கமல் சிறந்த நடிகரா அல்லது வியாபரியா?
கமல் மிகச் சிறந்த நடிகரா இருக்கலாம் ஆனால் சிறந்த வியாபாரியா என்றால் இல்லை என்றே சொல்ல தோன்றுகிறது. அதனால்தான் அவரின் விஸ்வரூபம் வெளியிடுவதற்கு முன்பாகவே பல பிரச்சனைகளை சந்தித்து கொண்டே இருக்கிறது.
அவர் படம் எடுக்க ஆரம்பித்ததும் அதில் முதலிடு செய்ய விரும்பியவர்கள் பின் வாங்கியதும், அவரே பணத்தை செலவு (நூறு கோடி)செய்து படத்தை எடுத்துள்ளார். இப்படி ஒரு அதிக முதலீடு செய்து எடுக்கும் போது அதில் மிக கவனமாக எடுத்து இருக்க வேண்டும். ஆனால் அதை அவர் அப்படி செய்துள்ளாரா என்று பார்த்தால் இல்லை என்றே தோன்றுகிறது..
விஸ்வரூபம் படத்தில் தீவிரவாதம் பற்றி சொல்லப்பட்டிருப்பதாக செய்திகள் வந்து இருக்கின்றன. தீவிரவாதம், தீவிரவாதி என்றாலே உடனே மூஸ்லீம்களை நோக்கியே சுட்டிக்காட்டப்படுகிறது. இதற்கு காரணம் மூஸ்லிம்களில் உள்ள ஒரு சிறு குருப் செய்த தவறுதான். ஆனால் அதற்காக ஒட்டு மொத்த மூஸ்லிம் சமுதாயத்தையே சுட்டிக் காட்டுவதாக மீண்டும் மீண்டும் காண்பிக்கும் போதுதான் பிரச்சனையே எழும்புகிறது. அதனால் முஸ்லிம் சமுதாயத்தை சார்ந்த நல்ல உள்ளங்களும் மன வருத்தம் அடைந்து தமது எதிர்ப்பை காட்டுகிறது போல தோன்ருகிறது. நீங்கள் இந்துவாகவோ ,கிறிஸ்துவராகவோ ,சீக்கியராகவோ இருந்து உங்களுக்கு ஒரு மூஸ்லிம் நண்பர் இருந்து, யாரோ ஒரு சில மூஸ்லீம் தீவிரவாதியாக இருப்பதனால் உங்கள் நண்பரையும் நீயும் மூஸ்லிம் அதனால் நீயும் தீவரவாதி என்று சொன்னால் அந்த நண்பர் சிரித்து கொண்டா இருப்பார்? ஏதோ ஒரு தடவை சொன்னால் நண்பந்தானே சொல்லுகிறான் என்று நினைத்து அமைதியாக செல்லலாம் ஆனால் அதுவே தொடர்ந்தால் அவன் எரிச்சல் அடைய மாட்டானா? அப்படி பட்ட ஒரு சூழ்நிலைதான் இப்போது தோன்றி இருக்கிறது என்று கூட சொல்லாம்.
இப்படிபட்ட சூழ்நிலை உள்ள நேரத்தில் தன் சொந்த செலவில் படம் எடுக்கும் போது மிக கவனமாக இருந்திருக்க வேண்டும். இந்தியா போன்ற நாட்டில் படம் எடுக்கும் போது மிகமிக கவனமாக இருக்க வேண்டும் . பல மதத்தினரும் சகோதரத்துவத்தோடு சேர்ந்து வாழும் நாடாக இந்தியா இருந்துவந்தாலும் மதம் அங்கும் மிகவும் சென்ஸ்சிடிவான ஒன்றாக இருக்கிறது. நாம் எடுக்கும் படத்தின் மூலம் லாபம் சம்பாதிக்க வேண்டும் என்று கருதி இருந்தால் அதில் அதிக கவனத்துடன் யார் மனதையும் அல்லது எந்த சமுதாயத்தையும், மதத்தையும் காயப்படுத்தாமல் எடுக்க வேண்டும்..
இல்லை இல்லை எனக்கு பணம் முக்கியமல்ல நான் சொல்ல வரும் கருத்துதான் முக்கியம் என கருதினால் கடைசிவரை யாரிடமும் மண்டியிடாமல் போராட வேண்டும். ஆனால் இதை இரண்டையும் கமல் செய்ய தவறிவிட்டார் என்றே தோன்றுகிறது.
இந்த மாதிரி படத்தை கமல் எடுத்து வெளியிட விரும்பினால் அதை ஆங்கிலத்தில் எடுத்து வெளியிட்டு இருந்தால் இந்தளவு பிரச்சனைகள் வந்திருக்காது. அதை மேலை நாடுகளில் நன்றாக ஒடி இருக்கும் . காரணம் இங்குள்ள கருத்து சுதந்திரம்தான்.
அதனால் கமல் அவர்களே நீங்கள் வியாபரத்தை கற்று வாருங்கள் அல்லது சிறந்த நடிகராகவே இருங்கள் . இந்த படம் மிக அதிக செலவில் உங்களுக்கு வியாபர நுணுக்கத்தை மிகவும் நன்றாக கற்று கொடுத்திருக்கலாம்.
இந்த படத்தில் நீங்கள் வெற்றியை அடையலாம் அல்லது தோல்வியை தழுவலாம் ஆனால் மனம் மட்டும் சோர்ந்து விடாமல் இருங்கள்....உங்கள் புதிய முயற்சிகள் என்றும் தொடரட்டும்.
அன்புடன்
மதுரைத்தமிழன்..
எனக்கென்னவோ கமல் படைப்பாளி மட்டும்தான். சரியான வியாபாரியா இருந்தா இதுப்போல் ரிஸ்க் எடுத்து புது புது முயற்சிகளை எடுக்கவே மாட்டார்.
ReplyDeleteவிஸ்வரூபம் விமர்சனம் (சுட்டது)
ReplyDeletehttp://sekkaali.blogspot.com/2013/01/blog-post_24.html
//பல மதத்தினரும் சகோதரத்துவத்தோடு சேர்ந்து வாழும் நாடாக இந்தியா இருந்துவந்தாலும் மதம் அங்கும் மிகவும் சென்ஸ்சிடிவான ஒன்றாக இருக்கிறது//
ReplyDeleteசென்ஸ்சிடிவானதா? இஸ்லாமிய மத வெறி மட்டும் இந்தியாவில் உள்ளது. அமெரிக்காவில் உட்பட கிறிஸ்தவ நாடுகளில் இந்துக்கள் பௌத்தர்கள் என்று பல மதத்தினரும் இருக்கிறார்கள்.அவர்கள் மத வெறி கொண்டதில்லை.
//அதை ஆங்கிலத்தில் எடுத்து வெளியிட்டு இருந்தால் இந்தளவு பிரச்சனைகள் வந்திருக்காது. அதை மேலை நாடுகளில் நன்றாக ஒடி இருக்கும் . காரணம் இங்குள்ள கருத்து சுதந்திரம்தான்//
இஸ்லாமியர்களுக்காக இந்தியர்கள் எல்லாம் கருத்து சுதந்திரம் அற்றவர்களாக வாழ வேண்டுமா?