Monday, September 22, 2014




பாரதிய ஜனதா தமிழகத்தில் காலுன்ற முடியுமா?




பாரதிய ஜனதா தமிழகத்தில் காலுன்ற வேண்டிய தருணம் இப்போது அதற்கு கிடைத்துள்ளது. அதை நல்லபடியாக பயன்படுத்தி கொண்டால் அவர்கள் தமிழகத்தின் மிகப் பெரிய கட்சியாக மாறமுடியும்.



திமுகவின் தொடர் தோல்விகளாலும் திமுக இந்த உள்ளாட்சி தேர்தல்களில் கலந்து கொள்ளாததாலும் மிகப் பெரிய வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. இந்த சந்தர்ப்பத்தை எப்படி உள்ளாட்சி தேர்தல்களில் பாஜா பயன்படுத்தி கொண்டதோ அதைப் போல பல நிகழ்வுகளிலும் அது தொடர்ந்து செய்தால் வருகிற 2016 தேர்தலில் ஆட்சிக்கு வர வாய்ப்புக்கள் மிக அதிகமே.





தமிழத்தில் சட்டசபை தேர்தலில் ஒரு கட்சி வெற்று பெற்று ஆட்சி அமைத்தால் அடுத்த தேர்தலில் அடுத்த அதே கட்சிக்கு வெற்றியை மீண்டும் தரமாட்டார்கள். இதுதான் தற்போதைய தமிழக் மக்களின் பழக்கமாக இருக்கிறது. அதனால் வருகிற தேர்தலில் ஆளும் கட்சியை இறக்கிவிட்டு எதிர்கட்சியை ஜெயிக்க வைப்பார்கள். ஆனால் தற்போது தமிழகத்தில் நிலவும் சூழ்நிலையில் எதிர்கட்சிகள் என்று சொல்லக் கூடிய நல்ல நிலையில் ஒரு கட்சிகளும் இல்லை என்பதுதான் உண்மை. திமுகவின் நிலமை கழுதை தேய்ந்து கட்டெறும்பாக மாறியது போல இருக்கிறது.



வழக்கமாக ஆளும் கட்சிக்கு எதிரான பொது ஒட்டுக்கள் எதிர்கட்சிக்க்கு கிடைக்கும் ஆனால் வரும் தேர்தலில் அந்த ஒட்டுக்கள் நிச்சயம் திமுகவிற்கு கிடைக்க போவதில்லை இந்த சூழ்நிலையை பாஜாக திறமையாக பயன்படுத்தி கொண்டால் அதற்கு வாய்ப்புக்கள் மிக அதிகம்.




அதற்கு பாரதிய ஜனதா முதலில் செய்ய வேண்டியது இதுதான். திமுக வை எந்த காரணத்தை கொண்டும் அருகில் சேரவிடக் கூடாது. அது போல இப்போது தன் கட்சிகளுடன் இருக்கும் மற்ற கூட்டணி கட்சிகளை தேர்தல் வரைக்கும் எந்த ஒரு காரணத்தை கொண்டு விலகி போகாமல் இருக்க செய்ய வேண்டும். இதற்காக ராம்தாஸ் அல்லது அன்பு மணி விஜயகாந்த் மைத்துனர் போன்றவர்களுக்கு ஏதாவது பெயர் சொல்லும்படி ஒரு நல்ல பதவியில் கொண்டு போய் அமர வைத்துவிட வேண்டும்.. மதில் மேல் பூனையாக இருக்கும் வைகோவையும் விலகி போய்விடாமல் பார்த்து கொள்ள வேண்டும்.




மேலும் உள்ளாட்சி தேர்தல்களில் எப்படி பாஜக ஆளும் கட்சியை எதிர்த்ததோ அதே மாதிரி தொடர்ந்து தமிழக மக்களின் பிரச்சனைகளை கையில் எடுத்து போராட வேண்டும் முக்கியமாக ஜெயலலிதாவை தனிப்பட்ட முறையில் தாக்காமல் அவரின் அரசு மற்றும் அவரின் அமைச்சர்கள் செய்யும் தவறுகளை கண்டித்து பல போராட்டங்களை தொடர்ந்து செய்ய வேண்டும் அதுமட்டுமல்லாமல் வருகிற சட்டமன்ற தேர்தலை மனதில் கொண்டு மத்திய அரசிடம் தங்களது செல்வாக்கை பயன்படுத்தி பொதுதிட்டங்களை செயல்படுத்த வேண்டும். இப்படி எல்லாம் செய்தால் அதிக சீட்டுகள் பெற்று ஆட்சி அமைக்க வாய்ப்புண்டு அப்படி ஆட்சி அமைக்கும் பட்சத்தில் சில வரும் விஜயகாந்த் அன்பு மணி மற்றும் பாஜாகவினர் சுழற்சி முறையில் முதல்வராக வலம் வரலாம். ஒரு வேளை முழுமையாக வெற்றி பெற வாய்ப்புக்கள் கிடைக்கவில்லை ஆனால் கணிசமான சீட்டுக்கள் கிடைத்தால் தேர்தலுக்கு அப்புறம் கூட்டணி கலைருடனா அல்லது ஜெயலலிதாவுடனா என்று முடிவு செய்து கொள்ளலாம். அரசியலில் இது எல்லாம் சகஜம்தானே..



கலைஞர் இப்போது செய்து கொண்டிருப்பது ஸ்டாலின் கனிமொழி அழகிரியுடன் கூட்டணி அமைப்பதுதான் அவர்களுடன் கூட்டணி அமைத்த பின் தன்னை முன்னிறுத்தி தேர்தலில் இறங்குவார் அப்போதுதான் விஜயகாந்த் ராம்தாஸ் வைகோ போன்றவர்களை தன் பக்கம் இழுக்க முடியும். கலைஞர் முதல்வர் என்றால் இவர்கள் அனைவருக்கும் ஒகேவாகத்தான் இருக்கும் ஆனால் ஸ்டாலினை முன்னிறுத்தினால் இவர்கள் யாரும் ஆதரவு தர மாட்டார்கள். காரணம் இவர்கள் அனைவருக்கு முதலைமைச்சர் பதவி மேல் ஆசை உண்டு அதை அத்தனை எளிதாக ஸ்டாலினுக்கு விட்டு கொடுக்க மாட்டார்கள். ஸ்டாலினை முன்னிருத்தினால் திமுக இருந்த இடம் காணாமல் போகவே அதிக வாய்ப்பு உண்டு. அதனால் நிச்சயம் இதை உணர்ந்த கலைஞர் தன்னை முன்னிறுத்தி ஒரு வேளை வெற்றி பெற்றால் திமுக தலைவர் பதவியை தான் தொடர்ந்து வைத்து கொண்டு முதல்வர் பதவியை ஸ்டாலினுக்கு கொடுத்துவிடுவார்.



ஆனால் பாஜாக இப்போது முழித்து கொண்டால் நிச்சயம் ஒரு நல்ல இடத்தை தமிழகத்தில் பெற வாய்ப்பு உண்டு



கொசுறு செய்தி :
Bjp HRaja தனது தளத்தில் பகிர்ந்தது :

முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதிக்கு என்னுடைய கேள்விகள் தினமலர் நாளிதழில்.
மொழியை வைத்து தமிழகத்தில் அரசியல் நடத்துக்கின்றார் என்பதற்கு பல் சான்றுகள் அதில் இதுவும் ஒன்று.
பலகலாமாக கேட்கப்பட்ட கேள்வி. இன்னும் பதில் வரவில்லை ? 



அன்புடன்
மதுரைத்தமிழன்

9 comments:

  1. பா.ஜ.க தலை குப்ற நின்று தண்ணீர் குடித்தாலும் தமிழ் நாட்டில் காலூன்ற முடியாது /////////

    அடுத்த ஆட்சி திமுக அமைக்கும் .................

    பா.ஜ.க தமிழ் நாட்டில் துடைத்து எரிய படும் அதோடு தேமுதிகவும்

    ReplyDelete
    Replies
    1. தமிழ்நாட்டில் பாஜக, தேமுதிக தூக்கி ஏறியப்படும் என்று சொல்லிருக்கீங்க..அப்படியானல் அவர்கள் தமிழ்நாட்டில் இன்னும் இருக்கிறார்களே என்றுதானே அர்த்தம். ஆனால் மக்கள் திமுகவை கடந்த 2 தேர்தல்களில் தூக்கி ஏறிந்தே விட்டார்களே.........என்ன சார் நீங்க இப்பதான் கோமாவில் இருந்து எழுந்து வந்திருப்பிங்க போல இருக்கே

      Delete
  2. மல்லாக்க கிடந்து கனவு காண்கிறார் மதுரதமிளன் உள்ளாட்சி தேர்தலில் திமுக இறங்காதது,உட்கட்சி பூசல் மட்டுமில்லை,திமுகவின் அடுத்த கூட்டணிக்கன ஒத்திகை,திமுகவோடு பாஐக கூட்டணி வைக்க முயலும்,ஆனாலும் அதிமுக வெல்லும் வாய்ப்பு அதிகம்.. உள்ளாட்சி தேர்தலில் திமுக ஓட்டுகள் அதிமுகவுக்க விழுந்திருக்கு.அத்தோடு மதிமுக,தேமுதிக வாக்குகளை கழித்தால்,இன்னமும் பாஐகவுக்கு என ஒரு வாக்கு வங்கி என்பதே கிடையாது.சில ஜாதிவெறி,மதவெறி பிடித்தோரது நப்பாசை தான் பாஐகவுக்கு தூபம் பிடித்து துதிபாடும் வேலை?..|

    ReplyDelete
    Replies
    1. நான் காண்பது கனவு அல்ல எனது ஊகம்தான் ..ஊகம் சில சமயங்களில் உண்மையாகவும் ஆகி இருக்கிறது இல்லாமலும் மாறி இருக்கிறது. நான் இந்திய ஊடகங்களில் வரும் செய்திகளையும் மற்றும் அனைத்து கட்சியினரின் சமுகதளங்களையும் படிப்பதினால் எனக்குள் தோன்றுவதை இங்கு எழுதி வருகிறேன். நான் எந்த ஒரு கட்சியையும் மதத்தையும் ஜாதியையும் சார்ந்தவனும் அல்ல அதை அப்படியே கண்மூடித்தனமாக ஆதரிப்பவனும் அல்ல எவனையும் ஆதரித்து அல்லது எதிர்த்து எழுதுவ்தால் எனக்கி சல்லி காசு பிரயோசனம் இல்லை. அப்படி எதிர்பார்த்தும் எழுதுவதில்லை அது போல யாரும் புகழ வேண்டும் என்பதற்காகவும் எழுதவில்லை நண்பரே...



      வாக்கு வங்கி இல்லாத பாஜகத்தான் இப்போது மத்தியில் ஆட்சியை பிடித்திருக்கிறது. ஆனால் வாக்கு வங்கி உள்ள திமுகதான் மண்ணைக் கவ்வி இருக்கிறது.

      வலிமையாக இருந்த திமுக இப்போது கலைஞரின் உடல் நலத்தை போலவே வலுவிழுந்து போய் இருக்கிறது.

      Delete
  3. எரியும் கொள்ளியில் எந்த கொள்ளி நல்ல கொள்ளி!!
    ஈயத்தை பார்த்து சிரித்ததாம் பித்தளை!
    கொடுமை கொடுமைன்னு __________ச்சே!!! ப.ஜ.க., தி.மு.க தலைப்பை பார்த்ததும் பொன்மொழியா(!!??) சாரி, டங் ஸ்லிப்:)) பழமொழியா ஞாபகத்துக்கு வருது:))

    ReplyDelete
  4. சுப்ரமணிய சுவாமி அங்கே இருக்கும் வரை அது பிஜேபி இங்கே காலூன்றுவது கடினம். வேலை முதிந்தவுடன் கழட்டி விடுவதில் பிரதமர் மோடி அவர்கள் நம் கலைஞரை விட கில்லாடியாக இருக்கின்றார். எவ்வளவு சீக்கிரம் சுவாமியை கழட்டி விடுகின்றாரோ, அவ்வளவு சீக்கிரம் கட்சிக்கு நல்லது.
    மற்றும், பிஜேபி யில் அ தி மு க வை கேள்வி கேட்க்கும் அளவிற்கு யாருக்கும் துணிச்சல் இல்லை. தேர்தலிற்கு முன்னாள் நிறைய நபர்கள் பிஜேபி யில் சேர்ந்தார்கள். அவர்கள் யாருமே கட்சிக்காக குரல் கொடுக்க மாட்டார்கள். மனதில் ஒரு பயம். உதாரணத்திற்கு நடிகர் S.V. சேகர் அவர்களை எடுத்து கொள்வோமே. அவர் இல்லாத கட்சியே இல்லை என்று மக்கள் பேசி கொள்ளும் அளவிற்கு அவர் நடவடிக்கை இருந்தது. தேர்தலின் முன்னால் பிஜேபியில் சேர்ந்தார். மோடியே சரணம், மோடி இல்லாவிடில் மரணம் என்று... யாதும் ஊரே, யாவரும் மோடி ... என்று பேசி வந்தார். இப்போது தான் மோடி ஆட்சி வந்து விட்டதே...? இங்கே அ தி மு க வை பற்றி இவரை ஏதாவது பேச சொல்லுங்களேன் பார்ப்போம். எதுவும் பேச மாட்டார். எல்லாம் ஒரு சுய நலம் தான் காரணம். என்று இவர்கள் இன்டே நடக்கும் தவறுகளை தைரியமாக எடுத்து சொல்கின்றார்களோ, அன்று தான் விரல் கூட பதியும், காலூன்ற இன்னும் நிறை காலம் காக்க வேண்டும்.

    ReplyDelete
  5. ஊகங்களை யார் வேண்டுமானாலும் சொல்லாம். தாங்கள் சொல்லும் ஊகம் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், தேமுதி என யாருக்கும் நன்றாகவே பொருந்தும்.. திமுக மண் கவ்வியுள்ளதற்கான காரணம் யாவரும் அறிந்ததே 2ஜி. குடும்ப அரசியல் மற்றும் தமிழர் பிரச்சனைகளில் மெத்தனம். ஆனால் அதுவே திமுகவின் அந்திமக் காலம் என்றும் கூறிவிட முடியாது.

    அண்ணாவின் மறைவின் பின் திமுக இரண்டாக உடைந்த போதும், பலரது ஊகம் திராவிடக் கட்சிகள் ஒழிந்தன என்று தான். எம்.ஜி.ஆரது மறைவின் பின்னர் அதிமுக இரண்டாக உடைந்த போதும் இதே ஊகம் சொல்லப்பட்டது அதிமுக ஒழிந்தது என.

    அதன் பின் வைகோ திமுகவில் இருந்து வெளியேறிய போதும், அதிமுகவில் இருந்து ஆர்.எம் வீரப்பன், திருநாவுக்கரசர் என மூத்த அரசியல்வாதிகள் வெளியேறி தனிக்கட்சி தொடங்கிய போதும் இதே ஊகங்கள் அலசப்பட்டன. ஒரு கட்டத்தில் தமிழ் மாநிலக் காங்கிரஸ் கூட அடுத்த முதல்வர் நாற்காலியை பிடிக்கும் என்றெல்லாம் ஊகிக்கப்பட்டன. ஆனால் காலப் போக்கில் எவையும் நடக்கவில்லை.

    இன்று கலைஞரது மறைவின் பின்னரும் திமுகவும் மூன்றாகவும் உடையலாம். ஆனால் அதில் ஒன்று நிலைத்து நிற்கும் ஏனையவை அழிந்து போகும். அதனால் திமுகவின் வெற்றிடத்தை பாஜக பிடிக்கும் என்றெல்லாம் கனவு காண்பது அரசியல் அறிவீனமே.

    பார்ப்பனிய குணம் கொண்ட ஜெயா அம்மையாரே தமிழ் மொழி, திராவிட அடையாளங்களுக்கு ஆதரவாக பேச வேண்டிய சூழல் எதனால் என்பதை சிந்திக்க வேண்டும். தமிழக மக்கள் இரண்டு விடயங்களில் மிகத் தெளிவாக உள்ளார்கள். ஒன்று ஆரியம் சாராத தமிழ் அடையாளங்களின் மீதான பற்று - தமிழ் மொழி, தமிழ் கலாச்சாரம், தமிழர் உரிமைகள் போன்றவைகள். இதனால் தான் இந்தியையும், சமஸ்கிருதத்தையும், சிங்களவரையும் எதிர்க்கின்றோம். மற்றது என்னவென்றால் வளர்ச்சி லஞ்சம் ஊழலற்ற வளர்ச்சி. ஒன்றுக்காக மற்றொன்றை தமிழர்கள் விட்டுக் கொடுப்பார்கள் என நான் கருதவில்லை. ராஜிவ் மரண அனுதாப அலையின் போதும், மோதி அலையின் போதும் கூட இதனால் தான் தமிழக வாக்காளர்களை அசைக்க இயலவில்லை. நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் எல்லாம் கடந்த முறை தேமுதிக மதிமுக பாமக வாங்கிய வாக்குகளை எல்லாம் கழித்துவிட்டு பாருங்கள் மிஞ்சுவது எந்த ரேஞ்சுக்கானது என்பதை. அது தான் பாஜகவின் இன்றைய நிலை.

    பாரதி ஜனதா ஒருவேளை தனது அடிப்படை கொள்கைகளை மாற்றிக் கொள்ளுமானால் ஒருவேளை ஒருவேளை தங்கள் ஊகத்துக்கு இடம் கொடுக்கலாம். ஆனால் அது எந்தளவு சாத்தியம் என உங்களுக்கே தெரியும்... கடைசி வரைக்கும் பாஜகவால் இந்தி திணிப்பையும், சமஸ்கிருத திணிப்பையும், பார்ப்பனிய இந்துத்வ திணிப்பையும் நிறுத்த இயலாது, தமிழ் மீனவர் ஆதரவையும், இலங்கைத் தமிழர் ஆதரவையும் கொடுக்க இயலாது. ஒருவேளை இவற்றை செய்தாலும் கூட தமிழக முதல்வர் நாற்காலியை பெறும் அளவிற்கு நெருங்க இயலுமா என்பது அடுத்த சந்தேகம்...

    இவை தான் திராவிடக் கட்சிகளின் பலமும் கூட. திராவிடக் கட்சிகள் தமது ஊழல் குணத்தையும், வாரிசு அரசியலையும் தாண்டிய வளர்ச்சித் திட்டங்களையும் ஏற்படுத்தி உள்ளார்கள் சமூக வளர்ச்சி, கல்வி வளர்ச்சி மற்றும் தொழிற்துறை வளர்ச்சி போன்றவைகளைக் கூறலாம். திமுகவின் - இன்றைய சிக்கல் வாரிசு அரசியல் மற்றும் ஊழல்வாதம். அதிமுகவின் இன்றைய சிக்கல் ஏதேச்சதிகார விளம்பர குணம் மற்றும் வளர்ச்சியில் அக்கறையின்மை. இவை இரண்டும் அரசியல் மேடையில் நிரந்தரமல்ல என்பதையும் அறியலாம். காரணம் நாளை மக்களுக்கு பெரிய முதலீட்டையும் வளர்ச்சியையும் வழங்கிவிடும் பட்சத்தில் இவை யாவும் இரண்டாம் இடத்துக்கு தள்ளப்படும் மறக்கப்படும் என்பது இந்திய மக்களுக்கே உரித்தான சுபாவம்.

    மோதி அலைவீசிய இந்தி மாநிலங்களிலேயே 100 நாட்களில் அந்த அலை ஓய்ந்துவிட்டதை நாம் அங்கு நடந்த சட்ட்சபை தேர்தல்கள் ஊடாக கண்டறிகின்றோம். அங்கேயே அப்படி என்றால் தமிழகத்தில் .. ரொம்பவே கஷ்டம் தம்பி...

    பலதரப்பட்ட காரணிகளை அலசி ஆராயும் போது அதிமுக அடுத்த முறையும் ஆட்சியில் ஏறும் என்றே தோன்றுகின்றது.. எம்.ஜி.ஆர் காலத்தில் இருமுறை அதிமுக தொடர்ந்து வென்றிருக்கின்றது. அப்படியே அதிமுக தோற்றாலும் சிறுபான்மை திமுக அரசு ஒன்று அமையும்... அதில் கூட்டாளி பங்காளர்களாக யார் இணைவது என்பதில் தான் அடுத்த போட்டியே உருவாகும் பாருங்கள்.

    ReplyDelete
  6. அடுத்த தமிழக முதல்வராக வருவதற்கு ஆசைப்படுபவர்களின் பட்டியல் சீனப் பெருஞ்சுவர் போல நீண்டு கொண்டே போகின்றது

    ReplyDelete
  7. நீங்க எப்பங்க பி.ஜி.பிலே சேந்தீங்க...

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.