Wednesday, January 23, 2013







விஸ்வரூபம் படம்  தடை :  அரசாங்கம் தவறு செய்கிறதா?

எந்த ஒரு படம் எடுத்தாலும் அதை வெளியிடுவதற்கு முன்னால் தணிக்கைதுறைக்கு அனுப்பி அவர்கள் பார்த்து அனுமதி அளித்த பின்தான் வெளியிட முடியும். இப்படி ஒரு துறை அரசாங்கத்தால் ஏற்படுத்தப்பட்டதன் காரணம் எந்த படத்திலும் மக்களையோ மதத்தையோ சமுக கலாச்சரத்தையோ பாதிக்கும் காட்சிகள் இருந்தால் அதை நீக்கி படத்தை வெளியிட அனுமதிக்க வேண்டும்.

அப்படிபட்ட ஒரு துறையின் அனுமதி பெற்று வந்த படத்தை அரசாங்கம் எப்படி தடை செய்யலாம். அப்படி அது செய்கின்றது என்றால், அரசாங்கத்தால் ஏற்படுத்தப்பட்ட அந்த துறையில் உள்ளவர்கள் சரியாக தங்கள் வேலையை செய்யவில்லை என்றுதானே அர்த்தம் அல்லது ஒருவேளை அந்த துறையினர் தாயாரிப்பாளர்களிடம் இருந்து கைக்கூலி வாங்கி விட்டு அந்த படத்தை முழுமையாக ஆய்வு செய்யாமல் வெளியிட அனுமதி அளித்துள்ளார்களா? அதற்கு ஆமாம் என்றால் அந்த துறையில் வேலை செய்பவர்கள் மீது வழக்கு தொடுக்கப்படுமா?


இந்த மாதிரி மதத்தை உட்படுத்தி படம் தாயாரித்து அது தணிக்கைக்கு வரும் போது அந்த தணிக்கை குழுவில் மதத்தலைவர்களும் இருந்திருக்க வேண்டும் அல்லவா? அப்படி இருந்து இருந்தால் அவரிடம் இந்த இந்த காட்சிகள் மதத்தை பாதிகின்றாதா என்று கேட்டு தெளிந்து ஆய்வுக்கு உட்படுத்தி அதன் பிறகு தணிக்கை சர்டிபிகேட் கொடுத்திருந்தால் இந்த மாதிரி பிரச்சனகள் வந்து இருக்காதே.

அப்படி செய்யாததால் பணத்தை செலவிட்ட தயாரிப்பாளருக்கு நாள் தள்ளிப் போட போட நஷ்டம்தானே.? அதுமட்டுமல்லாமல் மக்களிடையேயும் மனக் கசப்பு உண்டாகி சகோதர்கள் போல இருக்கும் அவர்களிடம் வேற்றுமையும் பகைமை உணர்ச்சியும் உண்டாகிறதே...

இது எல்லாம் அரசாங்கம் செய்யும் தவறுதானே?

ஒரு படம் வெற்றியடைந்து அதிக வருமானம் ஈட்டும் போது இந்த வரி அந்த வரி என்று வசூலிக்கும் அரசாங்கம், அவர்கள் செய்யும் தவறினால் படம் தள்ளிபோடப் பட்டு நஷ்டம் அடையும் போது அதற்கு நஷ்ட ஈடு கொடுக்குமா?

டிஸ்கி :கமல் விஜய் டிவியில் விஸ்வரூபம் எடுக்காமல் சன் டிவியில் எடுத்து இருந்தால் பிரச்சனை இந்த அளவு பூதகரமாக வந்து இருக்காதோ?

அன்புடன்
மதுரைத்தமிழன்


23 Jan 2013

15 comments:

  1. நியாயமான கேள்விகள். என் மனதிலும் இவைதான் ஓடுகின்றன. ஆனால் பதில் தானில்லை. நல்லதொரு கலைஞனை ‘இந்தத் தொழிலே வேணாம்டா’ன்னு வெறுக்க வெச்சுடுவாங்களோ எல்லாரும் சேர்ந்துன்னு என் மனசுல தோணுது.

    ReplyDelete
  2. சரியான கருத்தை முன்வைத்துள்ளீர்கள்
    இப்படியேப் போனால் புதிய கருத்துக்கும் புதிய சிந்தனைக்கும்
    நிச்சயம் வாய்ப்பில்லாமல்தான் போகும்

    ReplyDelete
    Replies
    1. சரியாக சொன்னீர்கள், இனிமேல் கண்ணா லட்டு திங்கா ஆசையா மாதரி படங்கள் தான் பார்க்க வேண்டும்

      Delete
  3. நியாயமான கருத்துகள் , கேள்விகள்

    ReplyDelete
  4. வணக்கம் நண்பரே,
    சரியான கேள்விகள்.மத பிரமுகர்களுக்கு போட்டுக் காட்டாமல் ரிலீஸ் செய்து இருந்தால் இவ்வளவு சிக்கல் ஆகி இருக்காது.

    பணம் உழைப்பு வீணாவதும்,நாட்டின் தணிக்கைத் துறையை மதவாத சக்திகள் மீறுவதும் நிச்சயம் சரியல்ல.

    நாளைக்கு திரைப்படம் எதுவுமே எடுக்க முடியாது!!

    நன்றி!!

    ReplyDelete
    Replies
    1. டேம் 999 னும் பணம் போட்டு தான் சார்வாகான் எடுத்தாங்க.. ஓசில எடுக்க.....

      அதுக்கும் தணிக்கை துறை அனுமதி வழங்கி தான் இருந்துச்சு...
      இதெல்லாம் தெரியாதா?? இல்லை தெரியாத மாதிரி நடிக்கிறீங்களா???

      டேம் 999 டைரக்டருக்கு மட்டும் கருத்து சுதந்திர உரிமை கொடுக்க மாட்டேங்கிறிங்களே?? ஏன்????

      Delete
    2. சகோ சிராஜ்,

      போலிஸ் அனுமதியோடு டேம் 999 பார்க்க அனுமதிக்க நான் ஆதரவு கொடுக்கிறேன்.
      இதே போல் நீங்கள் விஸ்வரூபத்துக்கு சொல்லுங்க பாக்கலாம்!!

      இன்னும் நிறைய சொல்வேன் நீங்க நம்ம, அல்லது இக்பால் தளத்துக்கு வாங்க மார்க்க ரீதியாக விஸ்வரூபம் ஹலால் என நிரூபிக்கிறேன் ஹி ஹி!!

      நன்றி!!!

      Delete
  5. தேவையெனில் தணிக்கை சான்றிதழ் குடுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து மேல் முறையீடு செய்யலாம். சட்ட பூர்வமாக அனுகலாம். படம் வெளிவந்து அதைல் ஆட்சேபணை இருந்தால் அதற்கான கடுமையான விமர்சனம் வைக்கலாம்.

    சாதி/மத அமைப்புகள் ( அது எந்தப் பிரிவாக இருந்தாலும்) படத்தை வெளியிட தடைபோடுவது, அரசும் அதற்கு செவி சாய்ப்பதும் படைப்புச் சுதந்திரத்தை பாதிக்கும் செயல். இது நல்ல உதாரணம் அல்ல என்றுதான் தோன்றுகிறது.

    பிறகு எதற்கு தணிக்கை அமைப்பு? தணிக்கை சன்றிதழ்?

    அதில் சில விதிமுறைகள் அடுமையாக்கப்படனுமான்றதை பொது விவாதமாக்கினால், அதில் சில கட்டுப்பாடுகள் அதிகரிக்கலாம்.

    தடை தீர்வாகுமா?

    ReplyDelete
    Replies
    1. ஜெய்..


      டி.டி.ஹெச் சில் வெளியடவிட மாட்டோம் என்று சொன்ன திரையரங்கு உரிமையாளர்களுக்கு தாங்கள் தரும் தீர்வு என்னவோ???? பணத்திற்க்காக கமலை மிரட்டலாம், மதத்திற்க்காக மிரட்டக்கூடாது என்பதா??? அப்ப கமலை கஸ்டத்தில் ஆழ்திய தியேட்டர் உரிமையாளர்களுக்கு தண்டனை தர விரும்பி, தியேட்டரில் பார்க்காமல் புறக்கணியுங்கள் ஜெய்.... அது தான் கமலுக்கு நீங்கள் செய்யும் நியாயம்...

      தடை தீர்வாகாது... நிச்சயம் ஆகாது... இன்று இல்லாவிட்டாலும் சில நாட்களுக்கு பிறகு படம் வரவே செய்யும்.. இதற்க்கு சரியான தீர்வு, சென்சார் போர்ட் இன்னும் விழிப்பாக இருப்பது தான்...
      அந்த விதத்தில் இந்த பதிவு சொன்ன கருத்துடன் நானும் உடன்படுகிறேன்...

      Delete


  6. அரசின் நடவடிக்கை சரியல்ல!தணிக்கை குழு என்பது கேலிக் கூத்தா !!? தங்கள் பதிவு நியாயமானதே!

    ReplyDelete
  7. இப்போது நடப்பதுவும் அசல் இஸ்லாமியத் தீவிரவாதம் தான்.

    அரசும், மக்களும் சின்னாட்களுக்கு முன் தமிழ்மண நிர்வாகிகள் போல் நடந்து கொண்டது போல் நடந்துகொண்டால் நல்லது.,

    ReplyDelete
  8. Here is Viswaroopam's censor certificate. Have a look at the first name on the censor certificate.

    http://www.google.co.in/imgres?hl=en&safe=off&client=firefox-a&hs=RXy&sa=X&tbo=d&rls=org.mozilla:en-US:official&biw=1680&bih=899&tbm=isch&tbnid=G3seI3pgiZv3oM:&imgrefurl=http://www.mayyam.com/talk/showthread.php%3F10099-**-UlagaNaayagan-UlagaiyE-Kalakka-Varum-Viswaroopam-**/page4&docid=eP8uwbCVoNFHeM&imgurl=https://sphotos-a.xx.fbcdn.net/hphotos-snc6/9107_447446518625940_432048013_n.jpg&w=960&h=677&ei=aLX_UMrqNqL3igLejIGYAQ&zoom=1&iact=rc&dur=484&sig=112152312541903359099&page=1&tbnh=138&tbnw=196&start=0&ndsp=42&ved=1t:429,r:9,s:0,i:110&tx=78&ty=76



    ReplyDelete
  9. "தீவிரவாதிகள் முழுவதும் முஸ்லிம்களாக இருப்பார்கள். காபரே டான்ஸ் ஆடுபவர்களெல்லாம் கிறிஸ்தவர்களாக இருப்பார்கள். இவ்வாறு தொடர்ச்சியாக படங்களில் காட்டுவதன் பின்னணியில் ஒரு திட்டமிட்ட செயல் உள்ளதோ என்று சந்தேகப்படத்தான் உள்ளது. விஸ்வரூபத்தின்மீதான தடை நிச்சயம் சரியானதே"

    ReplyDelete
  10. இரண்டு வாரங்களுக்கு பிறகாவது படம் ரிலிஸ் ஆகட்டும்

    ReplyDelete
  11. நல்லா கேட்டிங்க நண்பா? நறுக்குன்னு செம, இதில் ஏதோ பெரிய சதி நடந்திருக்கிறது என்றே தோன்றுகிறது. ம்ம்ம்ம் பொறுத்திருந்து பார்ப்போம்.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.