Sunday, September 28, 2014


மோடி கலைஞர் ரஜினி வடிவேலு இவர்களுக்காக கண்ணதாசன் அன்று எழுதிய் பாடல்




பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது
கருடா சௌக்யமா யாரும்
இருக்குமிடத்தில் இருந்து கொண்டால்
எல்லாம் சௌக்யமே கருடன் சொன்னது
அதில் அர்த்தம் உள்ளது!


உயர்ந்த இடத்தில் இருக்கும் போது
உலகம் உன்னை மதிக்கும் உன்
நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால்
நிழலும்கூட மிதிக்கும்!





மதியாதார் தலைவாசல் மிதிக்காதே என்று
மானமுள்ள மனிதனுக்கு ஒளவை சொன்னது
அதில் அர்த்தம் உள்ளது! (பரம சிவன்)


வண்டி ஓடச் சக்கரங்கள்
இரண்டு மட்டும் வேண்டும் அந்த
இரண்டில் ஒன்று சிறியதென்றால் எந்த வண்டி ஓடும்


உனைப்போல் அளவோடு உறவாட வேண்டும்
உயர்ந்தோறும் தாழ்ந்தோறும் உறவு கொள்வது
அது சிறுமை என்பது அதில் அர்த்தம் உள்ளது! (பரமசிவன்)


நீயும் நானும் சேர்ந்திருந்தோம்
நிலவும் வானும் போலே நான் நிலவு
போலத் தேய்ந்து வந்தேன் நீ வளர்ந்ததாலே
என் உள்ளம் என்னைப் பார்த்து கேலி செய்யும்போது
இல்லாதான் இல்வாழ்வில் நிம்மதியேது இது
கணவன் சொன்னது இதில் அர்த்தம் உள்ளது. (பரமசிவன்)



ப்ளூ கலரில் இருக்கும் வரிகளுக்கு பொருத்தமான ஆளை நீங்கள் சுட்டிக்காட்டுங்கள்
அன்புடன்
மதுரைத்தமிழன்

11 comments:

  1. வணக்கம்
    காலம் உணர்ந்து பதிவாக பதிவிட்டமைக்கு நன்றி தத்துவப்பாடல் மிக பிரமாண்டம்.....

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. எப்படி எல்லாம் யோசிகிறீர்கள் சகோ! nice பொருத்தமான பாடலை தேர்ந்தெடுத்து உரியவர்களை சோடி சேர்த்து ம்..ம்..ம்.. good good பார்க்கலாம் அம்மு என்ன சொல்றாங்க என்று. தொடர வாழ்த்துக்கள் ...!

    ReplyDelete
  3. பொருத்தமையா..பொருத்தம்...படமும்..பாடலும்..இப்போ நிலைமையும்..

    ReplyDelete
  4. அட! இந்த பாடலை டைமிங்கா பயன்படுத்திருகீங்களே!!

    ReplyDelete
  5. எப்படியெல்லாம் யோசிச்சு பதிவு போடுறீங்க! மலைப்பா இருக்குது!

    ReplyDelete
  6. ப்ளு கலரு... கலாவும், லலிதாவுமா ?

    ReplyDelete
  7. ஆஹா... கவிஞரின் வரிகள் பொருத்தமாய்...

    ReplyDelete
  8. என்ன பொருத்தம் ஆஹா என்ன பொருத்தம்!

    ReplyDelete
  9. முதல் நீல பத்தியைப் பற்றி சொல்ல முடியவில்லை.
    ஆனால்......

    கடைசி பத்தி......... தன்னை விட நன்றாக முன்னேறி வரும் அனைத்துப் பெண்மணிகளின் கணவர்களுக்குள்ளும் இருக்கும் ஒலி தான்......

    நான் சொன்னது சரிதானே உண்மைகள்?

    ReplyDelete
  10. Romba freeya iruppingalo super Ithai than room pottu yosikkarathunnu solluvanga pola

    ReplyDelete
  11. என்னமா யோசிக்கறீங்க மதுரைத் தமிழன்.... :)

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.