Friday, February 22, 2013





அமெரிக்க தமிழர்களிடம்  இளையராஜாவின் இசை விலை போகவில்லையா?


இளையராஜா இசைக்கு ராஜாவாக இருந்த காலம் போய்விட்டது போலிருக்கிறது. அதனால்தான் என்னவோ அமெரிக்காவில் முதன் முறையாக தனது இசை நிகிழ்ச்சியை நடத்த வரும் இளையராஜாவின் கூட்டத்திற்கு டிக்கெட் அதிகம் விற்பனையாகவில்லை. அதனால்  விளம்பரங்களில் தெலுங்கர்களையும் கவர்ந்து இழுக்க தெலுங்கு பாடல்களும் பாடப்படும் என்று விளம்பரங்கள்  கூட்டத்தை கூட்ட வெளிவந்து கொண்டிருக்கின்றன . தெலுங்கர்கள் நடத்தும் இணைய தளங்களிலும் இந்த விளம்பரங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

கனடாவில் நடந்த நிகழ்ச்சியில் 25000 பேர்தான் வந்திருந்தார்கள் இது அரங்கு நிறைந்த கூட்டம் இல்லை.அரங்கே திணரும் கூட்டம் என்றால் அது 60 ஆயிரத்தைத் தாண்டவேண்டும். இதே மேடையில் இதற்கு முன் நடந்த  ஏஆர் ரகுமான் இசை நிகழ்ச்சியில்  . அது உட்காரவும் இடமில்லாத கூட்டத்தைக் கொண்டிருந்தது. அதே நிலைதான் அமெரிக்காவில் நடந்த ஏஆர் ரகுமான் நிகழ்ச்சியும்..


இளையராஜாவின் தலைக்கனம் இல்லாமல் இருந்து இருந்தால் அவர் இன்னும் புகழ் பெற்று விளங்கி இருப்பார். ராஜா என்றும் ராஜாவாக இருக்கமுடியாது. இந்த ராஜாவை மிக எளிதாக ஒதுக்கிவிட்டு தனது பண்பாலும் இசையாலும் இமயமாக ஏஆர் ரகுமான் உலக அளவில் உயர்ந்து கொண்டிருக்கிறார்.

தமிழகத்தில் எப்படியோ எனக்கு தெரியவில்லை ஆனால் அமெரிக்காவில் 30 வயதுக்கு கீழ்பட்டவர்களிடம் இளையராஜாவின் இசை பாதிப்பு ஏதும் ஏற்படுத்தவில்லை . ஆனால் அவர்களிடம் ஏஆர் ரகுமானின் இசை அதிக அளவு பாதிப்பு ஏற்படுத்தி  இருக்கிறது.இளையராஜாவின் இசை வயதானவர்கள் ரசிக்கும் இசை போல ஒரு எண்ணம் இந்த இளம்வயதினரிடம் ஏற்பட்டு இருக்கிறது. ஏஆர் ரகுமானின் இசையை  இந்தியர்கள் மட்டுமல்ல வெள்ளையர்களும்  ஸ்பானிஷ்கார்களும் ரசிக்க ஆரம்பித்து இருக்கிறார்கள் என்பது மிகவும் ஆச்சிரிய பட வைக்கிறது.

எங்கே நமது இசையைவிட வைரமுத்துவின் பாடல்வரிகள் மக்களை கவர்ந்துவிடும் என்ற பயத்தாலோ அல்லது அவருக்கு அதிகம் பெயர் வந்துவிடும் என்பதாலோ என்னவோ கனடாவின் மேடையிலும் வைரமுத்து இளையராஜா இணைந்த பாடல்களுள் ஒன்றுகூட பாடப்படவே இல்லை.


டிஸ்கி :  நானும் இளையராஜாவின் இசைக்கு ரசிகன்தான்.  நான் என்னமோ அவருக்கு விரோதி என்று சண்டை இட வரவேண்டாம்.இங்கு (அமெரிக்காவில்) என்ன நடக்கிறது என்பதை அறிந்ததை நான் பகிரும் பதிவுதான் இது.





அன்புடன்
மதுரைத்தமிழன்

43 comments:

  1. மிகச் சரியாகச் சொன்னீர்கள்!

    இளையராஜாவின் பேச்சுக்கள் சமீப காலங்களில் ஆணவத்தின் வெளிப்பாடாகவே இருப்பது வருத்தமளிக்கிறது. யாருடனும் ஒத்துப் போகாத தன்மை உண்மை ரசிகர்களையும் வெறுப்படைய வைக்கிறது என்பது உண்மை. கொஞ்சம் ஆராய்ந்து பார்த்தால் ரகுமானின் இசை தரத்தில் சற்று உயர்வாகவே இருக்கிறது.இருந்தாலும் பலரின் மனம் அதை ஒப்புக்கொள்ள மறுக்கிறது. காரணம் இளையராஜாவின் இசையை அவர்கள் அளவுக்கதிகமாக நேசிப்பதுதான். இப்போதெல்லாம் அதற்கு தகுதியானவராக அவர் நடந்து கொள்வதில்லை என்பது கசப்பான உண்மை.

    ReplyDelete
    Replies
    1. இளைஞராகிய உங்களது எண்ணங்களோடு எனது பார்வையும் ஒத்துப் போகின்றது.

      Delete
  2. மனதை வருடும் இளைய ராஜா பாடல்களை மிஞ்சுள் அளவிற்கு ரஹ்மானாலும், துள்ளலான இசையை ரஹ்மானாலும் மட்டுமே தர முடியும் என்பது என் கருத்து...

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் சீனு இளைஞராகிய உங்களது எண்ணங்களோடு எனது பார்வையும் ஒத்துப் போகின்றது.

      Delete
  3. நன்றாகவே இளையராஜாவையும் ஏ.ஆர் . ரகுமானையும் அலசியிருக்கிறீர்கள்.
    நீங்கள் upload செய்திருக்கும் பாடல்களை கேட்டு ரசித்தேன்.
    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. எனது மனதில்பட்டதை சொல்லி இருக்கிறேன் அவ்வளவுதாங்க,,,வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      Delete
  4. வணக்கம் . நீங்கள் குறிப்பிட்டிருக்கும் 30 வயதுக்கு கீழே உள்ளவர்கள் இளையராஜாவின் இசை பாதிப்பு ஏற்படுத்தவில்லை என்பது முற்றிலும் உண்மை ,இதற்கு இளையராஜாவின் தலைகனம் காரணமாக இருக்கலாம் என்பதாக தோன்றவில்லை புதிய தலைமுறையினர் புதிய இசை முயற்சிக்கு ஆதரவு தருவது இயல்பே இந்த நிலை MS விஸ்வநாதன் அவர்களுக்கும் இளையராஜாவின் வருகைக்கு பின் ஏற்பட்டதே .80 -85 களில் இளையராஜாவின் தலைகனம் கோலோச்சி இருந்தது என்பது மறுக்க முடியாதது இருப்பினும் அவரது இசை திறமை யாராலும் ஈடு செய்ய முடியாதது

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொல்லவதும் சரியாகதான் தெரிகிறது

      Delete
  5. ஒரு கலைஞ்சனுக்கு திறமை மட்டும் போதாது. அவனுக்கு பெருமையும் உயர்வும் வரும்போது எந்த அளவுக்கு அடக்கமும் பணிவும் இருக்கிறதோ அந்த அளவுக்கு மென்மேலும் உயர்வும் திறமையும் இன்னும் கூடிபோகும். அனால் இளையராஜா என்னும் கலைஞ்ன் உருவ அளவில் சாமியாரைபோல் இருந்தாலும் அவரின் மமதை அவரின் விகடன் பதில்களில் தெளிவாக தெரிகிறது. மற்றவர்களின் உயர்வை பொறுக்கமுடியாதவன் தன உயர்வுக்கே கட்டை போடுகிறான் என்று அர்த்தம்.. இன்னும் மன முதிர்ச்சி அடையாத நிலைமை... பாவம் என்றுதான் எண்ணத்தோன்றுகிறது..

    ReplyDelete
    Replies
    1. இசையால் வேண்டுமானால் அவர் உயர்ந்து இருக்கலாம் ஆனால் அவர் மனதால் இன்னும் உயராமல் இருக்கிறார் என்பதை நாம் ஊடகங்களின் மூலம் அறிய முடிகிறது

      Delete
  6. எதுவோ... ஆனால் இளையராஜாவின் மெலடியஸ் ஹிட்ஸ் எப்போதும் ரசிக்க முடியும் தானே..!

    ReplyDelete
    Replies
    1. ராஜாவின் இசை இருப்பது நம் மனதில் ரஹ்மானின் இசை இருப்பது சிடியில் மட்டுமே.

      Delete
    2. சினிமாவின் ஆரம்பகாலத்தில் இசை அமைத்தவர்களின் இசையை எப்படி நம்மால் ரசிக்க முடியவில்லையோ அது போலதான் இளையாராஜாவின் இசையை 30 வயதிற்கும் குறைந்த இளைஞர் பலரால் ரசிக்க முடியவில்லை என்பதை நாம் ஒத்துக் கொள்ள வேண்டும்தானே.

      Delete
  7. ஐயா, ஒரு சந்தேகம். ரஹ்மானின் கச்சேரியில் தமிழ்ப் பாடல்கள் மட்டும்தான் பாடப்பட்டதா? வேற்று மொழிப் பாடல்கள் (குறிப்பாக ஹிந்தி)பாடப்படவில்லையா? நான் குற்றம் சொல்லவில்லை. தெரியாமல்தான் கேட்கிறேன்.

    எனக்குத் தெரிந்தவரை, ராஜாவின் துள்ளல் இசையை விட, மனதை மயங்க வைக்கும் இசையே பிடிக்கும். ராஜாவின் நிறைய பாடல்கள் அப்படித்தான் இருக்கும்.அதை ஒரு கூட்டத்திற்கு நடுவே ரசிக்கப் பிடிக்காது. பலருக்கும் அப்படி இருக்கலாம். அது மட்டுமன்றி, ஒரு கச்சேரிக்குப் போனால், நன்கு கை தட்டி, அனுபவிக்க வேண்டுமென்று எல்லோரும் நினைப்போம். ஆனால், ராஜா அதற்கு என்ன சொல்லுவர் என்று ஏற்கனவே அனைவருக்கும் தெரியும். எனவே, நமக்கு தேவை பாட்டுதானே, இங்கேயே கேட்டுக்கலாம் என்றும் இருக்கலாம். (எனக்கும் ராஜாவைப் பிடிக்கும், உங்கள் பதிவிலுள்ள உண்மை சுடுவதால், ஏதோ என்னால் முடிந்த சப்பைக்கட்டு பின்னூட்டம்)

    ReplyDelete
    Replies
    1. உங்களின் சப்பைகட்டு பின்னுட்டமும் எனக்கு பிடித்து இருக்கிறது வருகைக்கு நன்றி

      Delete
  8. There is a difference between Illayaraja concert and ARR concert in Toronto. ARR performed at Air Canada Center, which has up to10,000 seating and Illayaraja performed at Rogers Center which has seating upto 35,000. Out of 35,000 around 20,000 seats are filled for Illayaraja. Also, ARR performed both Tamil and Hindi songs and Illayaraja performed only Tamil songs. Agreed, ARR is a soft person, ground to earth and Illayaraja is a hard person.

    ReplyDelete
    Replies
    1. இளையராஜா கனடாவில் வேண்டுமானால் தமிழில் பெர்பாம்ஸ் பண்ணி இருக்கலாம் ஆனால் நீயூஜெர்ஸியில் தெலுங்கு பாடல்களும் பாடப் படும் என்று விளம்பரங்கள் வந்து இருக்கின்றன. ரஹ்மானின் இசை மொழிகள் பல கடந்து எல்லோராலும் ரசிக்கப் படுகிறது. ஆனால் இளையராஜாவின் இசை தமிழ் மற்றும் தெலுங்குகளுக்குள் மட்டும் வலம் வந்து கொண்டிருக்கிறது. ரஹ்மானின் இசையை ரிங்டோனாக தங்களது தொலை பேசியில் வைத்து இருந்த அமெரிக்க மற்றும் ஸ்பானிஷ் இளைஞர்களை நான் நேரிலே பார்த்து இருக்கிறேன். இதை நான் ஏதோ எழுதுவதற்காக சொல்லவில்லை. உண்மையில் நான் கண்டதுதான்

      Delete
  9. இங்கே ராஜாவை வேன்றுமென்றே கலாய்ப்பது போல் இருக்கிறது.ராஜா ஆணவம் பிடித்தவர் என்றால் அவரால் நல்ல இசை நமக்கு தரமுடியாது.அவரின் பாடல்கள் போல் தான் அவரின் பேச்சு.தன் மனதில் உள்ளதை இசை வடிவமாக தந்த்கொன்றிக்கிறார் .
    ரகுமான்னுக்கு உலகளவில் ரசிகர்கள் இருக்கிறார் என்பது உண்மை.ராஜாவிடம் இருப்பது தமிழ் இசை உலகின் ரசிகர்கள்.
    ரஹ்மான்க்கு இன்று தமிழ் திரை உலகில் நிரந்தர இடம் இல்லை என்பது கடல் படம் ஒன்றே போதும்.இவரின் ஜப் டக் ஹாய் ஜான் கூட படு சொதப்பலான இசை என்றே ஹிந்தியில் கூட பேச்சு.
    இன்னும் எத்தனை காலம் ரஹ்மானின் ஒன்னும் இல்லாத இசை பற்றி பேசி கொண்டே இருக்க போகிறிர்கள் என்றே தெரியாது.ராஜாவை தேவை இல்லாமல் விமர்சிக்காமல் அவரின் இசையை ரசிக்கலாமே.
    ராஜாவின் இசை இருப்பது நம் மனதில் ரஹ்மானின் இசை இருப்பது சிடியில் மட்டுமே.

    ReplyDelete
  10. Nithyanandhavin personal life patri kavalai padamal, aanmegathai rasikalamae.. I am not sure how Kadal music is referenced as failure, according to the charts it is not. Also whomever watched JTHJ never complained about the music.. actually songs went up the chart after the movie. I agree if Raja would have refined himself he could have reached even higher

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      Delete
  11. Rajavai nammai vida melaga Telugu / malayaala makkal kondaadukirargal enbhadu ungalukku theriuma? Yennaal rajavin isaikku mattumey rasiganaaga irukka mudigiradhu! Rajavai naam potravittalum thootra vendam enbathu en yennam!!!!

    ReplyDelete
    Replies
    1. நான் ராஜாவை தூற்றவில்லை அவரின் இசை இந்தகாலத்தில் விலை போகவில்லை போலிருக்கிறது என்று நான் அறிந்தவையைதான் இங்கு சொல்லியிருக்கிறேன். காலம் மாற மாற நமது டேஸ்டுக்களும் மாறிக் கொண்டிருக்கிறது என்பது உண்மைதானே.

      Delete
  12. தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும் தரத்தினில் குறைவதுண்டோ

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      Delete
  13. இளையராஜா எனும் மேதை ஆணவ போக்கினால் அழிந்து போனார் என்ற வரலாறு வருவதை தவிர்க்கமுடியாது போல!

    ReplyDelete
    Replies
    1. சுரேஷ் நீங்கள் உங்கள் BLOG க்கு விளம்பரம் தராமல் பின்னூட்டம் போடுவதே உலகில் பாரிய மாற்றங்கள் நடப்பதற்கான அறிகுறி

      Delete
    2. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      Delete
    3. இது ஒரு காழ்ப்புணர்வுடன் எழுதப்பட்டதாக தெரிகின்றது. எனக்கு வயது 26. எனக்கு இளையராஜாவை 18வயது வயது வரை சரியாக தெரியாது. நாங்க கேட்டு வளர்ந்தது ரஹ்மான் இசை.
      இணைய தளங்கள் , youtube வந்த பின் தான் இளையராஜா இசை கேட்க தொடங்கினோம்.

      யார் இசையும் மிக உயர்ந்தது அல்ல, யார் இசையும் மிக தாழ்ந்தது அல்ல. கால ஓட்டத்தில் மாறி மாறி அடிக்கப்பட்டு சென்று கொண்டேயிருக்கும். முரளிதரனும் நீங்களும் இந்த யதார்த்தத்தை புரிந்து கொள்ளவேண்டும்.

      நேற்று நான் ஆடிய சிக்குபுக்கு ரயிலே பாடலை நான் இன்று ரசிக்க முடியாமல் இருக்கின்றது. ரஹ்மான் இல்லாத ஒருவர் போட்ட கத்தாழை கண்ணால, நாக்க முக்க பாடல்கல் எம்மை ரசிக்க வைக்கின்றன. (கொலைவெறி பாடலும் இப்படித்தான் )

      அமெரிக்காவில் 30 வயதுக்கு கீழ்ப்பட்டவர்களிடம் ராஜா தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்று சொல்லியிருக்கின்றீர்கள். இதை பெரிய கண்டுபிடிப்பாக போட்டிருக்கின்றீர்கள். அமெரிக்காவில் மட்டுமல்ல இந்தியாவிலும் அப்படித்தான். 30வயசுக்கு கீழ் இருக்கிறவன் ரஹ்மான் இசை கேட்டு வளர்ந்திருப்பான் அவனிடம் எப்படி ராஜ இசை பற்றி கேக்க முடியும்.

      தெலுங்கு பாடல் பற்றி போட்டிருகிண்றீர்கள். அமெரிக்காவில் தமிழர்கள் மட்டுமல்ல தெலுங்கர்களும் பெருமளவில் உள்ளார்கள். இருக்கின்ற தமிழர்களும் பரவலாக இருக்கின்றார்கள். ஒரு இசை நிகழ்ச்சி போட்டால் எல்லோரும் வரமுடியாது. அத்துடன் தமிழ் ரசிகர்களை விட ராஜாவுக்கு தெலுங்கில் ரசிகர்கள் அதிகம். தமிழில் ராஜாவை திட்டுபவர்கள் (உங்களை, முரளியை போல் ) அதிகம். தெலுங்கில் அப்படி அல்ல. நான் ஆந்திராவில் 2 வருடங்கள் வேலை செய்த போது பெற்ற அனுபவம். அவர்களை பார்த்த பின் தான் இவர்கள் ஏன் அந்த "காட்டானை" (அதற்க்கு முன் ராஜாவை ஒரு காட்டான் இசையமைப்பாளர் என்ற எண்ணமே இருந்தது) இப்படி ரசிக்கின்றார்கள் என்று ராஜா பாடலை கேட்க தொடங்கினேன்.
      முழுமையாக இசை நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் பெற வேண்டுமானால் ஏனைய மொழி ரசிகர்களையும் ஈக்க வேண்டும். அதுதான் அங்கு நடந்தது.

      சென்னையிலேயே ஹிந்தி பாட்டு போட்ட ஒரே இசையமைப்பாளர் ரஹ்மான் தான். எந்த நாட்டில் இசை நிகழ்ச்சி நடந்தாலும் ரஹ்மானின் பெரும்பாலும் ஹிந்தி பாடல்களை போடுவார்.

      சமீபத்தில் கடுமையான விமர்சனங்கள் காரணமாக தமிழ் பாட்டு மட்டும் போடுவதாக ரஹ்மான் அறிவித்தார். நான் மட்டும் 12 பெயர்களில் அவருக்கு கண்டன கடிதம் அனுப்பியிருந்தேன் (ஹிந்தி பாட்டு போட கூடாது என்று)

      இளையராஜாவின் ஆணவ பேச்சு உலகம் அறிந்தது. அவர் என்னவென்றாலும் பேசிவிட்டு போகட்டும் அது அவர் சுபாவம் நமக்கு தேவை இசை அதை யார் தந்தாள் என்ன ???

      நடிகர்களை ரசிக்கும் பொது அவர்களின் தனிப்பட்ட வாழ்வை பார்த்தா படத்துக்கு போகின்றோம். நல்லவனாக நடிக்கும் இந்த கதா நாயகர்கள் நியா வாழ்வில் எவ்வளவு பெரிய வில்லன்கள் என்பது நாங்கள் அறிந்ததே. இதையெல்லாம் கிண்டி கிளறினால் படம் பார்க்க முடியுமா ????


      Delete
    4. எனக்கு என்ன காழ்புணர்ச்சீங்க? நான் என்ன இசை மேதையா அல்லது திரைப்பட உலகத்தை சார்ந்தவனா என்ன? நான் என்னளவில் தெரிந்ததை அறிந்தை எழுதுகிறேன் அவ்வளவுதாங்க

      Delete
  14. உங்கள் தலைப்பு தவறு! ராஜாவின் இசை விலை மதிக்க முடியாதது! ரசனை மாற்றம் காலத்தின் கட்டாயம்!

    எனக்கும் மாற்று கருத்து இல்லை! இசை என்பது மனதை வருடவேண்டும்! இன்பத்திலும் துன்பத்திலும் சோகத்திலும் !

    அது எனக்கு ராஜா இசையில் மட்டும் இன்றும் கிடைக்கிறது! மற்றபடி அவர் தனிப்பட்ட குணம் பற்றி கவலை இல்லை!

    என்னை கேட்டால் ராஜா வந்து இப்படி இசை நிகழ்ச்சி செய்ய வேண்டிய அவசியம் இல்லை! ஒன்று உறுதி மாற்றம் ஒன்றே மாறாதது !

    அது ரஹ்மானுக்கும் பொருந்தும்! (எல்லோருக்கும்) !

    ReplyDelete
  15. என்னுடைய பதின்ம வயதில் அறிமுகமாகி வந்தவர் ரஹ்மான் ஆரம்பகாலங்களில் அவர் பாடல்கள் உடனடியாக என்னை ஈர்த்தன. அதே பாடல்களை இப்போது கேட்டால் எந்த அனுபவமும் கிடைக்கவில்லை. அதிகமாக 5 பாடல்களை ரசிக்க முடிகிறது. இளையராஜா பாடல்கள் என்னால் இரவு 2 மணி வரை விடாமல் ரசிக்க முடிகிறது ஏன்?. இப்போதெல்லாம் ஹிந்தி படங்களில் ரஹ்மானை பெரிதாக கண்டுகொள்வதில்லை. சொல்லபோனால் ஹாரிஸ் ஜெயராஜ் பாடல்கள் கூட என்னால் இப்போது ரசிக்க முடிகிறது. கடல் பாடல்கள் நன்றாக உள்ளது. ஆனால் அதனை திரும்ப நினைத்து சிலாகிக்க முடியவில்லை. உண்மையில் இப்போது ரஹ்மான் பாடல்கள் மனதில் முனுமுனுக்கும் அளவுக்கு இல்லை. அது சிறந்த யாரும் போடாத மெட்டாக இருக்கலாம். நெஞ்சை தொடவில்லை.

    ReplyDelete
    Replies
    1. உங்களின் கூற்றுப்படி இளையராஜாவின் இசை அமைத்த பாடல்கள் இன்றும் முனுமுனுக்க வைக்கின்றன என்றால் அது அதை எழுதிய பாடல் ஆசிரியருக்குதான் கிரெடிட் போய் சேரும் இளையராஜாவுக்கு அல்ல பழைய கால பாடல்களில் பாட்டுக்கும் இசைக்கும் முக்கியத்துவதும் உண்டு பாடல் வரிகளில் பல அர்த்தங்கள் பொதிந்து இருக்கும். ஆனால் இப்போது வரும் பாடல்கள் அர்த்தமில்லாமல் இருக்கிறது அதனால்தான் நீண்டகாலம் முனுமுனுக்க முடியாமல் இருக்கிறது. அதனால் நாம் ரஹ்மானினின் இசையை குறை கூற முடியாது.இளையராஜாவின் பாடல்கள் இன்றும் முனுமுனுக்க பாடல்களின் வரிகள் மிக பலமாக உள்ளது என்பதை அதை கேட்கும் யாவரும் ஒத்துக் கொள்வார்கள் இளையராஜாவை தவிர. வைரமுத்து இளையராஜா இசையில் வந்த பல பாடல்களை உதாரணமாக கூறலாம்.


      இளையராஜாவின் இசையை நேசிக்கும் ஒரு கனடா(புகாரி) பதிவாளரின் கருத்து இங்கே உங்கள் பார்வைக்கு ;1 தன் உயிருள்ளவரை இசைதான் உயர்ந்தது கவிதைகள் தாழ்ந்தவை என்று நிரூபிக்கும் வெறி இளையராஜாவை விட்டு அகன்றால் நான் ஆயிரத்தெட்டு தேங்காய் உடைப்பேன் என்று வேண்டிக்கொண்டேன்

      2.என் நாடி நரம்புகளை எல்லாம் தீண்டிய இசையைத் தந்த இளையராஜா ஏன் இப்படி ஆகிப்போனார் என்று எனக்குக் கவலை உண்டு. என் இதயம் கவர்ந்த இசைவேந்தர் இளையராஜாவின் கர்வ நெஞ்சம் அப்போதே மாறவேண்டும் என்று அந்த நொடியே ஆசைப்பட்டேன்.

      3 இளையராஜாவின் திறமைக்கும் இசை ஞானத்திற்கும் அவரின் தலையில் இமயமலை அளவுக்குக் கனம் இருக்கலாம் தப்பே இல்லை. அதை நான் அப்படியே ஏற்றுக்கொள்வேன். ஆனால் அந்தக் கனம் தமிழை நசுக்கிச் சாகடிக்கிறதென்றால் ஏற்க ஒரு தமிழனாய் என்னால் முடியவில்லை

      இளையராஜாவின் திறமைக்கும் இசை ஞானத்திற்கும் அவரின் தலையில் இமயமலை அளவுக்குக் கனம் இருக்கலாம் தப்பே இல்லை. அதை நான் அப்படியே ஏற்றுக்கொள்வேன். ஆனால் அந்தக் கனம் தமிழை நசுக்கிச் சாகடிக்கிறதென்றால் ஏற்க ஒரு தமிழனாய் என்னால் முடியவில்லை.

      என்னைப் போல இந்த புகாரியும் இளையராஜாவின் ரசிகர்தான். மேலும் அவர் கருத்தை படிக்க இங்கே செல்லுங்கள்


      http://anbudanbuhari.blogspot.ca/2013/02/ilayaraja-toronto-16-feb-2013-part-3.html

      Delete
    2. இசையில் சாதனை செய்தவர், அவர் பேசுவது ஆணவமாக இருக்கிறது என்றால். நீங்கள் இவ்வுலகில் என்ன சாதனை செய்த விட்டீர்கள், அவரை பத்தி இவ்ளோ தரக்குறைவாக எழுதி இருக்கிறீர்கள். அப்ப உங்களுக்கு ஆணவம் இல்லையா? ஈகோ இல்லையா? உங்களுக்கே இப்படி இருக்கும் போது அவருக்கு இருப்பதில் தப்பே இல்லை. நீங்கள் உங்களை சுற்றி இருப்பவர்களிடம் எந்தவிதமான ஈகோ, ஆணவம் இல்லாமலா? பழகுகிறீர்கள்? உங்கள் மனசாட்சிக்கே விட்டு விடுகிறேன். இந்த திரையுலகில் இப்படி இருந்தால் தான் நிலைத்து இருக்க முடியும். நீங்கள் என்னவோ ராஜா சாரிடம் பத்து வருடம் பழகி பார்த்து அவர் ஆணவம் பிடித்தவர் என்று சொல்கிறீர்கள். ரகுமான் ரொம்ப யோக்கியமோ? ராஜா சாரிடம் வேலை பார்த்ததை கூட இன்னும் வாய் விட்டு சொல்லவில்லை. ரோஜா படம் வந்த புதிதில் வந்த பேட்டியில் அவர் வாழக்கையில் கேட்ட, பிடித்த பாடல்கள் எல்லாம் விஸ்வநாதன் அய்யா மற்றும் டி.ராஜேந்தர் பாடல்கள் மட்டும் தானாம். ஏன் எண்பதுகளில் அவர் தமிழ் நாட்டில் தானே இருந்தார்..இசைஞானி பாடல்கள் கேட்காமல் வளர்ந்தாரா? இந்த மாதிரி அவர் பேசலாம். இது தன்னடக்கம். இசைஞானி கிராமத்து மனிதர் உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேச மாட்டார். ஆனால் ரகுமான் போல வெறும் பாசாங்கு பேசும் குணம் அவருக்கு இருந்ததில்லை. வெளி வேஷம் போடுகிறார் ரகுமான். அதற்க்கு உங்களை போன்ற அறியாத ஜீவன்கள் ஜால்ரா தட்டுகிறீர்கள். காலம் மாறினாலும் அம்மா அம்மா தான், அத்தையோ, சித்தியோ ஆக மாட்டார்கள். அது போலத்தான் இசைஞானி இசை. தமிழ் திரைஇசை இன்று இந்த கேவலமான நிலைக்கு காரணம் ரகுமான் வந்த பின் தான். இதுதான் உண்மை. இன்று மக்கள் நல்ல இசைக்கு ஏங்குகிறார்கள்...நீங்கள் தென்தமிழ்நாட்டு பக்கம் வந்து போங்கள் உண்மை தெரியும். இசைஞானி இன்னும் படங்கள் கொடுத்து கொண்டுதான் இருக்கிறார், எல்லாம் சிறு படங்கள். ரகுமானால் முடியுமா? ஒரு சிறு படத்துக்கு இசையமைப்பது. அவர் பணத்துக்காக, புகழுக்காக தான் பாலிவுட், ஹாலிவுட் என்று தனது பரப்பை பரப்பினார். இன்று எத்தனை பாலிவுட், ஹாலிவுட் படங்களுக்கு இசையமைக்கிறார். விபரங்கள் கூறவும். இங்கே இருந்து கொண்டு அவர் ரொம்ப பிஸி என்று சொல்லும்போது எனக்கு கௌண்டமணி சொல்லுவது போல தான் இருக்கிறது. இன்று அவர் இசையெல்லாம் அவர் இசைகல்லுரி மாணவர்கள் தான் தருகிறார்கள். இது அங்கே படிக்கும் மாணவர்களிடம் கேளுங்கள். கதை கதையாக சொல்லுவார்கள். இனி இசைஞானி பற்றி பேசும் தகுதி உங்களுக்கு இல்லை. இந்த பதிவை நீங்கள் பதிந்ததால் உங்களுக்கும் மனசாட்சி இருக்கும் என்று நினேக்கிறேன். இல்லையென்றால்?

      Delete
    3. இசையில் சாதனை செய்தவர், அவர் பேசுவது ஆணவமாக இருக்கிறது என்றால். நீங்கள் இவ்வுலகில் என்ன சாதனை செய்த விட்டீர்கள், அவரை பத்தி இவ்ளோ தரக்குறைவாக எழுதி இருக்கிறீர்கள். அப்ப உங்களுக்கு ஆணவம் இல்லையா? ஈகோ இல்லையா? உங்களுக்கே இப்படி இருக்கும் போது அவருக்கு இருப்பதில் தப்பே இல்லை. நீங்கள் உங்களை சுற்றி இருப்பவர்களிடம் எந்தவிதமான ஈகோ, ஆணவம் இல்லாமலா? பழகுகிறீர்கள்? உங்கள் மனசாட்சிக்கே விட்டு விடுகிறேன். இந்த திரையுலகில் இப்படி இருந்தால் தான் நிலைத்து இருக்க முடியும். நீங்கள் என்னவோ ராஜா சாரிடம் பத்து வருடம் பழகி பார்த்து அவர் ஆணவம் பிடித்தவர் என்று சொல்கிறீர்கள். ரகுமான் ரொம்ப யோக்கியமோ? ராஜா சாரிடம் வேலை பார்த்ததை கூட இன்னும் வாய் விட்டு சொல்லவில்லை. ரோஜா படம் வந்த புதிதில் வந்த பேட்டியில் அவர் வாழக்கையில் கேட்ட, பிடித்த பாடல்கள் எல்லாம் விஸ்வநாதன் அய்யா மற்றும் டி.ராஜேந்தர் பாடல்கள் மட்டும் தானாம். ஏன் எண்பதுகளில் அவர் தமிழ் நாட்டில் தானே இருந்தார்..இசைஞானி பாடல்கள் கேட்காமல் வளர்ந்தாரா? இந்த மாதிரி அவர் பேசலாம். இது தன்னடக்கம். இசைஞானி கிராமத்து மனிதர் உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேச மாட்டார். ஆனால் ரகுமான் போல வெறும் பாசாங்கு பேசும் குணம் அவருக்கு இருந்ததில்லை. வெளி வேஷம் போடுகிறார் ரகுமான். அதற்க்கு உங்களை போன்ற அறியாத ஜீவன்கள் ஜால்ரா தட்டுகிறீர்கள். காலம் மாறினாலும் அம்மா அம்மா தான், அத்தையோ, சித்தியோ ஆக மாட்டார்கள். அது போலத்தான் இசைஞானி இசை. தமிழ் திரைஇசை இன்று இந்த கேவலமான நிலைக்கு காரணம் ரகுமான் வந்த பின் தான். இதுதான் உண்மை. இன்று மக்கள் நல்ல இசைக்கு ஏங்குகிறார்கள்...நீங்கள் தென்தமிழ்நாட்டு பக்கம் வந்து போங்கள் உண்மை தெரியும். இசைஞானி இன்னும் படங்கள் கொடுத்து கொண்டுதான் இருக்கிறார், எல்லாம் சிறு படங்கள். ரகுமானால் முடியுமா? ஒரு சிறு படத்துக்கு இசையமைப்பது. அவர் பணத்துக்காக, புகழுக்காக தான் பாலிவுட், ஹாலிவுட் என்று தனது பரப்பை பரப்பினார். இன்று எத்தனை பாலிவுட், ஹாலிவுட் படங்களுக்கு இசையமைக்கிறார். விபரங்கள் கூறவும். இங்கே இருந்து கொண்டு அவர் ரொம்ப பிஸி என்று சொல்லும்போது எனக்கு கௌண்டமணி சொல்லுவது போல தான் இருக்கிறது. இன்று அவர் இசையெல்லாம் அவர் இசைகல்லுரி மாணவர்கள் தான் தருகிறார்கள். இது அங்கே படிக்கும் மாணவர்களிடம் கேளுங்கள். கதை கதையாக சொல்லுவார்கள். இனி இசைஞானி பற்றி பேசும் தகுதி உங்களுக்கு இல்லை. இந்த பதிவை நீங்கள் பதிந்ததால் உங்களுக்கும் மனசாட்சி இருக்கும் என்று நினேக்கிறேன். இல்லையென்றால்?

      Delete
    4. நீங்கள் ரகுமான் ரசிகராக இருந்துவிட்டு போங்கள்..அது எங்களுக்கு தேவை இல்லை. அதற்காக இசைஞானி இப்படி தாறுமாறாக எழுதி உங்களின் தரம், மதிப்பு, ஆணவம், ஈகோ எல்லாம் வெட்ட வெளிச்சமாக காண்பித்துவிட்டீர்கள்..இதனால் நீங்கள் ராஜா சார் பத்தி பேச உங்களுக்கு என்ன தகுதி இருக்கு, உங்கள் மனசாட்சி வைத்து கேட்டுகொல்லுங்கள்..உங்களுக்கு மனசாட்சி இல்லை என்று தெரிகிறது..கொஞ்சம் முலைக்கு வேலை கொடுங்கள். நீங்கள் என்ன இசைஞானி கூட இருந்து பார்த்து அவரின் ஆணவத்தால் பாதிக்க பட்டவரா? ராஜா சார் கிராமத்து மனிதர் அவர் உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசாதவர்..அது இன்றைய உலகில் ஆணவமாக தெரிகிறது உங்களுக்கு. ரகுமான் என்ன யோக்கியமா? தனது முதல் படம் வந்ததும் குமுதம் பேட்டியில் நான் ரசிப்பது, எனக்கு பிடித்த விஸ்வநாதன் சார், டி.ராஜேந்தர் இசையும் தான் என்று தனது சிறு பிள்ளை ஆணவ பேச்சை அன்றே ஆரம்பித்துவிட்டார். இந்த உண்மை நிலை உங்களுக்கு தெரியவில்லை. ராஜா சார் தனது குமுதம் கேள்வி பதிலில் ரகுமான் தன்னிடம் வேலை பார்த்ததை கூட அழகாக சொன்னார். இந்த ரகுமான் இன்னும் வாயை திறக்கவில்லை. இந்த மாதிரி ஆட்களின் சொருபம் என்றாவது ஒரு நாள் தெரிந்து விடும். ரகுமான் ஆஸ்கார் வாங்கிய பொது நடந்த பாராட்டு விழாவில் கலந்து கொண்டு ரகுமானை பாராட்டினர். இது போல் ரகுமான் என்றாவது யாருக்காவது வந்து பாராட்டு விழாவில் கலந்து பாராட்டியது உண்டா? காசு கொடுத்தால் எங்கேயும் வந்து விடுவார். வெளி வேஷம் போடுவதில் இவர் இரண்டாவது. முதல் இடம் தமிழர்களின் கொடுக்கும் பணத்தை தங்க காசு போல பாவிக்கும் ஒருவர். நிறுத்துங்கள் உங்கள் ராஜா துவேஷம். நல்லதுக்கில்லை. நாளை இந்த பக்கம் வரும் காலம் உண்டு.

      Delete
  16. எல்லாம் பண ஆசைதாங்க. இங்கே நியூ ஜெர்சியில் இளையராஜா இசை நிகழ்ச்சியை ஏற்படு செய்திருந்ததது ஒரு தெலுங்கு இணைத்தள தொலைகாட்சி நிறுவனமாகும். டிக்கட் விலையோ மிக அதிகம் 80$ லிருந்து 300$ வரை. வேறு வழியில்லை. கண்டிப்பாக தெலுங்கு ரசிகர்களையும் கவரவேண்டிய சூழ்நிலை. (அடுத்து கலிபோர்னியாவில் விலைகளை பாதியாக குறைத்துவிட்டனர்)

    நிகழ்ச்சி என்னமோமிக நன்றாகதானிருந்த்தது 5 மணிகள் 5 நொடித்துளிகளென பறந்துவிட்டது. ஆனால் மிகவும் காசு செலவழித்த தெலுங்கு ரசிகர்கள் ஏமாந்து போய்விட்டனர். மிகவும் சொற்பமான தெலுங்கு பாடல்களே பாடப்பட்டன. எஸ்.பி.பாலசுப்ரமணியம் மற்றும் மனோவும் நிலமையறிந்த்து ஒருசில தெலுங்கு பாடல் களை பாட ஆரம்பித்தாலும் இளைய ராஜா தமிழுக்கே இழுத்தார்.
    தெலுங்கு ரசிகர்கள் பொறுமையிழந்து காத்த ஆரம்ப்பித்தனர் உடனே இளையராஜா கோபமாக என் இப்படி சத்தம் போடுகிறீர்கள். உங்களுக்காக கஷ்ட்டப்பட்டு பயிற்ச்சி செய்து வந்திருக்கின்றோம். இதுக்கு நான் வரணுமா? இதுதான் வெளிநாட்டில் நீங்கள் கற்ற நாகரீகமா என்று கத்தி விட்டார்.

    இளைய ராஜா தமிழ் சங்க காரர்கள் அழைத்தால் வரமாட்டார் போல இருக்கு, தெலுங்குக்காரர்கள் அதிக ரூபாய் கொடுத்தால் மட்டுமே வருவார் போல.

    மறுநாள் விருந்தில் இளையராஜாவை யாரும் நெருங்க முடியவில்லை. அவர் அருகில் நின்று ஒரு போட்டா எடுத்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்த ரசிகர்களின் ஆசை நிராசையானது.

    பாவம் நியூ ஜெர்சி தமிழ் சங்க காரர்கள் ஓரமாக நின்று கொண்டிருந்தனர். சங்கம் சார்பாக அவருக்கு எதோ கொடுக்கணும்ன்னு பிரயாசைப்பட்டார்கள் கடைசிவரை முடியவேயில்லை.

    நமது கிராமத்து மண்ணில் பிறந்தது வளர்ந்தது எங்கோ உயரத்தில் சென்றுவிட்டார். கைக்கு எட்டுவாரா என்று பார்ப்பது தப்புதான். அனாலும் இப்படி ஒரு பாராமுகம் தேவையா என்றுமனம் வருத்தம் கொள்ளத்தான் செய்கிறது.

    வேறுவழியில்லை அத்துணை திறமை இருக்கின்றது அவரிடம், சகித்துக்கொள்ளத்தான் வேண்டும்.

    ReplyDelete
  17. ஏஆர் ரகுமானின் இசையையும் அவரையும் அவரது திறமையையும் விமர்சிக்க யாருக்கும் தகுதி இல்லை

    ReplyDelete
  18. இன்றைய கால கட்டத்தில் இசையின் கடவுள் ஏஆர் ரகுமான் தான்

    ReplyDelete
  19. நண்பர் பாலகிருஷ்ணன் அவர்களே நீங்களும் உங்களை போன்ற நபர்களும் எத்தனை வருடம் இளையராஜாவையும் அவரது இசையையும் புகழ்ந்து கொண்டு இருப்பீர்கள் அவர் என்ன கடவுளா

    ReplyDelete
  20. இளையராஜாவை நான் குறை கூறவில்லை என்றும் அவர் இசை ஞானிதான் அதற்காக ரகுமான் இசை சரியில்லை இளையராஜா தான் கடவுள் என்று புகழ்வதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது

    ReplyDelete
  21. ரகுமானை இளையராஜாவை விட சிறந்தவர் என்று ஏற்றுக் கொள்ள உங்கள் மனம் மறுக்கிறது

    ReplyDelete
  22. உண்மையில் ரகுமானின் இசை ராஜாவின் இசையை விட தரத்தில் உயர்ந்துது சிறந்தது அவர் காலத்திற்கு ஏற்ப்ப இசை அமையக்கிறார்

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.