(It was sheer hard work and determination
that paid off, says Odisha's differently-abled Sarika Jain who cracked in her
first attempt the coveted civil services examination.)
|
உன்னால் முடியும்.........நீ
முயற்சித்தால்!
ஒடிஷாவைச் சேர்ந்த
மாற்றுத் திறனாளி மாணவி முதல்
முயற்சியிலேயே ஐ.ஏ.எஸ். தேர்வில்
தேர்ச்சி பெற்றுள்ளார்.
ஒடிஷா மாநிலம்,
போலங்கிர் மாவட்டம்,
கண்டாபான்ஜி நகரைச்
சேர்ந்தவர் சாதுராம் ஜெயின்.
அங்கு சிறிய மளிகை கடை நடத்தி
வருகிறார். இவருக்கு 4 மகள்கள்.
இதில் 3-வது மகள்
சரிகா. சிறுவயதில் போலியாவால்
அவரது வலது கால்
பாதிக்கப்பட்டது.
எனினும் மனம் தளராத
அவர், படிப்பில் மிகச் சிறந்து
விளங்கினார். சிறுவயது முதலே
டாக்டராக வேண்டும் என்பது
அவரது தணியாத ஆசை. ஆனால் அவரது
சொந்த ஊர் பள்ளியில்
அறிவியல் பாடப்பிரிவு இல்லை.
தந்தையின் பணிச்சுமை,
தனது உடல் குறைபாடு
ஆகியவற்றால் வெளியூருக்கு
சென்று அவரால்
படிக்க முடியவில்லை. இதனால்
உள்ளூர் பள்ளியில் வணிகவியல்
பயின்றார். பின்னர்
வீட்டில் இருந்தபடியே சி.ஏ.
தேர்வில் வெற்றி பெற்றார்.
அவரது அறிவாற்றலை
பார்த்து வியந்த
குடும்பத்தினர் அவரை ஐ.ஏ.எஸ்.
தேர்வுக்கு ஊக்கப்படுத்தினர்.
6 மாதங்கள் மட்டும் டெல்லியில்
உள்ள தனியார் பயிற்சி நிறுவனத்தில்
படித்த அவர் முதல்
முயற்சியிலேயே ஐ.ஏ.எஸ்.
தேர்வில் வெற்றி பெற்று
527-வது இடத்தைப்
பிடித்துள்ளார்.
இதுகுறித்து அவர்
நிருபர்களிடம் கூறியபோது, ஒரு
நாளைக்கு 12 மணி நேரம் படிப்பேன்,
கடின உழைப்புக்கு நிச்சயம்
பலன் கிடைக்கும், கிராமப்புற
மக்களுக்கும் மாற்றுத்
திறனாளிகளுக்கும் சேவை
செய்வதே எனது லட்சியம்
என்றார்.
It was sheer hard work and determination
that paid off, says Odisha's differently-abled Sarika Jain who cracked in her
first attempt the coveted civil services examination.
"Always think
better and be positive. If you work hard and you have a strong determination,
you will definitely achieve success," Sarika told IANS in an interview.
அன்புடன்
மதுரைத்தமிழன்
நல்ல விஷயம் பகிர்ந்துருகீங்க சகா:))
ReplyDeleteஉங்களுக்கு ஒரு போக்கே:)) அப்புறம் சரிகாவிற்கு:)
நம்ம ஊர்ல கூட பெனோ செபின் (தமிழ்நாட்டில்) இப்படி பாஸ் பண்ணினாங்களா:))
அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
ReplyDeleteஅந்த மாணவிக்கு எமது வாழ்த்துக்கள் நண்பா...
ReplyDeleteபுதிய பதிவு மௌனமொழி.
நமது மாநிலத்திலும் ஒரு பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவி தேர்ச்சிபெற்றிருந்தார் கடந்த தேர்வில் என நினைக்கிறேன். வெற்றிபெற்றவருக்கும் பகிர்ந்துகொண்ட உங்களுக்கும் வாழ்த்துகளும் நன்றிகளும்......
ReplyDeleteமுயற்சி திருவினையாக்கும்! என்பதை நிரூபித்திருக்கும் சரிகாவிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்! நினைவிற்கு வந்த மற்றொரு நீதி நெறி விளக்கப் பாடல்..."மெய்வருத்தம் பாரார், பசி நோக்கார், கண்துஞ்சார்......கருமமே கண்ணாயினார்!!! அவரது பணி சிறக்கவும், லட்சியம் வெற்றி அடையவும் எங்கள் வாழ்த்துக்கள்!
ReplyDeleteபாராட்டப்பட வேண்டியவர்.
ReplyDeleteநன்றி சகோ நல்லதோர் பதிவுக்கு தங்களுக்கும் வாழ்த்துக்கள்.! லட்சியப் பெண் வெற்றி பெற சரிகாவிற்க்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ...!
ReplyDeleteதமிழ்மனம் இரண்டாம் இடம்!! ஆனா ஏன் அந்த badge இந்த பக்கத்தில் இல்ல!!!
ReplyDeleteரொம்ப தான் தன்னடக்கம்:))) வாழ்த்துகள் சகா:)
நல்ல பதிவு. சரிகாவிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
ReplyDeleteமாற்றுத்திறனாளியின் முயற்சி, வெற்றி இரண்டும்
ReplyDeleteமாற்றாருக்கு நல்வழிகாட்டலே!
அருமையான பகிர்வு
தொடருங்கள்