Monday, January 21, 2013






துஷ்டனை கண்டால் மட்டுமல்ல அமெரிக்க தமிழனை கண்டாலும் தூர ஓடும் பெண்கள்...

நீயூயார்க் நகரில் வேலை பார்க்கும் தமிழன், வேலையில்  இருந்து திரும்பி ரயிலில் நீயூஜெர்ஸிக்கு வந்து கொண்டிருந்தான். அப்போது அவனுக்கு  அருகில் உதட்டு நிறைய லிப்ஸ்டிக் போட்டு மிக ஷார்ட் கவுன் அணிந்து அமெரிக்க லேடி ஒருத்தி  வந்து அமர்ந்தாள். அவனை பார்த்து உதட்டை சுழித்து சிரித்துவிட்டு அவன் காதில் மெதுவாக சொன்னாள். 100 டாலர் தந்தால் நீ விரும்பியவாறு நான் நடப்பேன் என்றாள்.

அவனும் மிகவும் சந்தோசத்தோடு நீ எதுவும் செய்வாயா என்று கேட்டான்.

அதற்கு அவள் ஆமாம் நீ என்ன சொன்னாலும் செய்வேன் என்றாள்.

அதை கேட்ட அவன் என் வீட்டிற்கு வந்து என் மனைவி வருவதற்குள் நான் சொல்வதை செய்து விட்டு செல்வாயா என்று மீண்டும் கேட்டான்

அதற்கு அவள் நான் ரெடி என்று சொன்னாள்.

அவளிடம் அவன்  100 டாலரை கொடுத்து வீட்டிற்கு அழைத்து சென்றான்.

வீட்டிற்குள் நுழைந்ததும் அவளிடம் இங்கே பாரு இந்த பாத்திரத்தை எல்லாம் டிஸ்வாசரில் போட்டுவிட்டு  இங்கே இருக்கும் துணியை வாஷிங் மிஷினில் போட்டு அதன் பிறகு வீட்டை எல்லாம் வேக்குவம் பண்ணிவிட்டு அதன் பின் துணியை எல்லாம் மடித்துவிட்டு சீக்கிரம் போய்விடு என்று சொல்லிவிட்டு லேப்டாப்பை எடுத்து பதிவு எழுத ஆரம்பித்தான்

டிஸ்கி: இந்த தமிழன் நல்ல தமிழன் நீங்கள் வேறு மாதிரி நினைத்து இருந்தால் அது அவன் தவறு இல்லை மக்கா... உங்க எண்னங்களில்தான் தவறு


அன்புடன்
உங்கள் அபிமானத்திற்குரிய
மதுரைத்தமிழன்

10 comments:

  1. ஹஹஹ இப்படி யார் வேலைக்கு ஒரு நபரை வைத்து பதிவெழுத சொன்னாங்க.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி .

      Delete
  2. பின்னே ஓடாம என்ன செய்வாங்க:-)

    அது இருக்கட்டும். இப்படியா அமெரிக்கப்பெண்கள் இருக்காங்க? இப்படியெல்லாம் சொல்வது டென் மச் இல்லையோ????

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி .இந்த பதிவு நகைச்சுவைக்காக எழுதப்பட்டது.

      அமெரிக்க பெண்கள் மட்டுமல்ல எல்லா நாட்டிலும் இப்படி பட்ட 'சில' பெண்கள் உண்டு என்பது உண்மையே

      Delete
    2. “சில“ இல்லை “பல“ என்று திருத்துங்கள் “உண்மைகள்“

      Delete
  3. நல்ல தமிழன்தான்

    ReplyDelete
  4. அவள் இரு நூறு டாலரை இவன் மூஞ்சியில அடிச்சிருப்பாளே!!

    ReplyDelete
  5. வித்தியாசமாக இருக்கிறது. நல்ல தமிழந்தான்.

    ReplyDelete
  6. -:)

    உங்கள் வலை இப்போது சீக்கிரம் OPEN ஆகிறது...

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.