந்தால் அவர்களின் குடும்பத்திற்கு தமிழகத்தின் சிறந்த குடிமகன் பட்டம் வழங்கி ஒரு அடையாள அட்டையும் வழங்கி அந்த அடையாள அட்டையை காண்பித்தால் வாங்கும் சரக்குக்கு 10 சதவிகத தள்ளுபடி எப்போதும் தர ஏற்பாடு செய்யப்படும்


7. வறுமையில் வாடும் தமிழக குடிமக்களுக்கு சலுகைவிலையில் விஷேச தினங்களின் போது சரக்கு வழங்கப்படும்.



8. குடித்துவிட்டு வாகனம் ஒட்டி விபத்துக் குள்ளானவர்களுக்கு அரசாங்க ஹாஸ்பிடலில் மிக நல்ல சிகிச்சை ளிக்க முன்னுரிமை அளிக்கப்படும்.

 

இதை படித்த உங்களுக்கும் இது போல சில நல்ல சலுகைகள் உங்கள் மனதில் உதிக்கலாம். அப்படி உதித்தால் அதை பின்னுட்டமாக பதியுங்கள். அது தமிழகத்தை ஆளும் முதல்வருக்கு மிக உதவியாக இருக்கும். நீங்கள் சொல்லும் சலுகைகள் தமிழக முதல்வருக்கு பிடித்து போனால் உங்களுக்கு வருங்காலத்தில் அமைச்சர் பதவி உறுதி


அன்புடன்
உங்கள் மதுரைத்தமிழன்

6 comments:

  1. லஞ்சமாக வாங்கிய பணத்தைக்கொண்டு டாஸ்மாக்கில் சரக்கு வாங்கியதிற்கான பில்லைக்காண்பித்தால் அவர்கள் மீது வழக்குகள் போடமாட்டோம்.

    ReplyDelete
  2. உங்க இரண்டாவது கற்பனை சூப்பர் பாஸ்.

    ReplyDelete
  3. ஐயா ஏன் ஐயா ஏன் ...........
    உங்கள் நக்கலில் எனக்கு சிரித்து விக்கல் வந்து விட்டது

    ReplyDelete
  4. நல்ல ஒரு(குடி) கற்பனை

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.