Friday, January 4, 2013





மதவாதிகள் "விஸ்வரூபம்" எடுப்பதை தவிர்க்கவே "நாயகன்" கையில் எடுத்த "ஆயுதம்" டி.டி.எச். (DTH - Direct to Home) .


தமிழில் எந்திரனுக்கு அடுத்தபடியாக உலக அளவில் பிரம்மாண்டமாகத் தயாரிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படும் அந்தத் திரைப்படம் பற்றிய 'விவகாரம்'  என்பது,  அந்த படம் வெளி வருவதற்கு முன்  நடத்தபடும் நாடகம் தான் என்பதை தவிர வேறு ஏதுமில்லை என்பதை புத்தி உள்ள எவருக்கும் இந்த நேரம் புரிந்து இருக்கும்,

துப்பாக்கி படத்திற்கே தங்கள் மத உணர்வு பாதிக்கிறது என்று போர்க்கொடி தூக்கி அம்மையாரிடம் முறையிட்டவர்கள் இந்த படத்திற்கும் நிச்சயம் மிகப் பெரிய போர்க்கொடி தூக்குவார்கள் என்று கணக்கு போட்ட நாயகனுடன் சேர்ந்தவர்கள் போட்ட பிளான்தான் இது. இதன் மூலம் தங்கள் மத உணர்வுகளைப் பாதிக்கிறது என்று களமிறங்க இருந்தவர்களின் முளையை மழுங்க செய்யவே  படத்தை வெளியிட மாட்டோம் என்று ஒரு தரப்பு போர்க்கொடி தூக்கி நாடகத்தை ஆரம்பித்து வைத்திருக்கின்றனர்.

இப்படியே பிரச்னையை  படம்  வெளியிடும் வரை ஓடவிட்டு ஒரு நாள் திடீரென்று டி.டி.எச். (DTH - Direct to Home) ச்சில் வெளியிட்டு விடுவது என்றும் அதன் மூலம் மத ரீதியிலான எதிர்ப்புகளை மழுங்கடித்து விடலாம் என்பதும் அவர்களின் திட்டமே


அதுமட்டமல்லாமல் தியோட்டரில் வரும் போது பிரச்சனைகள் எழுந்து படம் பாதிக்கபடலாம் அதனால் வசூல் கூட பாதிக்கபடலாம். எந்த புதுப்படமும் வந்த இரண்டு மூன்று வாரங்களில் வாரி அள்ளுவதான் அவர்களின் லாபம் அதன் பின் வருவதெல்லாம் எக்ஸ்ட்ராவே. அதுமட்டமல்ல திருட்டு டிவிடி மற்றும் ஆன்லைன் மூலம் லீக்காவதற்கு முன்பு இப்படி வெளியிடுவதன் மூலம் அதிகம் நஷ்டம் ஏற்படுவதை  தடுக்கலாம் என்பதும் மற்றொமொரு காரணமாகும்.


விஸ்வரூபம் உண்மையிலே விஸ்வரூபாமாக போகிறதா அல்லது பெட்டி பாம்பாக ஆகிவிடும் என்பது இன்னும் ஒரு சில வாரங்களில் தெரிந்துவிடும்.



அன்புடன்
உங்கள் அன்புக்குரிய
மதுரைத்தமிழன்

22 comments:

  1. நீங்கள் சொல்வதுதான் சரி
    ஆயினும் இடைத் தரகர்களின் கொட்டம்
    இதனால் கொஞ்சம் அடங்கும் என நினைக்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. இடைத்தரகர்களால்தான் பல பிரச்சனை நம் நாட்டில்

      Delete
  2. மிக மிக சரியாக சொன்னிங்க.....

    நன்றி,
    மலர்
    http://www.tamilcomedyworld.com/

    ReplyDelete
  3. DTH மூலமாக வரும் வருமானம் சொற்பமே என்று சொல்கிறார்களே? மீதி வருமானத்துக்கு தியேட்டர்களைத் தானே நம்பியிருக்க வேண்டியிருக்கு. இந்தாளு எதை வச்சு தியேட்டர் காரங்களை எதிர்த்து DTH யில் ரிலீஸ் பன்னுறாருன்னே தெரியலையே?

    ReplyDelete
    Replies
    1. பொறுத்து இருந்து பார்ப்போம் நண்பரே

      Delete
  4. மும்பைக்கு ஓடிப்போய் பாம்பாய் படத்தை பயங்கரவாதி பால் தாக்கரேவிடம் போட்டுக்காட்டி... 'உங்களை நான் தப்பா காட்லிங்கோ' என்று நல்ல பேரு வாங்கிய மணிரத்னத்தின் முன்னுதாரணத்தை இப்போது கமல் தமிழக முஸ்லிம்களிடம் காட்டினால் என்ன தப்பு..?

    ReplyDelete
    Replies
    1. படத்த படமா பாருங்க ,எல்லாத்தையும் பிரச்சனையா ஆக்காதிங்க ,வாழ்கைய சுலபமா எடுத்துக்குங்க.

      Delete
    2. முதல்ல தமிழன இருங்க ,முஸ்லிமா இருகுனும்னு பிரச்சனையா இருக்காதிங்க.படத்த பார்த்துட்டு தூக்கி போட்டுட்டு போய்கிட்டே இருங்க.முடிஞ்சிபோச்சி

      Delete
    3. அப்படி காட்டி மதத்தலைவர்களும் இந்த படத்தில் ஒன்றுமில்லை என்று சொல்லிவிட்டால் அப்புறம் பரபரப்பு மற்றும் இலவச விளம்பரம் போய்விடும் என்ற நினைப்புதான் எதிர்க்க எதிர்க்கதான் அப்படி என்ன அந்த படத்தில் இருக்கிறது என்று பார்க்க சில கூட்டமும் படம் பார்க்க போகும் அது போல முஸ்லீம்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்களா அப்ப படம் நல்ல இருக்கு இல்லையோ என்று மூஸ்லீம்களை கண்மூடிதனமாக எத்ரிக்கும் ஒரு கூட்டமும் போய்பார்க்கும் இதெல்லாம்தான் அவருக்கு வேண்டியதுங்க

      Delete
    4. எப்பிடியெல்லாம் யோசிக்கிறீங்கப்பா...????

      Delete
  5. எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க!

    ReplyDelete
    Replies
    1. மாத்தி மாத்தி யோசிக்கனுமுங்க

      Delete
  6. மதவாதிகள் விஸ்வரூபம் எடுப்பது மனித குலத்துக்கு பெரிய தீமை அதன் காரணமாக இந்த படத்தை தியோட்டரில் டிக்கட் வாங்கி பார்ப்பது என்ற உறுதியோடு இருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. மனித குலத்திற்கு வரும் தீமையை தீர்க்க இந்த படம் உதவுப்போகிறதா?

      Delete
    2. //மனித குலத்திற்கு வரும் தீமையை தீர்க்க இந்த படம் உதவுப்போகிறதா?//
      மனித குலத்திற்கு வரும் தீமையை ஒரு படம் தீர்க்கும் என்று அறிந்தது இல்லைங்கோ ஆனா தீமையான மதவாதிங்க அந்த படத்தை எதிர்கிறார்கள் என்றால் அந்த படத்தில் ஏதோ ஒரு நல்லது இருக்க வேண்டும்.

      Delete
    3. பாதுப்போங்க தம்பி குண்டு,கிண்டு வச்சிருக்கப்பொறாங்க....

      Delete
  7. எல்லாம் விளம்பரம்தான்!

    ReplyDelete
  8. padam vantha than theriyum ierunthalu vetri pera valthukkal

    ReplyDelete
  9. athiga butjet nu soluranga. athanal yantha brablamum ielamal padam vetey pera valthukkal.

    ReplyDelete
    Replies

    1. படம் யாருடைய மனதை புண்படுத்தாமல் எடுத்திருந்தால் அந்த படம் வெற்றி பெற நானும் வாழ்த்துகிறேன்

      Delete
  10. புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை
    வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை
    நாம யாருங்கோ

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.