எதிர்காலத்தை
ஒளிர்விடச் செய்வது இவர்கள்
கைகள்தான் !
நல்ல ஆசிரியர்கள்
மெழுகுவர்த்தியை போன்றவர்கள்
அவர்கள் தன்னை அழித்து உலகை
வெளிச்சத்திற்கு கொண்டு வர
பாடுபடுபவர்கள்.
இப்படி தன்னிடம்
ஒப்படைக்கப்பட்ட
மாணவர்களுக்காக தன்னை
அர்பணித்துக்கொண்ட அனைத்து
ஆசிரியர்களுக்கும் என்னுடைய
ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.
பள்ளியில் மட்டுமல்ல
இணையத்திலும் வந்து நல்லவைகளை
கற்று தரும், இதயங்களை கொள்ளை
கொள்ளும் நல்ல ஆசிரியர்களான
மைதிலி கஸ்தூரி ரங்கன்,
துளசிதரன் ,கரந்தை
ஜெயக்குமார், டி.என்.முரளிதரன்
மது(கஸ்தூரி ரங்கன்), பாண்டியன் தளிர் சுரேஷ், ஜோசபின் பாபா
மற்றும் அனைத்து
ஆசிரியர்களுக்கும்
மதுரைத்தமிழனின் ஆசிரியர் தின
வாழ்த்துக்கள்
விவசாயிகள் விதைப்பது
மண்ணிலே ஆசிரியர்கள்
விதைப்பது இதயத்திலே!
டிஸ்கி : நல்ல
ஆசிரியர்களான மைதிலி கஸ்தூரி
ரங்கன், துளசிதரன் ,கரந்தை
ஜெயக்குமார்,டி.என்.முரளிதரன்
மது(கஸ்தூரி ரங்கன்), பாண்டியன்
ஆகியவர்களிடம் நான் நன்றாக
படிக்க என்ன செய்ய வேண்டும்
எனக்கு ஒரு அட்வைஸ்
கொடுங்களேன் என்று கேட்டேன்
அதற்கு ஒரு ஆசிரியர் சொன்னார்.
உன் ஒரு காதில் பஞ்சை வைத்து
கொள் என்றார் உடனே நான் அது
எப்படி நான் நன்றாக
படிப்பதற்கு உதவும் என்று
கேட்டேன்
அதற்கு அவர் அப்படி
செய்தால்தான் ஆசிரியர்
சொல்வதை ஒரு காதில் வாங்கி
மற்றொரு காதில் விடமாட்டாய்
என்று சொன்னார் . பாருங்க
வாத்தியாருங்க எப்படி எல்லாம்
அட்வைஸ் தராங்க.. ஹீஹீஹீஇதில்
எந்த வாத்தியார் அப்படி
சொல்லி இருப்பார் என நீங்கள்
நினைக்கிறீர்கள் என்பதை
யாராலும் சொல்ல முடியுமா?
எனது அடுத்த பதிவு மோடியின் 100 நாள் சாதனைகள்....படிக்க தவறாதீர்கள்.
அன்புடன்
மதுரைத்தமிழன்
எதிர்காலத்தை ஒளிர்விடச் செய்வது இவர்கள் கைகள்தான் ! நல்ல ஆசிரியர்கள் மெழுகுவர்த்தியை போன்றவர்கள் அவர்கள் தன்னை அழித்து உலகை வெளிச்சத்திற்கு கொண்டு வர பாடுபடுபவர்கள்.
ReplyDeleteஇனிய ஆசிரியர் தின வாழ்த்துகள்.
happy teachers day... nice comedy posters sir..
ReplyDeleteமிக்க நன்றி நண்பரே! நான் டியுசன் ஆசிரியன் தான்! அதுவும் இப்போது இல்லை! சிறப்பான ஆசிரியர்களோடு என்னையும் இணைத்துவிட்டீர்களே! சங்கோஜமாக இருக்கிறது! நன்றி!
ReplyDelete.ஆசிரியர் தின வாழ்ழ்த்துக்கள் நண்பரே.
ReplyDeleteமிகவும் வித்தியாசமாக வலைத்தளதில் எழுதும் ஆசிரியர்களை நினைவுகூர்ந்தது மிகவும் வித்தியாசமாக இருந்தது. இங்கு தான் மற்றவர்களை காட்டிலும் மதுரைத்தமிழன் தனித்து இருக்கிறார்.
நட்பை எப்படி கொண்டாடனும் உங்க கிட்டதான் கத்துக்கணும் சகா:)
ReplyDeleteமிக்க நன்றி!!
ஆசிரியர்களை இந்த ஆசிரியர் தினத்தில் வாழ்த்துவது நல்லதே. ஆனால் வருடம் முழுவதும் அவர்களை நினைத்துக்கொள்ள முடிந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும்?
ReplyDeleteஆசிரியர் தினத்தில் வாழ்த்துக்கள் நண்பரே
ReplyDeleteஉண்மையில் கற்றல் வகுப்பறைக்கு வெளியேதான் நடைபெறுகிறது. அதை சிறப்பாக முறைப் படுத்துவர்தான் சிறந்த ஆசிரியர
ReplyDeleteஆசிரியர்களை நினைவு கூர்ந்து வாழ்த்தியமைக்கு நன்றி.
உண்மைகளை பெருமிதத்தோடு கூறி பெருமைப் படுத்திய ஆசிரியர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள். பெருமைப்படுத்தியமைக்கு தங்களுக்கும் என் பாராட்டுக்கள் சகோ ...!
ReplyDeleteஅருமையான மேற்கோள்கள் காட்டி பதிவிட்டமை நன்று. பாராட்டுகள் மதுரைத் தமிழா.
ReplyDeleteஅனைத்து ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்.
வாழ்த்துக்களை பார்த்தேன்
ReplyDeleteநன்றி தோழர்
ஆஹா மிக்க நன்றி சார்...
ReplyDelete