விஜய்
டிவிகாரர்களுக்கு கொஞ்சமும் சளைத்தவர்கள் அல்ல இந்த
வலையுலக பதிவர்கள்?
மதுரைத்தமிழனுக்கும்
கொடுத்துட்டாங்கய்யா
கொடுத்துட்டாங்க?
இது வழக்கமாக
மதுரைத்தமிழன் மனைவி
கொடுக்கும் பூரிக்கட்டை அடி
அல்ல. ஒரு பெண் கொடுத்தது.
அதுவும் பிரபலமான பெண்
கொடுத்தது. என்ன கொடுத்தாங்க ?
யாரு கொடுத்தாங்க என்று
ஆவலோடு படிக்க ரெடியாய்
இருப்பீங்க...உங்க ஆவலை நான்
தடை செய்யலை.
சரி மேலேபடிங்க...
தான் சாகும் வரை
மதுவின் கூட வாழ ஆசைப்படும்
தமிழ்பதிவர் மைதிலி
எனக்கு ஒன்று கொடுத்தாங்க..உடனே
மது என்று நினைக்காதீர்கள்.
அவர் தந்தது விருதுங்க.. அது
வலைபதிவர்களுக்காக
கொடுக்கப்படும் விருது. அதை
கொடுத்துவிட்டு அதை மேலும்
பலருக்கு கொடுக்க
வேண்டுமென்று மிரட்டிவிட்டு
சென்றார். அவர் போட்ட
மிரட்டலில் எனக்கு காய்ச்சலே
வந்துவிட்டதுன்னா
பாருங்களேன்.( மது என்பது அவர்
கணவருங்க நீங்க தப்பா
நினைச்சிருந்தா அதற்கு நான்
பொறுப்புஅல்ல)
அவர் விருது
கொடுத்தப்ப சிறிது
வருத்தப்பட்டேன் காரணம்
விருது வோட சேர்த்து கொஞ்சம்
பண முடிப்பு தந்து இருக்கலாமே
என்று ஆனால் அந்த வருத்தம் சில
நொடியில் பறந்துவிட்டது.காரணம்
ஒரு வேளை அவர் பணமுடிப்பு
தந்து இருந்தால் நானும் அதை
போல பலருக்கும் பணம் முடிப்பு
கொடுக்கணுமே ... நல்ல வேளை என்
கஷ்டம் அறிந்து அவர் அப்படி
செய்யவில்லை.. மகராசி நீ எங்க
இருந்தாலும் குழந்தை
குட்டிகளோடு நல்லா இரும்மா.
இந்த விருது
வாங்குறவங்களுக்கு சில
கண்டிசன் உண்டு . இந்த விருதை
வாங்கியவர்கள் அவர்களைப்
பற்றி சொல்லனுமாம் மேலும்
குறைந்தது 5 பேருக்கும் மேல்
விருது கண்டிப்பா
கொடுக்கணுமாம்.
என்னைப்பற்றி
நான் சிறு வயதில்
மிகவும் நன்றாக படிப்பேன்..படிப்பதில்
எனக்கு ஒரு வெறியே இருந்தது...
நான் சொல்வது பள்ளியில் உள்ள
பாடப் புத்தகத்தை அல்ல. கதைப்
புத்தகங்களைதான் அகிலன்
ஜெயகாந்தன் லஷ்மி சிவசங்கரி
இந்துமதி கல்கி எழுதிய
புத்தகங்களில் இருந்து சரோஜா
தேவி புத்தகங்கள் வரை
நான் படித்து வேலைக்கு
போகும் வரை எந்தவொரு
பெண்களையும் ஏறடுத்து
பார்த்ததில்லை(அப்போல்லாம்
நான் ரொம்ப நல்லவன் அதுனால
சைடுலதான் பார்ப்பேன். ஆனா
இப்ப எப்படி என்று
கேட்கிறீர்களா? இப்ப நான்
நேராகவே பார்க்கிறேன் ஆனால்
பொண்ணுங்க சைடுல கூடப்
பார்க்க மாட்டேங்கிறாங்க
ஹும்ம்ம்ம்
பெண்களுக்கு
கண்டிப்பாக பஜ்ஜி போடத்
தெரிஞ்சுருக்கணும் அல்லது
நன்றாக பஜ்ஜி போடும்
கடையைப்பற்றி
தெரிஞ்சிருக்கணும் இல்லைன்னா
அவங்க பொண்ணே இல்லை என்பது என்
கருத்து
சிக்கன் மட்டன்
பிரியாணி எனக்கு பிடிக்கும்
ஆனா அதை பறிமாறும் போது அதில்
சிக்கனோ மட்டனோ இருக்க கூடாது .
பூரிக்கட்டையால்
எவ்வளவு அடி வேண்டுமானாலும்
வாங்கிக்குவேன் ஆனா உப்புமா
மட்டும் பண்ணி வைச்சு
சாப்பிடுங்க என்று மட்டும்
சொல்லக் கூடாது
சரி என் புராணம் போதும்...
இப்போது விருது கொடுக்கும்
விழா ஆரம்பம், கிழே உள்ள
லிஸ்டில் உள்ள அனைவருக்கும்
இந்த விருதை வழங்குகிறேன்.
நீங்கள் ஏற்கனவே இந்த விருதை
வாங்கி இருக்கலாம். அதனால என்ன
இந்த விருதையும் 100 ல் ஒன்றாக
இதையும் வைச்சுகுங்க....இவர்களுக்கு
நான் விருது கொடுக்க காரணம்
கிழே சொல்லி இருக்கிறேன்
http://rajiyinkanavugal.blogspot.com/2014/06/blog-post_22.html
காணமல் போன கனவுகள் ( ராஜி)
http://thaenmaduratamil.blogspot.com/2014/06/blog-post_20.html
தேன் மதுரத் தமிழ்
http://unmaiyanavan.blogspot.com/2014/06/blog-post_19.html
உண்மையானவன் ( சொக்கன் )
http://muhilneel.blogspot.com/2014/06/blog-post_24.html
Tamizhmuhil Prakasam
http://covaiveeran.blogspot.com/2014/06/blog-post_24.html
எனது மனவெளியில் ( ஸ்ரீனி )
http://saamaaniyan.blogspot.com/2014/06/blog-post_23.html சாமானியனின்
கிறுக்கல்கள் !
http://chennaipithan.blogspot.com/2014/06/blog-post_21.html
சென்னை பித்தன்
http://thanjavur14.blogspot.com/2014/06/blog-post.html
துரை செல்வராஜூ
http://minnalvarigal.blogspot.com/2014/06/blog-post_25.html
மின்னல்வரிகள் (பாலகணேஷ்)
http://realsanthanamfanz.blogspot.com/2014/06/blog-post.html
மொ.ராசு (Real Santhanam Fanz )
http://venkatnagaraj.blogspot.com/2014/06/blog-post_25.html
வெங்கட் நாகராஜ்
http://soumiyathesam.blogspot.com/2014/06/blog-post_25.html
என்னுயிரே சீராளன்
http://deviyar-illam.blogspot.com/2014/06/10.html
ஜோதிஜி திருப்பூர்
http://tnmurali.blogspot.com/2014/06/self-interview.html
டி.என்.முரளிதரன் -மூங்கில்
காற்று
http://puthiyamaadhavi.blogspot.in/2014/06/100.html
கவிஞர் புதியமாதவி
http://ilyas7032.blogspot.com/2014/06/blog-post.html
இலியாஸ் Ilyas Aboobacker
http://kalaicm.blogspot.co.uk/2014/06/1.html
கிராமத்து கருவாச்சி
http://nanjilmano.blogspot.co.uk/2014/06/blog-post_24.html
நாஞ்சில் மனோ...
http://dindiguldhanabalan.blogspot.com/2014/06/Answers-Lyrics.html
திண்டுக்கல் தனபாலன்
http://gokisha.blogspot.de/2014/06/blog-post_26.html
என் பக்கம் அதிரா
http://imaasworld.blogspot.de/2014/06/blog-post_22.html
இது இமாவின் உலகம் இமா
http://nigalkalam.blogspot.com/2014/06/blog-post_26.html
நிகழ்காலம் எழில்
http://packirisamy.blogspot.com/2014/06/blog-post.html
Packirisamy N
http://umayalgayathri.blogspot.com.au/2014/06/blog-post.html
உமையாள் காயத்ரி
http://mahikitchen.blogspot.com/2014/06/blog-post_29.html
Mahi's Kitchen
தலைவராக , ஆசிரியராக,
குடும்பதலைவியாக பிறந்து
இருந்தால் கேள்வி கேட்கும்
அதிகாரம் உண்டு.
ஆனால் இந்த மதுரைத்தமிழன்
அப்படி இல்லாததால் யாரிடமும்
கேள்வி கேட்கமுடியாததால்
தன்னை தானே கேள்விகள் கேட்டு
அதற்கு பதிலை நகைச்சுவையாக
சொல்வதாக நினைத்து சொல்லி
பதிவிட்டான். அப்போது
புத்தனுக்கு போதிமரத்து
அடியில் ஞானம் வந்தது போல
இவனுக்கு பதிவுலகத்தில்
இருந்த போது ஞானம் வந்தது (ஞானம்
என்ற பெண் அல்ல)
அதனால் அவன் மனதில்
மதுரைத்தமிழா உன் பதில்கள்
வேண்டுமென்றால் மொக்கைகளாக
இருக்கலாம் ஆனால் உனது 10
கேள்விகளும் அருமையாக
இருப்பதால் இந்த 10 கேள்விகளை 10
அறிவாளிகளுக்கு அனுப்பினால்
எப்படி இருக்கும்
என்று தோன்றியதன் விளைவே இந்த 'இப்படி
ஒரு கேள்வி கேட்டால் உங்கள்
பதில் என்ன? " என்ற
தொடர் பதிவு . அதில் கலந்து
கொண்ட அனைவருக்கும் நான் இந்த
விருதை வழங்குகிறேன். இதில்
யாரேனும் விடுபட்டு இருந்தால்
அவர்களின் தளத்தை
பின்னுட்டத்தில் சொல்லவும்
அனைவரிடமும் கேட்ட
கேள்விகள் ஒன்றுதான் ஆனால்
வந்த பதில்கள் அனைத்தும்
மாறுபட்டு இருப்பதோடு
சிந்திக்கவும் வைக்கின்றன...
இதில் கலந்து கொண்ட
அனைவருக்கும் நான் இந்த
விருதை வழங்குகிறேன். இதில்
யாரேனும் விடுபட்டு இருந்தால்
அவர்களின் தளத்தை
பின்னுட்டத்தில் சொல்லவும்
அன்புடன்
மதுரைத்தமிழன்
என்ன செய்யறது விஜய் டி.வி மாதிரியே நமக்கும் விளம்பரம் தேவைப்படுது.... எனக்கும் விருது வழங்கியமைக்கு மிக்க நன்றி. ஆனா விஜய் டிவி மாதிரி ஏதேனும் ஏற்பாடு செய்து (காசு கொடுத்து வாங்குவதாக) வாங்கிய விருதல்ல... ஏதோ ஒரு வித அன்பினால் வழங்கப்படும் விருது. அதனால் மனக்கிலேசமில்லாத மகிழ்வு.
ReplyDeleteவிருது பெற்றமைக்கும் அதைப் பகிர்ந்தளித்தமைக்கும் வாழ்த்துக்கள்...
ReplyDeleteவிருது கிடைத்தமைக்கு வாழ்த்துகள்
ReplyDeleteதொடருங்கள்
விருது வழங்குவது அதிகம் பேர் பதிவுகளை படிக்கிறார்கள் என்பதற்கு மட்டும் தானா?
ReplyDeleteஎன்னைப்போன்று வித்தியாசமான புதிர்களை அமைப்பவர்களை சேர்த்துக் கொள்ளமாட்டீர்களா? ( இதுவரை யாரும் இம்மாதிரி புதிர்களை அமைத்திருக்கிறார்களா என்று தெரியவில்லை.) . புதிர்கள் தமிழ் திரைப்படங்களைப் பற்றியும், தமிழ் திரைப்படப் பாடல்கள் பற்றியும் மட்டுமே. (ஆனால் முற்றிலும் வித்தியாசமாக.) வலை முகவரி:
http://thiraijaalam.blogspot.in/
http://thiraikathambam.blogspot.in/
விருது வாங்கியமைக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteவிருதை நீங்க விஜய் டிவியுடன் ஒப்பிட்டு பதிவு எழுதியிராவிட்டால்தான் ஆச்சரியப்பட்டிருப்பேன்.தோழி மைதிலி பெயரை அறிவித்தவுடனேயே நான் நினைத்ததுதான் கண்டிப்பா விஜய் டிவி சம்மந்தப்படும் என.
நன்றிகள் விருது பகிர்வுக்கு.
தான் சாகும் வரை மதுவின் கூடவே வாழ ஆசைப்படும் தமிழ்ப் பதிவர்.....மைதிலி.
ReplyDeleteஎன்னா சொல்லாடல்.....!!!! இதுக்கே உங்களுக்கு ஒரு விருது கொடுக்கனும்.
பெண்களுக்குக் கண்டிப்பாக பஜ்ஜி போட தெரிஞ்சி இருக்கனுமா.....? ஏன்? (ஐயோ இனி மேல் தான் நான் அதைக் கற்றுக் கொள்ள வேண்டும் . ஆனால் உப்புமா நன்றாக செய்வேன். அவசியம் என் வீட்டிற்கு வாங்க.....)
தாங்கள் விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள்.
அதை எனக்கும் கொடுத்தமைக்கு மிக்க நன்றி “உண்மைகள்“
வாழ்த்துக்கள்! இதிலும் உங்கள் வித்தியாசத்தை நிரூபித்து அசத்திவிட்டீர்கள்! நன்றி!
ReplyDeleteவாழ்த்துக்கள் மதுரைத் தமிழா! விருது பெற்றதற்கும்! விருதைப் பகிர்ந்தமைக்கும்! மதுரைத் தமிழா என்ன இது எங்களையும் சேர்த்துள்ளீர்கள்!! ம்ம்ம்ம் காரணம் சொல்லி விட்டீர்கள்! மிக்க நன்றி தமிழா!
ReplyDeleteமைதிலி சகோதரி எங்களை அவங்க லிஸ்டுல போட்டு விருது கொடுத்து, முதல்ல ஒண்ணுமே புரியல இது என்ன அப்படின்னு....அதுவும் உங்கள் கேள்விகள் போல இதுவும் சுத்துவது தெரிய, உங்களையும் எங்கள் லிஸ்டில் இட்டோம், பாருங்க சகோதரி உங்கள அவங்க லிஸ்டுல போட்டதுனால, திரும்பவும் உங்கள் போடக் கூடாது போலனு.....கண்டிஷன் அப்படினு நினைச்சு....சரி பகிரப்படாதவங்கனு ஒரு லிஸ்ட் போட்டா கடைசில தெரியுது எல்லாருமே வாங்கிட்டாங்கனு.....சரி போனா போவுதுனு பார்த்த ஒருத்டருக்கே 2, 3 நு சுத்தி வந்துருக்கு!....அப்பதான் எங்களுகு இந்த விருது பத்தின விளக்கமே புரிஞ்சுதுங்க!
சாகும்வரை மதுவுடன் நான் வாழ வாழ்த்திய நண்பருக்கு நன்றி:)))
ReplyDeleteஇப்படி ஒரு ட்ரிக் இருக்கிறது தெரியாம நான் ஒரு பத்து பேரோட நிறுத்திட்டேனே:(( என்ன யோசிக்கிறாங்கப்பா!!!!!!
மனம்கனிந்த நல்வாழ்த்துக்கள் நண்பரே...
ReplyDeleteஅடடா, என்ன இத்தனை பேருக்கு வாரி வழங்கியிருக்கீங்களேன்னு நினைச்சேன்.... காரணம் பார்த்ததும்... சூப்பர்...
ReplyDeleteவிருது பெற்றமைக்கு வாழ்த்துகள்.
ReplyDeleteஎனக்கும் விருதா....
நன்றி !
ReplyDeleteஎனக்கு பல்திறப் புலமை விருது தந்தமைக்கு மிக்க நன்றி திரு மதுரைத் தமிழன் அவர்களே! 2012 ஆம் ஆண்டு திரு சென்னை பித்தன் அவர்களும் 15-09-2015 அன்று தேவகோட்டை திரு KILLERGEE அவர்களும் இதே விருதை தந்திருக்கிறார்கள். இருப்பினும் தாங்கள் அளித்த இந்த விருதையும் மிக மகிழ்ச்சியோடு பெற்றுக்கொள்கிறேன்.
சகோதரா இன்று தான் தாங்கள் இந்த விருதை எனக்கும் தந்ததை இங்கு வந்த அறிந்தேன்
ReplyDeleteமிகுந்த நன்றி.
எனக்கு யாழ்பிரணவன் இப்பரிசைத்தந்தார். இதை நான் யாருக்குக் கொடுப்பது என்று அறிய முடியாது மேய்ந்த போது தங்கள் 53 போரையும் கண்டால் வேதாவும் இருக்கிறா.
நன்றி..நன்றி...
Vetha.Langathilakam.
நண்பரே,
ReplyDeleteவித்யாசமான முறையில் விருதுகள் அளித்து அசத்திவிட்டீர்கள் !
உங்களின் பட்டியலில் இந்த சாமானியனின் பெயரையும் கண்டதில் மகிழ்ச்சி !
உங்களுக்கும், விருது பெற்றவர்களுக்கும், வாழ்த்தும் நெஞ்சங்களுக்கும் பாராட்டுகளும் நன்றியும் !
நன்றி
சாமானியன்
'சலைத்தவர்கள்' அல்ல, 'சளைத்தவர்கள்' என்பது தான் சரி.
ReplyDeleteதவறை சுட்டிக் காட்டியதற்கு நன்றி
Deleteவிருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள். பெற்றுக் கொண்டவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். அட எனக்குமா..? ஊரில் இருந்து வந்த எனக்கு..பல ஆச்சரியங்கள். நன்றி
ReplyDeleteதங்களுக்கு ஒரு விருது சகோ. என் தளம் வந்து ஏற்றுக் கொள்ளுங்கள். உங்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளேன். நன்றி
ReplyDeleteஎன் பெயர் மிஸ்ஸிங்
ReplyDelete