(கண்டவை..கேட்டவை..பார்த்தவை
அனுபவித்தவை)
அமெரிக்காவில்
பல ஆண்டுகாலமாக வசித்து வரும் நான் பார்த்தவைகளை கண்டவைகளை கேட்டவைகளை அனுபவித்தவைகளை
இந்த பகுதியில் எழுதப் போகிறேன். இந்த பதிவு அமெரிக்காவிற்கு வெளியே உள்ளவர்களுக்கு
இங்கு நடப்பவை அறிந்து கொள்ளவே எழுதப்படுகிறது. அமெரிக்காவில் வசிக்கும் தமிழ் தெரிந்தவர்கள்
யாரேனும் இந்த பகுதியில் தங்கள் அனுபவங்களை சொல்ல வேண்டும்மென்றால் எனக்கு மெயில்
(avargal_unmaigal at yahoo.com ) அனுப்புங்கள்
அதை இந்தப் பகுதியில் வெளியிடுகிறேன். நீங்கள் அனுப்புவை அப்படியோ அல்லது எனது
தளத்திற்கு ஏற்ப எடிட் செய்தோ வரும். அதுவரை எது எல்லாம் என் ஞாபகத்திற்கு வருகிறதோ
அல்லது சொல்ல நினைக்கிறேனோ அது எல்லாம் இங்கு பதிவாக வெளிவரும்
வந்தாரை வாழ
வைப்பது தமிழகம் என்பது வழக்கில் இருக்கிறது அதை சொல்லக் காரணம் இந்தியாவில் உள்ள எந்த
பகுதியில் உள்ளவர்களும் அங்கு வந்து வசித்து சந்தோஷமாக வாழமுடியும் என்பதால்தான். ஆனால்
உண்மையில் வந்தாரை வாழ வைக்கும் நாடு என்றால் அது அமெரிக்காதான் காரணம் இங்குதான்
உலகின் ஒவ்வொரு நாட்டில் இருந்தும் மக்கள் வந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அமெரிக்காவில்
உழைக்க தெரிந்தவர்களுக்கு பிழைக்க ஆயிரம் வழிகள் இருக்கின்றன. பொருளாதாரம்
மற்றும் வேலை வாய்ப்புகளில் அது தடுமாறிக் கொண்டிருந்தாலும் மக்கள் வருவது மட்டும்
குறைவில்லாமல் நடந்து கொண்டிருக்கிறது. இங்குபிழைக்க ஆங்கில மொழி அவசியம் என்று கூட
இல்லை அது தெரியாமல் கூட அநேக மக்கள் சம்பாதித்து
கொண்டும் வாழ்ந்து கொண்டும்தான் இருக்கிறார்கள் அதிலும் குறிப்பாக நீயூயார்க் நீயுஜெர்ஸியில்
அதிகம் பேர் இப்படி இருப்பதை கண் கூடாக காண்கிறேன்.அதனால்தான்
இன்றும் உலகநாயகனவே அமெரிக்கா இருக்கிறது
எதிர்காலத்திலும் இருக்கும். அப்படிப்பட்ட நாட்டைப் பற்றிதான் நாம் இங்கு பார்க்கப்
போகிறோம்.
உலகின் வல்லரசான
அமெரிக்கா நாட்டில் இந்தியாவைப் போன்ற ஜாதி சமய வேறுபாடுகள் இல்லைதான். ஆனால் இனவேறுபாடுகளை
ஒழித்து விட்டோம் என்று பறை சாற்றும் அமெரிக்காவில் இன்னும் இனவேறுபாடுகள் இருந்து
கொண்டுதான் இருக்கின்றன.அது இன்னும் மறைமுகமாக இருந்து கொண்டிருக்கின்றன. அப்படியெல்லாம்
இல்லை அமெரிக்கவில் வேலை பார்க்கும் இந்திய ஐடி அடிமைகள் சொல்லாம் ஆனால் அது உண்மையல்ல
உண்மை என்னவென்றால் இந்த ஐடி அடிமைகளும் அதில் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
ஆனால் அதை வெளியே வெளிபடையாக ஒத்துக் கொள்வதில்லை.
ஆரம்ப காலத்தில்
கிறிஸ்துவ மதம் சார்ந்த நாடாக இருந்த போதிலும் இங்கு எந்தவொரு மதமும் அரசாங்கத்தால்
ஆதரிக்கபடுவதில்லை.அதனால் தான் இங்கு கிறிஸ்மஸ் காலத்தில் பள்ளியிலும் அரசாங்க அலுவலகங்களிலும் வைக்கபடும் மரத்துக்கு
எதிர்ப்பு வந்ததால் இப்போது அது பல இடங்களில் வைப்பது குறைந்து வருகிறது. இங்கு வசிக்கும்
பல மதத்தினரும் அரசாங்கத்திற்கு வரி செலுத்துகின்றனர். அதனை கொண்டு ஒரு மதத்தினரின்
பழக்க வழக்கத்திற்கு ஏற்ப மரம் வைப்பது தவறு என்பதால் அந்த கருத்துக்கு அரசாங்கம் தலை
சாய்த்தது. இப்போது அவர்கள் மரம் வைத்தாலும் அதில் ஹேப்பி கிறிஸ்மஸ் என்பதற்கு பதிலாக
ஹேப்பி ஹாலிடே என்று போட்டே மரம் வைக்கப்படுகிறது. அது போலவே மால்களிலும் அலுவலகங்களிலும்
ஹேப்பி கிறிஸ்மஸ் என்று யாரும் வாழ்த்துவதற்கு பதிலாக ஹேப்பி ஹாலிடே என்று இப்போது
வாழ்த்துகிறார்கள்,
இப்போது கிறிஸ்துவ
மதம் இந்தியா போன்ற நாடுகளில்தான் அதிகம் வளர்ந்து வருகிறது. ஆனால் இங்கு மதத்தின்
மீது உள்ள பிடிப்பு மிகவும் குறைந்து வருகிறது. பல சர்ச்சுகள் இங்கு மூடப்பட்டன. இருக்கும்
சர்ச்சுகளிலும் இப்போது கூட்டம் குறைந்து வருகிறது என்பதும் உண்மையே. இதற்கு காரணம்
இன்றைய இளைய தலை முறையினரிடம் கடவுள் பற்றிய பிடிப்பு குறைவதே .
சர்ச்சுகளின்
எண்ணிக்கை குறைந்து வரும் அதே சமயத்தில் கோவில்களின் எண்ணிக்கை அதிகமாகி கொண்டே போகின்றது
இதற்கு கிறிஸ்துவ மதத்தினர் இந்து மதத்திற்கு மாறி வருகிறார்கள் என்பதல்ல. இந்தியாவில்
இருந்து இந்துக்கள் இங்கு அதிகம் வந்ததே காரணம் அதிலும் குறிப்பாக 1995 க்கு அப்புறம்
இந்தியர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வந்ததுதான் காரணம் . அப்போது வந்த ஜெனரேஷனும்
அவர்களது குழந்தைகளும் கோவிலுக்கு சென்று வந்தாலும் எதிர்காலத்தில் இந்த குழந்தைகளுக்கு
குழந்தைகள் வரும் போது அவர்கள் கோவிலுக்கு செல்வதும் குறைந்து இப்போது இங்குள்ள சர்ச்சுகள்
மூடப்படுவது போல கோவில்களும் மூடப்படும். இங்கு
கோவில்கள் அதிகரிப்பதற்கு மற்றொரு காரணமாக சொல்லப்படுவது குஜராத்திகள். இவர்கள் தங்கள்
கருப்பு பணத்தை வெள்ளையாக்க பல இடங்களில் இது போல கோவில்கள் கட்டி வருவதாக செய்திகள்
உலா வருகின்றது இது எந்த அளவிற்கு உண்மை என்பதை நான் அறியேன் எனவே அந்த சப்ஜெக்டிற்குள்
நான் டீப்பாக போகவிரும்பவில்லை.
இன்னும் வரும்.........
அன்புடன்
மதுரைத்தமிழன்
எழுதும்
நல்ல பகிர்வு
ReplyDeleteகடவுள் பற்றிய பிடிப்பு : அழியும் பணப் பிடிப்பால், எல்லா இடத்திலும் குறைந்து கொண்டே வருகிறது... ஏன் தன் மேலேயே பிடிப்பு இல்லாமல் போய் விட்டது...!
ReplyDeleteடீப்பாக போகலாம்... இதற்கு பூ. க. இல்லாமல் பாயாசம் கிடைக்கலாம்... ஹிஹி...
நல்லதொரு ஆரம்பம்... வாழ்த்துக்கள்...
ஐடி அடிமைகள் இன பாகுபாட்டால் அவதியுறுகின்றனர் என்பதை நான்கு மாத காலம் அமெரிக்காவில் இருந்து திரும்பிய என்னுடைய மகளும் கூறினார். அவர் தங்கிய விடுதியில் வேலை செய்யும் பணியாட்கள் கூட இவர்களை மதித்து நடத்தவில்லையாம். அதை கேட்டதும் இப்படியொரு நாட்டில் போய் வேலை செய்ய வேண்டுமா என்று கூட தோன்றியது எனக்கு.
ReplyDeleteMost of the labors are Mexicans and they don't know English, so it like they are rude. What type of respect your daughter expect from the labors? Here labors call the Manager or any body by name only. Racism is there only in a remote town not in a City, especially in Midwest and South states. They won't show it openly.
DeleteGood start !
ReplyDeleteஅருமையா பதிவை தொடங்கியுள்ளீர்கள்...... நானும் மதுரைகாரன் தான்...
ReplyDeleteஎது எப்படியோ. அங்கு சட்டம் என்று ஒன்று இருக்கிறது. எல்லோரும் அதை கடைப்பிடிக்கிறார்கள். காக்கிறார்கள். தவிரவும், எதையுமே வெளிப்படையாகவும் நடுநிலைமையுடனும் பேசுகிறார்கள். பகலில் அக்கம்பக்கம் பார்த்துப் பேசு. இரவில் அதுவும் பேசாதே என்கிறது இந்தியா.
ReplyDeleteஉண்மையைப் பேசி வாங்கிக் கட்டிக்கத் தயாராகுங்கள். நீங்க ரெடி. இங்க ஆளுக ஏற்கனவே ரெடியாயிட்டாங்க.
கோபாலன்
அமெரிக்கா பற்றிய தகவல்கள் சிறப்பு! தொடர்கிறேன்! நன்றி!
ReplyDeleteநல்ல ஆரம்பம்... நிறைய சொல்லுங்க...
ReplyDeleteவெண்ணிலவே வெள்ளிவெள்ளி சாங்க்ல கமல் ஒரு தியேட்டர் ப்ளே பார்க்கபோவரே
ReplyDeleteஅதை பார்த்தபோது தான், ஒ ஷேக்ஸ்பியர் காலத்து நாடக தியேட்டர் கலாச்சாரம் எல்லாம்
இன்னும் இங்க இப்படி செழிப்பா இருக்கானு வியப்பா இருந்துச்சு!!
விசித்திரமான உலகம்!! ரேசிசம் பற்றிய நேர்மையான கருத்து!
உலகமயமாக்கலை உலகமயமாக்கியவர்கள் பிரென்ட்லியா இருக்கிறது is not at all a matter of wonder!!
பகிர்வின் தொடக்கமே நன்றாக உள்ளது! அதுவும் அமெரிக்கா பற்றி! தொடருங்கள்! கடவுளி பிடிப்பு பற்றி ட்ட் அவர்கள் கூறியுள்ளது சரியே!
ReplyDeleteநீங்களும் நம்பள்கியும் அமெரிக்கா பற்றி என்ன நல்லது சொன்னாலும், நாங்கள் பெருமூச்சுடன் கேட்க மட்டுமே! ஏனென்றால் ஒம்கு இந்தியாவில் எதுவும் மாறப் போவதில்லை!
பகிர்வுக்கு மிக்க நன்றி!
த.ம.
இந்த தொடரின் இடையிடையே அமெரிக்காவில் மனைவியிடம் அடி, இடி உதை வாங்கிய கதைகளையும் சேர்க்க மறக்க வேண்டாம். அடி வாங்கிய மாநிலங்களையும் குறிப்பிட மறக்க வேண்டாம்.
ReplyDeleteஅமெரிக்க வாழ்வின் சாதக பாதங்களை எழுதினால்தான் இங்கு வர விரும்பும் தமிழர்களுக்கு உதவும், அமெரிக்காவை பற்றி தவறான கருத்தாங்களை தவிர்க்கும். அதை விடுத்து சாதகங்களை மட்டும் எழுதி 'நான் இருக்கும் அமெரிக்காவை பாரீர்' என பெருமையடிப்பதில் பயனில்லை, அதை விடுமுறைக்கு இந்தியா வரும் வீணாப் போன வெட்டிபந்தா ஆசாமிகளே செய்வார்கள்.
ReplyDeleteஅமெரிக்காவை இன்பத்தில் இந்திரலோகம், சட்டம் நீதியில் ஒரு சத்தியலோகம் என கலர் கலராக ரீலு விடாமல் நடுநிலையாக ஆரம்பித்துள்ளீர்கள். நன்றி!
இத்தப் பட்ச்சிக்கினாவே அமிரிக்கா வந்துக்லாமாபா...?
ReplyDeleteஅல்லாம் போட்டாச்சு... போட்டாச்சு...
அமெரிக்காவைப் பற்றி தெரிந்துக்கொள்ள நினைக்கும் என்னைப் போன்றவற்கு உங்களின் இந்த தொடர் பதிவு உதவியாக இருக்கும் அதற்கு முதலில் வாழ்த்துக்களும் நன்றிகளும்.
ReplyDeleteதொடருங்கள். தொடர்ந்து படிக்க காத்திருக்கிறேன்.
நல்ல தொடக்கம். தொடர்ந்து படிக்க ஆவலுடன்.....
ReplyDeleteத.ம. +1
Even if you earn lot of money in U.S, you feel alone (Indians). We can't live like an American who enjoys their life. For example they want to go out for dinner more often and also they like to drink in the bar only not at home like us. Our guys don't want to spent any money for entertainment. But the younger generation who born and brought up here are little different. Americans are not saving money for their children like us.
ReplyDeleteThere are lot of Indians who work for a minimum wage ($7.00 to $10.00 per hr) here and they are also live happily, because our guys know how to live with minimum wage.
Butler English is OK, they don't care about grammar and accent. They will understand you if necessary ....
அமெரிக்காவை மிகச் சரியாகப்
ReplyDeleteபுரிந்து கொள்ள தங்கள் பதிவு உதவுகிறது
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
tha,ma 7
ReplyDeleteநந்தவனம் சொன்னது தான் எனது கருத்தும். அற்புதமான தேவையான பதிவு. தொடர்ந்து எழுதுங்க. ஆவலுடன் அடுத்த பகுதியை எதிர்பார்க்கின்றேன். எந்த இடத்திலும் நழுவல் வேண்டாமே?
ReplyDeleteதொடர்க! தொடர்வோம்!
ReplyDeleteஅமெரிக்காவில் கிடைக்கும் நல்ல சம்பளத்தின் காரணம் ஐ .டி க்கள் அதை சொல்வததில்லை .ஒரே வேலை க்கு உள்ளூர்வாசிக்கும் ஒரு வெளிநாட்டு காரனுக்கும் சம்பள வேறுபாடு உண்டு வேலை நேரமும் மாறுகிறது
ReplyDelete