Monday, January 7, 2013






வருங்காலத்தில் இப்படியும் சட்டம் வரலாம் இந்தியாவில்??

இந்திய கலாச்சாரத்தில் பலாத்காரம் செய்வது ஒரு அங்கமாக மாறிவிட்டது. அதனால் இந்திய அரசு பலாத்காரம் பற்றிய பல புதிய  சட்டங்களை அமுல்படுத்தியுள்ளது.


தன் பெண்ணை பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டும் பெற்றோர்களை குண்டர் சட்டத்தில் அடைக்கபடுவார்கள். தப்பி தவறி போலிஸ்கார்கள் அதை குற்றமாக பதிவு செய்தால் அவர்கள் வேலையில் இருந்து பணி நீக்கம் செய்யபடுவார்கள் என்ற புதிய சட்டம் நிறை வேற்றப்பட்டுள்ளது

பலாத்காரம் செய்வது தவறு இல்லை ஆனால் பலாத்காரம் செய்யும் பெண்ணின் உடைகளுக்கு தேசம் ஏற்பட்டால் கடும் தண்டனை தரப்படும் .


இன்று முதல் பலாத்காரம் இந்தியாவின்  தேசிய விளையாட்டாக அறிவிக்கபடுகிறது.

வேட்பாளர் தனது வாழ்க்கையில் எந்த பெண்ணையும் பலாத்காரம் செய்யவில்லையென்றால் அவர் வேட்பாளாராக நிற்க தகுதியில்லை என்று அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.

மகளிர் தினத்தை மிக சிறப்பாக கொண்டா டில்லி நேரு அரங்கத்தில் "பலாத்கார கிங்க்' முன்னிலையில் கற்பழிப்பு நிகழ்ச்சி நடை பெறும் அது லைவ் புரோகரமாக டீவியில் ஒலிபரப்பபடும். அந்த நேரத்தில் தமிழகத்தில் கண்டிப்பாக மின்சாரம் இருக்க உறுதி செய்யப்பட்டுள்ளது.

குளிர்கால கூட்டத் தொடரில் மக்களுக்காக பாடுபடும் தலைவர்கள். டிவியில் தினசரி கற்பழிப்பு நிலவரங்கள் காட்டப்பட வேண்டுமென்ற மக்களின் உரிமைக்காக போராடுவார்கள்

பலாத்காரம் செய்யும் ஆண்களுக்கு உடலில் சிறிது கீறல் ஏற்பட்டாலும் அதற்கான மருத்துவ செலவை அரசாங்கம் ஏற்று கொள்ளும்,

அரசியல் தலைவரின் பேச்சு : கடந்த சில மாதங்களாக பலாத்காரம் செய்வது மிகவும் குறைந்து இருக்கிறது. இப்படி தொடர்ந்தால் வெளிநாட்டில் இருந்து ஆண்களை இறக்குமதி செய்ய அரசாங்கம் முயற்சிக்க வேண்டும்.

மணமகன் தேவை :மிக முக்கியமான தகுதி அதிக பெண்களை பலாத்காரம் செய்யது இருக்க வேண்டும்.





டிஸ்கி : நேற்று இந்திய செய்தியை கேட்கும் போது ஒரு கயவன் ஒரு பெண்னை பலாத்காரம் செய்தாகவும் அதனை அறிந்த பெற்றறோர்கள் தட்டி கேட்ட போது அந்த கயவனின் உறவினர்கள் பாதிக்கப்பட்ட பெண்னை தீ வைத்து கொல்ல முயற்சித்தாகவும் அதனை  போலிஸில் ரிப்போர்ட் செய்தால் அதை பதிவு செய்ய மறுத்ததாகவும் தகவல். அதனால் எழுந்த  எண்ணமே எதிர்கால இந்தியாவில் வரும் செய்திகள் என்ற பதிவு. இந்தியா வல்லரசு இந்தியாவாக ஆகுமோ இல்லையோ நிச்சயம் வெட்ககேடான நாடாகும் ஆகும் தூரம் அதிகம் இல்லை.

வேதனையுடன்
மதுரைத்தமிழன்



07 Jan 2013

7 comments:

  1. விளையாட்டிற்கு கூட இதை மனம் ஏற்க மறுக்கின்றது...பயமாகவும் இருக்கின்றது...

    ReplyDelete
  2. இப்படியே போனால் வருங்கால இந்திய ஆண்கள்
    கற்பழிந்த பெண்களைத் தான் மணப்பார்கள்!!

    அவர்களுக்கு அதில் கொஞ்சமும் வெட்கம் இருக்காது.

    உண்மையைச் சொன்னேன் “உண்மைகள்“

    ReplyDelete
  3. இப்படி நினைக்கவும் பயமா இருக்கு.வேண்டவே வேண்டாம்.

    ReplyDelete
  4. புரிகிறது
    கூடவே பெண் சிசு கொலை நடக்கவும் பெண் கருவிலேயே அழிக்கவும் சட்டம் வரட்டும்
    பெண்களுக்கு தர்க்காத்துகொள்ள இதைவிட சிறந்த வழி ஏதுமில்லை இந்த தாய் திரு நாட்டில்
    தாய்குலமே திருந்துங்கள் தாய் ஆகாதீர்கள் அப்படி ஆகிவிட் டால் பேய் ஆகுங்கள்
    என்ற சட்டமும் இயற்றபடட்டும்

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.